Breaking

Showing posts with label Tamil Language. Show all posts
Showing posts with label Tamil Language. Show all posts

Tuesday, March 12, 2024

March 12, 2024

G.O.Ms.No 75, Tamil Language Exemption - தமிழ் மொழி அல்லாத சிறுபான்மை மொழியை தாய்மொழியாக கொண்ட 10ஆம் வகுப்பு மாணவர்கள் 2023-2024ஆம் ஆண்டிற்கு மட்டும் தமிழ் மொழிப் பாடம் எழுதுவதிலிருந்து விலக்கு - அரசாணை வெளியீடு

Monday, August 21, 2023

August 21, 2023

கல்வி நிலையங்களில் தமிழ் கட்டாய பயிற்சி மொழி: மாநில மாநாட்டில் தீர்மானம்!

திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும்; கல்வி நிலையங்களில் தமிழ் கட்டாய பயிற்சி மொழி: அதிமுக மாநில மாநாட்டில் தீர்மானம்

மதுரை: மதுரை அதிமுக மாநாட்டில் மொத்தம் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை இலக்கிய அணிச் செயலாளர் வைகை செல்வன், முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோர் வாசித்தனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

உலகப் பொதுமறை நூலாகத் திகழும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் தமிழ் மொழியை கட்டாயப் பயிற்சி மொழியாக்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

தமிழக மக்கள் தலையில் அடுக்கடுக்கான வரிகளைச் சுமத்தியதோடு தற்போது மின்கட்டண உயர்வையும் மக்கள் மீது திணித்து வரும் திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம்.

ஏழை ஏளிய மக்கள் பயன்படுத்தும் பால், மளிகை போன்ற அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் விலையை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். நிபந்தனைகள் ஏதுமின்றி குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் ரூ.1000 வழங்க வேண்டும். கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசு பதவியேற்பு விழாவுக்குச் சென்றதோடு காவிரி பிரச்சினையைப் பற்றி வாய்திறக்காமல் வந்து தமிழக விவசாயிகளுக்குத் துரோகம் விளைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை மீட்டெடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை மீண்டும் நடத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

காவிரி -குண்டாறு இணைப்பு திட்டத்தைக் கிடப்பில் போட்ட திமுக அரசைக் கண்டிக்கிறோம்.கோதாவரி-காவிரி நதி இணைப்பு திட்டத்தைத் நிறைவேற்ற வலியுறுத்துவதோடு, அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்காத அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம்.

பட்டியலின மக்கள், அவர்கள் கல்வி சார்ந்த வளர்ச்சிக்கு மத்திய அரசால் சிறப்பு நிதியைப் பட்டியலின மக்கள் நலன் சாராத திட்டங்களுக்கு நிதியை மடைமாற்றம் செய்யும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

மீனவ மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை மீறி மீன் வளம் மற்றும் மீனவர் நலன் பாதிக்கும் வகையில் கடலில் பேனா சின்னம் அமைக்கத் துடிக்கும் விளம்பர திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம்.

1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை பெண் என்றும் பாராமல் கொடூரத் தாக்குதல் நடத்திவிட்டு தற்போது பொய்யான தகவல்களை வெளியிடும் முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம் என்பன உள்ளிட்ட32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Sunday, October 30, 2022

October 30, 2022

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக தமிழில் மொழிபெயர்க்கப்படும் எம்பிபிஎஸ் பாடப் புத்தகங்கள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக தமிழில் மொழிபெயர்க்கப்படும் எம்பிபிஎஸ் பாடப் புத்தகங்கள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக எம்பிபிஎஸ் பாடப்புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருவதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே மருத்துவப் படிப்பில் சேர்ந்து வந்தனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதஉள்இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பிறகு, மருத்துவப் படிப்பில்சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கு தற்போது நடந்து முடிந்துள்ள முதல்கட்ட கலந்தாய்வில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 565 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் படித்த பெரும்பாலான மாணவர்கள் தமிழ்வழி கல்வியில் படித்தவர்கள் என்பதால், முதல் ஆண்டில்ஆங்கில வழியில் எம்பிபிஎஸ் பாடங்களை படிக்க சிரமப்படுகின்றனர். இந்நிலையில், தமிழ்வழியில் படித்தவர்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக, தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வி சேவை கழகம் இணைந்து மருத்துவப் பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட திட்டமிட்டுள்ளன.

முதல்கட்டமாக மாணவர்களுக்கான ‘கிரேஸ் அனாடமி கைட்டன்’,‘ஹால் டெக்ஸ்ட் புக் ஆஃப் மெடிக்கல் பிசியாலஜி’ உள்ளிட்ட4 புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகின்றன. இப்பணிகளில் 30-க்கும்மேற்பட்ட மருத்துவப் பேராசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து மருத்துவக் கல்விஇயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, “எம்பிபிஎஸ் பாடத் திட்டங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகின்றன. தாய்மொழியில் மருத்துவம் தொடர்பான புரிதலுக்கு இது உதவியாக இருக்கும். ஆனால், தேர்வை தமிழில் எழுதுவது குறித்து முடிவு எடுக்கவில்லை” என்றனர்.

Tuesday, August 30, 2022

August 30, 2022

MA படிப்பு: செப்., 30 வரை அவகாசம்!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படை இலக்காக, தலையாய நோக்கமாக அமைகின்றன.

தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் கற்பித்தல் என்பது பிறிதொரு நோக்கமாகும். இவற்றின் அடிப்படையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பல்வேறு திட்டங்களின் வழிச் செயலாற்றி வருகிறது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஒருங்கிணைந்த ஐந்தாண்டு தமிழ் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஐந்தாண்டு கால முதுகலை தமிழ் படிப்பு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இந்த மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது, மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று, செப்., 30 வரை அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. இதற்கான சேர்க்கை விண்ணப்பங்களை, www.ulakaththamizh.in என்ற இணையதளம் வாயிலாக பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு, 'இயக்குனர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை -- 113' என்ற முகவரியில், நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம். மேலும், 044 - 2254 2992 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Thursday, August 25, 2022

August 25, 2022

ஆங்கிலத்தால் 5% மட்டுமே பயன் தாய் மொழியில் படிப்பதால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு

‘ஆங்கில மோகத்தால் நாட்டின் ஐந்து சதவீத மக்களின் திறன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது,’ என்று அமித்ஷா பேசிய நிலையில், அவர் இந்திக்கு ஆதரவாக மீண்டும் கருத்து தெரிவித்துள்ளதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. மத்திய பிரதேசத்தில் புதிய கல்விக் கொள்கை - 2020 என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:

குஜராத் அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு அடியெடுத்து வைத்த காலத்தில், ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் இந்தியில் இருந்து குஜராத்திக்கு மொழி பெயர்த்து கட்டுரைகளை படித்தேன். இந்தியில் எனது புலமையை மேம்படுத்துவதற்கு பதிலாக ஆங்கிலத்தில் கவனம் செலுத்துங்கள் என்று தலைவர் ஒருவர் கூறினார். தாய் மொழியில் படிக்கும் 95 சதவீத குழந்தைகளின் திறன்கள் பயன்படாமல் போவதால், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தாய் மொழி திறனை முழுமையாக பயன்படுத்தினால் நாடே பிரகாசமாக இருக்கும்.

ஆங்கில மோகத்தால் நாட்டின் ஐந்து சதவீத மக்களின் திறன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார். இந்தியை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என அமித்ஷா ஏற்கனவே கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது இந்திக்கு ஆதரவாக அவர் பேசி இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Thursday, August 18, 2022

August 18, 2022

தமிழ்மொழித் திறனாய்வுத் தோ்வு: அறிவிப்புப் பலகையில் வெளியிட பள்ளிகளுக்கு உத்தரவு

தமிழ்மொழித் திறனாய்வுத் தோ்வு: அறிவிப்புப் பலகையில் வெளியிட பள்ளிகளுக்கு உத்தரவு

மாதந்தோறும் ரூ.1,500 ஊக்கத் தொகை வழங்கும் பிளஸ் 1 மாணவா்களுக்காக நடத்தப்படவுள்ள தமிழ்மொழித் திறனாய்வுத் தோ்வு குறித்த தகவல்களை அனைத்து வகை பள்ளிகளும் தங்களது அறிவிப்புப் பலகைகளில் வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட) பிளஸ் 1வகுப்பில் பயிலும் மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டு முதல் தமிழ்மொழி இலக்கியத் திறனாய்வுத் தோ்வு நடத்தப்படவுள்ளது. இந்தத் தோ்வில் 1,500 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் மாதந்தோறும் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். இந்தத் தோ்வில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவா்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசுப் பள்ளி உள்ளிட்ட பிற தனியாா் பள்ளி மாணவா்களும் பொதுவான போட்டியில் தெரிவு செய்யப்படுவா். தமிழக அரசின் பத்தாம் வகுப்பு தரநிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொள்குறி வகையில் தோ்வு நடத்தப்படும்.

ஆக. 22 முதல் விண்ணப்பிக்கலாம்:

தமிழகத்தில் வரும் அக். 1-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ள தமிழ்மொழி இலக்கியத் திறனாய்வுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பப் படிவத்தை ஆக. 22 முதல் செப். 9 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியா்கள், பள்ளி முதல்வா்களிடம் தோ்வுக் கட்டணம் ரூ.50 உடன் செப்.9-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

இந்தத் தகவலை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் தங்கள் ஆளுகைக்குள்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மேலும் இந்தத் தோ்வுக்கு பிளஸ் 1 மாணவா்கள் அதிகளவில் ஆா்வமுடன் விண்ணப்பிக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளின் அறிவிப்புப் பலகைகளிலும் தமிழ்மொழி இலக்கியத் திறனாய்வுத் தோ்வு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை தொடா்பான அறிவிப்பை ஒட்ட தலைமை ஆசிரியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை வெளியீடு:

தமிழ்மொழி இலக்கியத் திறனாய்வுத் தோ்வு திட்டத்தின் கீழ் 2022-2023-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டு 2023-2024-ஆம் கல்வியாண்டில் பயிலும் 1,500 மாணவா்கள், மற்றும் 2023-2024-ஆம் கல்வியாண்டில் புதிதாக தோ்வு செய்யப்படும் பிளஸ் 1 வகுப்பு பயிலும் 1,500 மாணவா்கள் என மொத்தம் 3,000 மாணவா்களுக்கு தலா ரூ.1,500 வீதம் 2023-2024-ஆம் கல்வியாண்டில் (ஜூன் முதல் ஏப்ரல் வரை) 11 மாதங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவும், அந்தத் தொகையானது ஒவ்வொரு ஆண்டும் தொடா்ந்து வழங்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், ஊக்கத் தொகைக்காக 2022-2023-ஆம் கல்வியாண்டுக்கு ரூ. 2.47 கோடிக்கு நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டும், 2023-2024-ஆம் ஆண்டுக்கு அதற்கென தொடா் செலவினமாக ரூ.4.95 கோடி தமிழ் வளா்ச்சி இயக்ககத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய நிா்வாக அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog