Breaking

Showing posts with label sports. Show all posts
Showing posts with label sports. Show all posts

Thursday, October 26, 2023

October 26, 2023

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க ஏற்பாடு: அரசு பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சி



உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க காவல் ஆணையர் ஏற்பாடு: அரசு பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சி

அரசுப் பள்ளி, மாணவ மாணவிகளை கிரிக்கெட் போட்டி பார்க்க காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஏற்பாடு செய்தார். தங்களின் வாழ்நாளில் முதல் முறையாகப் போட்டியை நேரில் ரசித்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து காவல் ஆணையருக்கு நன்றி தெரிவித்தனர்.

சென்னை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தை ஏராளமான ரசிகர்கள் நேரில் சென்று ரசித்தனர்.


இதேபோல், சென்னை பெருநகர் முழுவதிலுமிருந்து காவல் துறையால் நிர்வகிக்கப்படும் காவல் சிறார், சிறுமியர் மன்றத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த போட்டியை இலவசமாக நேரில் சென்று ரசிக்கச் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஏற்பாடு செய்தார்.

முதல் முறையாகப் போட்டியை நேரடியாகப் பார்த்து ரசித்து விட்டு வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் இந்த நிகழ்வு தங்களின் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Thursday, October 12, 2023

October 12, 2023

சென்னையில் நாளை நடைபெறவுள்ள நியூசிலாந்து, வங்கதேசம் இடையிலான போட்டியை முன்னிட்டு மெட்ரோ சேவை நீட்டிப்பு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள நியூசிலாந்து, வங்கதேசம் இடையிலான போட்டியை முன்னிட்டு மெட்ரோ சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, மெட்ரோ இரயில்

சேவை நீட்டிப்பு

13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் விளையாடவுள்ள போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் அக்டோபர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, போட்டியினை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக, மெட்ரோ இரயில் சேவை வழக்கத்தை விடவும் கூடுதலாக ஒரு மணி நேரம், அதாவது, இரவு 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ரசிகர்கள், போட்டிக்கான டிக்கெட்டினை காண்பித்து எவ்வித கட்டணமும் இன்றி மெட்ரோ இரயிலில் பயணம் மேற்கொள்ளலாம். போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் போது, இச்சலுகை பொருந்தாது என்பதனையும் மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துக் கொள்கிறது.

நீட்டிக்கப்பட்ட மெட்ரோ இரயில் சேவை:

நீலவழித்தடம்:

பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் நோக்கி இரயில்கள் இயக்கப்படும்.

பச்சை வழித்தடம் :

புரட்சி தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையம் வரை 15 நிமிட இடைவெளியில் இரயில்கள் இயக்கப்படும். போட்டி நாளன்று (13.10.2023) இரவு 11.00 மணி முதல் - 12.00 மணி வரை பச்சை வழித்தடத்தில் இருந்து நீல வழித்தடம் மாறுவதற்கான இரயில் சேவை இயக்கப்படாது. உலக கோப்பை கிரிக்கெட் ரசிகர்கள், இதற்கேற்ப தங்களது பயணத்தினை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Wednesday, August 02, 2023

August 02, 2023

சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் - அரசு பள்ளி மாணவர்கள் நேரடியாக இலவசமாக பார்க்க ஏற்பாடு

சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர்

"அரசு பள்ளி மாணவர்கள் நேரடியாக இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது"

"அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன"

"ஐபிஎல் போட்டிகளை போல தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ஃபேன் பார்க்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளது" -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை, ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை முதல் 12-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேச ஆக்கி போட்டிக்காக எழும்பூர் ஸ்டேடியம், நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இந்த போட்டிக்கான வெற்றிக் கோப்பை தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு, இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், போட்டியில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டிகளை அரசு பள்ளி மாணவர்கள் நேரடியாக இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஐ.பி.எல். போட்டிகளைப் போல் தமிழகம் முழுவதும் 40 இடங்களில் 'பேன் பார்க்ஸ்' ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Friday, March 17, 2023

March 17, 2023

IND vs AUS 3rd ODI - சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை காலை 11 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடக்கம்

IND vs AUS 3rd ODI - சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை காலை 11 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடக்கம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 3வது ஒருநாள் போட்டி

சி.டி மற்றும் இ பிரிவு கேலரிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 11 மணிக்கு தொடங்குகிறது; ₹1200 டிக்கெட் விலையாக நிர்ணயம்

MEDIA RELEASE

Master Card India Vs Australia 3rd One Day International Match (Day/Night) on 22nd March 2023 at M. A. Chidambaram Stadium, Chepauk, Chennai - 600 005.

Tickets for general public will be sold on Saturday, the 18th March 2023 from 11.00 a.m. onwards for the above mentioned match. The Tickets will be issued in the Ticket Counter at Victoria Hostel.

Stand: C, D & E Lower

Price: Rs. 1,200/- per ticket

Not more than two tickets will be sold per person. Persons buying tickets elsewhere will be doing so at their own risk.

Thursday, February 02, 2023

February 02, 2023

சிலம்பத்தில் உலக அளவில் தங்கம் வென்ற அரசுப்பள்ளி மாணவி

A government school student who won gold at the world level in Silambam - சிலம்பத்தில் உலக அளவில் தங்கம் வென்ற அரசுப்பள்ளி மாணவி

சேலம் அருகே அரசுப்பள்ளி மாணவியான ரமணி உலக அளவில் அந்தமானில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்

எடப்பாடி அருகே கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் தறி தொழிலாளியான ஆறுமுகம் - சுதா தம்பதி. இவர்களது இளைய மகள் ரமணி எடப்பாடி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சிலம்பம் போட்டியில் சிறு வயது முதலே மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உலக அளவில் அந்தமானில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு, தங்கப்பதக்கமும் கோப்பையும் வென்று அசத்தியுள்ளார்.

கூலி வேலைக்குச் சென்று, தன்னையும் தன்னுடன் பிறந்த நான்கு பேரையும் வாடகை வீட்டில் வசித்தபடி மிகுந்த சிரமப்பட்டு தங்களை படிக்க வைக்கும் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, ரமணி தங்கப்பதக்கத்தையும் கோப்பையையும் பெற்றோர்களிடம் வழங்கி ஆசி பெற்று தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.இதுகுறித்து ரமணி கூறுகையில், “எதிர்வரும் காலங்களில் உலக அளவிலான சிலம்பம் போட்டியிலும் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியிலும் கலந்து கொண்டு, மேலும் பல்வேறு சாதனைகள் புரிய எனது பெற்றோரிடம் வசதி இல்லை. இதன் காரணமாக அரசு அல்லது தொண்டு நிறுவனங்கள் உதவி செய்தால், தமிழ்நாட்டிற்கும் எனது கிராமத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக இன்னும் பல சாதனைகள் புரிய வாய்ப்பாக இருக்கும்.எதிர்காலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற எண்ணங்களை எனக்குள் வளர்த்து வருகிறேன்.

ஆனால், குடும்பம் வறுமையில் உள்ளது. அதில் இருந்து மீளவும் கல்வி மேம்படவும் பள்ளி சென்று வர நேரம் போக மீதம் உள்ள நேரங்களில் கால்நடைகள் மேய்க்கிறேன்' என்கிறார் ரமணி.பெற்றோருக்கு உதவியாக வீட்டு வேலைகளை செய்து சிலம்பத்தில் சாதனைப் படைத்துள்ள ரமணிக்கு எண்ணங்கள் நிறைவேற அரசும் தன்னார்வலர்களும் முன் வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Friday, June 24, 2022

June 24, 2022

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்த ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை

ஆணை : 2022-2023ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் பள்ளி சதுரங்க ஒலிம்பியாட் குறித்து கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

“ ஜூலை , ஆகஸ்ட் மாதங்களில் சென்னையில் நடைபெறும் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சதுரங்கம் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி , வட்டாரம் , மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெறும் மாணவர்கள் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டம் ரூ .1 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மாணவர்களின் நுண்ணறிவுத் திறன் , செயல்பாட்டுத் திறன் , ஆளுமைத் திறன் என பல்வேறு திறன்களை சதுரங்கப் போட்டிகளின் வழியே வெளிக்கொணர பள்ளியளவில் தொடங்கி மாவட்ட , மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடத்திடவும் , சென்னையில் வரும் ஜீலை , ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவர்களை பார்வையாளர்களாக பங்கேற்கச் செய்திடவும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட மேற்காண் அறிவிப்பு குறித்து மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளிக் கல்வி ஆணையர் பின்வரும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog