Breaking

Showing posts with label CORRUPTIONS. Show all posts
Showing posts with label CORRUPTIONS. Show all posts

Friday, February 16, 2024

February 16, 2024

பள்ளிகளுக்கான கொள்முதலில் முறைகேடு புகார் - கல்வி அதிகாரி உள்பட 9 பேர் மீது வழக்கு

பள்ளிகளுக்கான கொள்முதலில் முறைகேடு புகார் - கல்வி அதிகாரி உள்பட 9 பேர் மீது வழக்கு Complaint of malpractice in procurement for schools - case against 9 persons including education officer

"திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான பொருள்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாா்களின் பேரில், மாவட்டக் கல்வி அலுவலா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்கள் என 9 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஒருங்கிணைந்த கல்வி வளா்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளிகளுக்குத் தேவையான பல்வேறு அடிப்படை தேவைகள் பூா்த்திசெய்யப்படுகின்றன. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் கடந்த 2019 -2021 கால கட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வி வளா்ச்சி திட்ட நிதியில் முறைகேடு நடந்ததாகப் புகாா் எழுந்தது. அப்போதைய திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அறிவழகன் பதவி வகித்தாா். மேலும் முத்துச்சாமி (மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா்), சாந்தி (கல்வி அலுவலா்), ராஜேந்திரன் (தலைமையாசிரியா்), சற்குணன் (தலைமை ஆசிரியா்), அகிலா (தலைமை ஆசிரியை), டெஸ்சி ராணி (கல்வி உதவியாளா்), ஜெய்சிங்(தலைமை ஆசிரியா்), கண்ணன் (தலைமை ஆசிரியை) ஆகிய 9 பேரும் பணியாற்றி வந்தனா். இந் நிலையில், திருச்சி மாவட்டத்தில் காணக்கிளியநல்லூா், ஒனையூா், வேம்பனூா், இனாம்குளத்தூா், குருவாப்பட்டி, கொப்பம்பட்டி உள்ளிட்ட 6 ஊா்களில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒப்பந்தப் புள்ளி வெளியிடாமல் விதிகளுக்குப் புறம்பாக குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் இருந்து பொருள்களைக் கொள்முதல் செய்ததாக புகாா் எழுந்தது. இதன் மூலம் 6 பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் முறைகேடு நடந்திருப்பதாகத் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினா், மேற்குறிப்பிட்ட கல்வி அதிகாரிகள் 9 போ் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். அவா்களில், சாந்தி தற்போது கல்வித் துறை இணை இயக்குநராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது."

Monday, November 20, 2023

November 20, 2023

விடுதி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.2 கோடி கையாடல்



விடுதி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.24 கோடி கையாடல் 24 Crore handling of stipend for hostel students

விடுதி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.24 கோடி கையாடல்; கணவருடன் பெண் அதிகாரி கைதுவிடுதி மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.24 கோடி கையாடல்; கணவருடன் பெண் அதிகாரி கைது

சிவங்கை: ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் ரூ.2.35 கோடி மோசடி செய்த வருவாய் ஆய்வாளர் சீதாப்பிரியா னகது செய்யப்பட்டார். மாணவர்களுக்கு அரசு ஒதுக்கிய பணத்தை கையாடல் செய்த சீதாப்பிரியா மற்றும் அவரது கணவர் ராம்குமார் கைது செய்யப்பட்டனர்.

பணமோசடி வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது

ஆதி திராவிடர் விடுதி களில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கிய உதவித்தொகை ரூ.2 கோடியே 35 லட் சத்து 36 ஆயிரம் கையா டல் செய்ததாக பெண் முதுநிலை வருவாய் ஆய் வாளர், அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

உதவித்தொகை

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை யின் சார்பில் சுமார் 46 பள்ளி, கல்லூரி மாணவ-மாணவி கள் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் எண்ணெய், சோப்புபோன்றபொருட்கள் வாங்குவதற்காக அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. அதன்படி கல்லூரி விடுதி களில் தங்கி படிப்பவர்க ளுக்கு மாதம் ரூ. 150-ம், பள்ளி விடுதிகளில் தங்கி படிப்பவர் களுக்கு மாதம் ரூ.100-ம் அரசு வழங்குகிறது. கணவன், மனைவி கைது இதுதொடர்பாகமாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சீதா பிரியா கருவூலத் தில் இருந்து பெறப்பட்ட பணத்தை தன்னுடைய பெயர் மற்றும் தன்னுடைய கணவர் ராம்குமார் (45) உள் பட 4 பேரின் வங்கி கணக்கில் செலுத்தியதை கண்டுபிடித்த னர். இதை தொடர்ந்து சீதா பிரியா, அவருடைய கணவர் ராம்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள் ளதா? என விசாரித்து வரு கின்றனர்.

Thursday, October 12, 2023

October 12, 2023

பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தில் முறைகேடு: ரூ.4.81 கோடி அளவில் அதிகப்படியான செலவு; கணக்கு தணிக்கை ஆணையர் அறிக்கை தகவல்

கடந்த அதிமுக ஆட்சியில் ஒப்பந்ததாரர்களின் கூட்டணியால் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தில் முறைகேடு: ரூ.4.81 கோடி அளவில் அதிகப்படியான செலவு; கணக்கு தணிக்கை ஆணையர் அறிக்கை தகவல் கடந்த அதிமுக ஆட்சியில் ஒப்பந்ததாரர்களின் கூட்டணியால் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தில் நடந்த முறைகேட்டால் ரூ.4.81 கோடி அளவில் அதிகப்படியான செலவு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை ஆணையர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கணக்கு தணிக்கை ஆணையர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் சத்துணவு திட்டத்தின் பயணாளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இலவச சீருடை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் பள்ளிக் கல்வி ஆணையர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர் ஆகியோரோல் இணைத்து செயல்படுத்தப்படுகிறது.இந்த திட்டத்தில் தகுதியுடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தைத்த சீருடைகளை வழங்குவது கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் பொறுப்பு. நெசவாளர் கூட்டுறவு மூலம் நூல் கொள்முதல், துணி உற்பத்தி செய்யப்பட்டு, மகளிர் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் சீருடைகள் தைக்கப்பட்டு பெறுவது கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையரின் பொறுப்பு. இந்நிலையில் டிசம்பர் 2020ம் ஆண்டு 3,011 மெட்ரிக் டன் அளவிலான பல்வேறு நூல் வகைகளை டெண்டர் மூலமாகவும், மேலும் 2,876.08 மெட்ரிக் டன் பாலியஸ்டர் பருத்தி நூலை கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்து டெண்டர் இல்லாமல் கொள்முதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.டிசம்பர் 2020ல் நூல் உற்பத்தியாளர்கள், நூல் சாயமிடுபவர்கள் மற்றும் நூல் வர்த்தகர்களிடமிருந்து திறந்த டெண்டர் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. நூல் வியாபாரிகளிடம் இருந்து மூன்றும் ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்ட நிலையில், நூல் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளி எதும் பெறப்படவில்லை. டெண்டர் ஏற்புக்குழு கடந்த 2021ம் ஆண்டு ஜன.11ம் தேதியன்று தொழில்நுட்ப ஒப்பந்தபுள்ளிகளைத் திறந்தது. தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளிகளின் மதிப்பீட்டிற்குப் பிறகு, மூன்று ஒப்பந்ததாரர்கள் தகுதியானவர்கள் என்று டெண்டர் ஏற்புக்குழு முடிவு செய்தது.இதில் 2019-20 மற்றும் 2020-21ம் ஆண்டுகளில், கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர் மூலம் நூல் கொள்முதல் செய்வதற்கான டெண்டரில் அதே சில ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றிருந்தனர், மேலும் கொள்முதல் ஆணைகள் அதே ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டன. வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும்வகையில் தமிழக அரசின் மின்கொள்முதல் அமைப்புமுறை டெண்டர் விவரப்பட்டியலை இலவசமாக பதிவிறக்கம் செய்து, இணையதளத்தில் ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உதவுகிறது. மூன்று ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையிலும், கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையரகம் நாடு முழுவதும் உள்ள வணிகர்களை ஈர்ப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் பின்பற்றவில்லை.வெளிப்படைத்தன்மையை டெண்டர் செயல்முறையை பின்பற்றத் தவறியது ஒப்பந்ததாரர்களின் வணிக கூட்டமைப்பை எளிதாக்கியது. மேற்குறிப்பிடப்பட்ட தகவல்களிலிருந்து, ஒப்பந்ததாரர்களால் கூட்டணி அமைக்கப்பட்டு டெண்டர் செயல்முறை மோசடி செய்யப்பட்டது தணிக்கையில் கண்டறியப்பட்டது. ஒப்பந்ததாரர்களுக்கிடையேபான மூன்று கூட்டமைப்பு ஒப்பந்தப்புள்ளி செயல்முறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. இத்தகைய சுயலாபக் கூட்டணியைத் தடுக்க, கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஒரே நபர் வெவ்வேறு ஒப்பந்ததாரர்களின் பிரதிநிதியாக இருப்பது, இரண்டு அல்லது ஒப்பந்ததாரர்களுக்கு இடையேயான கூட்டமைப்பை குறிப்பதாக தணிக்கை அதற்கு மீண்டும் வலியுறுத்துகிறது. இது மொத்த ஒப்பந்த செயல்முறையின் வெளிப்படைத்தன்மையையும் நியாயத்தன்மையையும் சீர்குலைத்து, திறந்த மற்றும் டெண்டர் போட்டி முறையின் நோக்கத்தையே வலுவிழக்க செய்கிறது. சுயலாபக் கூட்டமைப்பு, கூட்டு ஏல முறை, ஒப்பந்தபுள்ளி செயல்முறை மோசடியில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்களை டெண்டர்களில் பங்கேற்பதில் இருந்து கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர் தடை செய்திருக்க வேண்டும்.மூன்று ஒப்பந்ததாரர்களிடையே ஒப்பந்தப்புள்ளி செயல்முறை, ஏல முறைகேடு மற்றும் சுயலாபக் கூட்டணியைக் கவனிக்கவும் தடுக்கவும் கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர் தவறியதாலும், திட்டத்தின் அமலாக்கத்தை தொடக்க கல்வி இயக்குநர் போதிய அளவில் கண்காணிக்கத் தவறியதாலும், செய்த செலவின் சரித்தன்மையை சரிபார்க்கத் தவறியதாலும், ரூ.4.81 கோடி தவிர்த்திருக்கக்கூடிய அதிகப்படியான செலவினம் ஏற்பட்டது.மேலும்பள்ளிக் கல்வி ஆணையர், தொடக்கக் கல்வி இயக்குநர் இத்திட்டத்தை திறம்படக் கண்காணிக்கத் தவறியதால், வங்கிக் கணக்கில் செலவழிக்கப்படாத ரு.33.23 கோடி நிலுவைகள் முடக்கப்பட்டன.


பொதுக் கருவூலத்திற்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திய சுயலாபக் கூட்டணி மூலம் ஒப்பந்தப்புள்ளி செயல்முறை முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும். மின்கொள்முதல் முறை கட்டாயமாக்கப்பட வேண்டும் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையரின் வங்கியில் அரசு பணம் செலுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Sunday, September 24, 2023

September 24, 2023

அக்.30 முதல் நவ.5-ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்: கல்லூரிகளுக்கு UGC அறிவுறுத்தல்



அக்.30 முதல் நவ.5-ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்: கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை கடைபிடிக்க, பல்கலைக்கழக மானியக் குழுமம் (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, யுஜிசியின் செயலர் மணீஸ் ஆர்.ஜோஷி அனைத்துபல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளான அக்.31-ம் தேதியையொட்டி, அந்த வாரத்தை ஒவ்வொரு ஆண்டும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அனுசரித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டில் ‘ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள்: தேசத்துக்காக அர்ப்பணியுங்கள்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில், வரும் அக்.30-ம் தேதி முதல் நவ.5-ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது.

ஊழல் தொடர்பான நடைமுறைகளையும், அவற்றை எப்படி முறையிட வேண்டும் என்பது குறித்தும் மக்களிடம் கற்பித்தலை உருவாக்க இந்த விழிப்புணர்வு வாரம் உபயோகமாக இருக்கும்.அந்தவகையில், உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மாணவர்களை ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.
அதேபோல ஊழல் தடுப்பு தொடர்பான கருத்தரங்கம், பயிலரங்கம், பட்டிமன்றம், விநாடி-வினா போட்டி உள்ளிட்டவற்றை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் சமூக வலைதளங்கள், குறுஞ்செய்தி, மின்னஞ்சல், வாட்ஸ் அப் செயலி போன்றவற்றின் வாயிலாகவும் விழிப்புணர்வு செய்திகளை சக மாணவர்களிடையே பரப்பவும் அறிவுறுத்தலாம்.

இந்த செயல்பாடுகளின் நிலவரத்தை அறிக்கையாக்கி மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு கல்வி நிறுவனங்கள் அனுப்ப வேண்டும். இந்த தகவல்கள் யுஜிசியின் பல்கலைக்கழக செயல்பாட்டு கண்காணிப்பு இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Sunday, April 02, 2023

April 02, 2023

பெரியார் பல்கலை. ஊழல் விசாரணை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை

Periyar University. Corruption investigation and appropriate action against the culprits - பெரியார் பல்கலை. ஊழல் விசாரணை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல்கள், முறைகேடுகள் உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவின் பதவிக்காலம் மேலும் இரு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்ததாக தமிழக அரசால் பட்டியலிடப்பட்ட 13 குற்றச்சாட்டுகளில் இருப்பவர்களுக்கு பதவியும், பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் பற்றி விசாரணைக்கு அரசு ஆணையிட்டது மிகச்சிறந்த முன்னெடுப்பு ஆகும். விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும். அதற்கு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள இப்போதைய பொறுப்பு பதிவாளர் உள்ளிட்ட அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். விசாரணைக்குழு புதிய காலக்கெடு வரை காத்திருக்காமல், ஏப்ரல் 12ம் தேதிக்குள் விசாரணையை நிறைவு செய்து அறிக்கை வழங்குவதையும், அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Monday, March 27, 2023

March 27, 2023

நில அளவர் தேர்வை ஒரே மையத்தில் எழுதிய 700 பேர் தேர்ச்சி முறைகேடு? - விசாரணை நடத்த வலியுறுத்தல்



நில அளவர் தேர்வை ஒரே மையத்தில் எழுதிய 700 பேர் தேர்ச்சி முறைகேடு நடந்ததா என விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் - 700 people who wrote the land surveyor exam in one center, the pass fraud? - Insist on investigation

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: தமிழ்நாடு அரசு துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

வாய்ப்பில்லாத இந்த சாதனை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மொத்தமாக தேர்ச்சி பெற்ற 700 பேரும் காரைக்குடியில் உள்ள மையத்தில் தேர்வு எழுதியுள்ளனர்.

அவர்களின் பெரும்பான்மையினர் காரைக்குடியில் உள்ள தனியார் பயிற்சி நடுவத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது ஐயத்தின் அளவை உயர்த்தியிருக்கிறது. வெற்றி பெற்றவர்கள் முறையாக பயின்று திறமையால் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், மொத்த பணியிடங்களில் 70% இடங்களுக்கு ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது இயற்கைக்கு எதிரானது என்பதால் அதுகுறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட நான்காம் தொகுதி தேர்வில் முதல் 100 இடங்களில் ராமேசுவரம், கீழக்கரை நடுவங்களில் தேர்வு எழுதிய 35 பேர் இடம் பெற்றிருந்தது குறித்த ஐயத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது பெருமளவில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது.

நில அளவர் தேர்விலும் அத்தகைய முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றதா என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம். எனவே, இதுகுறித்து விசாரணை நடத்த டிஎன்பிஎஸ்சி ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Sunday, March 26, 2023

March 26, 2023

காரைக்குடியிலிருந்து 700 பேர் தேர்வானது எப்படி?- TNPSC தேர்வில் முறைகேடு?

காரைக்குடியிலிருந்து 700 பேர் தேர்வானது எப்படி?- TNPSC தேர்வில் முறைகேடு?
டி.என்.பி.எஸ்.சி நில அளவையர், வரைவாளர் பணியிட தேர்வுகளில் முறைகேடு நடந்திருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி நடத்திய நில அளவையர், வரைவாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இந்தநிலையில் ஆயிரம் நில அளவையர் மற்றும் வரைவாளர் காலி பணியிடங்களுக்கு, காரைக்குடியில் இருந்து மட்டும் 700 பேர் தேர்வாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறிப்பிட்ட ஒரே மையத்திலிருந்து தேர்வாகியுள்ளதாகவும், 2019 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றதுபோல், மிகப்பெரிய முறைகேடு காரைக்குடியில் நடைபெற்றிருக்கலாம் எனவும், இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு டிஎன்பிஎஸ்சி உத்தரவிட வேண்டும் எனவும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Monday, January 09, 2023

January 09, 2023

அரசுப் பள்ளியில் ஆசிரியா் வேலை எனக் கூறி ரூ. 27 லட்சம் மோசடி: சென்னை இளைஞா் கைது

அரசுப் பள்ளியில் ஆசிரியா் வேலை எனக் கூறி ரூ. 27 லட்சம் மோசடி: சென்னை இளைஞா் கைது

புதுக்கோட்டையில் அரசுப் பள்ளியில் ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 3 பேரிடம் தலா ரூ. 9 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி மோசடி செய்ததாக சென்னை இளைஞரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், மாலையீடு அடைக்கலம் நகரைச் சோ்ந்தவா் ராஜா மனைவி ஹேமமாலினி. தனியாா் பள்ளியில் பணிபுரிந்து வரும் இவா், சென்னையைச் சோ்ந்த ரெத்தினம் மகன் ஹேமந்த் குமாா் (38) என்பவரிடம் கடந்த 2022 ஜூலை மாதம் ரூ. 9 லட்சம் கொடுத்துள்ளாா். ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ள அவருக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியா் பணியிடம் வாங்கித் தருவதாக ஹேமந்த்குமாா் உறுதியளித்துள்ளாா். இதேபோல, மனோன்மணி மற்றும் அழகப்பெருமாள் ஆகிய இருவரிடமும் தலா ரூ. 9 லட்சத்தை ஹேமந்த்குமாா் பெற்றுள்ளாா். இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து போலீஸாா் முன்விசாரணை மேற்கொண்டனா். இதில் பெற்றுக் கொண்ட பணத்துக்கு ஈடாக ஹேமந்த்குமாா் தனது வங்கிக் கணக்கில் இருந்து காசோலைகளைக் கொடுத்ததும், பணத்தைத் திரும்பத் தராததும் தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ஹேமந்த்குமாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Tuesday, December 20, 2022

December 20, 2022

ஆசிரியர்களிடம் வசூல்; லஞ்ச ஒழிப்பு துறை பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம்

ஆசிரியர்களிடம் வசூல்; லஞ்ச ஒழிப்பு துறை பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம்

ஆசிரியர்களிடம் பணம் வசூலித்தது குறித்து விசாரிக்க, பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு, லஞ்ச ஒழிப்புத் துறை கடிதம் அனுப்பிஉள்ளது.

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரகத்தில் இருந்து, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமாருக்கு அனுப்பியுள்ள கடிதம்:

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் எஸ்.ஏ.ராஜ்குமார் புகார் அனுப்பியுள்ளார். அதில், பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைக்காக மாநாடு நடத்த போவதாகவும், அமைச்சர்கள் மகேஷ், உதயநிதி பங்கேற்க உள்ளதாகவும் கூறி, பகுதிநேர ஆசிரியர்களிடம் பணம் வசூலித்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்த புகார் பொதுவான ஒன்றாக உள்ளதால், அதன் உண்மைத் தன்மை மற்றும் புகாருடன் அளித்துள்ள ஆவணங்களின் உண்மைத் தன்மையை, சம்பந்தப்பட்ட துறை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

எனவே, இது குறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, August 05, 2022

August 05, 2022

ஆசிரியர் நியமன ஊழல்: மாஜி அமைச்சரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் மேற்குவங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவரது பெண் உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோரின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் .மாநில அரசின் 'குரூப் - சி, குரூப் - டி' பிரிவு அதிகாரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான ஆசிரியர் நியமனத்தில் மோசடி வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க, கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தொழில் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்டோரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து , பார்த்தா சாட்டர்ஜி, அவருடைய நெருங்கிய பெண் கூட்டாளியான அர்பிதா முகர்ஜி, உள்ளிட்டோர் வீடுகளில் கடந்த இரண்டு நாட்களாக ரெய்டு நடத்தினர்.இதில், அர்பிதா முகர்ஜியின் வீட்டில் தோண்டத் தோண்ட பணம், நகைகள் கிடைத்தது. அவருடைய வீட்டில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அர்பிதா முகர்ஜியும், பார்த்தா சாட்டர்ஜியும் கைது செய்யப்பட்டனர்.

இருவரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில் பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி ஆகியோரின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் (ஆகஸ்ட் 18) வரை) நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Friday, July 29, 2022

July 29, 2022

ஆசிரியர் பணி நியமன ஊழல் - நடிகையின் 4 கார்களை தேடும் அமலாக்கத்துறை

ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் மேற்கு வங்காள மந்திரி பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

மந்திரியின் உதவியாளரான நடிகையின் வீட்டில் ரூ.50 கோடி அளவுக்கு கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநில வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரியாக இருக்கும் பார்த்தா சட்டர்ஜி கடந்த 2014-ம் ஆண்டு வரை கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டார். அப்போது அவர் ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு எழுந்ததால் அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. பார்த்தா சட்டர்ஜி, அவரது உதவியாளரும் நடிகையுமான அர்பிதா முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 22-ந்தேதி மந்திரி பார்த்தா சட்டர்ஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அர்பிதா முகர்ஜி வீட்டிலும் அடுத்தடுத்து சோதனை நடத்தினர். அர்பிதாவின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 50 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6 கிலோவுக்கு அதிகமான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணமும், கிலோ கணக்கில் தங்கமும் கைப்பற்றப்பட்டது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அமலாக்கத்துறையினர் அர்பிதா முகர்ஜி கைது செய்யப்பட்ட நாளில் இருந்து, கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் இருந்த 4 கார்களைக் காணவில்லை. kaninikkalvi.blogspot.com இவ்வழக்கு தொடர்புடைய மேலும் கோடிக்கணக்கான பணம் அந்த கார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடி ஏ4, ஹோண்டா சிட்டி, ஹோண்டா சிஆர்வி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய கார்களை அமலாக்கத்துறையினர் தேடி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. அர்பிதா முகர்ஜி கைது செய்யப்பட்டபோது, ​​ஒரு வெள்ளை நிற மெர்சிடிஸ் காரை மட்டும் அமலாக்கத்துறை கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.

காணாமல் போன கார்களை தேடும் பணி நடைபெறுகிறது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தியும் அந்த கார்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் சிக்கிய அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை பதவியில் இருந்தும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி ஆகிய இருவரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் காவலில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆகஸ்ட் 3ம் தேதி வரை அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

Tuesday, July 05, 2022

July 05, 2022

மருத்துவ மேற்படிப்பு சோ்க்கையில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

மருத்துவ மேற்படிப்பு சோ்க்கையில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

மருத்துவ மேற்படிப்பு மாணவா் சோ்க்கையில் நடந்த முறைகேடு தொடா்பாக சிபிசிஐடி நடத்தி வரும் விசாரணைக்குத் தடை விதிக்க சென்னை உயா் நீதிமன்றம் மறுத்தது.

கடந்த 2020-2021-ஆம் கல்வி ஆண்டு, மருத்துவ மேற்படிப்பில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 113 காலியிடங்களில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டதாக மருத்துவா்கள் சந்தோஷ்குமாா் கீதாஞ்சலி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்குகளை விசாரித்த உயா் நீதிமன்றம், தகுதி பெறாதவா்களை மருத்துவ மேற்படிப்பில் சோ்த்த விவகாரம் குறித்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதன்படி, சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவா் சோ்க்கை நடத்த, மருத்துவ மேற்படிப்பு தோ்வுக் குழுவின் அப்போதைய செயலா் செல்வராஜன்தான் காரணம். அவா் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினாா்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்த முறைகேட்டில் தொடா்புடைய அடையாளம் தெரிந்த, அடையாளம் தெரியாத நபா்களுக்கும், தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகளுக்கு எதிராகவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு எதிராகவும் விசாரணை நடத்த சிபிசிஐடி-க்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து செல்வராஜன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. இதுதொடா்பாக தீா்ப்பு வழங்கிய நீதிபதிகள், ‘மருத்துவ மேற்படிப்பு மாணவா் சோ்க்கையில் நடந்த முறைகேடு தொடா்பாக சிபிசிஐடி நடத்தி வரும் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது.

தோ்வுக் குழு முன்னாள் செயலா் செல்வராஜன் மீதான சிபிசிஐடி விசாரணையை தொடரலாம். அவருடைய ஓய்வூதியப் பலன்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மட்டும் ரத்து செய்தனா். மேலும், அவா் மீதான துறைரீதியான விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

Monday, May 23, 2022

May 23, 2022

ஆசிரியர் பணி நியமன முறைகேடு 5 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு

மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக 5 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேற்கு வங்க கல்வித்துறை இணை அமைச்சர் பரேஷ் சந்திர அதிகாரி. இவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி, அரசு உதவி பெறும் பள்ளியில் தனது மகள் அங்கிதாவை முறைகேடாக ஆசிரியராக நியமித்தார். இது தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி கங்கோபாத்யாய், அங்கிதாவை பணியில் இருந்து நீக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார். ஆசிரியர் தேர்வு ஆணையத்தில் (எஸ்எஸ்சி) நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும் கடந்த மாதம் அவர் உத்தரவிட்டிருந்தார். இதில் தொடர்புடைய கல்வி அமைச்சர் பரேஷ் சந்திராவிடம் சிபிஐ தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடத்தியது. இந்நிலையில், மாநில ஆலோசனை குழுவின் முன்னாள் தலைவர் சாந்தி பிரசாத் சின்கா, ஆசிரியர் தேர்வு ஆணைய முன்னாள் தலைவர் சவுமித்ரா சர்க்கார், முன்னாள் செயலாளர் அசோக்குமார் சகா உள்பட 5 பேர் மீது சிபிஐ நேற்று வழக்கு பதிவு செய்துள்ளது. வங்கி கணக்குகள், சொத்துகள் மற்றும் வருமான வரி ரிட்டர்ன் விவரங்களை சமர்ப்பிக்கும்படி இந்த 5 பேருக்கும் சிபிஐ உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் கல்வித்துறை அமைச்சரும் தற்போது தொழில்துறை அமைச்சராக உள்ள பார்த்தா சட்டர்ஜியிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ளது. அடுத்தடுத்து அமைச்சர்கள் சிக்குவதால், முதல்வர் மம்தாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Wednesday, April 06, 2022

April 06, 2022

அஞ்சலக ஊழியர் பணி தேர்வு நியமனத்தில் மோசடி - போலி சான்றிதழ்கள் கண்டுபிடிப்பு!

It has come to light that a large number of people selected for post office jobs have been issued fake school certificates. The Post Office has asked the School Education Department to investigate. Village Post Officers are appointed on behalf of the Postal Department. Only those who know Tamil and have studied Tamil are included. People have been selected for this on behalf of the Central Personnel Selection Board.

Hindi in Tamil Nadu Certificate

Of them, more than 1,500 have given certificates issued by the Tamil Nadu School Education Department. When the certificates of those selected for Tamil Nadu service were checked, the officers became suspicious of the 10th class certificates; The difference was revealed. In particular, in that certificate, Hindi is included as the first language subject. In the 10th class certificate, the concerned student has signed in Hindi.

Fake names

With the stamp of the Government of Tamil Nadu, the school education department has been given various names. Five names, including 'State Government Board of Tamil Nadu, State Board of Examinations, Board of Higher Secondary Examinations', are printed on the certificates. The official website of the Tamil Nadu School Education Department is www.tamilnadustateboard.org/. But, it's fake. Order for Inquiry

Fictional names, such as 'Chennai Secondary Public School, Chennai Senior School', are included in the certificate as far as the schools attended by the students are concerned. Shocking news has come out that hundreds of people have joined the postal service by giving fake 10th class certificates with so many scams.

A letter has been sent from the post office asking the school education department to investigate and verify the authenticity of these certificates. Chief General Manager of the Postal Department Selvakumar said:

In the appointment of Grama Niladharis in Tamil Nadu, only those who know Tamil are appointed. There is a mess in the certificates issued by the employees who were selected through the Central Personnel Selection Board. Therefore, we have written to the Tamil Nadu School Education Department to inform them of the truth. Once its conclusion is reached, we will take necessary action, ”he said.

அஞ்சலக ஊழியர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட ஏராளமானோர், போலி பள்ளி சான்றிதழ்களை அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு, பள்ளிக் கல்வித் துறையிடம், தபால் துறை கேட்டுள்ளது. தபால் துறை சார்பில், கிராம அஞ்சலக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழ் தெரிந்த, தமிழ் படித்தவர்கள் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர். மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில், இதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தமிழக சான்றிதழில் ஹிந்தி

அவர்களில், 1,500க்கும் மேற்பட்டவர்கள், தமிழக பள்ளிக் கல்வி துறை அளித்த சான்றிதழ்களை கொடுத்துள்ளனர். தமிழக பணிக்கு தேர்வானவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டபோது, 10ம் வகுப்பு சான்றிதழ்களில், அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது; வித்தியாசம் இருப்பது தெரியவந்தது.குறிப்பாக, அந்த சான்றிதழில், முதல் மொழி பாடமாக, ஹிந்தி இடம் பெற்றுள்ளது. பத்தாம் வகுப்பு சான்றிதழில், சம்பந்தப்பட்ட மாணவர் ஹிந்தியில் கையெழுத்திட்டுள்ளார்.

போலி பெயர்கள்

தமிழக அரசின் முத்திரையுடன், பள்ளிக் கல்வி துறைக்கு பல வகைகளில் பெயர்கள் வைக்கப்பட்டு உள்ளன. 'ஸ்டேட் கவர்ன்மென்ட் போர்டு ஆப் தமிழ்நாடு, ஸ்டேட் போர்டு ஆப் எக்சாமினேஷன்ஸ், போர்டு ஆப் ஹையர் செகண்டரி எக்சாமினேஷன்ஸ்' உள்ளிட்ட ஐந்து பெயர்கள், அந்த சான்றிதழ்களில் அச்சிடப்பட்டு உள்ளன.தமிழக பள்ளிக் கல்வி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் என்ற பெயரில், www.tamilnadustateboard.org/ என்ற பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், அது போலியானது. விசாரணைக்கு உத்தரவு

மாணவர்கள் படித்த பள்ளிகளை பொறுத்தவரை, 'சென்னை செகண்டரி பப்ளிக் ஸ்கூல், சென்னை சீனியர் ஸ்கூல்' என, கற்பனையான பெயர்கள், சான்றிதழில் இடம் பெற்றுள்ளன. இவ்வளவு குளறுபடிகளுடன் போலியாக தயாரிக்கப்பட்ட, 10ம் வகுப்பு சான்றிதழ்களை கொடுத்து, தபால் துறையில் நுாற்றுக்கணக்கானவர்கள் சேர்ந்துள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து, பள்ளிக் கல்வி துறை தரப்பில் விசாரணை நடத்தி, உரிய அறிக்கை தருமாறு, தபால் துறையில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. தபால் துறை தலைமை பொது மேலாளர் செல்வகுமார் கூறியதாவது:

தமிழகத்தில் கிராம அஞ்சலக ஊழியர்கள் நியமனத்தில், தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். மத்திய பணியாளர் தேர்வாணையம் வழியே தேர்வாகி வந்த ஊழியர்கள் அளித்துள்ள சான்றிதழ்களில் குளறுபடி உள்ளது. எனவே, உண்மைத் தன்மை குறித்து தெரிவிக்குமாறு, தமிழக பள்ளிக் கல்வி துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம். அதன் முடிவு வந்த பின், தேவையான நடவடிக்கை மேற்கொள்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Friday, February 11, 2022

February 11, 2022

ஆசிரியா் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 65 லட்சம் முறைகேடு

ஆசிரியா் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 65 லட்சம் முறைகேடு

ஆற்காடு: ஆற்காடு ஊராட்சி ஒன்றிய ஆசிரியா் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில் ரூ. 65 லட்சம் முறைகேடு தொடா்பாக சங்கத்தின் எழுத்தா் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

ஆற்காடு ஊராட்சி ஒன்றிய ஆசிரியா் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தின் 2018- 19-ஆம் ஆண்டில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, சங்க உறுப்பினா்கள் கூட்டுறவு சங்க உயா் அதிகாரிகளுக்கு புகாா் அளித்துள்ளனா். அதன்பேரில், துறை ரீதியாக விசாரணை நடந்தது. இதில், சங்கத்தில் ரூ. 65 லட்சம் வரை முறைகேடு நடந்திருப்பதும், சங்க எழுத்தா் செல்வராஜ் மற்றும் அப்போதைய சங்கத் தலைவா் சாமுவேல் ஆகியோரது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு முறைகேடாக பணம் மாற்றப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, கூட்டுறவு சங்கத்துக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, சங்க உறுப்பினா்கள் நிா்வாக நலன் கருதி எழுத்தா் செல்வராஜ் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி முதல் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா் என தற்போதைய தலைவா் வெங்கடேசன் அறிவித்துள்ளாா்.

Saturday, January 08, 2022

January 08, 2022

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதி - தெற்கு ரயில்வே அறிவிப்பு

ரயிலில் பயணிக்க 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்!

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வரும் 10ம் தேதி முதல் 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்களுக்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்றும் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட பிரிவு அறிவித்துள்ளது.
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பயணிகள் மட்டுமே பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்

நாட்டில் நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு, சென்னை புறநகர் ரயில் சேவைகளில் பயணிக்கும் பயணிகளுக்குத் தேவையான இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை தெற்கு ரயில்வே கொண்டு வருகிறது. பிராந்தியம்.

இப்போது கோவிட் வழக்குகளின் தற்போதைய எழுச்சி மற்றும் ஓமிக்ரான் மாறுபாட்டின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு 06-01-2022 முதல் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி புறநகர் ரயில் சேவைகள் 50% இருக்கை வசதியுடன் இயக்க அனுமதிக்கப்படும். இதன் காரணமாக, 10-01-2022 (திங்கட்கிழமை) 04:00 மணி முதல் 31-01-2022 அன்று 23:59 மணி வரை, சென்னை மண்டலத்தின் விரிவாக்கப்பட்ட பகுதிகள் உட்பட புறநகர் ரயில் சேவைகளில் பின்வரும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும். சென்னை புறநகர். 1. கோவிட் தடுப்பூசிக்கான சான்றிதழ் வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே ( இரண்டு அளவுகளும்) புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படும். தி பயணிகள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்

/பயணம்/சீசன் பிரச்சினைக்கான கோவிட்-19 தடுப்பூசிக்கான இறுதிச் சான்றிதழ்

கவுண்டர்களில் டிக்கெட்டுகள் மற்றும் அவற்றின் செல்லுபடியாகும் அடையாளச் சான்றுகள்.

2. இன்றைக்கு முன்னதாக வழங்கப்பட்ட சீசன் டிக்கெட்டுகளை ஏற்கனவே வைத்திருக்கும் பயணிகளுக்கு, அத்தகைய பயணிகள் கோவிட்-19 தடுப்பூசிக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசி சான்றிதழ் / இறுதிச் சான்றிதழை அவர்களின் செல்லுபடியாகும் அடையாளச் சான்றுகளுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

3. மேற்கூறியவற்றிற்கு இணங்க UTS ஆன் மொபைல் ஆப் சேவை கிடைக்காது.

பயணிகளுக்கு வேண்டுகோள்:

1. தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து பயணிகள் முழுமையாக அறிந்து கொண்டு, விதிகளின்படி மட்டுமே பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றால் வழங்கப்படும் அனைத்து கோவிட்-19 நெறிமுறைகளையும் பயணிகள் அவ்வப்போது பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Monday, December 20, 2021

December 20, 2021

கல்வி உதவித்தொகையில் முறைகேடு - 52 கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன்

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் முறைகேடு தொடர்பாக 52 கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2011-2014 வரை எஸ்டி, எஸ்சி பிரிவை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை முறைகேடு என புகார் எழுந்துள்ளது. முறைகேடு குறித்து விசாரணை நடத்த 52 கல்லூரி முதல்வர்களையும் நாளை நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கல்வி உதவித்தொகையில் ரூ.17.36 கோடி முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளது. பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட 52 கல்லூரிகளில் முறைகேடு நடந்திருப்பதாக தணிக்கை துறை அறிக்கை அளித்துள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்த போது 2014- 2018 வரை எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் மிகப்பெரிய முறைக்கேடு நடந்திருப்பதாக வழக்கறிஞர் அசோக்குமார் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சில நாட்களுக்கு முன்பாக வழக்குப்பதிவு செய்திருந்தனர். ரூ.17,36,30,369 மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய இந்த உதவித்தொகை என்பது முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக புகார் அளித்திருந்தார். குறிப்பாக இதற்காக வைக்கப்பட்டிருந்த தணிக்கை துறையின் மூலம் கிடைக்கப்பெற்ற அறிக்கையை அடிப்படையாக வைத்து இந்த புகாரை அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், இதில் பல்வேறு ஆதிதிராவிடர் நலத்துறையை சேர்ந்த அதிகாரிகளும், கல்வித்துறை அதிகாரிகளும் 52க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக், கலை அறிவியல், மருத்துவம், பொறியியல் சார்ந்த கல்லூரிகளை சேர்ந்த பல கல்லூரி நிர்வாகங்கள் தொடர்பு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அந்த அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய 52 கல்லூரிகளின் முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்காக ஒவ்வொரு கல்லூரி முதல்வரையும் அழைத்து விசாரணை நடத்தப்பட இருக்கின்றனர். 10 வகையான முறைகேடுகள் நடந்துள்ளன. பெரம்பலூரில் இல்லாத ஒரு கல்லூரிக்கு ரூ.58 லட்சம் அளவிற்கு இந்த நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி அல்லாதவர்களுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 10 வகையான முறைகளில் இந்த முறைகேடு தொடர்பாக தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Total Pageviews

Search This Blog