Breaking

Showing posts with label TEACHERS. Show all posts
Showing posts with label TEACHERS. Show all posts

Saturday, December 31, 2022

December 31, 2022

5 ஆவது நாளாகத் தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்! - The teachers' hunger strike continues for the 5th day!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் 5 வது நாளாக தொடர் உண்ணாவிரதம்.

5 நாட்களில் இதுவரை 170 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதி.

போராட்டத்தில் மகனோடு கலந்து கொண்ட பெண் ஆசிரியை மயக்கம்.

சுற்றி இருந்த ஆசிரியர்களின் ஆறுதலையும் தாண்டி கண் கலங்கிய மகன்.

5 ஆவது நாளாகத் தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்! - The teachers' hunger strike continues for the 5th day!

சென்னையில் 5 ஆவது நாளாகத் தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!



சென்னை பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் தொடர்ந்து 5 ஆவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது. இந்த ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள், தங்களது குடும்பத்துடன், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளிக்கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து போராட்டம் தொடர்ந்து வருகிறது.

தொடர்ந்து 5 ஆவது நாளாக இன்று ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 4 நாள்களில் 70-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Friday, December 30, 2022

December 30, 2022

போராட்டம் நடத்தியதால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்களை பெண் என்றும் பாராமல் கைது செய்த தி.மு.க அரசு

போராட்டம் நடத்தியதால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்களை பெண் என்றும் பாராமல் கைது செய்த தி.மு.க அரசு

The DMK government arrested the parents who passed the teacher's qualification test because they were protesting அரசாணை 149 ஐ ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம் நடத்தினர். 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அடுத்ததாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் எழுத்து தேர்வு மூலம் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக ஏற்படுத்தப்பட்ட அரசாணை 149 ஐ ரத்து செய்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில்அரசானை 149 ஐ ரத்து செய்ய வேண்டும் . 2013 ஆம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை நேற்று மாலைடன் நிறைவு செய்து திரும்ப வேண்டி அவர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்ததாக கூறப்படுகிறது.
இது எடுத்து அங்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் உண்ணாவிரத போராட்டம் நடத்திய. 100- க்கும் மேற்பட்டோரை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Thursday, October 20, 2022

October 20, 2022

ஆசிரியர்களுக்கு தீபாவளி முன் பணம் மற்றும் சம்பளம் பெறுவதில் சிக்கல்

தீபாவளி முன்பணம் பெறுவதில் சிக்கல்

சென்னை : பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகளால், ஆசிரியர்களுக்கு தீபாவளி முன் பணம் மற்றும் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுதும் உள்ள அனைத்து பள்ளி கல்வி அலுவலகங்களிலும், மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் கட்டாய இடமாறுதல் செய்யப்பட்டனர். இந்த இடமாறுதல் மற்றும் சீர்திருத்தங்கள் காரணமாக, அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு பள்ளியின் கல்வி அலுவலக எல்லைகளும், பணியாளர்களும் மாறியுள்ளனர்.

நிர்வாக சீர்திருத்த எல்லைகளின்படி, பள்ளிகளின் விபரங்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் பணி ஆவணங்கள் உள்ளிட்டவை, எமிஸ் நிர்வாக தளத்தில் புதிய எல்லைக்கு மாற்றப்படுகின்றன.

இதனால், தமிழகம் முழுதும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கான தீபாவளி முன் பணத்துக்கு, கருவூலத்துக்கு அறிக்கை அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், மாத ஊதியம் வழங்குவதற்கான பணி விபர மற்றும் ஊதியம் வழங்க கோரும் அறிக்கை தயார் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால், தொழில்நுட்ப மற்றும் நிர்வாக மாற்ற பிரச்னைக்கு, உரிய தீர்வு காண வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sunday, September 11, 2022

September 11, 2022

கோரிக்கை நிறைவேற்றாதபட்சத்தில் போராட்டம் தொடருவோம் ஆசிரியர்கள் அதிரடி

கோரிக்கை நிறைவேற்றாதபட்சத்தில் போராட்டம் தொடருவோம் ஆசிரியர்கள் அதிரடி

September 11, 2022

1.8.22 நிலவரப்படி, வரும் அக்டோபர் மாதத்தில் ஆசிரியர் கலந்தாய்வு.

1.8.22 நிலவரப்படி, வரும் அக்டோபர் மாதத்தில் ஆசிரியர் கலந்தாய்வு. அக்டோபர் மாதத்தில் ஆசிரியர்கள் கலந்தாய்வு பின்வறுமாறு நடக்க வாய்ப்பு:

Tngtf மாநில பொறுப்பாளர்கள் பள்ளிக்கல்வி ஆணையர் சந்திப்பு தகவல் (10.9.22 )

10.09.2022 நமது TNGTF அமைப்பின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் தலைமையில் மாநில நிர்வாகிகள் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களை நேரில் சந்தித்தனர்.

சந்திப்பு விபரம்

🎯 அனைத்து மாவட்டங்களிலும் உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு,1.8.22 நிலவரப்படி, வரும் அக்டோபர் மாதத்தில் உபரி ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்படும்.



🎯உபரி ஆசிரியர்கள் இல்லாத மாவட்டங்களில் மறு பணி நியமனம் வழங்கப்படும் இது குறித்த விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்

🎯மகப்பேறு விடுப்பில் செல்பவர்களுக்கு பதிலாக SMC மூலமாக தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்.

🎯31.08.2022 அன்று மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியப்பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு உபரியாக உள்ள ஆசிரியர்கள், தேவைப்படும் பள்ளிகளுக்கு மாறுதல் (Deputation or Transfer within district) செய்யப்படுவார்கள்.

🎯 அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் குறைந்த பட்சம் 5 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிலாக ஆறு பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்வது குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

🎯 ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு அந்த மாவட்டத்தில் உபரி பணியிடம் இல்லாத பட்சத்தில் பணி நீட்டிப்பு (reemployment) வழங்கப்படும்.

Saturday, August 13, 2022

August 13, 2022

ஆசிரியை மீதான 'போக்சோ' வழக்கு; தள்ளுபடி செய்ய ஐகோர்ட் மறுப்பு

'வகுப்பில் மற்ற மாணவர்களுக்கு மத்தியில், மாணவியின் பேன்டை கழற்ற வைத்த ஆசிரியை மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது,'' என கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெங்களூரு ஹலசூரில் தனியார் பள்ளியில், 2017ல் படித்து வந்த 5 வயது மாணவியின் பேன்டை, வகுப்பில் மற்ற மாணவியர் முன்னிலையில், 41 வயது ஆசிரியை கழற்றியுள்ளார்.

இதனால் அழுத அம்மாணவி, தன் பெற்றோரிடம் விஷயத்தை கூறினார். அவர்கள் உடனடியாக ஹலசூரு போலீஸ் நிலையத்தில், ஆசிரியை மீது கிரிமினல் புகார் அளித்தனர்.புகாரில் குறிப்பிட்டிருந்ததாவது:குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை, முதலில் குழந்தையை அடித்துள்ளார், பின், வகுப்பில் தன் மகளின் பேன்டை கழற்றி, மற்ற மாணவர்கள் முன் நிற்க வைத்துள்ளார். மேலும், அந்த ஆசிரியர், இங்குள்ள இருட்டு அறையில் அடைத்து விடுவதாகவும், அங்கு கொடூரமான நாய் இருப்பதாகவும் குழந்தையை மிரட்டியுள்ளார்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து, ஆசிரியை மீது போலீசார், 'போக்சோ' பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, ''ஒரு குழந்தையின் உடலை மற்றவர்களுக்கு காட்டுவது பாலியல் துன்புறுத்தலுக்கு சமம். இவ்விஷயத்தை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. ஆசிரியை தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,'' என்றார்.

Friday, July 01, 2022

July 01, 2022

ஆசிரியர் பணிக்கு முற்றிலும் தற்காலிகமாக பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு Walk-in-Interview 15.07.2022

பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளின்படி கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும் |

விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விபரக் குறிப்பினை www.apcac.edu.in மற்றும் www.apacwomen.ac.in ஆகிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்களுடன் அந்தந்த பணியிடங்களுக்கு குறிப்பிட்டுள்ள நாளன்று Walk | In-Interview-ல் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Tuesday, May 17, 2022

May 17, 2022

மாணவர்களின் மதிப்பீடு தேர்ச்சி பணியினை முடித்த ஆசிரியர்கள் 18ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டியது இல்லை இயக்குநர்களின் தெளிவான விளக்கம் - ஆசிரியர் கூட்டணி அறிக்கை!

17.05.2022

தமிழக ஆசிரியர் கூட்டணி

அரசு அறிந்தேற்பு எண்:36/2001

மாணவர்களின் மதிப்பீடு தேர்ச்சி பணியினை முடித்த ஆசிரியர்கள் 18ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டியது இல்லை இயக்குனர்களின் தெளிவான அறிக்கை..

பள்ளிக்கல்வி ஆணையர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரின் தெளிவான அறிவிப்புக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கைகள் முடித்த பள்ளிகளின் ஆசிரியர்கள் 20ஆம் தேதி வரை பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைத்து நிலை ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. என்பதை வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உணரவேண்டும். மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கைகள் முடித்தவர்கள் 18ஆம் தேதி முதல் பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதை முதலில் நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். தடையின்மைச் சான்று பெற்று வெளிநாடு செல்லும் ஆசிரியர்கள் தயக்கமின்றி செல்லலாம். நேற்று இரவு ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது "இயக்குநரகத்தின் சார்பில் நாங்கள் தெளிவாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவிப்பு வழங்கி விட்டோம்.. எவ்வித தயக்கமின்றி அவரவர்கள் செயல்படலாம் என்று தெரிவித்துள்ளார்." சங்க வித்தியாசமின்றி ஆசிரியர்களின் நலனுக்காக தான் நாம் சங்கம் நடத்தி வருகின்றோம். சங்கத் தலைவர்கள் அவரவர்கள் முழு பொறுப்பேற்று பணி முடித்த ஆசிரியர்களை விடுவித்து அனுப்பி வைப்போம். எவராவது நடவடிக்கைகள் எடுத்தால் தகவலினை தெரியப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.

ஆட்சியின் மீது வெறுப்புணர்வை ஆசிரியர்களுக்கு நாளுக்கு நாள் பீறிட்டு எழச் செய்ய வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு சிலர் இதுபோன்று செய்து வருகிறார்கள் என்பதே எதார்த்த உண்மையாகும். மாணவர்களுக்கு விடுமுறை என்று அறிவிப்பது, ஆசிரியர்கள் 20 ஆம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என்று சொல்வது, அப்புறம் 20 ஆம் தேதி வரை வரத் தேவையில்லை என்று சொல்லுவது இப்படி எல்லாம் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு உள் நோக்கத்தோடு திட்டமிட்டு ஆசிரியர்களை பழிவாங்குகிறார்கள் என்று பேச வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காலம் வரும் போது இதனை நாங்கள் நிருபிப்போம் ...

வாழ்த்துகளுடன்...

வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.

மா. நம்பிராஜ், மாநிலத்தலைவர்.

அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்.

க. சந்திரசேகர், மாநிலப் பொருளாளர்.

தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52, தெரு திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com.

Sunday, April 24, 2022

April 24, 2022

ஆசிரியர்கள் - மதிப்பிழந்த இரண்டாம் பெற்றோர்...

பள்ளிக்கு வராதவனை வீடு தேடிச்சென்று அழையுங்கள், ஆனால் படிக்க சொல்லி எழுத சொல்லி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள், ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்..

உங்களை ஆபாசமாக பேசினாலும், ஆபாசமாக வீடியோ எடுத்தாலும் அவர்களை திருத்தப்பாருங்கள் அவசரப்பட்டு ஏசிவிடாதீர்கள் ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்..

மதுவருந்திவிட்டு வகுப்பிற்குள் வந்தால் அனுசரித்துக்கொள்ளுங்கள் அவசரப்பட்டு வகுப்பிற்கு வெளியே அனுப்பிவிடாதீர்கள் ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்..

உங்களை கம்பு & கற்கலால் அடித்தாலும், ஏன் கத்தியால் குத்தினாலும் அவர்களை திருத்தப்பாருங்கள் அவசரப்பட்டு புகார் ஏதும் கொடுத்து விடாதீர்கள் ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்..

இத்தனையும் கடந்து நீங்கள் 100% தேர்ச்சி வழங்க வேண்டும். இல்லையேல் தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை ஒப்பிட்டு தரக்குறைவாக பொதுமேடையில் ஆட்சியாளர்களே

உங்களை குற்றம் சாட்டுவோம் ஏனெனில் நீங்கள் தண்ட சம்பளம் வாங்கும் இரண்டாம் பெற்றோர்..

ஆம் நீங்கள் மதிப்பிழந்த இரண்டாம் பெற்றோர்..

Sunday, April 17, 2022

April 17, 2022

‘அன்பாசிரியர்-2021’ விருது விழா - 46 ஆசிரியர்களுக்கு விருது!

தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மகுடம் சூட்டும் ‘அன்பாசிரியர் - 2021’ விருதுகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இன்று வழங்குகிறது. லட்சுமி செராமிக்ஸ், இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் ஆகிய நிறுவனங்களும் இணைந்து இந்த விருதை வழங்க உள்ளன. உடன் கொண்டாடுகிறது சங்கர் ஐஏஎஸ் அகாடமி. விருது விழாவுக்கான அரங்கத்தை ரஷ்ய கலாச்சார மையம் வழங்குகிறது. நிகழ்ச்சியை பதிவுசெய்து நியூஸ் 7 தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது. குடிநீர் வசதியை ரெப்யூட் நிறுவனம் ஏற்படுத்தி தருகிறது.
ஏற்கெனவே 2020-ம் ஆண்டில் முதல்முறையாக ‘அன்பாசிரியர்’ விருது வழங்கப்பட்டது. அதற்கு கிடைத்த பேராதரவும், பெருமகிழ்ச்சியும் ‘அன்பாசிரியர் 2.0’வை நிகழ்த்த உந்தித் தள்ளியது.

இந்நிலையில், ‘அன்பாசிரியர் 2021’ விருதுக்கு விண்ணப்பிக்குமாறு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தின் 38 மாவட்டங்கள், புதுச்சேரியை சேர்ந்த ஆர்வமும், ஆற்றலும் மிக்க 532 ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 425 பேர் முதல்கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இறுதிச்சுற்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 46 ஆசிரியர்களுக்கு விருது தேர்வுக் குழு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 46 ஆசிரியர்களுக்கு ‘அன்பாசிரியர் 2021’ விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சிறப்புரையாற்றி விருதுகளை வழங்க உள்ளார்.

Saturday, April 16, 2022

April 16, 2022

சுற்றுலா செல்ல முடியாமல் ஆசிரியர்கள் கவலை

Bangalore: The Department of Education is gearing up to implement the Education Development Program next academic year. Thus for elementary and high school teachers, this time the summer vacation was gone. Due to the corona, during the summer vacation for two years, not everyone, including the teachers, was planning to go on a trip with the family this time.

But at their request, the Department of Education has laid the groundwork. The Department of Education has decided to start the academic year 15 days in advance of the current year, with a view to implementing the Education Development Program. The Department of Education is preparing to provide phased training to government primary and secondary school teachers in each district of the state by May 10. Formed as a team of 40 teachers, the training will be conducted by experts for two days.

Although the training is just two days, the list of which teacher will be trained on which day is not ready yet. The teachers feel that if the training day is announced tomorrow, arrangements can be made to go on tour. Even if the teachers participate in the training given during the holidays, there will be no physical or mental happiness. Holidays have already been reduced. In this case, it is not advisable to train during the holidays. Thus the teachers, despite the holidays, are going without.Thus he said அடுத்த கல்வியாண்டில், கல்வி மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை தயாராகி வருகிறது. இதனால் தொடக்க, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, இம்முறை கோடை விடுமுறை இல்லாமல் போய்விட்டது.கொரோனா காரணத்தால், இரண்டு ஆண்டுகளாக கோடை விடுமுறையில், ஆசிரியர்கள் உட்பட அனைவராலும் சுற்றுலா செல்ல முடியவில்லை.இம்முறையாவது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் இவர்களின் விருப்பத்தில், கல்வித்துறை மண்ணை போட்டுள்ளது.கல்வி மேம்பாடு திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், நடப்பாண்டு 15 நாட்களுக்கு முன்பே, கல்வியாண்டை துவங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இத்திட்டத்தின் கீழ், கோடை விடுமுறைக்கு முன்னரே, நோடல் அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.தற்போது தொடக்க, உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, கட்டம், கட்டமாக பயிற்சியளிக்க கல்வித்துறை தயாராகிறது. மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின், அரசு தொடக்க, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு, மே 10க்குள் பயிற்சியளிக்கப்படும். 40 ஆசிரியர்கள் கொண்ட குழுவாக அமைத்து, வல்லுனர்கள் மூலம் இரண்டு நாட்கள் பயிற்சியளிக்கப்படும்.பயிற்சி வெறும் இரண்டு நாட்கள் தான் என்றாலும், எந்த ஆசிரியருக்கு, எந்த நாளில் பயிற்சியளிக்கப்படும் என்ற பட்டியல் இன்னும் தயாராகவில்லை.

யாருக்கு எப்போது பயிற்சி இருக்கும் என்பது தெரியாததால், சுற்றுலா செல்ல முடியாமல், ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.பயிற்சி நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பயிற்சி நாளை அறிவித்தால், சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யலாம் என, ஆசிரியர்கள் கருதுகின்றனர்.ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:கல்வி மேம்பாடு திட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சியை, பள்ளி நாட்களிலேயே அளிக்கலாம். விடுமுறை நாட்களில் அளிக்கப்படும் பயிற்சியில், ஆசிரியர்கள் பங்கேற்றாலும், உடல், மன ரீதியாக மகிழ்ச்சி இருக்காது.ஏற்கனவே விடுமுறை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுமுறை நாட்களிலேயே பயிற்சியளிப்பது சரியல்ல. இதனால் ஆசிரியர்கள், விடுமுறை இருந்தும், இல்லாமல் போகிறது.இவ்வாறு அவர் கூறினார்

Tuesday, March 29, 2022

March 29, 2022

ஆசிரியர்களே மனம் தளராதீர்கள்!

இரண்டு ஆண்டுகளாக வீடுகளுக்குள் முடங்கியிருந்த மாணவர்கள், தற்போது மறுபடியும் பள்ளிக்கு வந்திருக்கிறார்கள். கரோனா காலத்திய தங்கள் வாழ்க்கை, அது ஏற்படுத்திய உளவியல் தாக்கத்தினூடாக வகுப்பறையை எதிர்கொள்கிறார்கள். ஆசிரியர்களோ, கரோனாவுக்கு முந்தைய வகுப்பறையை மனதில் இருத்திக்கொண்டு, மாணவர்களை அணுகுவதால், அவர்களை ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவர இயலாமல் போராடுகிறார்கள்.

இதையும் படிக்க | தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் - RAJ BHAVAN PRESS RELEASE - Dated 29.3.2022

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் ஆசியர்கள் சிலரிடம் கரோனாவுக்குப் பிறகான மாணவர்களின் வருகை மற்றும் அவர்களின் ஈடுபாடு குறித்து விசாரித்தேன். அரசுப் பள்ளி, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரின் பதில்களும் ஒன்றுபோலவே இருந்தன. ஒழுக்கம், கல்வி, பிறரன்பு

“மாணவர்கள் ஊரடங்குக்கு முன்பு எப்படி இருந்தார்களோ அதற்கு நேரெதிராக வந்திருக்கிறார்கள்; வேறோர் உலகத்தில் உலவுகிறார்கள்; பள்ளி கூடுகைக்குக் காலையில் வரிசையில் நிற்க வைப்பதே பெரும் போராட்டம்தான்; வகுப்பறையில் எப்படி நடந்துகொள்வது என்பதையும், கற்ற விழுமியங்களையும் மறந்துவிட்டார்கள்; மேல்நிலைப் பள்ளி மாணவர்களையாவது ஓரளவு கையாள முடிகிறது. ஆனால், 6-8-ம் வகுப்பு மாணவர்களுடன் அதிகம் போராட வேண்டியுள்ளது. மாணவர்களால் சிந்தித்து, நிதானமாக ஒரு வேலையைச் செய்ய இயலவில்லை; நன்கு படிக்க வேண்டும், நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும், ஆசிரியர் கொடுக்கும் வேலையை விரைவாகச் செய்து முடிக்க வேண்டும் என்கிற ஆர்வமே இல்லாமல் சோர்வாகவும் சோம்பேறியாகவும் இருக்கிறார்கள்.

உடன் படிக்கும் மாணவர்களிடம் அன்பு காட்டுவது, மன்னிப்பது, பொறுத்துக்கொள்வது, விட்டுக்கொடுப்பது, யோசித்து வார்த்தைகளைப் பயன்படுத்துவதையெல்லாம் பார்ப்பது அரிதாக உள்ளது; உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தொடக்கப் பள்ளி மாணவர்கள்போல நடந்துகொள்கிறார்கள்; மற்ற மாணவர்களைச் சட்டென்று கைநீட்டி அடித்துவிடுகிறார்கள், கோபத்தில் அதிகமாகக் கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்கள்” என்கிறார்கள்.

இதையும் படிக்க | CPS ஒழிப்பு இயக்கம் - பேரணி மற்றும் பெருந்திரள் முறையீடு

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இதுதான் நிலை. தினமும் பள்ளிக்குச் செல்ல வேண்டியதாலும் வீட்டுப்பாடங்களாலும் புதிதாக ஓர் ஒழுங்கைப் பின்பற்ற வேண்டியதாலும் கவலையிலும் விரக்தியிலும் மாணவர்கள் உழல்கிறார்கள். சமூகம் ஏற்றுக்கொண்ட ஒழுங்குக்கு மாறான செயல்களைச் செய்கிறார்கள். “மாணவர்களுக்கு, தங்கள் கருத்தைச் சொல்லத் தெரியவில்லை; நாங்கள் எதிர்பார்த்ததைவிட, மனதளவில் எங்களை நாங்கள் தயாரித்துக்கொண்டிருந்ததைவிட அதிக சவாலை மாணவர்களிடம் எதிர்கொள்கிறோம்” என்பதைப் பிற நாட்டு ஆசிரியர்களிடமும் கேட்க முடிகிறது. கரோனா காலம் பல்வேறு மன அழுத்தங்களைக் குழந்தைகளின் மீது திணித்துள்ளது. திடீரென நின்றுபோன பள்ளி வாழ்க்கை, உறுதியற்ற எதிர்காலம், பெற்றோரின் வேலையிழப்பு, வறுமை, பெற்றோர் அல்லது உறவினர்களின் மரணம், மற்றும் கூலி வேலைக்குத் திரும்பிய, தங்களை அழகுபடுத்திக்கொண்டு உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதையே மறந்திருந்த குழந்தைகள் வகுப்பறைக்குள் வந்திருக்கிறார்கள். மனஅழுத்தத்தை அடுக்கடுக்காகச் சுவர்போல எழுப்பி, வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தவர்கள், புதிய இடம், சூழல், ஒழுங்கு அனைத்தையும் அனுசரித்துச் செல்வதில் சிக்கலை எதிர்கொள்கிறார்கள்.

அனுசரிப்புச் சிக்கலில் (Adjustment problem / disorder) உழலும் மாணவர்களால் எதிலும் கவனம் செலுத்த இயலாது. சரியாகத் தூங்க இயலாது. பிறருடன் எளிதில் பழகவும் இணைந்து செயல்படவும் இயலாது. பதற்றம், ஆர்வமின்மை, பசியின்மை, கவலை, எரிச்சல், தன்னம்பிக்கைக் குறைவு, மனச்சோர்வு, வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் கூடுதல் மனஅழுத்தம் ஆகியவற்றை எதிர்கொள்வார்கள். இவை அனைத்தும் நடத்தைசார் பிரச்சினைகளாகவும் வெளிப்படும். வலிய சண்டைக்குச் செல்வார்கள். அதீதமாகக் கோபப்படுவார்கள், பொருட்களை உடைப்பார்கள், தங்களையும் காயப்படுத்திக்கொள்வார்கள். இதில், பாலின வேறுபாடோ, கலாச்சார வேறுபாடுகளோ கிடையாது. எல்லாருக்கும் எல்லா அறிகுறிகளும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனாலும், மனநல ஆலோசகரின் வழிகாட்டுதல் தேவைப்படும் மாணவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதையும் படிக்க | பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு: அரசுப் பள்ளியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் மக்கள்

எனவே, மாணவர்களைக் கவனமாகக் கையாளுங்கள். மாணவர்கள் வந்துவிட்டார்கள், அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். அவர்கள் தவறவிட்ட பாடங்களை உடனடியாகக் கற்றுக்கொடுத்துப் பந்தயத்தில் ஓட வைக்க வேண்டும் என்கிற உங்களின் ஆர்வத்தையும் வேகத்தையும் கொஞ்சம் குறையுங்கள். மாணவர்களைத் தவறாக நினைக்காதீர்கள், திட்டாதீர்கள். உங்கள் வேகத்தைத் தாங்கும் சக்தியும், ஆர்வத்தை உள்வாங்குகின்ற ஆற்றலும் அவர்களுக்கு ஏற்பட கால அவகாசம் தேவை. நாம் என்ன செய்யலாம்?

1. அனுசரிப்புச் சிக்கலில் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த உளவியல் சிகிச்சை, அவர்களைப் பேச வைப்பதும் அவர்களுடன் பேசுவதுமாகும். இச்சிகிச்சையைத் தனிநபருக்கும் குழுவாகவும் வழங்கலாம். நீங்கள் உங்கள் வகுப்பில் உள்ள பிள்ளைகள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாகப் பேசிவிட்டீர்களா? இரண்டு ஆண்டுகளில் அவர்கள் குடும்பத்தில் நடந்த நல்லது கெட்டது உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் உங்களால் அவர்களை நெறிப்படுத்த இயலும். தேவைப்படின், முக்கியமானவற்றை மற்ற ஆசிரியருடன் பகிர்ந்துகொண்டு அம்மாணவர்களை வலுப்படுத்த முடியும்.

2. மாணவர்களுக்கு மத்தியில் இணக்கம் ஏற்பட என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசியுங்கள். ஏனென்றால், “குழுவாக இணைந்து செய்யுங்கள்” என ஓர் ஆசிரியர் சொன்னவுடன், “அதிக நாட்கள் பள்ளிக்கே வராமல் இருந்ததால், எப்படி மற்றவர்களுடன் பழக வேண்டும் என்பதே மறந்துபோனதுபோல உள்ளது” என்று ஒரு மாணவி சொன்னதை எளிதில் நாம் கடந்துவிட முடியாது.

3. தங்கள் உணர்வுகளைச் சமநிலையில் வைத்துக்கொள்ள, “நேரே அமருங்கள். கண்களை மூடுங்கள். வயிற்றில் உள்ளங்கையை வையுங்கள். மூச்சை நன்கு இழுத்து மெல்ல விடுங்கள். வயிறு முன்னும் பின்னும் வந்துபோவதைக் கவனியுங்கள். வேறு எண்ணங்கள் வந்தாலும் கவலை வேண்டாம். மறுபடியும் வயிற்றுக்குக் கவனத்தைக் கொண்டுவாருங்கள். வேறு எதையும் வலிந்து யோசிக்க வேண்டாம்” என்று, மிகவும் எளிமையான மனம்நிறை கவனத்துக்கான (mindfulness) மூன்று நிமிட மூச்சுப் பயிற்சியைக் கற்றுக்கொடுங்கள்.

4. நீண்ட விடுமுறை, குடும்பச் சூழல், தனிமை உள்ளிட்டவற்றால், நீங்களுமேகூடச் சோர்ந்துதான் போயிருப்பீர்கள். எளிதில் கோபப்படுகிறவர்களாக, பொறுமையற்றவர்களாக மாறியிருப்பீர்கள். உங்களைச் சரிசெய்துகொள்ளவும் முயற்சிசெய்யுங்கள்.

கல்விப்புலத்தில் ஆற்றுப்படுத்துநர்கள் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை கரோனாவுக்குப் பிந்தைய காலம் கற்றுக்கொடுத்திருக்கிறது. நல்ல சமுதாயத்தைக் கட்டமைக்க ஆசிரியர்கள் போராடுகிறார்கள். மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கியுள்ள தமிழ்நாட்டு அரசு, அனைத்து கலைக் கல்லூரிகளிலும் உளவியல் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பையும் தொடங்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் கல்லூரியிலும் ஆற்றுப்படுத்துநருக்கான பணியிடத்தை உருவாக்குவதுடன் வேலைக்கான உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும். உடல் நலமும் மனநலமும் மிகுந்த சமுதாயத்தைக் கட்டமைக்க வேண்டியது நல்லாட்சியின் கடமையல்லவா!

- சூ.ம.ஜெயசீலன், ‘உஷ்… குழந்தைங்க பேசுறாங்க!’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com

Wednesday, March 16, 2022

March 16, 2022

மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு!

March 16, 2022

அறிவியல் ஆசிரியர் விருது காலக்கெடு நீட்டிப்பு.

அறிவியல் ஆசிரியர் விருது காலக்கெடு நீட்டிப்பு.

சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த 2020 - 2021ம் ஆண்டுக்கான, ஊரக கண்டுபிடிப்பாளர் விருது மற்றும் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது பெற, இம்மாதம் 7ம் தேதி வரை, அறிவியல் நகரத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tuesday, March 15, 2022

March 15, 2022

ஆசிரியர் திட்டியதால் மாணவன் தற்கொலை

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் பயின்று வரும் கலைச்செல்வன் வயது 16 தற்கொலை செய்து கொண்டார்.

கலைச்செல்வன் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார் அவர் தேர்வில் பார்த்து எழுதியதாக ஆசிரியர் அவரை திட்டி உள்ளார் இதனால் மன உளைச்சல் அடைந்த கலைச்செல்வன் பள்ளி மொட்டை மாடியில் சென்று கீழே குதித்தார். எதில் கலைச்செல்வன் உடல் முழுவதும் ரத்தமாக இருந்தது உடனடியாக ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் இருப்பினும் அவர் உயிரிழந்துவிட்டார்.

புகாரின் பேரில் காவலர்கள் விசாரணையைத் தொடங்கி வருகின்றனர் மேலும் ஆசிரியர் மீது எந்த தவறும் இல்லை எனவும் ஒருபுறம் கருத்து எழுந்துள்ளது.

Saturday, March 12, 2022

March 12, 2022

ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப விஜயகாந்த் வலியுறுத்தல்

ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூலில், அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய காலி பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு முறையை சரியாக பின்பற்றி, டெட் மதிப்பெண்கள் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு முன் வர வேண்டும். மேலும் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சிறப்பு ஆசிரியர்களுக்கான, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சரியான எண்ணிக்கையை வெளியிட வேண்டும். தற்போது தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு 50 லிருந்து 58 ஆக அதிகரிக்க வேண்டும். மேலும், ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 58 ஆக குறைக்க வேண்டும் என்ற ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படிக்க | அரசுப் பள்ளி மாணவி பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை

கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நியமன தேர்வு என்ற அரசாணை 149 ஐ நீக்கம் செய்துவிட்டு, 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள 117வது வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

Wednesday, March 09, 2022

March 09, 2022

EMIS App இல் மாணவர்களின் வருகையை பதிவு செய்யாத வகுப்பு ஆசிரியர்களுக்கு 17A வழங்கப்படும்

EMIS App இல் மாணவர்களின் வருகையை பதிவு செய்யாத வகுப்பு ஆசிரியர்களுக்கு 17A வழங்கப்படும்
March 09, 2022

இடமாறுதல் கலந்தாய்வுக்கு முன்னர் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க ஆணையருக்கு கோரிக்கை

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

மதிப்புமிகு ஆணையர் அவர்களுக்கு,

வணக்கம். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் இதற்கு முன்னர் நடைபெற்ற பணி நிரவலின் காரணமாக பல்வேறு பள்ளிகளுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு தினமும் தங்கள் இல்லத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு சென்று பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் மீண்டும் தங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு பணிமாறுதல் பெற வாய்ப்பின்றி அல்லலுற்று வருகின்றனர். ஆகவே தற்போது நடைபெற்று வரும் பணி நிரவல் கலந்தாய்வில் அவ்வாசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க ஏற்கனவே தங்களிடம் எங்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு (W.P.No.: 3571/2022 மற்றும் W.P.No.4563/2022) அவ்வாசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க வேண்டுமென்ற அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து ஆணைபிறப்பிக்குமாறு தங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளதையும் தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

எனவே பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் எங்களின் கோரிக்கையினை தாங்கள் கனிவுடன் பரிசீலனை செய்து தற்போது நடைபெறும் பணி நிரவல் கலந்தாய்வுக்கு முன் அவர்களுக்கு பணி மாறுதல் வழங்கிட ஆவன செய்யுமாறு கனிவுடன் வேண்டுகிறோம்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டுகளில் பணி நிரவல் ரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் கலந்தாய்வுக்கு முன்னர் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க ஆவன செய்யுமாறு தங்களை கனிவுடன் வேண்டுகிறோம்.
March 09, 2022

ஞாயிறன்று அரசு பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிகளுக்கு வர உத்தரவு

March 09, 2022

வெற்றிலையில் 1330 திருக்குறள் எழுதி அரசு பள்ளி தமிழ் ஆசிரியை சாதனை: கின்னஸ் புத்தகத்துக்கு முயற்சி

வெற்றிலையில் 1330 திருக்குறளை எழுதிய அரசு பள்ளி தமிழ் ஆசிரியைக்கு, பாராட்டு குவிந்து வருகிறது. இவரது சாதனை கின்னஸ் புத்தக நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருப்போரூர் ஒன்றியம் அனுமந்தபுரம் ஊராட்சி அகோர வீரபத்திரசுவாமி கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும். மனநலன் பாதிக்கப்பட்டவர்களை இங்கு அழைத்து வந்து, இரவு தங்க வைத்து வேண்டி கொண்டால், நோய் குணமாகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் இக்கோயிலுக்கு வந்து செல்வதால் அனுமந்தபுரம் பிரபலமான ஊராக அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற ஒரு ஊர், தற்போது உலகளவில் புகழ்பெறும் வகையில், மற்றொரு சாதனையை படைத்துள்ளது.

அனுமந்தபுரம் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில், நாகப்பட்டினத்தை சேர்ந்த சீதளாதேவி (42), தமிழ் ஆசிரியையாக பணியாற்றுகிறார். அவர், குழந்தையாக இருந்தபோது கிருபானந்த வாரியாரின் மடியில் தவழ்ந்து வளர்ந்த அவர், தமிழில் முதுகலை பட்டம் முடித்து, கடந்த 2012ம் ஆண்டு அரசு பள்ளியில், தமிழ ஆசிரியையாக பொறுப்பேற்று அனுமந்தபுரத்திற்கு வந்தார். திருக்குறள் மீது ஆர்வம் கொண்ட சீதளாதேவி, 1330 குறள்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்று, அதனை மாணவர்களுக்கும் போதிக்கும் பணியையும் செய்து வந்தார். இதைதொடர்ந்து திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என ஒற்றை கோரிக்கையை முன் வைத்து அவர், பல்வேறு திருக்குறள் தொடர்பான சாதனைகளை செய்து வருகிறார். ஐஸ் குச்சி எனப்படும் மூங்கில் பட்டைகளை சேகரித்து, 223 குச்சிகளில் 1330 திருக்குறள்களை 19 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்தார். மேலும் உலகளவில் திருக்குரளை பிரபலப்படுத்தும் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். கடந்த 2020ம் ஆண்டு கரும்பலகைகளில் எழுதப் பயன்படும் 268 சாக்பீஸ்களில், 12.5 மணிநேரத்தில் 1330 குறள்களையும் எழுதி சாதனை படைத்தார்.

இதையும் படிக்க | ‘நம் பள்ளி நம் பெருமை’ அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கம்

இந்நிலையில் கடந்த வாரம் வெற்றிலையில் 1330 குறள்களையும் எழுதி சாதனை படைக்க முயற்சித்து வெற்றி கண்டுள்ளாம்ா. 43 வெற்றிலைகளை இதற்காக பயன்படுத்திய சீதளாதேவி, அதற்காக 20 மணி நேரமே எடுத்து கொண்டார். ஆரம்பத்தில் வெற்றிலையில் எழுதத் தொடங்கியபோது பேனா மையின் சூடு தாங்காமல் வெற்றிலை வாடி விட்டதாகவும், இதையடுத்து ஆசிரியர் ஒருவரிடம் ஆலோசனை பெற்று வெற்றிலையை பிரிட்ஜில் வைத்து பின்னர் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்தார். மேலும், இந்த சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தக நிறுவனத்துக்கு அனுப்பியதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவரது இந்த சாதனை தற்போது வெளியுலகத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து, திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, நேற்று நேரடியாக அனுமந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்று, ஆசிரியை சீதளாதேவிக்கு பொன்னாடை அணிவித்து புத்தகம் அளித்து வாழ்த்து பாராட்டும் தெரிவித்தார். தொடர்ந்து அனுமந்தபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி சூர்யகுமார் தலைமையில் கிராம மக்களும், தலைமை ஆசிரியர் நேரு தலைமையில் சக ஆசிரியர்களும் சாதனை புரிந்த ஆசிரியை சீதளாதேவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, அனுமந்தபுரம் ஆசிரியை சீதளாதேவியின் சாதனை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய அங்கீகாரத்தை பெற்று தருவதாக உறுதியளித்தார்.

Total Pageviews

Search This Blog