railway jobs
October 25, 2025
Showing posts with label Indian Government. Show all posts

Saturday, October 25, 2025
Tuesday, January 17, 2023
Indian Government
January 17, 2023
வெளிநாடுகளில் படிக்க செல்லும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசு

வெளிநாடு படிப்புக்கு செல்ல ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் முன்பு மாநிலத்தில் போதுமான அதிகாரிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநிலங்களை ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு வெளிநாட்டில் படிக்கும் விடுப்புக்கான ஒப்புதல் வழங்கும் முன்பு மாநில அரசிலும், ஒன்றிய அரசின் பணியிலும் போதுமான எண்ணிக்கையிலான ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் உரிய விடுமுறை வழங்கும் முன்பு ஒன்றிய அரசின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளில் விடுப்பில் இருந்து திரும்பிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட பணியிடங்களையும் மாநிங்கள் தெரிவிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவி பற்றிய விவரங்கள், இந்தியாவிற்குள்ளும், இந்தியாவிற்கு வெளியேயும் ஆய்வு விடுப்பில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, March 06, 2022
Today Kalviseithi
March 06, 2022
பள்ளிகளுக்கான மத்திய அரசின் நிதி விடுவிப்பு: அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
பள்ளிகளுக்கான மத்திய அரசின் நிதி விடுவிப்பு:அறிக்கை சமா்ப்பிக்க அறிவுறுத்தல்
தமிழக அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கான மத்திய அரசின் நிதி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடா்பான மானிய செலவின விவரங்களை அறிக்கையாக ஏப்.10-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநா் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்கவும், வளாக பராமரிப்பு
பணிகளை மேற்கொள்ளவும் ஆண்டுதோறும் மத்திய அரசின் சாா்பில் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
அதன்படி நிகழ் கல்வியாண்டு (2021-22) 31, 214 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.77.90 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதில் முதல் தவணையாக 50 சதவீத (ரூ.38.95 கோடி) நிதி பள்ளிகளுக்கு கடந்த அக்டோபரில் வழங்கப்பட்டது. அதைத்தொடா்ந்து மீதமுள்ள தொகையானது தற்போது விடுவிக்கப்படுகிறது. இவற்றை பள்ளிகளின் மாணவா் எண்ணிக்கைக்கு ஏற்ப உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் பிரித்து வழங்க வேண்டும். இந்த மானியத்தில் 25 சதவீத தொகையை இல்லம் தேடிக்கல்வி திட்டத்தில் பயிலும் மாணவா்களுக்கு எழுதுபொருள்கள் வாங்க பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், மானிய செலவீன விவரங்களை அறிக்கையாக இயக்குநரகத்துக்கு ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, February 04, 2022
JOB
February 04, 2022
மத்திய அரசில் 8.72 லட்சம் காலிப்பணியிடங்கள்

மத்திய அரசில் கடந்த 2020 மாா்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி, 8.72 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பது:
கடந்த 2019 மாா்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி, மத்திய அரசில் 9,10,153 காலிப்பணியிடங்களும், 2018 மாா்ச் 1 நிலவரப்படி, 6,83,823 காலிப்பணியிடங்களும் இருந்தன. பின்னா், 2020 மாா்ச் 1 நிலவரப்படி, மத்திய அரசில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 8,72,243 ஆக அதிகரித்துள்ளது.
பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி), மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), ரயில்வே ஆள்சோ்ப்பு வாரியம் ஆகியன கடந்த 2018-19, 2020-21 காலகட்டத்தில் 2,65,468 பணியாளா்களைத் தோ்வு செய்துள்ளன என்று அதில் தெரிவித்துள்ளாா். இதேபோல, மற்றொரு கேள்விக்கு மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில், ‘யுபிஎஸ்சி பிரிவில் தற்போது 485 காலிப்பணியிடங்கள் உள்ளன. குறிப்பாக குரூப் ‘ஏ’, குரூப் ‘பி’, குரூப் ‘சி’ பிரிவுகளில் முறையே 45, 240, 200 காலிப்பணியிடங்கள் உள்ளன. காலிப்பணியிடங்களை முன்கூட்டியே அல்லது தகுந்த நேரத்தில் நிரப்புமாறு அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் மத்திய அரசு சீரான இடைவெளியில் அறிவுறுத்தல்களை பிறப்பித்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற உயா் பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி ஆண்டுதோறும் சிவில் சா்வீசஸ் தோ்வுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.