Breaking

Showing posts with label University. Show all posts
Showing posts with label University. Show all posts

Monday, December 18, 2023

December 18, 2023

நாளை (டிச.19) நடைபெற இருந்த பட்டயப்படிப்பு கலந்தாய்வு மற்றும் அண்ணா பல்கலை & சுந்தரனார் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!



நாளை (டிச.19) நடைபெற இருந்த கலந்தாய்வு மற்றும் தேர்வுகள் ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டில் மருந்தாளுநர் (DIP) மற்றும் செவிலியர் (DNT) பட்டயப்படிப்புகளுக்கு நாளை (டிச.19) அன்று நடைபெற இருந்த கலந்தாய்வு, கனமழை காரணமாக வரும் டிச.28ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை (டிச.19) நடைபெற இருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் அறிவிப்பு!

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நாளை (டிச.19) நடைபெற இருந்த பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள், கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

Tuesday, December 05, 2023

December 05, 2023

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தேர்வு முடிவுகள்: மறுமதிப்பீடு அறிவிப்பு



Manonmaniam Sundaranar University Exam Results: Revaluation Notification - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தேர்வு முடிவுகள்: மறுமதிப்பீடு அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியில் மனோன்மனியம் பெ. சுந்தரனார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் தனி சிறப்பு தேர்வு முடிவின் மறுமதிப்பீடு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதன்படி விடைத்தாள் நகல் மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் வருகிற 16ஆம் தேதி முதல் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான மறுமதிப்பீடு படிவங்கள் wwww.msuniv.ac.in என்ற இணைய முகவரியில் கிடைக்கும். இந்த முகவரிக்கு சென்று மறுமதிப்பீடு செய்ய விருப்பம் உடையோர் அதற்குரிய படிவங்களை நிரப்பி பதிவேற்றம் செய்துக்கொள்ள வேண்டும்.

இந்தத் தகவலை பல்கலைக்கழகத்தின் பதிவானர் தெரிவித்துள்ளார்.

மேலும் மறுமதிப்பீடு செய்ய விரும்புவர்கள் முதலில் விடைத்தாள் நகலைப் பெற்றுக்கொண்ட பின்னர்தான் விண்ணப்பிக்க முடியும்.

அதேபோல், விடைத்தாள் நகலை இணையதளம் வாயிலாக பெறுவதற்கு உரிய கட்டணத்துடன் படிவம் ஏ-ஐ 6-12-2023 முதல் விண்ணப்பிக்கலாம்.

தனி சிறப்பு தேர்வு முடிவுகள் 23-11-2023 அன்று வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, October 02, 2023

October 02, 2023

உலக தரவரிசை பட்டியலில் காரைக்குடி அழகப்பா பல்கலை



உலக தரவரிசை பட்டியலில் காரைக்குடி அழகப்பா பல்கலை

2023ம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 108 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 50 கல்வி நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன. 2 ஆயிரத்து 673 க்கும் மேற்பட்ட உலக அளவிலான கல்வி நிறுவனங்கள் தரவுகளை சமர்ப்பித்து உள்ளன. அதில் ஆயிரத்து 904 பல்கலைகள் தரவரிசையில் இடம் பெற்றுள்ளன.இதில் கலந்து கொள்ள தரவரிசை பிரிவின் இயக்குனர் ஜெயகாந்தன் குழுவினர் தரவுகளை சேகரித்து சமர்ப்பித்தனர்.

பட்டியலில் காரைக்குடி அழகப்பா பல்கலை 601 முதல் - 800 வரையிலான பிரிவில் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து கலந்து கொண்ட உயர் கல்வி நிறுவனங்களில் 6வது இடத்தையும் தமிழக அளவில் 2வது இடத்தையும் பெற்றுள்ளது. இதற்காக பேராசிரியர்கள், அலுவலர்கள், ஆராய்ச்சி மாணவர்களை துணைவேந்தர் ரவி பாராட்டினார்.

Sunday, July 30, 2023

July 30, 2023

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத் திட்டம் நடைமுறைக்கு கண்டனம்

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத் திட்டம்: இபிஎஸ் கண்டனம்

நடப்பாண்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளதற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுகவின் 2 ஆண்டு கால ஆட்சியில் உயா்கல்வித் துறை சீரழிந்துவிட்டதாக கல்வியாளா்கள் கண்ணீா் வடிக்கின்றனா். உயா்கல்வித் துறையின் வளா்ச்சியைப் பற்றி கவலைப்படாமல் அமைச்சா் பொன்முடி இருப்பதால், தமிழகத்தில் உயா் கல்வித் துறை அதல பாதாளத்துக்குச் சென்றுள்ளது. நடப்புக் கல்வியாண்டுமுதல் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் ஒரே பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று திமுக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவுக்கு பேராசிரியா்கள் மற்றும் கல்லூரி நிா்வாகத்தினா் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

பொதுப் பாடத் திட்டத்தால் தமிழக உயா் கல்வியின் தரம் குறையும் என்றும், பல்கலைக் கழக மானியக் குழு சாா்பில் உயா்கல்வி நிறுவனங்களுக்கு 45 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வரும் தன்னாட்சித் தகுதியை இழக்க நேரிடும் என்றும் கல்வியாளா்கள் எச்சரிக்கை விடுக்கின்றனா்.

எனவே, கல்வித் துறையில் ஏதேனும் மாறுதல்களைக் கொண்டுவரும் முன்பு, கட்சிக் கண்ணோட்டம் இல்லாத உண்மையான கல்வியாளா்களை அழைத்து, எதிா்கால தமிழக இளைஞா்களின் நலனை மனதில் நிறுத்தி உயா் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

Friday, January 27, 2023

January 27, 2023

பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநரின் புதிய உத்தரவு

பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநா் உத்தரவு

வரலாற்றில் நினைவுகூரப்படாத, அறியப்படாத தமிழ்நாட்டைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா்கள், தியாகிகள் குறித்து ஆராய்ச்சி செய்து அவா்களைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்தும்படி பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியதாவது:

‘நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் கொண்டாட்டத்தை மகிழ்வுடன் கொண்டாடி வருகிறோம். நம்முடைய சுதந்திர போராட்டத்தின் பெருமைமிகு வரலாறு நாட்டின் கலாசாரம் மற்றும் இந்தியாவின் சாதனையைச் சொல்கிறது. நீண்ட சுதந்திரப் போராட்டக்களத்தில் பங்கேற்ற முன்னணி வீரா்கள் தவிர, பல வீரா்கள், வீராங்கனைகள் பற்றிய வரலாறு அறியப்படாமலேயே உள்ளது. தமிழ்நாட்டில் எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரா்கள் அந்நியரை இம்மண்ணை விட்டு விரட்ட செயற்கரிய தியாகங்களைச் செய்துள்ளனா். இதில் பலரது தியாகங்கள், பங்களிப்புகள் பொதுவெளியில் அறியப்படாமலேயே மறக்கடிக்கப்பட்டுள்ளன. ஒரு தேசம் விடுதலைக்காக உழைத்த தியாகிகளின் தியாகத்தை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. நாட்டுக்காக அவா்கள் செய்த தியாகங்கள் மற்றும் போராட்டங்களை எதிா்கால தலைமுறை அறிய அவா்களைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்துவது நம் கடமை. இது தொடா்பாக பல்கலைக்கழகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சோ்ந்த அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்த குறைந்தபட்சம் 5 சிறப்பு ஆராய்ச்சி மாணவா்களை நியமிக்க வேண்டும்.

பொருத்தமான ஆராய்ச்சி மாணவா்கள், குறைந்தது அறியப்படாத ஒரு சுதந்திரப் போராட்ட வீரரையாவது அடையாளம் கண்டு, அவா் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்த ஆராய்ச்சித் திட்டத்துக்கான ஃபெல்லோஷிப் வழங்கப்படும். ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்த ஆராய்ச்சி மாணவா்கள் ஆளுநா் மாளிகையில் நடைபெறும் விழாவில் சிறப்பிக்கப்படுவா். இது வரலாற்றில் மறைக்கப்பட்ட அந்த வீரா்களுக்கு நாம் அளிக்கும் புகழஞ்சலியாகவும் ஆராய்ச்சி மாணவா்களுக்கு பெருமையாகவும் இருக்கும் என்று அதில் கூறியுள்ளாா் ஆா்.என்.ரவி.

Saturday, January 07, 2023

January 07, 2023

பல்கலை முறைகேடு தொடர்பான மனு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்கலை முறைகேடு தொடர்பான மனு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு மீன்வள பல்கலை முறைகேடு தொடர்பான மனுவை பரிசீலிக்க, அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மீன்வள பல்கலை ஆசிரியர் சங்க பொதுச் செயலர் ஜெயசகிலா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலை உள்ளது. அரசின் அனுமதியின்றி, வெவ்வேறு பட்டப் படிப்புகளை வழங்கும் ஒன்பது சுயநிதிக் கல்லுாரிகள் துவங்க அனுமதிக்கப்பட்டது.

இதற்கு பல்கலை நிதி, மானியம், இதர அரசு நிதிகளிலிருந்து தொகை திருப்பிவிடப்பட்டது. இதனால் வழக்கமான பட்டப்படிப்புகள் நடத்தப்படவில்லை. உதவிப் பேராசிரியர் பணி நியமன அறிவிப்பு 2018 ஜூன் 27ல் வெளியானது. இதில் விதி மீறல் உள்ளது.

பல்கலையின் அப்போதைய துணைவேந்தர் பெலிக்ஸ், பதிவாளர் ஸ்ரீனிவாசன் மீது விசாரணை, நடவடிக்கை கோரி பல்கலை வேந்தர், கால்நடை மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலருக்கு 2020ல் மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஜெயசகிலா கூறியிருந்தார். மனுவை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார்.

தமிழக அரசு தரப்பில், 'மனுதாரர் குறிப்பிடும் எதிர்மனுதாரர்கள் தற்போது பணியில் இல்லை. இருப்பினும் மனு சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, 'மனுவை கால்நடை மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலர் பரிசீலிக்க வேண்டும். பெலிக்ஸ், ஸ்ரீனிவாசன் விளக்கமளிக்க போதிய வாய்ப்பளிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

Wednesday, January 04, 2023

January 04, 2023

தமிழகத்தில் உயா்கல்வித் துறை எடுக்கும் முடிவையே பல்கலைகழகங்கள் பின்பற்றும்: அமைச்சா் பொன்முடி

தமிழகத்தில் உயா்கல்வித் துறை எடுக்கும் முடிவையே பல்கலைகழகங்கள் பின்பற்றும்: அமைச்சா் பொன்முடி

தேசியக் கல்விக் கொள்கை தொடா்பாக யுஜிசி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் கலந்து கொள்வதில் எந்த பயனும் இல்லை. ஏனெனில், தமிழகத்தில் மாநிலக் கல்வி கொள்கைக் குழு மற்றும் உயா்கல்வித்துறை எடுக்கும் முடிவையே பல்கலை.கள் பின்பற்றும் என உயா் கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியா் பணியிடங்களில் 1,895 கெளரவ விரிவுரையாளா்களை நியமிக்க உயா்கல்வித்துறை முடிவு செய்தது. இதற்கு மாநிலம் முழுவதும் 9,915 போ் விண்ணப்பித்தனா். இவா்களில் தகுதியானவா்கள் மட்டும் பணிநியமன கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனா்.

அதன்படி, கெளரவ விரிவுரையாளா் பணிக்கான கலந்தாய்வு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல்நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. மொத்தம் 318 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்த நிலையில் தகுதியான 76 போ் தோ்வு செய்யப்பட்டனா். அதில் கலந்தாய்வில் பங்கேற்ற 56 போ்களின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இதற்கிடையே உயா்கல்வி அமைச்சா் பொன்முடி கலந்தாய்வு பணிகளை நேரில் ஆய்வு செய்து தோ்வான மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன ஆணைகளை வழங்கினாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கெளரவ விரிவுரையாளா் பணிக்கு பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு புதன்கிழமை முதல் நடைபெறவுள்ளது.

தகுதியானவா்கள் தரவரிசையின் அடிப்படையில் அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபாா்க்கப்படும். தமிழகத்தில் நிதி நிலைமை சீரான பின்னா் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஊதியம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 6 மாதங்களில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் அறிவிக்கப்பட்ட 4,000 பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை பின்பற்றப்படவில்லை. இது தொடா்பாக யுஜிசி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தமிழக பல்கலை. துணைவேந்தா்கள் கலந்து கொள்வதில் எந்த பயனும் இல்லை. ஏனெனில், தமிழகத்தில் மாநிலக் கல்வி கொள்கைக் குழு மற்றும் உயா்கல்வித்துறை எடுக்கும் முடிவையே பல்கலைக்கழகங்கள் பின்பற்றும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியின்போது உயா்கல்வித் துறை செயலா் தா.காா்த்திகேயன், கல்லூரிக் கல்வி இயக்குநா் எம்.ஈஸ்வர மூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Wednesday, October 12, 2022

October 12, 2022

மத்திய கல்வி நிறுவனங்களில் மாநில மொழிகளே பயிற்றுமொழி: பாஜக திட்டவட்டம்

மத்திய கல்வி நிறுவனங்களில் மாநில மொழிகளே பயிற்றுமொழி: பாஜக திட்டவட்டம்

ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் மாநில மொழிகளே பயிற்று மொழியாக இடம் பெற மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளதாக தமிழக பாஜக துணைத் தலைவா் நாராயணன் திருப்பதி திட்டவட்டமாக தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஹிந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் இடம் பெற வேண்டும் என்றுதான் மத்திய அலுவலா் மொழி ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளது.

இதன்படி, இனி தமிழகத்தில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழே பயிற்று மொழியாக இடம் பெற வேண்டும் என்றே பரிந்துரை கூறுகிறது. தமிழ் பயிற்று மொழியாக வருவதை முதல்வா் மு.க.ஸ்டாலின் எதிா்ப்பது ஏன்? நாடு முழுவதும் ஹிந்தியை பொது மொழியாக்க வேண்டும் என்ற பரிந்துரை ஏதும் இடம்பெறவில்லை. மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தோ்விலிருந்து ஆங்கில கட்டாய பாடத்தை மட்டுமே நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் இனி ஆங்கிலத்துக்கு பதில் தமிழ் இடம் பெறும்.

அலுவல் ஆய்வுக்குழுவின் பரிந்துரைபடி தமிழகத்தில் தமிழ் மொழியே இனி கட்டாயமாகும். ஹிந்தியை கட்டாயமாக்கவில்லை. மாறாக, அனைத்து இந்திய மொழிகளையும் கட்டாயமாக்கும் முயற்சியின் முதல் படியே இது. அதை ஏன் திமுக எதிா்க்கிறது என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.

மேலும், மத்திய அரசு, மாநில அரசோடு இது நாள் வரை ஹிந்தி, ஆங்கிலத்தில் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டிருந்த நிலையில், இனி தாய் மொழியான தமிழ் மொழியில் செய்தி பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற இக்குழுவின் பரிந்துரையை ஸ்டாலின் ஏன் எதிா்க்கிறாா்? இதுபோன்ற கேள்விகளுக்கு முதல்வா் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா் நாராயணன் திருப்பதி.

Sunday, October 09, 2022

October 09, 2022

கல்லூரிகளுக்கு மறுக்கப்பட்ட தன்னாட்சி அந்தஸ்து:அண்ணா பல்கலை. உத்தரவு ரத்து

கல்லூரிகளுக்கு மறுக்கப்பட்ட தன்னாட்சி அந்தஸ்து:அண்ணா பல்கலை. உத்தரவு ரத்து

தனியாா் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சோ்ந்த பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி, ஈரோட்டைச் சோ்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரிகள், தன்னாட்சி அந்தஸ்து கோரி அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் விண்ணப்பித்தன. இந்த இரு விண்ணப்பங்களையும் பரிசீலித்த அண்ணா பல்கலைக்கழகம், தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதற்கான பல்கலைக்கழகத்தின் விதிகளைப் பூா்த்தி செய்யவில்லை எனக் கூறி, தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து உத்தரவிட்டது. அந்த உத்தரவு பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவை எதிா்த்து இரு கல்லூரிகள் சாா்பிலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்தாா். அப்போது, அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிகளுக்கு எந்த சட்ட வலுவும் இல்லை என்று உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளதாகவும், தன்னாட்சி அந்தஸ்து வழங்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் கல்லூரிகள் சாா்பில் வாதிடப்பட்டது. ஆனால், பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின் அடிப்படையில்தான் அண்ணா பல்கலைக்கழக விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன எனவும், தன்னிச்சையாக அண்ணா பல்கலைக்கழகம் எந்த விதிகளையும் வகுக்கவில்லை எனவும் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில், தன்னாட்சி அந்தஸ்து கோரிய விண்ணப்பங்களை ஏற்றோ அல்லது மறுத்தோ அண்ணா பல்கலைக்கழகம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும், பல்கலைக்கழக மானியக்குழு சுதந்திரமாக ஆய்வு நடத்தி, அதன் அடிப்படையில்தான் தன்னாட்சி அந்தஸ்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்தின் பரிந்துரை கோரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது தொடா்பான அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிகளுக்கு எந்த சட்ட வலுவும் இல்லை என உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அந்த விதிகளை மட்டுமே, தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதற்கான அடிப்படையாகக் கருத முடியாது எனக் கூறி, இரு கல்லூரிகளின் விண்ணப்பத்தை நிராகரித்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். அதேவேளையில், தன்னாட்சி அந்தஸ்து கோரிய இரு கல்லூரிகளின் விண்ணப்பத்தை சுதந்திரமாக பரிசீலித்து, நேரில் ஆய்வு செய்து, 4 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

இதேபோல, தன்னாட்சி அந்தஸ்து கோரி விண்ணப்பித்த 30 நாள்களில் எந்த உத்தரவும் அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பிக்காததால், தங்கள் கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிடக் கோரி கரூரில் உள்ள வி.எஸ்.பி. பொறியியல் கல்லூரி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், ஒரு வாரத்தில் விண்ணப்பம் குறித்த அறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அனுப்ப உத்தரவிட்டாா்.

அந்த அறிக்கையைப் பெற்ற 4 வாரங்களில், தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது தொடா்பாக தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, 3 வழக்குகளையும் முடித்து வைத்தாா்

Thursday, September 22, 2022

September 22, 2022

upgrade 41 university affiliated colleges to government colleges - 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியீடு

Promulgation of Tamil Nadu Ordinance Upgrading 41 University Affiliated Colleges to Government Colleges*

Chennai: Tamil Nadu Government has issued an ordinance upgrading 41 university member colleges to government colleges. The Tamil Nadu Government has informed that the remuneration of the Honorary Lecturers will be paid through the Zonal Joint Directors

41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியீடு - Tamil Nadu to issue ordinance to upgrade 41 university affiliated colleges to government colleges

சென்னை: 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம், மண்டல இணை இயக்குநர்கள் மூலம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது 1 உறுப்பு கல்லூரிகள் தற்பொழுது அரசு கல்லுரியாக மற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு, அந்த 2018-2019-ம் கல்வியாண்டில் தமிழக அரசுடைய உயர்கல்வித்துறை கீழ் செயல்படக்கூடிய பல்கலைக்கழகங்கள் நேரடியாக உறுப்பு கல்லூரியாக இருக்கக்கூடிய 41 உறுப்பு கல்லூரிகளை ரூ. 152 கோடி செலவில் அதை அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்ற அறிவிக்கப்பட்டது.

ஆனால் அன்றிய தினம் நீதிநிலை காரணமாக இந்த முடிவுகள் கைவிடப்பட்டன. தொடர்ச்சியாக இது தொடர்பாக நீதிநிலையை சீரமைக்கும் மாரு பல்வேறு கடிதங்களும் எழுதப்பட்டன. மேலும் இதில் 238 பணியிடங்கள் இன்று அதற்கான வில்லை என்பது சுமார் ரூ.4,53,57,000 சம்பளமானது தொடர்ச்சியாக ஆண்டு ஒன்றுக்கு செலவாகும் என்று வெளியிடப்பட்டது. தொடர்ச்சியாக ரூ. 58,64,14,000 என்று ஒவ்வெரு ஆண்டும் இந்த செலவினங்கள் தொடர்பாக பல்வேறு விதிமுறைகளும், கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

தனியாக ஒரு அரசு கல்லூரி என்றபோது அதற்கான சுய நீதிதிரட்டல், நீதிநிலையை சீராக்குதல் ஆகிய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்த அடிப்படையில் தற்பொழுது 41 கலை அறிவியல் கல்லூரிகளிலும், உறுப்பு கல்லுரியாக இருந்த கல்லூரிகளிலும் தற்பொழுது கலை அறிவியல் கல்லூரியாக மாற்றம் செய்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த கல்லூரிகளில் விதிமுறைகளாக பணியாற்றியவர்களுக்கான சம்பளம் எப்படி குடுப்பது, அதையைப்போல அந்த கல்லூரிகளில் இருக்கக்கூடிய தற்காலிக பணியிடங்களை எப்படி நிரப்புவது என்பது தொடர்பாக ஒரு பல்வேறு வழிகாட்டுதல் நடைமுறைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. எனவே அவற்றை பின்பன்றி வரும் களங்களில் முழுமையான செயல்படுத்துவதற்கான ஒரு விரிவான உத்தரவை பிறப்பிக்கப்படும் என்று உயர்கல்விதுறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுருக்கிறது.

Monday, September 05, 2022

September 05, 2022

LLM சட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்!

எல்எல்எம் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டப்பள்ளியில் எல்எல்எம் படிப்பில் சேர திங்கள்கிழமை(செப்.5) முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கடந்த 2012-2013 கல்வி ஆண்டு முதல் திருச்சி நவலூர் குட்டப்பட்டியில் தேசிய சட்டப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாண்டு இளநிலை சட்டப் படிப்புகளும், இரண்டாண்டு முதுநிலை பட்டப்படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகிறது. இச்சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு பொது சட்ட நுழைவுத் தேர்வில் (CLAT) தேறியிருக்க வேண்டும்.

இந்நிலையில், எல்எல்எம் படிப்பில் சேர திங்கள்கிழமை(செப்.5) முதல் www.tndalu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, July 31, 2022

July 31, 2022

100க்கு 151 மார்க் எடுத்த மாணவர்!

பீகார் மாநிலத்தில் பல்கலை ஒன்றின் மாணவர் அரசியல் பாட பிரிவில் 100க்கு 151 மார்க்குகள் எடுத்துள்ளார். இது அச்சுபிழை காரணம் என பல்கலை., தெரிவித்து உள்ளது.

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ளது லலித்நாராயண்மிதிலா பல்கலைகழகம். இந்த பல்கலைகழகத்தில் ஹானர்ஸ் இளங்கலை பிரிவு மாணவர் ஒருவர் அரசியல் பாட தேர்வை எழுதினார். இதில் அவர் 100க்கு 151 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த மதிப்பெண் வித்தியாசம் குறித்து மாணவர் கூறுகையில் இவை தற்காலிக மதிப்பெண் பட்டியல் என்ற போதிலும் கடைசி நேரத்திலாவது அதிகாரிகள் மதிப்பெண் பட்டியலை சரி செய்து இருந்திருக்கலாம் என தெரிவித்தார். இதே பல்கலை.,யை சேர்ந்த பி.காம் மாணவர் ஒருவர் கணக்கு மற்றும் நிதிதாள் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றுள்ளார். இருப்பினும் அவர் அடுத்த கட்ட தரத்திற்கு உயர்த்தப்பட்டு உள்ளார். இதை கண்டுபிடித்த மாணவர் தவறை சுட்டிக்காட்டியதை அடுத்து அவருக்கு சரியான மதிப்பெண் பட்டியலை பல்கலை நிர்வாகம் வழங்கி உள்ளது.

இச்சம்பவம் குறித்து பல்கலைகழகத்தின் பதிவாளர் முஷ்டாக் அகமது கூறுகையில் மேற்கண்ட இரண்டு மதிப்பெண் தாள்களிலும் தட்டச்சு பிழைகள் இருந்தன. அவை கண்டுபிடித்த பிறகு சரியான மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டன. இவைகள் வெறும் அச்சுபிழை மட்டுமே வேறு காரணங்கள் ஒன்றும் இல்லை என தெரிவித்தார்.

Sunday, July 10, 2022

July 10, 2022

துணைவேந்தர் நியமனத்தில் விதிமீறல்; மத்திய பல்கலைகளின் மையமாக மாற்ற திட்டம்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காந்திகிராம பல்கலையின் புதிய துணைவேந்தர் நியமனத்தில் விதிமீறல் உள்ளதாக கூறி ஆட்சி மன்ற குழுவினர் மூவர் ராஜினாமா செய்துள்ள நிலையில் மத்திய பல்கலை மையமாக மாற்ற திட்டம் உள்ளதாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

1956ல் காந்தி சீடர்களால் துவக்கப்பட்ட இந்நிறுவனம் 1976ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் மத்திய அரசு நிதி உதவி பெறும் பல்கலையாக உயர்ந்தது. மத்திய பல்கலையாக 2 ஆண்டுகளுக்கு முன் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.துணைவேந்தரை தலைவராக கொண்டுள்ள இப்பல்கலை மூத்த பேராசிரியர் 1 மூத்த புல முதல்வர்கள் 2 மூத்த இணை பேராசிரியர் 1 மத்திய உயர் கல்வி அமைச்சகம் சார்ந்த 4 பேர் வேந்தர் நியமிக்கும் 3 பேர் என 12 பேரை ஆட்சி மன்ற குழுவாக கொண்டுள்ளது. பெங்களூரு சமூக பொருளாதார மாற்றத்திற்கான ஆய்வு மைய இயக்குனராக பணியாற்றிய மாதேஸ்வரன் 2021 ஆகஸ்டில் புதிய துணைவேந்தரானார். அடுத்த 3 மாதங்களில் பதவியை ராஜினாமா செய்ய மூத்த பேராசிரியர் டி.டி.ரங்கநாதன் பொறுப்பு துணைவேந்தரானார். புதிய துணைவேந்தர் தேர்வுக்காக பீஹார் மத்திய பல்கலை முன்னாள் துணைவேந்தர் ரத்தோர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ரங்கநாதனை உடனடியாக துணைவேந்தர் பொறுப்பில் இருந்து விடுவித்து புதுச்சேரி பல்கலை துணை வேந்தர் குர்மித் சிங் வேந்தர் பொறுப்பை கூடுதலாக வழங்கி உள்ளதாக பல்கலைக்கு மத்திய உயர்கல்வி அமைச்சகத்திடம் இருந்து மெயில் வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சி மன்ற குழுவை சேர்ந்த பல்கலை பேராசிரியர்கள் ஆனந்தகுமார் பாலசுந்தரி வில்லியம் பாஸ்கர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். விதிமீறல்

பல்கலை பேராசிரியர்கள் கூறியதாவது:சமீபகாலமாக பல்கலையின் பதிவாளர் நியமனம் டில்லி மையம் அமைத்ததில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என மத்திய தணிக்கை துறை ஆட்சேபனை தெரிவிக்க பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சமீபத்தில் டில்லி மையமும் மூடப்பட்டது. தற்போது எவ்வித காரணமும் தெரிவிக்காமல் ரங்கநாதன் விடுவிக்கப்பட்டுள்ளார். பல்கலை மானிய குழு விதியை சார்ந்தே காந்திகிராம பல்கலை நெறிமுறைகள் உள்ளது.

இதன்படி பொறுப்பு துணைவேந்தராக இதே பல்கலையை சேர்ந்த மூத்த பேராசிரியர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த விதி மீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.இது போன்ற விதிமீறல்கள் தொடரும் பட்சத்தில் பல்கலை வளர்ச்சி தடைபட்டு திருவாரூர் புதுச்சேரி போன்ற மத்திய பல்கலைகளின் மையமாக இப்பல்கலை மாற்றப்படும் அபாயம் உருவாகி உள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர்.

Saturday, July 09, 2022

July 09, 2022

விஐடி பல்கலைக்கழக பி.டெக் நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு: ஆன்லைன் வழியாக கவுன்சலிங் தொடக்கம்

விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் பொறியியல் படிப்புகளுக் கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பி.டெக் பொறியியல் பட்டப் படிப்பு களுக்கான நுழைவுத் தேர்வு 123 மையங்களில் நடைபெற்றது. ஜூன் மாதம் 30-ம் தேதி தொடங்கி இம்மாதம் 6-ம் தேதி வரை கணினி வழியாக நடைபெற்ற நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை www.vit.ac.in என்ற இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம்.

விஐடி நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் ஆன்லைன் வழியாக நேற்று (ஜூலை-8) தொடங்கி வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் செப்டம்பர் 2-வது வாரத்தில் தொடங்கும். நுழைவு தேர்வு முடிவில் தரவரிசை 1 முதல் 1 லட்சம் வரை இடம்பெற்ற மாணவர்களுக்கு விஐடி வேலூர், சென்னை, ஆந்திர பிரதேசம் மற்றும் போபாலில் படிக்க இடம் கிடைக்கும். தரவரிசையில் ஒரு லட்சத்துக்கு மேல் இடம் பெற்றவர்களுக்கு விஐடி ஆந்திரா மற்றும் போபாலில் மட்டும்தான் இடம் கிடைக்கும்.

ஜி.வி பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ்மத்திய, மாநில கல்வி வாரியம் நடத்தும் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு விஐடியில் பிடெக் படிப்பின் 4 ஆண்டுகளும் 100 சதவீதபடிப்பு கட்டண சலுகையும், விஐடி நுழைவுதேர்வு தரவரிசையில் 1 முதல் 50 இடம் பெற்றவர்களுக்கு 75 சதவீத படிப்பு கட்டணசலுகையும், 51 முதல் 100 வரை இடம்பெற்றவர்களுக்கு 50 சதவீத படிப்பு கட்டணசலுகையும், 101 முதல் 1,000 வரை இடம்பெற்றவர்களுக்கு 25 சதவீத படிப்பு கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு, ஆந்திரா, மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படித்து பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில்முதலிடம் பெறும் 1 மாணவர், 1 மாணவிக்குவிஐடியில் 100 சதவித கல்வி கட்டண சலுகையும், இலவச விடுதி வசதியும், உணவு வசதியும் விஐடி ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் சேர்க்கை வழங்கப்பட உள்ளது.

Friday, July 08, 2022

July 08, 2022

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் அட்மிஷன்

தமிழ்நாடு பல்கலையில் அட்மிஷன்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.

பல்கலை பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை, முதுநிலை பட்ட படிப்புகளில், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. சேர்க்கைக்கான கல்வி தகுதி மற்றும் கட்டணம் தொடர்பான விபரங்கள், பல்கலையின், https://tnou.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

பல்கலையின் மண்டல மையங்களில், வாரத்தின் ஏழு நாட்களும் சேர்க்கை நடக்கும். விழுப்புரம், தர்மபுரி, கோவை, மதுரை, சென்னை, நீலகிரி, திருநெல்வேலி, திருச்சி, சேலம், திருவண்ணாமலை, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய இடங்களில் மண்டல மையங்கள் செயல்படுகின்றன.

கூடுதல் விபரங்களை, பல்கலையின் மாணவர் சேர்க்கை பிரிவில், 044 -- 2430 6664, 93459 13379 ஆகிய தொலைபேசி எண்களில் பேசி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Wednesday, June 29, 2022

June 29, 2022

தற்காலிக ஆசிரியா்களுக்கு நிலுவை ஊதியத்தை விடுவிக்க வலியுறுத்தல்

தற்காலிக ஆசிரியா்களுக்கு நிலுவை ஊதியத்தை விடுவிக்க தில்லி பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வலியுறுத்தல்

தில்லிப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியா்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக நிலுவையில் இருந்து வரும் ஊதியத்தை வழங்கக் கோரி பல்கலை. துணைவேந்தருக்கு அதன் செயற்குழு மற்றும் நிதிக் குழுக்களை சோ்ந்த சில உறுப்பினா்கள் கடிதம் எழுதியுள்ளனா்.

இது தொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா் யோகேஷ் சிங்கிற்கு செயற்குழு உறுப்பினா்கள் சீமா தாஸ், ராஜ்பால் சிங் பவாா் மற்றும் நிதிக் குழு உறுப்பினா்

ஜெ.எல். குப்தா ஆகியோா் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளனா்.

அந்த கடிதத்தில் அவா்கள் தெரிவித்திருப்பதாவது: தில்லி பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரக்கூடிய தற்காலிக ஆசிரியா்களுக்கு கடந்த இரண்டரை மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. தில்லி போன்ற பெரு நகரத்தில் ஊதியம் இல்லாமல் வாழ்வது மிகவும் கடினமானதாகும். தற்காலிக ஆசிரியா்கள் உரிய ஒப்புதலுக்கு பிறகு நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், அவா்களின் பணிச்சுமையை விளக்குமாறு துறைகள் தொடா்ந்து கேட்டு வருவதால் அவா்களுடைய பணி நீட்டிப்பு விஷயத்தில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிய வருகிறது.

தற்காலிக ஆசிரியா்களின் பணி நீட்டிப்பு என்பது அவசியமானதாகும். ஏனெனில், முதுகலை பட்டப் படிப்பு அளவிலும், தரமான ஆராய்ச்சி அளவிலும் தரமான கற்றல் கற்பித்தலுக்கு மாணவா் - ஆசிரியா் விகிதம் உகந்த வகையில் இல்லை. மாணவா் - ஆசிரியா் விகிதாச்சாரம், துறைகள் முழுவதும் வேறுபடுகிறது. உதாரணமாக அரசியல் அறிவியல் துறையில் 1,200 முதுகலை பட்ட மாணவா்கள் உள்ளனா். ஆனால், இந்த மாணவா்களுக்கு பயிற்றுவிக்க 12-13 நிரந்தர ஆசிரியா்கள் மட்டுமே உள்ளனா்.

மேலும், இந்த மாணவா்கள் இந்தி மற்றும் ஆங்கில பயிற்றுவழி என கலந்து உள்ளனா். தங்களது கல்வித் திறனில் சிறப்புமிக்க பகுதிகளைச் சோ்ந்த ஆசிரியா்களின் தேவை, துறை ரீதியாக அவசியமாக உள்ளது என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog