ILLAM THEDI KALVI APP NEW UPDATE
February 02, 2025
Showing posts with label Illam thedi kalvi. Show all posts

Sunday, February 02, 2025
Saturday, June 22, 2024
Wednesday, June 19, 2024
Saturday, February 17, 2024
ITK
February 17, 2024
இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாற்றம் தகவல் தெரிவிக்க உத்தரவு

இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மாற்றம்: தகவல் தெரிவிக்க உத்தரவு
இல்லம் தேடிக் கல்வித் திட்டப் பணிகளை மேற்கொள்ளும் மாவட்ட, வட்டார அளவிலான ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா்களை இடமாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் அது குறித்து மாநில அலுவலகத்துக்கு எழுத்துப் பூா்வமாக தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Thursday, February 01, 2024
Illam thedi kalvi
February 01, 2024
இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு: பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியீடு

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழகத்தில் கரோனா காலக்கட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையான மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய பள்ளிக்கல்வித் துறை சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதற்காக அப்போது ரூ.199 கோடியே 96 லட்சம் செலவிடப்பட்டது. அந்த திட்டத்தை திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் மாநில, மாவட்டம், தொகுதி அளவில் குழுக்கள் நியமிக்கப்பட்டன. தற்போது இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 2021 நவம்பரில் ரூ.50 கோடியும், 2022 மார்ச் மாதம் ரூ.114.17 கோடியும், செப்டம்பர் மாதம் ரூ.173.31 கோடியும், 2023 மார்ச் மாதம் ரூ.52.85 கோடியும், செப்டம்பர் மாதம் ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் 2024-25-ம் ஆண்டுக்கான இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கான மையங்கள் 1.8 லட்சத்தில் இருந்து 1.25 லட்சமாக குறைக்கப்பட உள்ளது. அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ரூ.191 கோடியே 90 லட்சம் ஒதுக்கப்பட வேண்டும் என்று இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அதிகாரி அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். அதை கவனமாக ஆராய்ந்து இல்லம் தேடி கல்வித் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கி ஆணையிடப்படுகிறது.
மேலும், கற்றல் இழப்புகளை சரிசெய்ய கொண்டுவரப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டத்தின் நோக்கம் வெற்றி அடைந்ததன் காரணமாக 2024-25-ல் இதற்கான மையங்கள் தேவைக்கேற்ப குறைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Friday, September 01, 2023
Illam thedi kalvi
September 01, 2023
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு நழுவ விடாதீர்

இணைய வழி கூட்டத்தில் மதிப்புமிகு சிறப்பு பணி அலுவலர்(OSD) இல்லம் தேடி கல்வித் திட்ட சிறப்பு பணி அலுவலர் ஐயா அவர்கள் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்.
TNeGA மூலம் இ-சேவை மையம் தொடங்க இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் பணியினை சிறப்பாக பணியாற்றியதற்காக தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
தற்போது இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் *எந்தவித கட்டணமும் இன்றி* இ- சேவை மையத்தை தொடங்கலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. (ஏற்கனவே இ சேவை மையம் தொடங்க கிராமப்புறங்களில் ₹3000, நகர்ப்புறங்களில் ₹6000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது)
இ-சேவை மையம் தொடங்க விரும்பும் தன்னார்வலர்கள் நம் இல்லம் தேடி கல்வி செயலிலேயே(App) விருப்பத்தை தெரிவிப்பதற்கான வசதி உள்ளது.
அதன் பின்னர் இ-சேவை மையம் தொடங்க தேவையான வழிகாட்டுதல்கள்,பயிற்சிகள் ஆகியவற்றை TNeGA மூலம் பெற்று வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இ-சேவை மையம் மூலம் 200 க்கும் அதிகமான சேவைகளை பொது மக்களுக்கு வழங்குவதன் மூலம் ஒரு நிரந்தர வருமான வாய்ப்பாக தன்னார்வலர்கள் அமைத்துக் கொள்ள முடியும்.
முக்கியமாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மகளிர்க்கான உரிமை தொகை இ-சேவை மையம் மூலமாக வழங்கப்பட இருப்பதால் தன்னார்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அவர்கள் இருப்பிடத்திலேயே இ-சேவை மையங்களை தொடங்கி பயன் பெறலாம்.
Sunday, April 23, 2023
Illam thedi kalvi
April 23, 2023
ITK App இல் ITK தன்னார்வலர்கள் மூலம் புதிய மாணவர் சேர்க்கை - படிவத்தில் உள்ள 11 விவரங்கள்
ITK தன்னார்வலர்களுக்கு புதிய Task
புதிய மாணவர் சேர்க்கை படிவம்
அன்பிற்கினிய தன்னார்வலர்கள் அனைவருக்கும் வணக்கம்...
உங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள 2023-2024 ஆம் கல்வியாண்டில் LKG, UKG மற்றும் முதல் வகுப்பில் சேர்க்க தகுதியுள்ள மாணவர்களின் பெற்றோர்களை அணுகி அவர்களின் குழந்தைகளை நம் அரசுப் பள்ளியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டு அவ்வாறு விருப்பம் தெரிவித்த குழந்தைகளின் விவரத்தினை ITK App இல் உள்ள புதிய மாணவர் சேர்க்கை படிவம் எனும் Option இல் பதிவு செய்ய வேண்டும்.
படிவத்தில் உள்ள விவரங்கள்:
1.Class of Enrollment
2.Child Name
3.D.O.B
4.Gender
5.Father Name
6.Mother Name
7.Guardian Name (If applicable)
8.Parent/ Guardian Mobile Number
9.Select District
10.Select Block
11.Select School

Monday, February 20, 2023
ITK
February 20, 2023
ITK மாணவர்களுக்கு குறும்படம் போட்டி
ITK மாணவர்களுக்கு குறும்படம் போட்டி Short film competition for ITK students
இல்லம் தேடி கல்வி மையங்களில், மாணவர்கள் வழியே குறும்படம் தயாரிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வியின் இல்லம் தேடி கல்வி திட்ட மாநில அலுவலகத்தில் இருந்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கை:
பள்ளி கல்வித்துறை சார்பில், இல்லம் தேடி கல்வி மையங்கள், ஓராண்டுக்கு மேல் செயல்படுகின்றன.
இந்த மையங்களில் படிக்கும் மாணவர்களின் படைப்பாற்றல், சிந்திக்கும் திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில், குறும்பட கொண்டாட்டம் நடத்தப்படுகிறது.
இந்த மாதம், 'சிட்டுக்களின் குறும்படம்' என்ற நிகழ்வு நடக்க உள்ளது. மாணவர்கள் வழியே, 3 நிமிட குறும்படம் தயாரிக்கப்பட உள்ளது. சுற்றுச்சூழல், எனது ஊர், குழந்தைகள் பாதுகாப்பு, தன் சுத்தம் உள்ளிட்ட தலைப்புகளில், குறும்படம் தயாரிக்க வேண்டும். குறும்படத்துக்கான கதைக்களத்தை குழந்தைகளே தயார் செய்ய வேண்டும். அதை படம் பிடிக்க, தன்னார்வலர்களின் மொபைல் போனை பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு மையம், ஒரு குறும்படத்தை மட்டுமே தயாரிக்க வேண்டும்.
கதையமைப்பின் புதுமை, கதை சொல்வதில் சுவாரஸ்யம், கதாபாத்திர அமைப்பு, வசனங்களின் நேர்த்தி, படமாக்கப்பட்ட முறை, படத்தொகுப்பு முறை மற்றும் இசை, ஒளிப்பதிவு ஆகியவற்றுக்கு ஏற்ப, அதிகபட்சம் தலா, 2 மதிப்பெண் வழங்க வேண்டும்.
வட்டார அளவில், ஐந்து சிறந்த குறும்படங்கள்; அவற்றில் இருந்து மாவட்டத்தில், ஐந்து சிறந்த குறும்படங்கள் தேர்வு செய்யப்படும்.
இந்த நடவடிக்கைகளை விரைந்து முடித்து, மாவட்ட அளவில் தேர்வான படங்களை, மார்ச், 3க்குள் இல்லம் தேடி கல்வி திட்ட மாநில அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Wednesday, January 18, 2023
Illam thedi kalvi
January 18, 2023
கொரோனாவால் இழந்த கல்வியை மீட்ட தமிழக அரசின் உன்னதமான திட்டம் 2ம் ஆண்டில் வெற்றி நடைபோடும் இல்லம் தேடி கல்வி

Tamil Nadu government's noble scheme to restore the education lost due to Corona is the successful implementation of the 2nd year of education in search of homes
*விருதுநகர் மாவட்டத்தில் 3,991 மையங்களில் 35,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர்
திருவில்லிபுத்தூர் : தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு தமிழகம் மக்களின் வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதில் முக்கிய திட்டங்களில் ஒன்றாக கொரானா காலத்தில் இழந்த கல்வியை மீட்கும் வகையில் மாணவர்களுக்காக தமிழக பள்ளி கல்வி துறையின் சார்பில் உருவான உன்னதமான திட்டம்தான் இந்த இல்லம் தேடி கல்வி திட்டம்.
எந்த நோக்கத்துக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டதோ அந்த வகையில் ஓர் ஆண்டை வெற்றிகரமாக முடித்து இரண்டாம் ஆண்டில் சிறப்பாக செயல்படுகிறது இத்திட்டம். இந்த இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களின் இரண்டாமாண்டு துவக்க விழா நிகழ்வுகள் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தன்னார்வலர்கள் சிறப்பாக கேக் வெட்டி மாணவர்களுக்கு வழங்கி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். கொரோனாவால் இழந்த கல்வியை மீட்கும் உன்னதமான திட்டம்
கொரோனா காலத்தில் மாணவர்கள் இழந்த மற்றும் விடுபட்ட கல்வியை மீட்டெடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு உத்திகளை கையாண்டது. இதில் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் மூலமாக ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளிலும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தியது. மேலும் இத்திட்டத்திற்கு தன்னார்வலர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுஅவர்களுக்கு எழுத்து தேர்வு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்திதி, தொடக்கநிலை மற்றும் உயர் தொடக்க நிலை மையங்களை தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் முதற்கட்டமாக கடந்த 2000 ஆண்டு அக்டோபர் 27ல் 12 மாவட்டங்களில் பரீட்சார்த்த முயற்சியாக துவக்கி வைத்தார். பின்னர் இத்திட்டம் அனைத்து தரப்பினரின் ஏகோபித்த ஆதரவினை பெற்றதால் தமிழகத்தில் மீதம் உள்ள 26 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
தமிழ்நாட்டின் இல்லம் தேடி கல்வி திட்டம் இந்திய தேசம் முழுமைக்குமான ஒரு முன்னோடி திட்டம் என பல்துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் பாராட்டினை பெற்றதால், இத்திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் சிறப்பு அலுவவராக இளம் பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இவர் இல்லம் தேடி கல்வி திட்டம் மிகச்சிறப்பாக செயல்படும் வகையில் பல்வேறு தொழில் நுட்ப குழுமங்களை உருவாக்கி, அதில் தன்னார்வலர்களை இணைத்து, மையங்களில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை பதிவேற்றம் செய்ய சொல்லி, பொது மேடைகளில் தன்னார்வலர்களை தொடர்ந்து பாராட்டியும், ஊக்கப்படுத்தியும் வருகிறார். மேலும் மாணவர்கள், தன்னாவலர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் விதமாக \”தொடு வானம்\” மற்றும் \”தேன் சிட்டு\” மின்னிதழ்களை நடத்தி வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் 2022 ஜன.3ல் துவக்கம்
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை இல்லம் தேடி கல்வி திட்டம் 2022 ஜனவரி 3ம் தேதி தொடங்கப்பட்டது.கொரோனா பெருந்தொற்றால் சுமார் 2 ஆண்டுகள் படிப்பை இழந்து நின்ற தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை மாணவர்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதம். மாணவர்களின் கற்றல் இழப்புகளை ஈடுசெய்யவும், அவர்களை பள்ளியுடன் இணைக்கும் பாலமாகவும் இத்திட்டம் செயல்படுகிறது. விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி ஆகியோரின் நேரிடி கண்காணிப்பு மற்றும் ஆலோசனையின் பேரில் இத்திட்டம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் மாவட்டத்தில் 3,991 மையங்களில் சுமார் 35 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் மாலை நேரங்களில் பயின்ரு வருகிறார்கள். இவர்களுக்கு தன்னார்வலர்கள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை கற்று கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த மையங்கள் மாணவர்களுக்கு நல்வழிகாட்டும் மற்றும் பள்ளியில் கற்ற பாடங்களை நினைவுபடுத்தி தொடர்ந்து கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் செயல்பட்டு வருகிறதுஇத்திட்டத்தில் இன்னும் சேராத மாணவர்களை குடியிருப்பு வாரியாக கணக்கெடுத்து சேர்க்கும் பணி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வரின் கனவு திட்டமான 2025ம் ஆண்டிற்குள் தொடக்க நிலையில் அனைத்து மாணவ, மாணவியரும் புரிந்து எழுத படிக்க மற்றும் கணிதத்தில் அடிப்படை திறன்களை பெற்றிட வேண்டும் என்ற உயரிய திட்டத்தை நிறைவேற்றும் வகையில், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு அலுவலர் இளம் பகவத், இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்கிறார். ரீடிங் மாரத்தானில் திருவில்லி. மாணவர் முதலிடம்
கோடை விடுமுறையிலும் கற்றல் இடைவெளி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ரீடிங் மாரத்தான் என்ற ஒரு நிகழ்ச்சியை, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ரீடிங் அலோன் என்ற செயலி மூலம் 2022 ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி முடிய இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களுக்கு வரும் மாணவ, மாணவியருக்கு நடத்தியது.இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் உள்ள இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களில் படிக்கும் மாணவர்கள் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு 3,61,73,401 வார்த்தைகளை சரியாக வாசித்துள்ளனர்.
இந்த செயலியில் ஆங்கிலம் மற்றும் தமிழில் கதைகள், எழுத்து விளையாட்டு, மாறியுள்ள சொற்களை வரிசைப்படுத்துதல், வார்த்தைகளை வேகமாக வாசித்தல் என மாணவர்களது ஆர்வத்தை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் வாசிக்கும் மற்றும் ஒவ்வொரு சரியான செயல்பாட்டிற்கும் ஸ்டார்கள் வழங்கப்பட்டது. இதில் திருவில்லிபுத்தூர் ஒன்றியம், வைத்தியலிங்காபுரம் தொடக்கப்பள்ளி 5ம் வகுப்பு மாணவர் சிவமகேஸ்வரன் 9,00,829 ஸ்டார்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். இதுகுறித்த செய்தியை அறிந்த மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை அழைத்து ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார். அன்புள்ள அக்காவிற்கு வாழ்த்து கடிதம்
ஆசிரியர் தினத்தையொட்டி, தங்களுக்கு கற்று தரும் தன்னார்வலர்களை கடுரவிக்கும் வகையில் அன்புள்ள அக்காவிற்கு என வாழ்த்து கடிதம் எழுதி மாணவர்கள் அதனை தன்னார்வலர்களுக்கு வழங்க சிறப்பு அலுவலர் கேட்டு கொண்டிருந்தார். இதன்படி மாணவர்கள் தங்களுக்கு கற்று தரும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு கடிதம் அளித்து, அதனை சிறப்பு அலுவலரின் டெலகிராம் குழுவில் புகைப்படம் எடுத்து பதிவிட்டனர்.
வீடுதோறும் தேசியக் கொடி
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் 2022 ஆகஸ்டு 15ம் தேதி வீடுதோறும் தேசிய கொடி ஏற்ற கேட்டு கொள்ளப்பட்டிருந்தது. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் முன்பு இருந்து சுமார் 300 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கைகளில் தேசிய கொடி ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியே பேரணியாக வந்தனர். மேலும் சுதந்திர தினத்தன்று வீடுகளில் மாணவர்கள் கொடியேற்றி அதனை குறிப்பிட்ட செயலியில் படமாக பதிவேற்றம் செய்து சான்றிதழ் பெற்றனர்.
புத்தக திருவிழா
விருதுநகரில் முதன்முதலாக நடைபெற்ற புத்தக திருவிழாவில், இல்லம் தேடி கல்வி திட்டம் சார்பில் கற்றல், கற்பித்தல் உபகரண கண்காட்சி நடைபெற்றது. இதனை பார்வையிட்ட சிறப்பு அலுவலர் இளம் பகவத், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி ஆகியோர் தன்னார்வலர்களை வெகுவாக பாராட்டினர். தன்னார்வலர்கள்
தன்னார்வலர்களாக பணிபுரிவோர் பெரும்பாலும் உயர்கல்வி கற்றவர்கள். இவர்கள் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உறுதுணையாக உள்ளார்கள். குழந்தைகளின் இயல்புகளை புரிந்து கொண்டு அவர்களின் தனித்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து உள்ளார்ந்த திறன்களையும், படைப்பாற்றலையும் வெளிக்கொணரும் வகையில் இவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
திருவில்லிபுத்தூர் பகுதியில் சிறப்பாக செயல்படும் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து திருவில்லிபுத்தூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் கூறுகையில், ‘தமிழக பள்ளிக்கல்வி துறையில் சார்பில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் மிகச்சிறப்பான திட்டம் மட்டுமின்றி வெற்றிகரமான திட்டமாகவும் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்து ஓர் ஆண்டை வெற்றிகரமாக கடந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த சிறப்பான திட்டத்தினால் விடுமுறை நாட்களிலும் மையங்களை தேடி ஓடி வரும் அளவிற்கு மாணவர்கள் இல்லம் தேடி கல்வி மையங்களை நேசிக்கிறார்கள். தன்னார்வலர்கள் புது புது உத்திகளை கையாண்டு பள்ளி செல்லா மாணவர்களையும் தங்களது மையத்திற்கு வரவழைத்து கல்வியின்பால் ஆர்வத்தை தூண்டி, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நிகழ்ச்சிகளும் திருவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், நூலகத்தின் பயன்பாட்டை அறிந்து கொள்ளவும், திருவில்லிபுத்தூரில் உள்ள அரசு நூலகத்திற்கு மாணவ, மாணவியரை தன்னார்வலர்கள் அழைத்து சென்று நூலக நடைமுறைகளை விளக்கி உறுப்பினர்களாக சேர்த்துள்ளார்கள். ஆசிரியர் தினத்தன்று ஒருங்கிணைப்பாளர், மையங்களுக்கு வரும் ஏழை மாணவ, மாணவியர் 33 பேருக்கு புத்தாடைகள், நோட்டுகள் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார். தீபாவளி பண்டிகையின் போது திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களுக்கு வருபவர்களில் பெற்றோரை இழந்த 126 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, 2022 அக்டோபர் 12ம் தேதி அவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தலைமையில் புத்தாடைகள் வழங்கப்பட்டது. திருவில்லிபுத்தூர் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில் நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன், துணை தலைவர் செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு உத்தரவுப்படி மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி முதன்மை கல்வி அலுவலர் ஞான கௌரி ஆகியோர் வழிகாட்டுதலின்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதால் வெற்றிகரமாக ஆண்டு ஒன்று முடிந்து இரண்டாம் ஆண்டு தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு தெரிவித்தார்.

Wednesday, November 16, 2022
Illam thedi kalvi
November 16, 2022
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இவ்வளவு பிரச்சனையா? கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் பரபரப்பு அறிக்கை.!

இது குறித்து அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் தமிழ்நாடு குழு வெளியிட்ட அறிக்கையில், ‘‘அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலே லட்சக்கணக்கான மாணவர்கள் அங்கு பயின்று வருகின்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஆசிரியர்கள் கற்பித்தல் அல்லாத பல்வேறு பணிகளில் ஆண்டு முழுவதும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஆசிரியர் பற்றாக்குறையால் பல்வேறு பள்ளிகள் தத்தளித்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை செய்ய முடியாத அளவிற்கு, வேறுபணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு ஏற்கனவே இருந்து வரும் கற்றல் இடைவெளி கூடுதலாகி பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது.
உதாரணமாக, வருவாய்த்துறைக்குக் கீழே வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) பணி, வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து அவர்களது ஆதார் எண் விவரங்கள் சேகரித்து வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்தல் பணி, ஆண்டு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டை பெறுவோருக்கான புதிய சேர்க்கை, நீக்கல், இடம் மாறியவர்களுக்கு மாற்றிக் கொடுத்தல் போன்ற பல பணிகளை, கற்பித்தல் பணிகளை மட்டுமே செய்ய வேண்டிய ஆசிரியர்களுக்குத் தருகின்றனர்.
பள்ளிக்குள்ளேயே 'எமிஸ்' (Education Management Information System - EMIS) என்று அழைக்கப்படும் கல்வி தகவல் அளிக்கும் முறையினால் மாணவர்கள் கல்வி குறித்த 32 விதமான தகவல்களை சேகரித்து அவற்றை கணினியில் ஏற்றும் பணியும் ஆசிரியர்கள் மீதே சுமத்தப்படுகிறது.
ஆண்டு முழுவதும் பல காலங்களில் கல்விப் பயிற்சிக்கு செல்லுதல், இலவச பொருட்களை குறிப்பிட்ட இடத்திலிருந்து பள்ளிக்கு எடுத்து வரும் பணி, முதன்மைக்கல்வி அலுவலகம் செல்லும் பணி, அலுவலகத் தபால்கள் குறித்து கணினியில் பதில் தருதல், விபரங்கள் தரும் பணி, பள்ளிகள் குறித்து பல்வேறு பணி என ஏராளமான கற்பித்தல் அல்லாத பணிகளை ஆசிரியர்கள் அன்றாடம் செய்து வருகின்றனர்.
இன்றைக்கு உள்ள காலச்சூழலில் பள்ளிகளில் குழந்தைகளை உடனிருந்து கவனிக்க வேண்டிய ஆசிரியர்களின் பொன்னான நேரத்தை அதற்கு செலவிட விடாமல், கற்பித்தல் அல்லாத பணிகளைத் தொடர்ந்து கல்வித்துறை ஆசிரியர்கள் மீது திணித்து வருகிறது. இது ஆசிரியர்கள் மீது கடுமையான பணிச்சுமையை ஏற்றுவதோடு அவர்களிடம் மன உளைச்சலையும் ஏற்படுத்தி, கற்பித்தல் பணியையே பாழாக்கி வருகிறது. மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத சூழலில், பல தவறான பாதையில் மாணவர்கள் பிறழ்ந்து போகும் நிலை அதிகரித்துள்ளது.
இது மட்டுமன்றி இல்லம் தேடி கல்வி என்ற பெயரில் முறை சாரா கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி, முறை சார்ந்த கற்பித்தல் கற்றல் செயல்முறையின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு வருகிறது. இல்லம் தேடி கல்விப் பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்துவது, மேலும் அவர்கள் மீது பணிச் சுமையை ஏற்றுகிறது. இது மட்டுமின்றி எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தின் கீழ் மூன்றாம் வகுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு எண்களையும் எழுத்துக்களையும் கற்பிக்கிறோம் என்ற பெயரில், கற்றல் செயல்முறை மிகவும் காலம் தாழ்த்தப்படுகிறது. இது மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் சலிப்பையே ஏற்படுத்தி வருகிறது.
இவ்வாறு அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் கற்றல் செயல்முறை போக்கு பெரிதும் பாதிப்படைந்துவிட்டது. மேலும் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் போன்றவற்றால் அரசுப் பள்ளிகளில் முறைசார்ந்த கல்வி அமைப்பு செயல்பாடு கேள்விக்குறியாகி உள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது சுமையை ஏற்றுவதும் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் போன்றவை அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களை விரட்டும் திட்டம் ஆகும். இது தேசிய கல்விக் கொள்கை 1986, தேசியக் கல்விக் கொள்கையை 2020 பின்பற்றியே கொண்டுவரப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் கற்றல் செயல்முறை போக்கை மீண்டும் உயிர்பிக்க, கற்பித்தல் கற்றல் செயல்முறையை தவிர வேறு எந்தப் பணிக்கும் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது. கோடானு கோடி இளைஞர்கள் வேலையின்மை பிரச்சனையில் தவித்து வருகையில் அவர்களுக்கு அந்தப் பணியை வழங்குவதே சரியான தீர்வாகும். மேலும் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் போன்ற முறைசாரா கல்வித் திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும்’’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, November 09, 2022
VIDEOS
November 09, 2022
ITK - ILLAM THEDI KALVI - Remedial Teaching - Training Videos

Tamil
English Full Video Link - Click here
ITK - illam Thedi Kalvi - Remedial Teaching - Training Videos
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வர்களுக்கு நடைபெறவுள்ள குறைதீர் கற்றல் பயிற்சிக்கான வீடியோ பாடப்பொருள்.
1. Tamil_Chapter_01 - Download here
2. Tamil_Chapter_02 - Download here
3. Tamil_Chapter_03 - Download here
4. Tamil_Chapter_04 - Download here
5. Tamil_Chapter_05 - Download here
English
1. English_Chapter_01 - Download here
2. English_Chapter_02 - Download here
3. English_Chapter_03 - Download here
4. English_Chapter_04 - Download here
5. English_Chapter_05 - Download here
Maths
1. Maths_Chapter_01 - Download here
2. Maths_Chapter_02 - Download here
3. Maths_Chapter_03 - Download here
4. Maths_Chapter_04 - Download here
5. Maths_Chapter_05 - Download here
Thursday, October 06, 2022
Latest News
October 06, 2022
2381 சிறப்பாசிரியர்கள் நியமனம்: இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு அடித்த ஜாக்பாட்

மூன்று வயது முதல் ஆறு வயது வரையான மழலையர் கல்விக்காக 2381 தற்காலிக சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் 2,381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குள் அமைந்த அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில் L.K.G., U.K.G., வகுப்புகளாக மாற்றப்பட்டு, சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. 1 முதல் 5 வகுப்புகளுக்கான இடைநிலை ஆசிரியாயர்கள் L.K.G., U.K.G., வகுப்புகளில் பாடம் எடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்குப் பிந்தைய காலங்களில் 1 முதல் 5ம் வகுப்புகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், தொடக்க வகுப்புகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உருவானது. இதன்காரணமாக, அரசுப் பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் U.K.G வகுப்புகளை நிறுத்துவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இத்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். வறுமை நிலையில் உள்ள சிறார்கள் பெரும் பின்னடைவுகளை சந்திக்க நேரிடும் என்று கல்வியாளர்கள் எச்சரித்தனர். இதனையடுத்து, தமிழக அரசு தனது அறிவிப்பை திரும்ப பெற்றது.
மேலும், LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் கற்றல்- கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள ஒரு மையத்திற்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் 2381 சிறப்பு ஆசிரியர்கள் நிரப்படுவார்கள் என்றும் தெரிவித்தது. இன்று, தற்காலிக சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான செயல்முறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது.
தற்காலிக ஆசிரியர்கள் தெரிவு செய்யப்படும் முறை:
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுவே தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியராக நியமிக்கலாம். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத போதுதொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களை நியமனம் செய்யலாம்.
இத்தற்காலிக சிறப்பரசிரியர்களுக்கு ஒரு கல்வி ஆண்டிற்கு ஜுன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலமாகும் மற்றும் பள்ளியின் கடைசி வேலை நாளன்று விடுவிக்கப்படுவர்.
தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட சிறப்பாசிரியர்களுக்கு L.K.G மற்றும் U.K.G வகுப்புகளை கையாளுவதற்கு தேவையான சிறப்பு பயிற்சிகளை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியுடன் இணைந்து வழங்கிடவும், பயிற்சி நிறைவிற்கு பின் இந்த ஆசிரியர்கள் மழலையர் பள்ளிகளில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை பணியாற்ற அனுமதி வழங்கலாம் என்ம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்லம் தேடிக் கல்வித் திட்டம்: இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ், மாநிலத்தின் ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகளில் உள்ள 34,05,856 அரசுப்பள்ளி மாணவர்கள் கற்றல் திறன்களைப் பெற்று வருகின்றனர். கிட்டத்தட்ட 1.60 லட்சம் தன்னார்வலர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்துள்ளனர். மாதத்தில் குறைந்தது 20 நாட்கள் வருகைப் பதிவு செய்துள்ள தன்னார்வலர்களுக்கு ஊக்கத் தொகை தரப்பட்டு வருகிறது.
முன்னதாக, இல்லம் தேடி கல்வி திட்டத்தால் கற்றல் இடைவெளி பெரிதும் குறைக்கப்பட்டுதாகவும், மிக துடிப்பான இந்த திட்டத்தை நாட்டின் ஏனைய மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் பன்னாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்தனர். எனவே, இல்லம் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் பள்ளிகளில் தற்காலிகமாக நியமிக்க அரசு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும், பிழைப்பு ஊதியமாக வழங்கப்படும் ரூ.5000 மிகக் குறைவாக உள்ளது என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Saturday, August 27, 2022
Illam thedi kalvi
August 27, 2022
இல்லம் தேடிக் கல்வி - தொய்வு ஏன்?
இல்லம் தேடிக் கல்வி - தொய்வு ஏன்?
Kalviseithi 1:18 PM இல்லம் தேடிக் கல்வி,
இந்திய ஒன்றிய அளவில் நாடே வியந்து திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை தோற்றுவித்த இல்லம் தேடிக் கல்வித் திட்டம் திகழ்ந்து வருகிறது. அதாவது, கோவிட் 19 நோய்ப் பெருந்தொற்றுக் காரணமாக ஊரடங்கு காலத்தில் மூடிக் கிடந்த பள்ளிகளால் அனைத்து வகையான மாணவர்களும் கல்வி கற்க மிகவும் சிரமப்படும் சூழ்நிலை நிலவியது. பள்ளி செல்லாமலேயே வேறுவழியின்றி மாணவர்கள் தேர்ச்சி அளிக்கப் பெற்று அடுத்த வகுப்பிற்குக் கடத்தப்பட்டனர்.
இதன் விளைவாக பள்ளி மாணவரிடையே கற்றல் இடைவெளி அதிகரித்துக் காணப்பட்டது. கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் நடைபெறாத காரணத்தினால் மாணவர்கள் ஒரு வகுப்பில் அடைய வேண்டிய குறைந்த பட்ச கற்றல் இலக்குகளைப் பெற இயலாமல் போயினர். இணைய வழிக் கல்வி, கல்வித் தொலைக்காட்சி வழிக் கல்வி என பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முன்னெடுப்புகளை முனைப்புடன் எடுத்த போதிலும் ஏழை எளிய அடித்தட்டு மாணவர்களிடையே இவை பல்வேறு காரணங்களால் எடுபடாது போனது வருந்தத்தக்க நிகழ்வாகும்.
இத்தகு சூழலில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக பதவியேற்ற விடியல் அரசு மாணவர் நலனைச் சிரமேற்கொண்டு இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை முன்மொழிந்து பள்ளிகள் திறக்காத காலக்கட்டத்தில் தீவிரமாகச் செயல்படுத்த பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. 20 மாணவர்களுக்கு ஒரு மையம் தோற்றுவிக்கப்பட்டது.
தன்னார்வலராக மையம் சார்ந்த பகுதியில் படித்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இல்லம் தேடிக் கல்விக்கென உருவாக்கப்பட்ட செயலியில் விருப்பப்பட்டு பதிவு செய்த இளம் பெண்கள் தற்காலிக அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாக வட்டார அளவில் இதற்காக மாற்றுப் பணியில் நியமிக்கப்பட்ட மாவட்ட, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மேற்பார்வையில் சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றோர் மைய தன்னார்வலராக பணி நியமனம் செய்யப்பட்டனர்.
அதன்பின், இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும் கற்றல் உபகரணங்களும் அரசால் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, இத்தன்னார்வலர்களுக்கு மாதந்தோறும் அவரவர் வங்கிக் கணக்கில் பற்றாகும் வகையில் ரூபாய் ஆயிரம் ஊக்கத்தொகையாகத் தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது. முழுமையாகப் பள்ளிகள் திறக்காத காலக்கட்டத்தில் இத்திட்டத்தின் கால அளவு ஆறு மாதங்கள் என்று அறிவிக்கப்பட்டது.
பிறகு, எல்லா வகையான பள்ளிகளும் முழுமையாக திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படும் இன்றைய நிலையில் இத்திட்டமானது மேலும் விரிவுப்படுத்தப்பட்டு எதிர்வரும் டிசம்பர் 2022 முடிய செயல்படும் என்று நிதிநிலை அறிக்கையில் போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் பயனாளிகளாக 1-8 வகுப்புகள் பயிலும் அனைத்து வகைப் பள்ளிகளின் மாணவ மாணவிகள் ஆவார்கள். இம்மையங்கள் செயல்படும் நேரம் மாலை 5 மணி முதல் 6 மணி வரை மட்டுமே.
அண்மையில் 2 இலட்சமாவது இல்லம் தேடிக் கல்வி மையம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது அறிந்ததே. 35 இலட்சம் மாணவர்களில் 25 இலட்சத்திற்கும் அதிகமானோர் நாள்தோறும் இந்த இல்லம் தேடிக் கல்வி மையங்களில் தொடர்ந்து கல்வி பயின்று வருவதை அறிய முடிகிறது. அதுபோல் 82% பொதுமக்கள் இல்லம் தேடிக் கல்வி மையம் பற்றி அறிந்து வைத்துள்ளனர். தன்னார்வலர்கள் மற்றும் கற்போர் ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்ட வட்டார அளவில் நடைபெற்ற கற்றல் கற்பித்தல் படைப்புக் கண்காட்சி(TLM EXHIBITION)யும் மாநில அளவிலான தொடர் வாசிப்புப் போட்டி(READING MARATHON)யும் பெற்றோர்கள் மத்தியில் கல்வி சார்ந்த நேர்மறையான அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் காலங்களில் கணிதப் போட்டி (MATHS OLYMPIAD), தனித்திறன் படைப்பாற்றல் திருவிழா (SKILL FEST), எழுத்து உச்சரிப்புப் போட்டி (SPELL BEE) முதலானவை பிரமாண்ட அளவில் ஒவ்வொரு இல்லம் தேடிக் கல்வி மையங்களிலும் நடைபெற இருக்கின்றன. கற்போர் வருகை உள்ளிட்ட அனைத்தும் Illam Thedi Kalvi செயலி மூலமாகவே நாள்தோறும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. இதன் மூலம் மாநில அளவில் சரியான புள்ளிவிவரங்கள் சேகரிக்கவும் சேமிக்கவும் ஆய்வு மேற்கொள்ளவும் அதன்வழியாக, புதிய திட்டங்கள் உருவாக்கி நடைமுறைப்படுத்தவும் இயலுகின்றன.
குறிப்பாக, மாவட்ட, ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர்களாகப் மாற்றுப் பணியில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் தத்தம் சொந்த வாகனத்தின் உதவியுடன் மையம் செயல்படும் நேரத்தில் தொலைதூரம் வரை சென்று பார்வையிட்டு வருகின்றனர். தவிர, தன்னார்வலருக்கு
குறிப்பாக, மாவட்ட, ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர்களாகப் மாற்றுப் பணியில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் தத்தம் சொந்த வாகனத்தின் உதவியுடன் மையம் செயல்படும் நேரத்தில் தொலைதூரம் வரை சென்று பார்வையிட்டு வருகின்றனர். தவிர, தன்னார்வலருக்கு ஏற்படும் கற்பித்தல் சார்ந்த ஐயப்பாடுகளுக்குத் தக்க தீர்வும் வழிகாட்டுதலும் வழங்கி வருவது வாடிக்கையாக உள்ளது.
இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடங்கிய காலத்தில் ஊர் ஊராக மாநில மையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கலைக்குழுவினரை ஒருங்கிணைத்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் இவர்களின் பங்கு அளப்பரியது. அதேவேளையில், இவர்களுக்கு இதற்காக எந்தவொரு போக்குவரத்துப்படியும் இதுநாள்வரை வழங்கப்படாதது ஒரு பெரும் குறையாகும். இதன் காரணமாக, இவர்கள் தொடக்கத்தில் பம்பரமாகச் சுழன்று பணியில் காட்டிய வேகம் தற்போது சற்று சுணக்கம் அடைந்துள்ளது கண்கூடு. பலபேர் மீண்டும் தம் பள்ளிப்பணிக்கே சென்று விடும் முடிவில் இருப்பது அறியமுடிகிறது. தினசரி தொலைதூர அலைச்சல், போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு, தமது பள்ளியில் உரிய பதிலி ஆசிரியர் சரிவர நியமிக்காமை, உடல்நலம் ஒத்துழையாமை போன்ற காரணிகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.
அடுத்ததாக, பள்ளித் திறப்பிற்கு பின் 6-14 வயது கற்போரிடையே காணப்படும் இல்லம் தேடிக் கல்வி மைய களைப்பும் சலிப்பும் காரணமாகக் குறைந்து வரும் தினசரி வருகை வீழ்ச்சி, முந்தைய ஆர்வமின்மை, ஏதேனும் நம்பகத்தன்மை இல்லாத காரணங்கள் கூறி தொடர்ந்து வாராதிருத்தல் போன்றவற்றால் சொற்ப கற்போருக்குக் கற்பிக்க தன்னார்வலர்கள் தற்போது முனைப்புக் காட்ட தவறி விடும் நோக்கும் போக்கும் மிகுந்து காணப்படுகிறது. கற்றல் கற்பித்தல் கருவிகள் செய்திடவும் வாங்கிடவும் வேறு வருமானம் அற்ற நிலையில் வீட்டிலுள்ளோரிடம் மீண்டும் மீண்டும் கேட்க முடியாத நிலை வேறு.
மாதாமாதம் உரிய காலத்தில் கிடைக்கப்பெறாத சொற்ப ஊக்கத்தொகைக்கு மேல் ஆகும் செலவினம், அதிக வேலைப்பளு, குடும்பச் சுமை, மாத ஊக்கத்தொகை மேலும் உயர்த்தித் தரப்படாமை, வேறு நல்ல அதிக சம்பளம் கிடைக்கும் வேலைக்குப் போக வீட்டிலுள்ளோர் தொடர் அறிவுறுத்தல்கள் மற்றும் வலியுறுத்தல்கள், தொடர் கண்காணிப்பின்மை, பெற்றோர்களிடமிருந்து முன்புபோல் போதிய ஒத்துழைப்பின்மை ஆகிய காரணங்களால் தன்னார்வலர்களிடையே ஆர்வமின்மை அதிகரித்துக் காணப்படுகின்றது.
வெளிப்படையாக சொல்வதென்றால் பல இல்லம் தேடிக் கல்வி மையங்கள் முன்பு போல் உயிர்ப்போடு செயல்படுவதில்லை. மேலிடத்திலிருந்து வரும் ஆணைக்கிணங்கவும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் தொடர் நச்சரிப்புகளாலும் வார நாட்களில் பல நாட்கள் இயங்காமல் இருக்கும் மையங்களைத் தொய்வின்றி பழையபடி செயல்பட வைக்க பள்ளி வேலை நேரங்களில் நேரடியாக தன்னார்வலர்கள் வருகை புரிந்து பள்ளிப் பிள்ளைகளிடம் கெஞ்சுவதும் தொடர்ந்து வருகை புரிந்திட செல்லமாகக் கடிந்து கொள்வதும் வேதனையளிக்கத்தக்க காட்சியாகும். ஏனெனில், இந்தத் தன்னார்வலர் பணிக்கு முனைவர் பட்டம் முதல் முதுகலை பொறியியல் பட்டதாரிகள் வரை விண்ணப்பித்து பணிசெய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் தற்போதைய தொய்விற்கு முழுமுதற் காரணமாக இருப்பவர்கள் கற்போரே ஆவர். இக்கற்போர்கள் அனைவரும் 1 முதல் 8 வகுப்புகள் முடிய உள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் ஆவார்கள். பள்ளிக்கூடங்கள் திறக்காத காலக்கட்டத்தில் இவர்களிடையே இயல்பாக எழும் கற்றல் மீதான அதீத ஆர்வம், குழு ஈடுபாடு மற்றும் மட்டற்ற மகிழ்ச்சி காரணமாக மடை திறந்த வெள்ளம்போல் புதிதாகத் தொடங்கப்பட்ட இல்லம் தேடிக் கல்வி மையம் நோக்கித் துள்ளிக் குதித்து ஓடோடி வந்தனர். பள்ளி வகுப்பறைகளில் நாள்தோறும் வாடிக்கையாக இருக்கும் எந்தவொரு கட்டாயக் கற்றல் சார்ந்த நெருக்கடிகளும் அக்காலகட்டத்தில் இவர்களுக்கு இல்லாததும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.
குறிப்பாக, கற்றல் இடைவெளிகளும் பள்ளி செல்ல விரும்பாத மனப்பான்மை உருவாதலும் தம் வயதிற்கு மீறிய தீம் பழக்கத்திற்கு ஆட்பட்டவர்களிடம் கொண்ட திடீர் நட்பால் எழும் பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் மனப்பாங்கும் ஏற்படாதவாறு குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்க இவர்களுக்கென கல்வி வல்லுனர்களால் தயாரிக்கப்பட்ட கையேடுகளில் பாடல்கள், கதைகள் மற்றும் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தன. கற்றலில் இனிமை மற்றும் குழந்தை மையக் கல்வி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எண்ணும் எழுத்தும் எந்தவொரு நிபந்தனையுமின்றிக் கற்றுத் தரப்பட்டன.
ஒரு மணி நேரம் மட்டுமே வகுப்பு, தமக்குப் பிடித்தமான மகிழ்வூட்டும் குறைந்த அளவிலான பாடப்பொருள்கள், ஆசிரியராக தம் ஊர் நல்ல அடிக்காத, அதட்டாத, நன்கு தெரிந்த, மிக அன்பான அக்கா, பாடம் படிக்க மிகவும் பிடித்த பொழுது, வீட்டுப்பாடம் இல்லாமை, முதுகை அழுத்தும் பாடப்புத்தகங்கள் சுமையின்மை, கட்டாயம் இல்லாமை முதலானவை குழந்தைகளுக்குப் புதிய அனுபவத்தைத் தந்ததும் முழு வருகைக்கான இன்றியமையாத காரணங்களாகும்.
நாளாக நாளாக குழந்தைகளிடையே எழும் இயல்பான சலிப்பும் எரிச்சலும் வீடு மீதான அளவுகடந்த பாதுகாப்பு உணர்வும் பெற்றோர் மீதான விட்டுப் பிரிய முடியாதப் பாசமும் இல்லம் தேடிக் கல்வி மையம் மீதான ஈர்ப்பைக் குறைக்கத் தொடங்கியிருந்தது. அதற்கேற்ப தன்னார்வலர்களுக்கு ஏற்பட்டிருந்த அயர்ச்சியும் அவநம்பிக்கையும் குடும்ப சூழ்நிலைகளும் கற்போரின் கட்டாய வருகையை ஊக்கப்படுத்த தவற ஆரம்பித்தது.
பள்ளிகள் அனைத்தும் திரும்பவும் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படத் தொடங்கியதில் மையக் கற்போரின் கற்றல் சுமைகள் அதிகரிக்கத் தொடங்கின. இரட்டைச் சவாரி செய்யும் அவலநிலைக்கு இக்கற்போர் தள்ளப்பட்டனர். வகுப்பறையில் வகுப்பு அல்லது பாட ஆசிரியர்களால் தரப்படும் அனைத்துப் பாட வீட்டுப்பாடம், இரட்டை மற்றும் நான்கு வரிக் குறிப்பேடு எழுதுதல் பயிற்சிகள், கருத்து அல்லது மன வரைபடம் மற்றும் தொகுத்தல் எழுதுதல், தமிழ் மற்றும் ஆங்கில சொல்வதெழுதுதல் பயிற்சிக்குத் தம்மை தயார்படுத்துதல், வீட்டுக் கணக்குகள் செய்தல், வரைபடம் குறித்தல், வடிவியல் விளக்கப்படங்கள் வரைதல், வாராந்திர அறிவியல் பாட சிறு அலகு தேர்விற்கு எழுதியும் வரைந்தும் பார்த்தல், சமூக அறிவியல் பாடத்தை வகுப்பறையில் திறம்பட வாசித்துக் காட்ட தம்மைத் தயார்படுத்திக் கொள்ளுதல், பதினாறு வாய்பாடு, மொழிப்பாட செய்யுள் மனப்பாடப் பகுதிகளைப் பிழையில்லாமல் வாசித்து எழுதிப் பார்த்தல், எல்லா பாடங்களுக்கும் உரிய வினா விடைகள் மற்றும் இரு பாடத்திற்குரிய கட்டுரைகள் போன்றவற்றை செய்து முடிக்கவே 24 மணி நேரம் போதாத நிலை. இதில் மீளவும் ஒரு மணி நேரம் மீண்டும் படிக்கப் புறப்படுவதென்பது நாளடைவில் மாணவ மாணவியரிடையே இயலாமல் போய்விட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால், பள்ளி மாலை விட்டதும் நேராக வீட்டிற்கு சென்று பள்ளிச் சீருடையைக் களைந்துவிட்டு வேறொரு வீட்டு உடையை உடுத்திக் கொண்டு, சிற்றுண்டி தேநீர் பருகிவிட்டு உடனடியாகப் பள்ளி வளாகத்திலேயே வேறுவழியின்றிச் செயல்படும் இல்லம் தேடிக் கல்வி மையத்திற்கு மீண்டும் வருவதென்பது நடைமுறைக்கு இயலாத ஒன்று. மையத்திற்கும் மாணவர் வீட்டிற்கும் இடைப்பட்ட நெடுந்தொலைவும் மாணாக்கர்கள் களைப்படைவதில் முக்கிய பங்காற்றுகிறது. மாணவர்களால் மூச்சு கூட விட முடியாத நிலைமை.
இதுதவிர, வெறும் பாடல்களும் கதைகளும் ஒரேவிதமான செயல்பாடுகளும் சலிப்பை ஏற்படுத்துவதும் மையம் வாராமைக்கான காரணமாக இருக்கின்றது. தன்னார்வலர்களின் திடீர் தொடர் விடுப்புகள் எடுத்தல், வீட்டு வேலைகளைச் செய்ய வளரிளம் பருவக் கற்போரைப் பணித்தல், தம் கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் செய்தல், எதிர்பாராது தன்னார்வலர்கள் வீடுகளில் நிகழும் குடும்ப சண்டைகள் மற்றும் சச்சரவுகள் நிகழ்த்தப், பள்ளியில் கொடுக்கப்பட்ட வீட்டுப்பாட வேலைகளைச் செய்து முடித்து தொடர்ந்து போகச் சொல்லுதல், பெற்றோர் அனுப்ப மறுத்தல், சக கற்போர் வருகை புரியாதிருத்தல் போன்றவை இல்லம் தேடிக் கல்வி மையத் தொய்வில் அடங்கும்.
முடிவாக, இல்லம் தேடிக் கல்வி மையங்கள் தொய்வின்றி மீண்டும் சிறப்பாகச் செயல்பட உரிய உகந்த உன்னத பயனுள்ள துரித நடவடிக்கைகள் எடுப்பது பொறுப்பு அலுவலர் உள்ளிட்ட நிர்வாகத்தின் தலையாயக் கடமையாகும். ஒருங்கிணைப்பாளருக்கான போக்குவரத்துப் படி, தன்னார்வலர்களுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு, கற்றல் கற்பித்தல் வளங்களை உருவாக்குதலுக்குத் தேவையான நிதியுதவி உள்ளிட்ட நிதி சார்ந்த நியாயமான செலவினங்களை அரசு பெருந்தன்மையுடன் அங்கீகரித்து நடந்து கொள்ள வேண்டியது அவரச அவசியமான ஒன்று. தொடர்ச்சியாக முழு வருகை தரும் கற்போருக்கு ரூபாய் ஆயிரம் ஊக்கப் பரிசுத்தொகை வழங்கிப் பாராட்டி உற்சாகப்படுத்த கல்வித்துறை முன்வர வேண்டும். அப்போதுதான் தமிழக முதல்வரின் மாபெரும் கனவுத் திட்டமாகத் திகழும் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் புதுப்பொலிவுடன் ஒளிரும்.
முனைவர் மணி கணேசன்

Wednesday, August 24, 2022
VIDEOS
August 24, 2022
தொடக்க கல்வி, உயர் தொடக்க கல்வி|இல்லம் தேடி கல்வி
Tuesday, August 23, 2022
Today Kalviseithi
August 23, 2022
இல்லம் தேடிக்கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் பயிற்சி முகாம்

மதுரையில் இல்லம் தேடிக்கல்வித்திட்ட தன்னாா்வலா்களுக்கு நான்காம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.
மதுரை தென்சரகம், என்.எஸ்.எம். உயா்நிலைப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வித்திட்ட தன்னாா்வலா்களுக்கான நான்காம் கட்டப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமை வட்டாரக் கல்வி அலுவலா் சீனிவாசன் தொடக்கி வைத்துப்பேசினாா்.
சிறப்பாக கற்றல் உபகரணங்களைக் காட்சிபடுத்திய தன்னாா்வலருக்கு வட்டாரக்கல்வி அலுவலா் மோசஸ் பெஞ்சமின் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். பயிற்சி முகாமில் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்தும் , எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டத்தின் குறைதீா் கற்பித்தல் எப்படி வழங்குவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில், வட்டார வள மையத்தின் மேற்பாா்வையாளா் ரேகா, மாநில கருத்தாளா் க.சரவணன், ஐ.டி.கே வட்டார வைரமுத்து, ஐடிகே மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரெ. சிவகுருநாதன் ஆசிரியா் பயிற்றுநா்கள் உமா மகேஸ்வரி , க.முத்துமாரி, சொ. தனமீனாட்சி, கா.ஜெயலெட்சுமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

Saturday, August 13, 2022
Saturday, July 23, 2022
இல்லம் தேடிக் கல்வி
July 23, 2022
இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் எண்ணிக்கை குறைப்பு!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் வாயிலாக மாதந்தோறும் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். இம்முறை சென்னை மண்டலத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் ( 15.07.2022 ) இல்லம் தேடி கல்விக்கான மாவட்ட மற்றும் வட்டார அளவில் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டு செயல்படவேண்டும் என்றும் , அதே கருத்தினை வலியுறுத்தி சிறப்பு பணி அலுவலர் அவர்களாலும் அறிவுரை வழங்கப்பட்டது.
அதன்படி மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் , ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட வேண்டும்.
இதையும் படிக்க | Palli Paarvai TNSED Administrators App - New User Manual - இனி வரும் நாட்களில் விடுப்பு மற்றும் பள்ளி ஆய்வுகள் இவ்வாறு தான் இருக்கும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்திற்கும் இது பொருந்தும் - PDF
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் இல்லம் தேடி கல்வி மையங்களில் சிறப்பாக செயல்படவும் , ஏனைய மீதமுள்ள ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மீளவும் பள்ளி பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி செயல்படுமாறும் தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, June 24, 2022
Illam thedi kalvi
June 24, 2022
இல்லம் தேடிக் கல்வி APP NEW UPDATE Date 24.6.2022 - ஊக்க ஊதியம் வந்துவிட்டதா? தங்களே தெரிந்து கொள்ளலாம்.
இல்லம் தேடி கல்வி APP NEW UPDATE -0. 37-- Date---24.6.2022
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஊக்க ஊதியம் வந்துவிட்டதா? இனி அவர்களே ITK APP மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
ITK APP Update செய்து பயன்படுத்துங்கள்...
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk