Seeman
October 23, 2024
Showing posts with label Seeman. Show all posts
Showing posts with label Seeman. Show all posts
Wednesday, October 23, 2024
Sunday, April 07, 2024
Monday, March 18, 2024
Monday, October 02, 2023
ssta
October 02, 2023
"ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை" - சீமான் பேட்டி
"ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை"
கடந்த 10 ஆண்டுகளாக தங்கள் கோரிக்கைகளுக்காக போராடும் ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை; தேர்தலின் போது பசப்பு வாக்குறுதிகளை கொடுத்து விட்டு ஆட்சிக்கு வந்த பிறகு ஆசிரியர்களின் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றாமல் தவிர்க்கிறது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி
20,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கையான ஊதிய வேறுபாடுகளைச் சரிசெய்து, திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி 311ல் குறிப்பிட்ட 'சம வேலைக்கு, சம ஊதியம்' உடனே வழங்க வலியுறுத்தி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக சென்னை நுங்கம்பாக்கம், பள்ளி கல்வித்துறை இயக்குநர் வளாகத்தில் நடைபெற்றுவரும் ஒற்றைக் கோரிக்கை உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று 02-10-2023 நேரில் பங்கேற்று, இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியக் கோரிக்கை வெல்ல நாம் தமிழர் கட்சி இறுதிவரை துணைநிற்கும் என்று உறுதியளித்தபோது,
Tuesday, June 13, 2023
Monday, May 22, 2023
Tuesday, January 31, 2023
Seeman
January 31, 2023
அரசுப் பள்ளிகளை சீரமைக்க பணமில்லை, ஆனால் கடலில் பேனா சின்னம் அமைக்க நிதியிருக்கிறதா? - சீமான் கேள்வி
No money to renovate public schools, but money to put a pen symbol on the ocean? - Seaman Question
அரசுப் பள்ளிகளை சீரமைக்க பணமில்லை, ஆனால் கடலில் பேனா சின்னம் அமைக்க நிதியிருக்கிறதா? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவாக, மெரினாவில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதற்கான கருத்து கேட்புக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்று, மெரினாவில் பேனா சின்னம் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் சீமான் வழங்கினார்.
அவரது பேச்சுக்கு கூட்டத்தில் எதிர்ப்பு எழுந்ததால், கூட்டத்திலிருந்து வெளியேறி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மெரினாவில் உள்ள கடலில் பேனா சின்னம் அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மாற்றுக் கருத்து சொன்னால் கூச்சல், குழப்பம் செய்கிறார்கள்.
நினைவுச் சின்னம் வைக்க எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் கடலுக்குள் வைக்கக் கூடாது. கருணாநிதி நினைவாக கடலில் பேனா சின்னத்தை வைத்தால், மீனவர்களுக்கும் பவளப்பாறைகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
அரசுப் பள்ளிகளை சீரமைக்க தமிழக அரசிடம் பணமில்லை, ஆனால் பேனா சின்னம் அமைக்க நிதியிருக்கிறதா? என்றும் சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், தனது எதிர்ப்பை மீறி, மெரினாவில் பேனா சின்னம் வைத்தால் அதனை உடைப்பேன் என்றும் கூறினார்.
நினைவுச் சின்னத்தை எதிர்க்கவில்லை. ஆனால் கடலில் எதற்கு நினைவுச்சின்னம் என்றுதான் கேட்கிறேன் என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக் கேட்புக் கூட்டம் தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்காக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணா் அரங்கில் இன்று காலை 10.30 மணிக்கு கருத்துக் கேட்புக் கூட்டம் தொடங்கியது. முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவாக, சென்னை மெரினா கடலில், பேனா வடிவ நினைவுச் சின்னம் ரூ.81 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இந்த பேனா வடிவ நினைவிடம் முழுவதும் கடல் பகுதியில் அமைய இருப்பதால், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி அனுமதி பெற வேண்டியுள்ளது. இதற்கான அனுமதி கோரி பொதுப்பணித் துறை, மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.
அதைப் பரிசீலித்த ஆணையம், மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. பின்னா், தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்துவது அவசியம் என தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த ஆணையத்தின் சாா்பில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், சென்னையில் இன்று நடைபெற்றது.

Friday, December 16, 2022
Seeman
December 16, 2022
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம்.. உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.. சீமான் வலியுறுத்தல்
பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு குரல் கொடுத்த சீமான் !
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார் . தேர்தலின் போது வாக்குறுதி அளித்த திமுக , ஆட்சிக்கு வந்த பிறகு இது பற்றி பேசாமல் இருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
20 ஆண்டுகளாக போராடி வரும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை , அரசு தீர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் திமுக அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்களாகியும் அதனை நிறைவேற்ற மறுப்பது அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பது போன்றது ஆகும்.
"வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட அரசு ஊழியர்கள்"
கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் அனைவரும் 'பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்' எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வலுக்கட்டாயமாக கொண்டு வரப்பட்டனர். இதனால் அரசு ஊழியர்களுக்கு அதுவரை கிடைத்து வந்த பணிக்கொடை, ஓய்வூதியம் என்று எதுவும் முழுமையாக கிடைக்காமல் போய்விட்டது. அதற்கு மாறாக, பணியின்போது அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகை மட்டும், அவர்கள் ஓய்வு பெற்றதும் திருப்பி வழங்கப்படும் என்றும் அன்றைய அதிமுக அரசு அறிவித்தது. ஆனால், தொடக்கம் முதலாகவே இத்திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்
கைவிரித்த அதிமுக அரசு
பல்வேறுகட்ட போராட்டங்களுக்கு பிறகு, 2016-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்த வல்லுநர் குழு அறிக்கை 2018-ம் ஆண்டு தான் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு, அந்த அறிக்கையை கிடப்பில் போட்டது. பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், வேறு வழியின்றி, 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் வல்லுனர் குழு அறிக்கையை வெளியிட்ட அன்றைய தமிழக அரசு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த வாய்ப்பில்லை என்று கைவிரித்தது.
ஏமாற்றிய திமுக
இதற்கிடையே, கடந்த 2021-ம் ஆண்டுச் சட்டப்பேரவை தேர்தலின் போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது திமுக. இதனால் அரசு ஊழியர்களின் முழு ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடித்த திமுக, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த சாத்தியமே இல்லை என்று கடந்த மே மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தது. எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதுபோல் நடித்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறி ஏமாற்றி வருவது, அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சை துரோகம் ஆகும்.
"உடனடியாக நடைமுறைப்படுத்துக"
இந்தியாவில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்த வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட நிலையில், மேற்கு வங்க மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறிவிட்டன. அந்த வரிசையில் ஆறாவது மாநிலமாக ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த நாளே இமாசலப் பிரதேச அரசும் இந்த திட்டத்திற்கு மாறுவதாக அறிவித்துள்ளது. எனவே, திமுக அரசு இதற்கு மேலும் அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதை நிறுத்தி, அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.