Breaking

Showing posts with label Closing Ceremony for the Principal Education Officer. Show all posts
Showing posts with label Closing Ceremony for the Principal Education Officer. Show all posts

Saturday, April 23, 2022

April 23, 2022

முதன்மை கல்வி அதிகாரிக்கு பணி நிறைவு பாராட்டு விழா

முதன்மை கல்வி அதிகாரிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.புதுச்சேரி பள்ளி கல்வித் துறை முதன்மை கல்வி அதிகாரி மீனாட்சிசுந்தரம் இம்மாதம் பணி ஓய்வு பெற உள்ளார். அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா வில்லியனுார் பள்ளி துணை ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்தது.

பெங்களூரு அரசு துவக்கப் பள்ளி தலைமையாசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். ஐந்தாம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் ராபர்ட் கென்னடி தலைமை தாங்கினார். நான்காம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். மங்கலம் அரசு பள்ளி தலைமையாசிரியர் ஜான்சேவியர் ராஜா, வில்லியனுார் அரசு ஆண்கள் பள்ளி தலைமையாசிரியை ரேணுகா வாழ்த்தி பேசினர்.

ஆசிரியர் லுார்து சேவியர் வாழ்த்து கவிதை வாசித்தார்.ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அதிகாரி மீனாட்சிசுந்தரம் ஏற்புரையாற்றினார். அவரது மனைவி ராணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதன்மை கல்வி அதிகாரிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் கந்தவேல் தொகுத்து வழங்கினார்.ஏற்பாடுகளை வட்டம் நான்கு மற்றும் ஐந்து விழா குழுவினர் செய்திருந்தனர். ஆசிரியர் குமரன் நன்றி கூறினார்.

Total Pageviews

Search This Blog