Breaking

Showing posts with label kerala. Show all posts
Showing posts with label kerala. Show all posts

Monday, February 19, 2024

Thursday, July 27, 2023

July 27, 2023

செவிலியர் படிப்பில் திருநங்கை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு; வரலாறு படைத்த கேரளா

செவிலியர் படிப்பில் திருநங்கை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு; வரலாறு படைத்த கேரளா

கேரளாவில் சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், செவிலியர் துறையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இதன்படி, பி.எஸ்சி. செவிலியர் படிப்புக்கு ஒரு சீட்டும், பொது செவிலியர் படிப்புக்கு ஒரு சீட்டும் ஒதுக்கீடு செய்யப்படும். செவிலியர் துறையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது வரலாற்றில் இதுவே முதன்முறை ஆகும்.

அந்த சமூகத்தின் மேம்பாட்டுக்கு இந்த அரசு சிறந்த பணியாற்றி வருகிறது என தெரிவித்த ஜார்ஜ், அதன் தொடர்ச்சியாக, சுகாதார பிரிவிலும் திருநங்கை சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Sunday, March 05, 2023

March 05, 2023

மார்ச் 9-ல் தொடங்குகிறது SSLC தேர்வு

மார்ச் 9-ல் தொடங்குகிறது எஸ்எஸ்எல்சி தேர்வு

கேரளத்தில் மார்ச் 9 ஆம் தேதி எஸ்எஸ்எல்சி தொடங்கும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் வி சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எஸ்.எஸ்.எல்.சி., மேல்நிலை மற்றும் தொழிற்கல்வி தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 9ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதி முடிவடைகிறது.

இந்த ஆண்டு தேர்வை 4,19,554 பேர் எழுதுகின்றனர்.

அரசு உதவி பெறும் பிரிவில் 1,421 தேர்வு மையங்களும், உதவி பெறாத மண்டலத்தில் 369 தேர்வு மையங்களும் என மொத்தம் 2,960 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வளைகுடா பகுதியில் 518 மாணவர்களும், லட்சத்தீவில் உள்ள ஒன்பது பள்ளிகளில் 289 மாணவர்களும் இந்த ஆண்டு தேர்வு எழுதுகின்றனர்.

விடைத்தாள்கள் திருத்தும் பணி 70 முகாம்களில் ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் தொடங்கும். மே 2023 இரண்டாவது வாரத்தில் முடிவுகளை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Friday, January 20, 2023

January 20, 2023

கேரளத்தில் 18+ மாணவிகளுக்கு 60 நாள்கள் மகப்பேறு விடுப்பு!

கேரளத்தில் 18+ மாணவிகளுக்கு 60 நாள்கள் மகப்பேறு விடுப்பு! 60 days maternity leave for girls 18+ in Kerala!

18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து அறிவித்துள்ளார்.

இதன்படி கேரளத்தில் உயர்கல்வி பயிலும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் அதிகபட்சமாக 60 நாட்கள் மகப்பேறு விடுப்பு பெறலாம்.

மேலும் மாதவிடாய் காலத்தில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். கல்லூரிகளில் கட்டாய வருகைப்பதிவு மாணவிகளுக்கு மட்டும் 75% லிருந்து 73% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநில பல்கலைக்கழகங்களிலும் மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சர் பிந்து தெரிவித்தார்.

மாதவிடாய் காலங்களில் மாணவிகள் எதிர்கொள்ளும் மன மற்றும் உடல் ரீதியான சிரமங்களைக் கருத்தில் கொண்டு, கேரள அரசு மாநில உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இதை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது என்றார்.

Saturday, August 27, 2022

August 27, 2022

உள்ளாடைகளை அகற்றக் கூறிய விவகாரம்: நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

கேரளத்தில் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவிகளிடம் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தோ்வு மையத்துக்குள் செல்லுமாறு அறிவுறுத்திய விவகாரத்தில், மாணவிகளுக்கு நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

கேரளத்தில் அந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதிய மாணவிகளுக்கு மட்டும் செப்டம்பர் 4ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லம் பகுதியில், பாதிக்கப்பட்ட மாணவிகள் மட்டும் மறுதேர்வு எழுத தேசிய தேர்வு முகமை அனுமதி அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வு கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்றது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆயூரில் அமைந்துள்ள தனியாா் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவிகளிடம், அவா்களின் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தோ்வு மையத்துக்குள் செல்லுமாறு தேசிய தோ்வு முகமையால் சோதனையிடும் பணிக்காக அமா்த்தப்பட்ட நிறுவனத்தின் பணியாளா்கள் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனை ஒரு மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, இது நாடு முழுவதும் பெரும் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

தோ்வு மையத்தில் தனது மகள் அவமதிக்கப்பட்டதாக மாணவியின் தந்தை ஆயூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். மாநில மனித உரிமைகள் குழுவும் இந்த விஷயத்தில் தலையிட்டு விளக்கம் கேட்டுள்ளது.

உள்ளாடைகளை அகற்ற வலியுறுத்திய விவகாரத்தில் நீட் தோ்வு மையப் பணியில் இருந்த 5 பெண்கள் கைது செய்யப்பட்டனா். இதில் மூவா் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இப்பணிக்கு அமா்த்தப்பட்டவா்கள். இருவா் தனியாா் கல்வி நிலையத்தில் பணியாற்றிய பெண் துப்புரவுத் தொழிலாளா்கள் ஆவா்.

Thursday, August 11, 2022

August 11, 2022

ஆட்சியரிடம் விடுமுறை வேண்டாம் என்ற 6-ம் வகுப்பு சிறுமி - சமூக ஊடகங்களில் வைரல்

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்பது பொதுவான நம்பிக்கை.

இருப்பினும், கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி, எல்லா குழந்தைகளும் விடுமுறையில் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள் என்பதை நிரூபித்துள்ளார், ஏனெனில் அவர் வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் விடுமுறை அறிவிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சனி, ஞாயிறு பள்ளி விடுமுறையைத் தொடர்ந்து பலத்த மழை காரணமாக வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் திங்கட்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. செவ்வாய்கிழமை முகரம் பண்டிகை காரணமாக விடுமுறை.

இந்நிலையில், வயநாட்டைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் சபூரா நெளஷத் என்ற மாணவி, புதன்கிழமையும் (நேற்று) விடுமுறை அளிக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கீதாவுக்கு மின்னஞ்சல் அனுப்பினார். அந்த மாணவியின் மின்னஞ்சலை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள ஆட்சியர் கீதா, அந்த மாணவியின் படிக்கும் ஆர்வத்தையும் புத்திசாலித்தனத்தையும் பாராட்டியுள்ளார். சிறுமியின் கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

Friday, July 22, 2022

July 22, 2022

280 பெண்கள் பள்ளிகள், 164 ஆண்கள் பள்ளிகளை மூட உத்தரவு!! கல்வித்துறை அதிரடி

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாணவிகள், மாணவர்கள் என தனித்தனியாக பள்ளிகளும், இருபாலரும் பயிலும் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் ஆண்கள், மகளிர் பள்ளிகள் குறைந்த அளவிலேயே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆண்கள், மகளிர் பள்ளிகள் குறித்து கேரள அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

இதையும் படிக்க | 72 மாணவர்கள் காயம்: ஆசிரியர் பணியிடை நீக்கம்

மாணவிகள்

கேரளாவில் மகளிர் பள்ளிகள் 280, ஆண்கள் பள்ளிகள் 164 என்ற அளவில் செயல்பட்டு வருகிறது. வருகிற கல்வியாண்டு முதல் (2023-2024) கேரளாவில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை இழுத்து மூடிவிட்டு அவற்றை இருபாலர் படிக்கும் பள்ளிகளாக மாற்றி இணைக்கல்வியை வழங்குவதற்கான திட்டத்தை அமல்படுத்த வேண்டும் குழந்தை உரிமைகள் ஆணையம் கேரள கல்வித்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம் இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக பள்ளிகளில் உள்ள கழிவறை உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், மாணவர்கள், மாணவிகள் இணைந்து படிக்கும் இணைக்கல்வியின் அவசியம் குறித்தும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க | Announcement of Joint Entrance Examination (Main) – 2022 Session 2 (July 2022) - Reg

இந்த புதிய செயல் திட்டம் அடுத்த ஆண்டு கல்வியாண்டு தொடக்கத்தில் இருந்து 90நாட்களுக்குள் செய்து முடித்துவிட வேண்டும் என்று கல்வித்துறையின் முதன்மை செயலாளர், பொதுக்கல்வி இயக்குநர் உள்ளிட்டோருக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Total Pageviews

Search This Blog