Breaking

Showing posts with label Agnipath. Show all posts
Showing posts with label Agnipath. Show all posts

Sunday, March 22, 2026

Tuesday, November 01, 2022

November 01, 2022

அக்னிபத் ராணுவ வீரர்கள்: நவ. 15 முதல் ஆள்சேர்ப்பு முகாம்

அக்னிபத் ராணுவ வீரர்கள்: நவ. 15 முதல் வேலூரில் ஆள்சேர்ப்பு முகாம்

அக்னிபத் திட்டத்தின் கீழ் வேலூரில் வருகின்ற நவம்பர் 15 முதல் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

“ராணுவத்தில் கீழ்காணும் பணிகளுக்கு நபர்களை சேர்ப்பதற்கான முகாம் நவம்பர் 15 முதல் 29 வரை வேலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.

i. அக்னி வீரர் (ஆண்)

ii. அக்னி வீரர் (பெண் ராணுவ காவலர்)

iii. சிப்பாய் தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர் / கால்நடை செவிலியர் உதவியாளர்

iv. இளநிலை சேவை அதிகாரி

தமிழகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இருந்து ஏற்கெனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்ட முகாம் பற்றிய அறிவிக்கையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் முகாமிற்கு கட்டாயம் எடுத்து வர வேண்டும். ஆவணங்களை எடுத்து வருவதற்கான அமைப்பு முறையும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான ஆவணங்கள் இல்லாமல் மற்றும் அவற்றை தவறான முறையில் (குறிப்பாக உறுதிமொழி பத்திரம்) எடுத்து வரும் விண்ணப்பதாரர், முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்.

முழுவதும் தானியங்கி முறையில், நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மை வாயிலாகவும் பணிசேர்ப்பு நடைபெறும். இதனால் பொய்யான வாக்குறுதிகளைத் தந்து ஏமாற்றும் நபர்களிடமிருந்து விலகி இருக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடின உழைப்பும், தயார்முறை மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவதை உறுதி செய்யும்.”

Wednesday, July 06, 2022

Tuesday, June 21, 2022

June 21, 2022

அக்னிபத்: விமானப் படையில் சேர விண்ணப்பிப்பது எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புது தில்லி: அக்னிபத் திட்டத்தின் கீழ், இந்திய விமானப் படையில் சேர்வதற்கு வரும் 24-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.



அக்னிபத்திட்டத்தின் கீழ் சேர்க்கை குறித்த அறிவிக்கையை முப்படைகளில் இந்திய ராணுவம் நேற்று முதல் முறையாக வெளியிட்ட நிலையில், இந்திய விமானப்படை இன்று விண்ணப்பிக்கும் காலம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.



அதன்படி, முப்படைகளுக்கு தற்காலிகமாக 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றும் வகையில் இளைஞர்களை பணியமர்த்தும் அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேர விரும்புவோர், வரும் 24ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி விமானப் படை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.



இந்திய விமானப் படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://careerindianairforce.cdac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களைளுக்கு ஆன்லைன் தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடத்தப்படும் என்றும் இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.

விமானப் படையில் சேர்வதற்கு, https://indianairforce.nic.in/ அல்லது https://www.careerindianairforce.cdac.in/ என்ற இணையதளங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும். இந்த ஆன்லைன் விண்ணப்பங்கள் வருகிற 24ஆம் தேதி காலை 10 மணி முதல், ஜூலை 5ஆம் தேதி மாலை 5 மணி வரை பயன்பாட்டில் இருக்கும்.



விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய விரும்புவோர், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது 3 ஆண்டுகள் பொறியியல் டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ் அல்லது 2 ஆண்டுகள் தொழில்சார்ந்த படிப்புக்கான மதிப்பெண் சான்றிதழ் அல்லது தொழில்சார்ந்த படிப்பல்லாத இரண்டு ஆண்டு ஆங்கிலம், இயற்பியல், கணிதம் படித்தவர்கள் மதிப்பெண் சான்றிதழை இணைக்க வேண்டும்.



தேர்வுக் கட்டணமாக ரூ.250-ஐ செலுத்த வேண்டும். அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேர 1999,29 டிசம்பர் முதல் 2005ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். திருமணமாகா இந்திய குடிமகன்களும், நேபாளிகளம் இதில் விண்ணப்பிக்கலாம்.



அக்னிபத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு ஜூலை 24ஆம் தேதி முதல் ஆன்லைன் தேர்வு நடைபெறும் என்று விமானப் படை அறிவித்துள்ளது.

Total Pageviews

Search This Blog