Registrar
February 25, 2025
Showing posts with label periyar university. Show all posts
Showing posts with label periyar university. Show all posts
Tuesday, February 25, 2025
Tuesday, December 26, 2023
periyar university
December 26, 2023
சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது!
சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மீது 8 பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீஸ் வழக்குப்பதிவு
சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மீது 8 பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மோசடி, கூட்டுச்சதி, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் ஜெகநாதன் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாக புகாரில் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார்.
Wednesday, June 28, 2023
Friday, May 12, 2023
Thursday, April 13, 2023
Vice Chancellor
April 13, 2023
போட்டித் தேர்வு பயிற்சி மையம் - பல்கலை துணைவேந்தர் தகவல்
பெரியார் பல்கலைக்கழகத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் - துணைவேந்தர் தகவல் - Competitive Exam Coaching Center - University Vice Chancellor Information
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது, என துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெரியார் பல்கலைக்கழகம் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, தமிழக அரசின் உத்தரவுப்படி, சென்னைக்கு அடுத்தபடியாக கோவையைத் தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது. பெரியார் பல்கலைக்கழக எல்லைக்குட்பட்ட மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் தமிழக அரசின் முழு நிதி மற்றும் நிர்வாகப் பங்களிப்புடன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.
இதில் ஒரே சமயத்தில் 200 மாணவர்கள் பயிற்சி பெறலாம். பல்கலைக்கழக மாணவர்களுக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி சேர்க்கை நடைபெறவுள்ளது. சேர்க்கை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.
பயிற்சி வகுப்புகள் பல்கலைக்கழகத்தின் திருவள்ளுவர் மைய நூலகத்தின் 3-வது தளத்தில் நடைபெறவுள்ளன. இங்கு பாடம் சார்ந்த சுமார் 1,10,000 புத்தகங்களும், போட்டித்தேர்வுகளுக்கு 5,000 புத்தகங்களும் உள்ளன. போட்டித்தேர்வுகளில் விருப்பமுள்ள மாணவர்கள் பயிற்சி வகுப்பில் பங்கு பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sunday, April 02, 2023
Ramadass
April 02, 2023
பெரியார் பல்கலை. ஊழல் விசாரணை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை
Periyar University. Corruption investigation and appropriate action against the culprits -
பெரியார் பல்கலை. ஊழல் விசாரணை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல்கள், முறைகேடுகள் உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவின் பதவிக்காலம் மேலும் இரு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்ததாக தமிழக அரசால் பட்டியலிடப்பட்ட 13 குற்றச்சாட்டுகளில் இருப்பவர்களுக்கு பதவியும், பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் பற்றி விசாரணைக்கு அரசு ஆணையிட்டது மிகச்சிறந்த முன்னெடுப்பு ஆகும். விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும். அதற்கு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள இப்போதைய பொறுப்பு பதிவாளர் உள்ளிட்ட அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். விசாரணைக்குழு புதிய காலக்கெடு வரை காத்திருக்காமல், ஏப்ரல் 12ம் தேதிக்குள் விசாரணையை நிறைவு செய்து அறிக்கை வழங்குவதையும், அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Thursday, August 25, 2022
University Exam
August 25, 2022
பெரியார் பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு
பெரியார் பல்கலைக்கழகத்தின் இளநிலை 2,3,ஆம் ஆண்டு முதுநிலை 2ஆம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியீடு
www.periyaruniversity.ac.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்; மறுமதிப்பீடு, மறுகூட்டல், விடைத்தாள் நகலைப்பெற செப்டம்பர் 9க்குள் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
-உயர்க்கல்வி இயக்ககம்

Wednesday, July 20, 2022
முன்னாள் முதல்வர்
July 20, 2022
பெரியார் பல்கலை: வினாத்தாளில் பிழைகளுடன் முன்னாள் முதல்வர் அண்ணா பெயர்!
பெரியார் பல்கலை: வினாத்தாளில் பிழைகளுடன் முன்னாள் முதல்வர் அண்ணா பெயர்!
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் எது தாழ்த்தப்பட்ட ஜாதி என்ற கேள்வி வினாத்தாளில் கேட்கப்பட்ட சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. மறைந்த முதல்வர் அண்ணாதுரையின் பெயரை, அண்ணாதுளை என்ற பிழையுடன் வினாத்தாள் வெளியாகியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பருவத் தேர்வுகள் நடைபெற்றது. இதில் முதுகலை வரலாறு பாடத்திற்கான தேர்வில், தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற கேள்வி கேட்கப்பட்டது. ஜாதி தொடர்பான கேள்வி வினாத்தாளில் கேட்கப்பட்ட விவகாரம் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்தது. மேலும், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் விளக்கம் அளித்தார்.
இதையும் படிக்க | TNPSC - VETERINARY ASSISTANT SURGEON (THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE) (Counselling)
மேலும் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜாதி தொடர்பான வினாத்தாள் இடம்பெற்றது குறித்து உயர் கல்வித்துறை சார்பில் உயர் அலுவலர் நிலையில் குழு அமைத்து உரிய விசாரணை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை துறை மூலமாக எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்தார். பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜாதி தொடர்பான கேள்வி வினாத்தாளில் கேட்கப்பட்ட சர்ச்சை அடங்குவதற்குள் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அதில் பி.ஏ. அரசியல் பொருளாதார பாடத்திற்கான தேர்வில், தமிழ்நாட்டில் அண்ணாதுளை ஆட்சியின் சாதனைகள் பற்றி விவாதிக்க என்று பிழையுடன் வினாத்தாள் வெளியாகி உள்ளது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
அதேபோல பி.ஏ. வரலாறு பாடத்தில் கொள்குறி வினா பதில்களில், பிரம்ம சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுக்கான பதில் அ.1822, ஆ.1824, இ.1823, ஈ.1825 என்று தவறான விடைகளே இடம்பெற்றுள்ளது. இதற்கு சரியான பதில் 1828 ஆகஸ்ட் 20 என்பதாகும். மேலும் பி.ஏ. ஆங்கில பாடத்தில் விளக்கக்காட்சியின் போது நம்பகத்தன்மையை எப்படி உருவாக்கும் என்ற கேள்விக்கு, தவறுதலான பதில் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகத்தின் இளநிலை படிப்புகளுக்கான பாட வினாத்தாளில் தவறான பதில்கள், பிழைகள் வெளியாகி உள்ள நிலையில் வினாத்தாள் ஆய்வுக்குழுவின் தரம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
இதையும் படிக்க | அரசு பள்ளியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர்: மாவட்ட கல்வி அலுவலர் புகார்
மேலும் பி.ஏ. வரலாறு பாடத்தில், சுதந்திர போராட்ட வீரரும், காந்தியின் அரசியல் குருவான கோபாலகிருஷ்ண கோகலே எந்த தலைவராக இருந்தார் என்ற கேள்விக்கு, தீவிரவாதிகள், மிதவாதிகள், பயங்கரவாதிகள், புரட்சிவாதிகள் என விடைகள் கொடுக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற கேள்விக்கு அளித்துள்ள கொள்குறி வகை விடைகள் சுதந்திர போராட்டத் தலைவரை தரம் தாழ்த்தி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இதுதொடர்பாக, பல்கலைக்கழக தரப்பில் கூறியது: பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட வல்லுநர்கள் குழு பட்டியலில் உள்ள பிற பல்கலைக்கழகங்கள், இணைவுபெற்ற கல்லூரியில் பணியாற்றிவரும் ஆசிரியர்களை அனுபவத்தின் அடிப்படையில் குழுத் தலைவராகவும், குறைந்தபட்சம் 3 ஆண்டு கற்பித்தல் அனுபவம் உள்ள ஆசிரியர்களை கொண்டு வினாத்தாள் தயாரிக்கப்படுகின்றன.
அதேபோல வினாத்தாள் ஆய்வுக்குழுவில் ஒவ்வொரு பாடத்திற்கும் 3 பேர் குழு அமைக்கப்படுகிறது. இதில் குழு தலைவர், 2 தேர்வாளர்கள் நியமிக்கப்படுவர். இந்தக் குழு மூன்று வகை வினாத்தாள்களை தயாரித்து வழங்கும். வினாத்தாள் அச்சகத்திற்கு அனுப்பும் முன்பாக பாடத்திட்டத்திற்கு அப்பால் வினா கேட்கப்பட்டுள்ளதா, தவறு மற்றும் எழுத்துப் பிழை ஆகியவை உள்ளதா என வினாத்தாள் ஆய்வுக்குழு தான் சரிபார்க்கப்படும். பின்னர் மூன்று வகை வினாத்தாளில் ஒரு வினாத்தாள் அச்சகத்திற்கு அனுப்பி அச்சாகி வெளியே வரும்.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைனில் மட்டும் தேர்வு நடைபெற்று வந்தது. தற்போது கரோனா தொற்றுப்பரவல் குறைந்து கல்லூரி வகுப்புகள் தொடங்கி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதனால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பருவத் தேர்வுகள் நடக்கும் நிலையில் வினாத்தாள்களில் ஏராளமான பிழைகளும், தவறுகளும், சர்ச்சைக்குரிய வகையில் வினாக்களும் இடம்பெற்று வருவது பெரியார் பல்கலைக்கழகத்தின் கல்வித்தரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது என்றனர்.
இதையும் படிக்க | TNPSC - VETERINARY ASSISTANT SURGEON (THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE) (Counselling)
இதுதொடர்பாக பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறுகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வினாத்தாள் தயாரிப்பு என்பது துறை சார்ந்த பேராசிரியர்கள், வல்லுநர்கள் மூலம் நேரடியாக நடைபெறுகிறது. அதேபோல பல்கலைக்கழகத்தின் வினாத்தாள் தயாரிப்பு என்பது ஆய்வு மாணவர்களை வைத்து எடுப்பதை பேராசிரியர்கள் கைவிட வேண்டும். மேலும் வினாத்தாள் தயாரிக்கும் பேராசிரியர்களை பல்கலைக்கழக தேர்வாணைய அலுவலகத்திற்கு நேரடியாக வரவழைத்து வினாத்தாள் தயாரிக்கும்போது தவறு, பிழை உள்ளிட்டவை நேர வாய்ப்பு இருக்காது என்றனர்.
Friday, July 15, 2022
பெரியார் பல்கலை
July 15, 2022
பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குறிய கேள்வி விவகாரம்.: துணைவேந்தர் விளக்கம்
சாதியை ஒழிக்க பாடுப்பட்ட பெரியார் என்ற பெயரில் உள்ள பல்கலைகழகத்தின் தேர்வில் நான்கு சாதி பெயர்களை குறிப்பிட்டு அதில் எந்த சாதி தமிழ்நாடில் தாழ்த்தப்பட்டது என்று கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை
தமிழ்நாட்டில் எது தாழ்ந்த சாதி?
பெரியார் பல்கலைக்கழக M.A., History பாட தேர்வில் சர்ச்சைக் கேள்வி.
சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேள்வியால் சர்ச்சை*
சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேள்வியால் சர்ச்சையாகி உள்ளது.
4 பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
முதுகலை வரலாறு 2-ம் ஆண்டு தேர்வு வினாத்தாள் பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் கூறியுள்ளார்.
உரிய விசாரணை
சர்ச்சைக் கேள்வி இடம்பெற்றது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று துணைவேந்தர் ஜெகந்நாதன் விளக்கம்.
சர்ச்சை கேள்வி குறித்து பல்கலையின் துணைவேந்தர் ஜெகநாதன் விளக்கம்!
தேர்வுக்கான வினாத்தாள் பெரியார் பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்டது இல்லை, பிற பல்கலை / கல்லூரிகளில் தயார் செய்யப்பட்டது.
இது குறித்து என் கவனத்துக்கு வரவில்லை,உரிய விசாரணை நடத்தப்படும்.
கேள்வி குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மறு தேர்வு குறித்து பரிசீலிக்கப்படும்.
கசிந்துவிடும் என்பதால் முன்கூட்டியே வினாத்தாள்களை படிப்பதில்லை.