Breaking

Showing posts with label அரசு கலைக்கல்லூரி. Show all posts
Showing posts with label அரசு கலைக்கல்லூரி. Show all posts

Tuesday, August 02, 2022

August 02, 2022

மதுரையில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர 73,260 மாணவர்கள் விண்ணப்பம்

மதுரையில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர 73,260 மாணவர்கள் விண்ணப்பம்

மதுரை : மதுரை மண்டலத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் பல்வேறு பாடப் பிரிவுகளில் சேர 73,260 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் விரைவில் நடக்கவுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மதுரை மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குனரின் கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் 29 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. மதுரை மாவட்டத்தில் மூன்று கல்லுாரிகளிலுள்ள 2448 உட்பட மொத்தம் 14,430 இடங்களுக்கு 73,260 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இளங்கலை பி.காம், உளவியல், வரலாறு, ஆங்கிலம் உள்ளிட்ட கலைப் பிரிவு பாடங்களுக்கு அதிக எண்ணிக்கையில் மாணவர் விருப்பம் தெரிவித்துள்ளனர். சம்மந்தப்பட்ட கல்லுாரிகள் சார்பில் மாணவர் மதிப்பெண்ணிற்கு ஏற்ப தரவரிசை பட்டியல் தயாரிக்கும் பணி முடிந்துள்ளது. என்று மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர் பொன் முத்துராமலிங்கம் கூறியுள்ளார்.

சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுக்காக காத்திருந்ததால் இந்தாண்டு கவுன்சிலிங் நடத்த சற்று தாமதமாகியுள்ளது. அனைத்து கல்லுாரிகளும் கவுன்சிலிங் நடத்த தயார் நிலையில் உள்ளது என்றும். விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அரசு, உதவி பெறும் கல்லுாரிகளில் மூவலுார் ராமமிர்தம் அம்மையார் பெயரில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் 16,478 பேர் இதுவரை பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
August 02, 2022

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் ஆக. 8-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் ஆக. 8-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் ஆக. 8 ஆம் தேதி முதல் மாணவ, மாணவியா் சோ்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.

இதுகுறித்து அக்கல்லூரி முதல்வா் ஜெ. மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2022 - 23 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மாணவ, மாணவியா் சோ்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு கீழ்க்காணும் நாள்களில் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

அக். 8 ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும், ஆக.10 ஆம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுக்கும், ஆக.11 ஆம் தேதி அறிவியல் பாடப்பிரிவுக்கும், ஆக. 12 ஆம் தேதி வரலாறு, பொருளியல், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில், கலந்து கொள்ள வருகை தரும் மாணவ, மாணவிகள், இணையதள விண்ணப்பம், மாற்றுச்சான்றிதழ், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கிச் சேமிப்புக் கணக்கு, மாா்பளவு புகைப்படம் ஆகிய அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்கள்- 5 ஆகியவைகளைக் கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும்.

கல்லூரி சோ்க்கைக்கான கட்டணம்: பி.ஏ. பாடப்பிரிவுகளுக்கு ரூ.3,195, பி.எஸ்.சி பாடப்பிரிவுக்கு ரூ.3,215, பி.எஸ்.சி கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கு 2,615, பி.காம் பாடப்பிரிவுக்கு ரூ.3,195 செலுத்த வேண்டும்.

Wednesday, July 13, 2022

July 13, 2022

பள்ளி விடுதிகளில் கல்லூரி மாணவியருக்கு அனுமதி!

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் கல்லூரி மாணவியரைச் சேர்த்துக்கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் கல்லூரி மாணவியரைச் சேர்த்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 367 பள்ளிகளில் உள்ள விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் ஏற்கனவே தங்கிப் பயிலும் மாணவியரின் எண்ணிக்கைக்கு ஊறு விளைவிக்காத வகையில், இடவசதியைக் கருத்தில் கொண்டு கல்லூரி பயிலும் மாணவியரைச் சேர்த்துக்கொள்ளலாம் சொல்லப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவியருக்கு அனுமதி வழங்குவதால் ஆகும் கூடுதல் செலவினத்துக்கு ரூ.48.36 லட்சம் நிதியை விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடுள்ளது. இதனால், மாணவர்கள் தடையின்றி தங்கிப் படிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகக் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

CLICK HERE TO DOWNLOAD PDF

Monday, July 11, 2022

July 11, 2022

கோவை அரசு கலைக் கல்லூரியின் மவுசு... ஒரே நேரத்தில் இத்தனை விண்ணப்பங்களா?

கோவை அரசு கலைக் கல்லூரியின் மவுசு... ஒரே நேரத்தில் இத்தனை விண்ணப்பங்களா?

கோவை அரசு கலைக்கல்லூரியில் சேர 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர். தமிழகத்தில் 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. நடப்பாண்டில், கல்லூரியில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து பி.ஏ, பி.காம், பி.எஸ்.சி உள்ளிட்ட படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பம் அளித்து வந்தனர். மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 7-ந் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால், மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி சிபிஎஸ்இ பள்ளி தேர்வு முடிவுகள் வந்த 5 நாட்கள் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பலர் விண்ணப்பித்தனர்.

கோவை அரசு கலைக்கல்லூரியில் நடப்பாண்டில் 26 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,466 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த இடங்களுக்கு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கோவை அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்ட 170 ஆண்டுகளில், இந்த ஆண்டுதான் முதல் முறையாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Total Pageviews

Search This Blog