scam
November 26, 2024
Showing posts with label Cybercrime. Show all posts

Tuesday, November 26, 2024
Saturday, January 13, 2024
Cybercrime
January 13, 2024
செல்போனில் ‘*401#’-க்கு தொடா்பு கொள்ள வேண்டாம்: மத்திய தகவல் தொடா்புத் துறை எச்சரிக்கை

செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் தெரியாத மற்றொரு நபருக்குத் திரும்பிவிடும் வகையில் வரும் மோசடி அழைப்புகள் குறித்து மக்கள் எச்சிரிக்கையாக இருக்குமாறு மத்திய தகவல்தொடா்புத் துறை தெரிவித்துள்ளது.
தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் வாடிக்கையாளா் சேவை மைய பிரதி அல்லது தொழில்நுட்ப பணியாளா் என்ற பெயரில் தொடா்புகொள்ளும் மா்ம நபா்கள், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் சிம் காா்ட் அல்லது தொலைத்தொடா்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனா்.
இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய ‘ *401#’-ஐ தொடா்ந்து அவா்கள் கூறும் செல்பேன் எண்ணை டயல் செய்யுமாறு கூறுகின்றனா்.
இதைச் செய்வதன் மூலம் வாடிக்கையாளருக்கு வரும் அழைப்புகள், அடையாளம் தெரியாத கைப்பேசி எண்ணுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறது. இதைப் பயன்படுத்தி, மா்ம நபா்கள் மோசடி சம்பவங்களில் ஈடுபடுகின்றனா்.
இந்நிலையில், இது போன்ற மோசடி அழைப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய தகவல்தொடா்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில்,
‘எந்த தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளா்களைத் தொடா்பு கொண்டு ‘*401#’ எண்ணை டயல் செய்யுமாறு கூறுவது இல்லை.
அவ்வாறு டயல் செய்து, வரக் கூடிய அழைப்புகள் வேறொரு கைப்பேசி எண்ணுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், கைப்பேசி அமைப்பில் அழைப்புகளைத் திருப்பி அனுப்பும் வசதியை உடனடியாக செயலிழக்கச் செய்யவேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, September 29, 2023
WhatsApp QR
September 29, 2023
மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை!
வாட்ஸ்அப்பில் அறிமுகம் இல்லாத நபர்களின் வீடியோ அழைப்பை கல்லூரி மாணவர்கள் ஏற்க வேண்டாம் என புதுச்சேரி மாநில உயர்கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிகரித்து வரும் சைபர் கிரைம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக புதுச்சேரி உயர்கல்வித்துறை இயக்குநர் அமன் சர்மா கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். அதில் கல்லூரி மாணவர்கள் தேவையில்லாத, அவர்களது செல்போன்களுக்கு வரும் அறிமுகம் இல்லாதா வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். சமூக வலைத்தளத்தில் தங்களின் புகைப்படங்களை பதிவிடவோ, பகிரவோ வேண்டாம் என்றும் தேவையில்லாத இணையதள முகவரிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு (0413-2276144) கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Saturday, July 08, 2023
Wednesday, June 14, 2023
Wednesday, March 08, 2023
PEOPLE'S
March 08, 2023
G-Pay மூலம் புதிய மோசடி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தல்

ஜி-பே மூலம் தற்போது புதிய மோசடி நடைபெறுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது ஜி-பேவுக்கு பணத்தை அனுப்புகிறார். உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாக கூறி பணத்தை திரும்ப அனுப்ப மோசடி நபர் கூறுவார். நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tuesday, February 07, 2023
School
February 07, 2023
சைபர் கிரைம் காவல்துறை - பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு இணையவழி பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சைபர் கிரைம் காவல் நிலையம்
வடக்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.கண்ணன் இ.கா.ப.. அவர்களின் உத்தரவின் போரில். மாவட்ட காவல் கண்காளிப்பாளர் திரு.ஸ்ரீநாதா இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில், மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கோவிந்தராஜ் அவர்களின் தலைமையில் பாதுகாப்பான இணையவழி பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வாரம் இன்று 06.02.2023 முதல் 10.02.2023 வரை 5 நாட்கள் மாவட்டத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம். இரயில் நிலையம், வணிக வளாகம், இணையவழி மைய கடைகள், மகளீர் குழுக்கள், வங்கிகள். நிதி நிறுவனங்கள் மற்றும் சமுக வளைதளங்களில் காவல் நிலைய அதிகாரிகளைக்கொண்டு விழிப்புணர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதாகைகள் வைக்கவும் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். சைபர் கிரைம் தொடர்பாக கீழ்கானும் குற்றங்கள் பெருகிவரும் வேளையில் பொதுமக்கள் தங்களது சொத்துக்களை விழிப்புடன் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு நமது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இணைய வழி குற்றங்கள் பற்றி விழிப்புடன் செயல்பட கீழ்கண்ட வழிகாட்டுதல்களை பின்பற்றும் படி எச்சரித்துள்ளார்.
1. அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்களது Credit card / Debit card Number OTP/CVV எண்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
2. Online மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்பு என வரும் போலி LINK, விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
3. இணையத்தில் தேடி போலியான கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து தங்கள் முன்பணம் செலுத்தி ஏமாறவேண்டாம்.
4. புகழ் பெற்ற நிறுவனங்கள் பெயர்களை பயன்படுத்தி (Naptol, Meesho) உங்களுக்கு பரிசு பொருள் விழுந்துள்தாக குறுஞ்செய்தி (அ) தபால்களை நம்பி ஏமாறாதீர்
. 5. OLX, QUIKR போன்ற இணையதளத்தை பயன்படுத்தி வாகனம் இதர பொருட்களை விற்பதாக வரும் விளம்பரங்களின் உண்மைதன்மை அறியாமல் பணம் செலுத்தி ஏமாறவேண்டாம். 6. சமூக வளைத்ங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தகவல்களை பரிமாற்றம் செய்யக்கூடாது மேலும் உங்களுக்கு தெரிந்த நபர்களின் வங்கி கணக்கு எண்ணில் பணஉதவி கேட்டு வரும் செய்திகளை நம்பி பணஉதவி செய்ய வேண்டாம்.
7. Unknown Link, Message, Call போன்றவற்றிற்க்கு எவ்வித பதிலும் அளிக்காமல் விடுவது நல்லது.
8. Any Desk, Quick support போன்ற Remote Access App களை பதிவறக்கம் செய்ய வேண்டாம்.
9. இலவச Wi-Fi வசதிகளை பயன்படுத்தி உங்கள் தொடர்புடைய பணபரிவர்த்தணையை தவிற்க்கவும். வங்கி கணக்குடன்
10.அறிமுகம் இல்லாத நபர்களின் Whatsapp, Telegram மூலம் அனுப்பும் QR Code Scan செய்யாதீர்கள்.
11.SWIGGY, ZOMOTO போன்ற நிறுவனங்களின் பெயரில் நீங்கள் உணவு ஆர்டர் செய்யாமலேயே உங்களுக்கு உணவு பார்சல் வந்துள்ளதாகவும் அதனை Cancel செய்ய தங்கள் மொபைலுக்கு வரும் OTP கேட்டால் தரவேண்டாம்.
12.உங்கள் உயர் அதிகாரிகளின் பெயரில் Whatsapp மற்றும் சமூக வளைதளங்களில் அல்லது வெளிநாட்டில் இருந்து Gift பொருள்கள் அனுப்புவதாக கூறினால் நம்பவேண்டாம். 13. FedEx போன்ற கூரியர் நிறுவனத்திலிருந்து உங்கள் பெயருக்கு வந்த பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பதாகவும் அதனால் காவல்துறையில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாறவேண்டாம்.
மேற்கண்ட குற்றங்கள் ஏதேனும் நடந்திருந்தால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும் அல்லது https://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.