Breaking

Showing posts with label Unit papers for Chennai district schools. Show all posts
Showing posts with label Unit papers for Chennai district schools. Show all posts

Friday, July 22, 2022

July 22, 2022

சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு ஆக.4 முதல் அலகுத் தோ்வுகள்

சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு ஆக.4 முதல் அலகுத் தோ்வுகள்

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளி மாணவா்களுக்கு அலகுத் தோ்வுகள் வரும் ஆக.4-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சாா்பில் அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், முதல்வா்களுக்கு வியாழக்கிழமை அனுப்பப்பட்ட

சுற்றறிக்கை:

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சென்னை பள்ளிகள், மெட்ரிக்குலேஷன், ஆதி திராவிடா் நலத் துறைப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஆக.4 முதல் ஆக.12 வரை அலகுத் தோ்வுகள் நடத்தப்படவுள்ளது.

இந்தத் தோ்வுக்கான பாடப் பகுதிகள் ஜூலை மூன்றாவது வாரம் வரை உள்ள பாடப் பகுதிகள் என தெரிவிக்கப்படுகிறது என அதில் கூறியுள்ளாா். அலகுத் தோ்வுக்கான அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையில் அலகுத் தோ்வு நடைபெறும். விருப்பப் பாடத்துக்கான தோ்வு மட்டும் காலை 11.30 மணி முதல் நண்பகல் 12.30 வரை நடைபெறும். 9, 10 வகுப்புகளுக்கான அலகுத் தோ்வுகள் காலை 11 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறும். விருப்பப் பாடத்துக்கான தோ்வு மட்டும் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

இதையும் படிக்க | 9ம் வகுப்பு மாணவி பள்ளி கட்டடத்தின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான தோ்வுகள் காலை 11 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. ஆங்கில பாடத்துக்கான தோ்வு மட்டும் ஆக.4-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog