Breaking

Showing posts with label M.Phil.. Show all posts
Showing posts with label M.Phil.. Show all posts

Wednesday, December 27, 2023

December 27, 2023

மாணவர்கள் M.Phil படிப்புகளில் சேர வேண்டாம்: UGC அறிவுறுத்தல்

மாணவர்கள் M.Phil படிப்புகளில் சேர வேண்டாம்: UGC அறிவுறுத்தல்

மாணவர்கள் M.Phil படிப்புகளில் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.

M.Phil நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கையை நிறுத்த கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு அளித்துள்ளது. M.Phil படிப்புகளை நிறுத்தப்போவதாக 2022-ம் ஆண்டிலேயே யுஜிசி தெரிவித்த நிலையில் மீண்டும் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் பிஎச்.டி. பட்டம் வழங்குவதற்கான நடைமுறைகள் விதிமுறைகள், 2022 இன் 14வது பிரிவின்படியும் எம்.பில் பட்டத்தை நிறுத்துவது தொடர்பான யுஜிசி கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில் M.Phil மாணவர் சேர்க்கையை நிறுத்த பல்கலைக்கழக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 2023-24 கல்வியாண்டுக்கான திட்டங்கள். மேலும், மாணவர்கள் M.Phil சேர்க்கை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில பல்கலைகழகங்கள் M.Phil படிப்பிற்கு புதிதாக விண்ணப்பங்களை வரவேற்கிறது என்பது UGC-யின் கவனத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரவே, M.Phil. பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் அல்ல என்றும் யுஜிசியின் ஒழுங்குமுறை எண். 14 பிஎச்.டி. பட்டம் வழங்குவதற்கான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் நடைமுறை விதிமுறைகள் 2022 உயர் கல்வி நிறுவனங்கள் M.Phil வழங்கக்கூடாது என்று கூறியுள்ளது.

இது சம்பந்தமாக, யுஜிசி பல்கலைக்கழக மானியக் குழு பிஎச்.டி. பட்டம் வழங்குவதற்கான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் நடைமுறைகள் ஒழுங்குமுறைகள், 2022 ஐ உருவாக்கியுள்ளது, இது நவம்பர் 7, 2022 அன்று இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, எம்.பில் மாணவர் சேர்க்கையை உடனடியாக நிறுத்த பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2023-24 கல்வியாண்டுக்கான திட்டம். மேலும், மாணவர்கள் எம்.பில் சேர்க்கை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Friday, March 25, 2022

March 25, 2022

அனைத்து பல்கலைக் கழகங்களிலும் 2022-2023ம் கல்வி ஆண்டு முதல் எம்பில் படிப்பு கிடையாது: பல்கலை. மானியக்குழு அறிவிப்பு

அனைத்து பல்கலைக் கழகங்களிலும் நடத்தப்பட்டு வரும் எம்பில் பட்டப் படிப்பு 2022-2023ம் கல்வி ஆண்டு முதல் செல்லாது என்றும், அடுத்த கல்வி ஆண்டு முதல் எம்பில் பட்டப் படிப்பை நிறுத்திவிடவும் பல்கலைக் கழக மானியக்குழு திட்டமிட்டுள்ளது. பல்கலைக் கழகங்களில் முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்கள் அடுத்ததாக எம்பில் என்ற பட்டப் படிப்பை முடித்தால் தான் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதியாக வைக்கப்பட்டது. இந்த எம்பில் படிப்புகளை கடந்த 1977ம் ஆண்டு அனைத்து பல்கலைக் கழகங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆசிரியர் பணியில் இருப்போர், முதுநிலைப் பட்டத்துக்கு பிறகு எம்பில் பட்டம்பெற்றிருந்தால், அவர்களுக்கு ஊக்கத்தொகையும் பெற வசதியாகவும் எம்பில் பட்டம் இருந்தது. இந்நிலையில், பல்கலைக் கழக மானியக் குழு இந்த முறையை தற்போது மாற்றி, ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச தகுதியை கொண்டு வந்துள்ளது. அதனால் எம்பில் பட்டம் எந்த கற்பித்தல் பணிக்கும் தகுதியற்றதாக மாற்றியுள்ளது. அதாவது, பல்கலைக் கழக மானியக் குழுவின் (முனைவர் பட்டம் (பிஎச்டி) வழங்குவதற்கான குறைந்த பட்ச தரம் மற்றும் விதிகளுக்கான மசோதா) ஒழுங்குமுறைகள் 2022ம் ஆண்டுக்கானது, இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளபடி, அடுத்த கல்வி ஆண்டில் எம்பில் பட்டம் என்பது இருக்காது என்றும், இந்த அறிவிப்பு வரை வழங்கப்பட்ட எம்பில் பட்டங்கள் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழகம் தெரிவித்தபடி, பல மாநிலங்களில் செயல்படும் பல்கலைக் கழகங்கள், குறிப்பாக சென்னைப் பல்கலைக் கழகம் கடந்த ஆண்டே எம்பில் பட்டப் படிப்பை நிறுத்தி விட்டது. இதுகுறித்து சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், பல்கலைக் கழக மானியக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவருமான பி.துரைசாமி கூறுகையில், ‘பல்கலைக் கழகத்தின் ஒழுங்குமுறைகளை அதற்கான ஆணையத்தின் அனுமதி பெற்றுவிட்டால் 2022-2023ம் ஆண்டு முதல் எம்பில் பட்டத்தின் அங்கீகாரம் ரத்தாகிவிடும். இருப்பினும், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில பல்கலைக் கழகங்கள் 2021-2022ம் கல்வி ஆண்டுக்கு எம்பில் பட்டப்படிப்புக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளன’ என்றார். இந்நிலையில், எம்பில் பட்டத்தால் எந்த பயனும் இல்லை என்பதால், பல பள்ளி ஆசிரியர்கள் ஊக்கத் தொகை பெறுவதற்காக அந்த பட்டத்தை படித்து வருகின்றனர் என்று தேசிய அளவிலான மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வர்கள் சங்கத்தின் ஆலோசகர் நாகராஜன் தெரவித்துள்ளார்.

Sunday, March 13, 2022

March 13, 2022

மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.31,000 கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க மார்ச்31ஆம் தேதி கடைசி நாள் - யு.ஜி.சி. அறிவிப்பு!

மாற்றுத்திறனாளி மாணவர்கள் எம்பில், பிஎச்டி படித்து வந்தால் இம்மாதம் மார்ச் 31 - ஆம் தேதி வரை அவர்களின் கல்வி உதவித் தொகைக்காக விண்ணப்பிக்கலாம்.

| மாணவர்கள் https://www.ugc.ac.in/ugc schemes இந்த இணையதளத்தில் சென்று மார்ச் 31ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கலாம் கல்வி உதவித்தொகை மாதம் மாதம் மாணவர்களுக்கு வழங்கப்படும். மாணவர்களுக்கு முதல் இரண்டு வருடங்களும் மாதம் மாதம் ரூ 31,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் மேலும் இதர செலவுக்காக வருடத்திற்கு 12,000 ரூபாய் வழங்கப்படும்.

மேலும் மூன்றாவது ஆண்டிலிருந்து மாதம்தோறும் அப்பத்தை ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் மேலும் இதர செலவிற்காக வருடத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

Friday, March 04, 2022

March 04, 2022

அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய M.Phil., கோடைகால தொடர் படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது - சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு நகல்

அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய M.Phil., கோடைகால தொடர் படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது - சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு நகல்!

இதையும் படிக்க | பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய M.Phil., கோடைகால தொடர் படிப்பு (Summer Sequential Programme) ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது என்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்பட்டது என்றும் கோடைகால தொடர் வகுப்பில் பயின்ற ஆசிரியர்கள் அனைவரின் கூட்டு முயற்சியால் தொடரப்பட்ட வழக்கில் திருமதி.காதம்பரி என்ற ஆசிரியைக்கு இந்தப் படிப்பானது பகுதிநேர படிப்புக்கு இணையானது என்று சான்றிதழ் வழங்க வேண்டும் என 16/02/2022 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog