vocational teachers
November 27, 2025
Showing posts with label strike. Show all posts
Showing posts with label strike. Show all posts
Thursday, November 27, 2025
Monday, February 26, 2024
Monday, February 12, 2024
strike
February 12, 2024
பிப்ரவரி 16-இல் தமிழக முதல்வர் இல்லம் முற்றுகை - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு
பிப்ரவரி 16-இல் தமிழக முதல்வர் இல்லம் முற்றுகை - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு Tamil Nadu Chief Minister's residence siege on February 16 - Abolition of CPS movement announced
மதுரை, பிப். 11 : புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, வருகிற 16-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்தை முற்றுகையிட்டுப்போராட்டம் நடத்தப் போவதாகசிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்டக் கூட்டத்தில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் பேசியதாவது: திமுகவின் தேர்தல் வாக்குறுதியான சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்கக் கோரி யும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினோம். திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே, தேர் தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி வருகிற 16-ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.
பல்வேறு மாநிலங்கள் இந்தத் திட்டத்தை ரத்து செய்த நிலையில், தமிழகத்தில் திமுக அரசு ரத்து செய்ய மறுத்து வருகிறது. போராட் டத்துக்குப் பின்னரும் கோரிக்கை நிறைவேற்றப்படாதபட்சத்தில், அடுத்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்ப டும் என்றார் அவர்.
strike
February 12, 2024
இடைநிலை ஆசிரியர் போராட்டம் தள்ளிவைப்பு Postponement of secondary teacher strike
இடைநிலை ஆசிரியர் போராட்டம் பிப்.19-ம் தேதிக்கு தள்ளிவைப்பு Postponement of secondary teacher strike
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று தொடங்கவிருந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம், பிப்.19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் (எஸ்எஸ்டிஏ) பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக ஆட்சிக்கு வந்ததும் 2009-ம் ஆண்டுக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கப்படும் என்று அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதை வலியுறுத்தி கடந்த செப்டம்பரில் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஊதியமுரண்பாடு தொடர்பாக ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழுவின்அறிக்கை 3 மாதத்தில் முதல்வரிடம் ஒப்படைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது 4 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், அரசு சார்பில் இதற்கான குழு அமைத்து ஓர்ஆண்டாகியும் எந்த முன்னேற்றமும் இருப்பதாக தெரியவில்லை. எனவே, ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று(பிப்.12) முதல் டிபிஐ வளாகத்தில்எங்கள் இயக்கத்தின் சார்பாகதொடர் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நிர்வாக காரணங்களால் போராட்டம் பிப்.19-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Friday, January 26, 2024
strike
January 26, 2024
ஸ்டிரைக் நடத்த ஆசிரியர்களுக்கு தடை
ஸ்டிரைக் நடத்த ஆசிரியர்களுக்கு தடை
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் மற்றும் சமூக வலைதளங்களில் விமர்சனம் ஆகியவற்றுக்கு, டில்லி மாநகராட்சி கல்வித்துறை தடை விதித்துள்ளது. தடையை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, டில்லி மாநகராட்சி கல்வித்துறை ரோகிணி மண்டல துணை இயக்குனர் ரிஷிபால் ராணா பிறப்பித்துள்ள உத்தரவு:
மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், அங்கீகரிக்கப்படாத சங்கங்களில் இருந்து கல்வித்துறை ஊழியர்கள் விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Monday, October 03, 2022
TNTET - TEACHER ELIGIBILITY TEST
October 03, 2022
TET தகுதி தேர்வு...பணிக்காக காத்திருக்கும் பட்டதாரிகள் - இரவிலும் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம்
TET Eligibility Test...Graduates Awaiting Jobs - Continued hunger strike at night - TET தகுதி தேர்வு...பணிக்காக காத்திருக்கும் பட்டதாரிகள் - இரவிலும் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம்
TET தகுதி தேர்வு...பணிக்காக காத்திருக்கும் பட்டதாரிகள் - இரவிலும் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம்
TET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு ஆசிரியர் பணி வேலைக்காக 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் பட்டதாரிகள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டம் இரவாகியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து செய்தியாளர் சதீஷ் மணி கூறுவதை கேட்போம்

Monday, July 18, 2022
வேலைநிறுத்தம்
July 18, 2022
"தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தம் வாபஸ்"
*தனியார் பள்ளிகளில் ஸ்டிரைக் வாபஸ்.*
தமிழகம் முழுவதும் நாளைமுதல் (ஜூலை 19) தனியார் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறையைக் கண்டித்து, தனியார் பள்ளிகள் அறிவித்திருந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது

Friday, March 18, 2022
strike
March 18, 2022
பஞ்சப்படி நிலுவை, புதிய ஓய்வூதிய திட்டம் - மத்திய அரசு ஊழியர்கள் 2 நாள் 'ஸ்டிரைக்'!
இதையும் படிக்க | ஏப். 21 முதல் மே 4-ம் தேதி வரை ஜேஇஇ முதல்நிலை தேர்வு - திருத்தப்பட்ட அட்டவணை வெளியீடு
புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல், பஞ்சப்படி நிலுவையை உடனடியாக வழங்குதல் உட்பட, 13 கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள், இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இது குறித்து, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல்; 18 மாத பஞ்சப்படி நிலுவையை உடனடியாக வழங்குதல்; தபால், ராணுவம், ரயில்வே உள்ளிட்ட துறைகளில் தனியாரை அனுமதிக்க கூடாது; எல்.ஐ.சி., - வங்கி உட்பட, பொதுத் துறைகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்பது உட்பட, 13 கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 28, 29ல், நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம்.இதில், மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்பர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.