Breaking

Showing posts with label Govt school teacher. Show all posts
Showing posts with label Govt school teacher. Show all posts

Monday, March 04, 2024

March 04, 2024

தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசுப்பள்ளிகளில் ஆன்லைனிலும் மாணவர் சேர்க்கை: அனைத்து கலெக்டர்களும் களம் இறங்குகின்றனர், பள்ளி கல்வித்துறை தீவிர நடவடிக்கை

Friday, February 24, 2023

February 24, 2023

ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு பள்ளி - முதல்வர் கோப்பை கால்பந்தில் முதலிடம்

ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு பள்ளி - முதல்வர் கோப்பை கால்பந்தில் முதலிடம் Okkyam Durai Pakkam Govt School - Topped in Principal's Cup Football

சென்னை: மாவட்ட அளவில், பள்ளிகளுக்கு இடையிலான முதல்வர் கோப்பை கால்பந்து போட்டியில், மாணவியரில் ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு பள்ளி அணி வெற்றி பெற்று, முதலிடம் பிடித்தது.

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

பள்ளி, கல்லுாரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில் நடந்தது.

பள்ளி மாணவர்களுக்கான போட்டியில், அரசு பள்ளிகள் உட்பட மொத்தம், 20 அணிகளும், மாணவியரில் நான்கு அணிகளும் பங்கேற்றன.

மாணவியருக்கான போட்டியில், ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு பள்ளி முதலிடத்தையும், செங்கை எஸ்.டி.ஏ., பள்ளி இரண்டாமிடத்தையும், தாம்பரம் கிரிஸ்ட் கிங் பள்ளி மூன்றாம் இடத்தையும் வென்றன.
மாணவரில் ஜேப்பியார் பள்ளி முதலிடத்தையும், எஸ்.ஆர்.கே.எம்.வி., பள்ளி இரண்டாமிடத்தையும், சோத்துப்பாக்கம் அரசு பள்ளி மூன்றாம் இடத்தையும் வென்றன. கல்லுாரிகளுக்கான போட்டியில், மாணவரில் ஒன்பது அணிகளும், மாணவியரில் எட்டு அணிகளும் மோதின.

அதில், மாணவியருக்கான அனைத்து போட்டிகள் முடிவில், வேல்ஸ் பல்கலை அணி முதலிடத்தையும், குரோம்பேட்டை எஸ்.டி.என்.பி., கல்லுாரி இரண்டாமிடத்தையும், மலைக்கோட்டையூர் தமிழக உடற்கல்வி கல்லுாரி மூன்றாம் இடத்தையும் வென்றன.

ஆண்களில் எஸ்.ஆர்.எம்., கல்லுாரி முதலிடத்தையும், இந்துஸ்தான் கல்லுாரி இரண்டாமிடமும், செயின்ட் ஜோசப் கல்லுாரி மூன்றாமிடமும் பிடித்தன

Monday, February 13, 2023

February 13, 2023

அரசுப்பள்ளி ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. துண்டான விரல்கள் - கோவில்பட்டியில் பயங்கரம்

அரசுப்பள்ளி ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. துண்டான விரல்கள் - கோவில்பட்டியில் பயங்கரம் Govt school teacher slashed with sickle.. Chopped fingers - horror at Kovilpatti

Kovilpatti crime news: கோவில்பட்டி அருகே நிலத்தகராறில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர்.

கோவில்பட்டி அருகே உள்ள திருமலாபுரத்தில் நிலத்தகராறில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் காவல் நிலையத்திற்குட்பட்ட திருமலாபுரத்தினை சேர்ந்தவர் சுப்புராஜ்(53). முன்னாள் இராணு வீரரான இவர் தற்பொழுது கயத்தாரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். உடற்கல்வி ஆசிரியர் சுப்புராஜ்க்கு கயத்தாரில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் தோட்டம் உள்ளது.

ஆசிரியர் சுப்புராஜ்க்கும், அவரது ஊரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. கண்ணனின் மனைவி ராஜேஸ்வரி தற்பொழுது திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று உடற்கல்வி ஆசிரியர் சுப்புராஜ் தனது தோட்டத்தில் இருந்த போது, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், அவரது மனைவி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, இவர்களது மகன் செல்வக்குமார் ஆகியோர் நிலப்பிரச்சினை தொடர்பாக வாக்குவாத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் சுப்புராஜை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். இதையடுத்து சுப்புராஜ் அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடியதாக தெரிகிறது. இருந்த போதிலும் அவரை பின்னால் துரத்தி சென்று அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதில் உடற்கல்வி ஆசிரியர் சுப்புராஜ்க்கு தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது மட்டுமின்றி, வலது கையில் நான்கு விரல்கள் துண்டானது. சுப்புராஜ் அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்த தோட்டத்த்தில் இருந்தவர்கள் கயத்தார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து காயமடைந்த சுப்புராஜை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன்(55), அவரது மகன் செல்வக்குமார்(35) இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலப்பிரச்சினையில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும்ப பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Total Pageviews

Search This Blog