Breaking

Showing posts with label Corona period. Show all posts
Showing posts with label Corona period. Show all posts

Sunday, January 07, 2024

January 07, 2024

மாணவர்களை இப்படி பள்ளிக்கு அனுப்பாதீங்க - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்



கொரோனா அதிகரிப்பு - மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தல்

மாணவர்களை இப்படி பள்ளிக்கு அனுப்பாதீங்க

உடல்நிலை சரியில்லை என்றால் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 1100ஐ தாண்டியுள்ளது.

பெங்களூருவில் மட்டும் பாதிப்புகள் 700ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. காய்ச்சல், சளி, இருமல், பிரச்னைகள் இருந்தால் மாணவர்களை வீட்டிலேயே வைத்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Monday, March 27, 2023

March 27, 2023

அதிகரிக்கும் கரோனா: மத்திய அரசுடன் தமிழக அதிகாரிகள் இன்று ஆலோசனை

அதிகரிக்கும் கரோனா: மத்திய அரசுடன் தமிழக அதிகாரிகள் இன்று ஆலோசனை - Increasing Corona: Tamil Nadu officials will consult with the central government today

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷ ணுடன் மாநில மக்கள் நல்வாழ் வுத் துறை அதிகாரிகள் திங்கள் கிழமை (மார்ச் 27) காணொலி முறையில் கலந்தாலோசனை நடத்தவுள்ளனர்.

Thursday, March 02, 2023

March 02, 2023

தேர்வு ரத்தான 10ம் வகுப்புக்கு மதிப்பெண் சான்றிதழ் கிடையாது

கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு தேர்வுகள்

9ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கு

ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தேர்வு ரத்தான 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு: கொரோனா வைரஸ் பரவலால், 2020 - 21ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 9.30 லட்சம் மாணவர்களுக்கு, மதிப்பெண் குறிப்பிடாமல் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவ்வாறு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழை திரும்ப பெற்று, ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், சான்றிதழ் வழங்க வேண்டும்.

சி.பி.எஸ்.இ., மற்றும் இதர மாநில கல்வி பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு, 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்பட்டு, மதிப்பெண்களுடன் கூடிய சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது, ரயில்வே துறையில் 1.03 லட்சம் பணியிடங்களுக்கும், தபால் துறையில் 40 ஆயிரம் பணியிடங்களுக்கும், பெங்களூரு ரயில் 'வீல்' தொழிற்சாலையில் 4,103 பயிற்சியாளர் பணிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, 10ம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம். எனவே, கொரோனாவால் தேர்வு ரத்தான 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''ஏற்கனவே இதே பிரச்னை தொடர்பான வழக்கில், தேர்வு நடத்தாமல் மதிப்பெண் வழங்கும்படி உத்தரவிட முடியாது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,'' என்றார்.

இதை பதிவு செய்த முதல் பெஞ்ச், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Tuesday, December 27, 2022

December 27, 2022

பள்ளி, கல்லூரி, திரையரங்கில் முகக்கவசம் கட்டாயம்: முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவு

பள்ளி, கல்லூரி, திரையரங்கில் முகக்கவசம் கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு

கர்நாடக சுகாதாரத் துறை அதிகாரிகள், கரோனா தடுப்பு நிபுணர் குழுவினருடன் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். அதில் கரோனா வைரஸ்பரவுவதை எவ்வாறு தடுப்பது, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூரு, மங்களூரு உள்ளிட்ட‌ சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, திரையரங்கம், குளிரூட்டப்பட்ட அறைகள் உட்பட உள் அரங்குகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மெட்ரோ ரயில், பேருந்து ஆகியவற்றிலும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சளி, காய்ச்சல், இருமல் ஆகிய அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டை பொதுமக்கள் உரிய‌ கட்டுப்பாடுகளுடன் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

Saturday, October 01, 2022

October 01, 2022

மீண்டும் மிரட்ட வரும் புதிய வைரஸ் கோஸ்டா-2 - எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

மீண்டும் மிரட்ட வரும் புதிய வைரஸ் கோஸ்டா-2 - எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை! - Scientists warn that the new virus coming back to threaten Costa-2 - will not adhere to any vaccine!

மீண்டும் மிரட்ட வரும் புதிய வைரஸ் கோஸ்டா-2

.The corona virus epidemic that has gripped the world for the last 2 years has been almost universally controlled.

The head of the World Health Organization, Tedros Adhanom Ghebreyesus, made the announcement yesterday. But a new virus that can threaten humans like Corona has been discovered. It has been named 'Costa-2'.

Scientists have warned that the virus, found in Russian bats, will not respond to any existing vaccine. This has created a new panic.

கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, கிட்டத்தட்ட உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஜிப்ரியேசிஸ் நேற்று முன்தினம் இதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். ஆனால், கொரோனாவை போன்றே மனிதர்களை அச்சுறுத்தக் கூடிய புதிய வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு 'கோஸ்டா-2' என்று பெயரிடப்பட்டு உள்ளது.

ரஷ்ய வவ்வால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இதனால், புதிய பீதி ஏற்பட்டுள்ளது.

Wednesday, April 27, 2022

April 27, 2022

கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கியதால் விபரீதம் மனதளவில் பள்ளி மாணவர்கள் பாதிப்பா?

தமிழகத்தில் கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டதால், வீடுகளில் முடங்கிய மாணவர்களுக்கு மன மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ஒழுக்கக் கேடானா செயல்களில் ஈடுபடுகின்றனர். உடனடியாக பள்ளி மாணவர்களுக்கு உளவியல் சார்ந்த கவுன்சலிங் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்காலம் மாணவர்கள் கையில். ஆனால், மாணவர்கள் எதை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறார்கள்? இதுதான் தமிழகத்தில் அனைவர் முன் நிற்கும் கேள்வி... தமிழகத்தில் எதிர்கால குடிமக்களுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

அதன் வெளிப்பாடுதான் 2021-2022ம் ஆண்டுக்கு கல்வித்துறைக்காக ரூ. 32 ஆயிரத்து 599 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் உதவியால் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு புதிய மாற்றங்கள், நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய கற்றல் முறைகளையும் புகுத்தி வருகிறது. இதன் காரணமாக பள்ளிக் கட்டிடங்கள் வளர்ச்சி அடைந்து வருகிறதே தவிர மாணவர்கள் நிலை எதிர்திசையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது. இதற்கு சாட்சியாக செல்போன்களில் அன்றாடம் வெளியாகும் வீடியோ காட்சிகள். வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் ஆசிரியரை சில மாணவர்கள் சூழ்ந்து கொண்டு கும்மி அடித்து கேலி செய்வது. வகுப்பறையில் ஒரு ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் போதே, ஒரு மாணவன் வகுப்பறையில் நாட்டியம் ஆடுவது, வகுப்பு ஆசிரியரை கத்தியை காட்டி மிரட்டுவது, வகுப்பறையில் உள்ள இருக்கைகளை உடைப்பது போன்ற காட்சிகளை நாம் பார்க்கிறோம். கொனோரா தொற்று பரவத் தொடங்கிய பிறகு தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்கள் வீட்டிலேயே முடங்கினர். இது மாணவர்களுக்கு கடும் மன அழுத்தம் தந்ததால், அவர்களின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது தற்போதைய நிலவரப்படி பள்ளிகளில் இன்னும் கொலைச் சம்பவம் தான் நடக்கவில்லை. அதுவும் விரைவில் நடந்து விடுமோ என்று கல்வியாளர்கள், பெற்றோர் அச்சப்படுகின்றனர். அந்த அளவுக்கு அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவ மாணவியரின் செயலும், மன நிலையும் மாறியுள்ளது. பொதுவாக, கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்கள் இடையே தான் இதுபோன்ற மனப்போக்கை காண முடிந்தது. இப்போது, அந்த மன நிலை பரிணாம வளர்ச்சி பெற்று பள்ளிகளிலும் தொற்றிக் கொண்டுவிட்டது.

இது குறித்து ஆசிரியர்கள் கூறுவது, மாணவர்கள் விஷயத்தில் ஆசிரியர்களின் கை கட்டப்பட்டுள்ளது. இதனால் யாரையும் கண்டிக்க முடியவில்லை. கொரோனா காலத்தில் வீடுகளில் முடங்கிய பெரும்பாலான மாணவ மாணவியருக்கு போதிய வழிகாட்டுதல்கள் கிடைக்காமல் போனது, ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட பாடங்களை சரியாக கவனிக்காமல் போனது, வறுமை, வசதியின்மை போன்ற காரணங்கள்தான். இவை எல்லாவற்றையும் விட, கொரோனா காலத்தில் மாணவர்கள் கைகளில் செல்போன் வந்ததுதான். செல்போன்களில் கண்டதை பார்த்து தானும் அதுபோல செய்ய வேண்டும் என்ற ஆசையால் வழி தவறி மாணவர்கள் நடக்கின்றனர். இதை கண்டிக்க வேண்டிய பெற்றோர் கண்டிக்கவில்லை. சரியாக வழிகாட்டவில்லை. தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் தட்டுத் தடுமாறிப் படித்தாலும், 9ம் வகுப்புக்கு நுழையும் போது நல்ல முறையில் தயாராகி, பெரும்பாலும் 10ம் வகுப்பில் தங்களை கற்றலுக்கு முழுமையாக மாணவர்கள் தயாரித்துக் கொண்டு பொதுத் தேர்வு எ ழுதி தேர்ச்சி அடைகின்றனர். அதில் தேர்ச்சி பெறவில்லை என்றால் மீண்டும் முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது மாணவர்களுக்கு பயம் வரும். தங்களை திருத்திக் கொள்வார்கள். ஆனால் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கும் போது பயம் போய்விடுகிறது.

திருத்திக் கொள்ள முடியாத, திருந்த தயாராக இல்லாத மாணவர்கள் அதற்கு மேல் கல்வி நிறுவனங்களை எட்டிப்பார்க்கவே முடியாது. ஆனால் மீண்டும் அனைவரும் தேர்ச்சி அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால், இந்த வகை மாணவர்கள் உரிய கற்றல் அடைவுகளோடு இல்லாத ஒருவன், ஒரே தர நிலையில் பிற மாணவர்களோடு இணைவது என்பது சிரமம். அதாவது, ஒரு குடத்துப் பாலில் ஒரு துளி விஷம் கலப்பதற்கு ஒப்பாகும். இதை உணராத வரையில் மாணவர்களுக்கு கல்வியின் ஆற்றல் புரியாது என்பதே நிதர்சனம்.

சமூக வலை தளங்களின் பிடிக்குள் சிக்கியுள்ள மாணவர்கள், தாயாக பார்க்க வேண்டிய பெண் ஆசிரியர்களை வேறாக பார்க்கத் தொடங்கியுள்ளனர். தந்தையாக பார்க்க வேண்டிய ஆசிரியர்களை எதிரிகளாக பார்க்கத் தொடங்கிவிட்டனர். அதன் விளைவுதான் வகுப்பறைக்குள் கத்தியை கொண்டு வருகின்றனர். இது மாணவர்கள், ஆசிரியர்களின் பிரச்னையாக இல்லாமல், மாணவர்களின் எதிர்காலம் மற்றும் தேசத்தின் எதிர்காலமும் அடங்கியுள்ளது என்பதை கல்வித்துறையும், மாணவர்களும் உணர வேண்டும். பள்ளி மாணவர்களை தண்டிக்க கூடாது என்ற நடைமுறை வந்த பிறகு மாணவர்களிடம் இது போன்ற மனநிலை துளிர்விடத் தொடங்கிவிட்டதும் ஒரு காரணம். அதனால், ஆசிரியர்கள், மாணவர்களை கண்டிக்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இடையே உருவாகியுள்ள சாதி, சமய, கல்வி போன்ற பிரிவினைகளும் இந்த செயல்கள் வளர்வதற்கு தூண்டுகோலாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. பள்ளிக் கல்வித்துறையில் இதுவரை இருந்துவந்த நடைமுறைகளை மாற்றி, அனைத்து பொறுப்புகளும் ஐஏஎஸ் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி பள்ளிக் கல்வித்துறையில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் ஒவ்வொரு நாளும் குழப்பம் தான். ஒவ்வொரு நாளும் மாறி ,மாறி உத்தரவுகள் வருகிறது. இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கள நிலவரங்களை அறியாத அதிகாரிகளால் பள்ளிகளை சீர் திருத்த முடியாது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா காலத்துக்கு பிறகு மாணவர்களின் குடும்ப சூழல், வருவாய் சூழல், போன்றவற்றை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்து அதற்கு ஏற்ற நடவடிக்கைகள் எடுப்பதுடன், மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அவர்களுக்குரிய கவுன்சலிங்கையும் அளித்தால் தான் மாணவர்களிடயே ஏற்பட்டுள்ள மன மாற்றங்களை ஒழுங்கு படுத்த முடியும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

* தமிழகத்தில் 37554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 225400 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 5275203 மாணவ மாணவியர் படிக்கின்றனர்.

* 1920ல் சென்னை மாகாண தொடக்க கல்வி சட்டம் கொண்டு வரப்பட்டது. 1921ல் சென்னை மாகாண தொடக்க நிலைக் கல்வி சட்ட விதிகள் நடைமுறைக்கு வந்தது. 1924ல் சில பகுதிகளில் கட்டாய இலவசக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது.

* 1841ல் சென்னையில் முதல் முறையாக உயர்நிலைப் பள்ளி உருவாக்கப்பட்டது. 1849ல் பெண்களுக்கான முதல் உயர்நிலைப் பள்ளி திறக்கப்பட்டது. * 1826ல் சர்தாமஸ் மன்றோ, பொதுக் கல்வி வாரியத்தை உருவாக்கி கல்வி முறையை ஒழுங்குபடுத்தினார்.

* பின்னர் 1854ல் பொதுக்கல்வி இயக்ககம் உருவாக்கப்பட்டது.

* 1855ல் நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு தொகுப்பு மானியம் வழங்கப்பட்டது.

* 1995-1996ல் ஒன்று முதல் 8ம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

* 1960ல் இலவச சீருடை வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. 1981ல் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களாக மாற்றப்பட்டனர். 1985ல் 8ம் வகுப்புவரை இலவசப் பாடநூல், சீருடை வழங்குவது விரிவு படுத்தப்பட்டது.

* திட்டமிட்ட சதி

அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்து வருவதால், அதை ஏற்க மறுக்கும் ஒரு சில கூட்டத்தார், இதுபோன்ற காட்சிகளை வேண்டும் என்றே செல்போன்களில் பரவவிட்டு அரசுப் பள்ளிகளின் மதிப்பை குறைக்க முயற்சிக்கின்றனர் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால்,தனியார் பள்ளிகளில் படிக்கின்ற மாணவ மாணவியர் தங்களுக்கு போதிய சுதந்திரம் வழங்கப்படவில்லை, தனியார் பள்ளி நிர்வாகத்தினர் எங்களை அடிமைபோல நடத்துகின்றனர். எப்போது பார்த்தாலும் ‘எழுது, படி’ என்று துன்புறுத்துகின்றனர் என்று புலம்புகின்றனர். இது, ஒரே பள்ளிக் கல்வியில் இரு வேறு நிலைகளை நாம் காட்டுகிறது.

Total Pageviews

Search This Blog