Breaking

Showing posts with label DA. Show all posts
Showing posts with label DA. Show all posts

Wednesday, September 28, 2022

September 28, 2022

அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் - Central Cabinet approves hike in allowances today



மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பணவீக்கம், விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஜூலை - டிசம்பர் காலத்துக்கான அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். பண்டிகைக்காலம் நெருங்கிவிட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது. இதனால் சுமார் 50 லட்சத்துக்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 60 லட்சத்துக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்

Tuesday, September 13, 2022

September 13, 2022

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படி உயர வாய்ப்பு



மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது . அதன்படி அடிப்படை ஊதியத்தில் 34 சதவீதத்தை மத்திய அரசு ஊழியர்கள் தற்போது அகவிலைப்படியாக பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஜூலை மாத அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் , இதன்மூலம் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் , 50 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது .

Monday, August 15, 2022

August 15, 2022

அகவிலைப்படி உயர்வு குறித்த முதல்வர் உரையின் செய்திக்குறிப்பு - Press Release No : 1411 - PDF

Honble Chief Minister hoisted the National Flag and delivered address on the occasion of 76th Independence Day at Secretariat, Chennai [ More... 1 , 2 ] [Press Release No : 1411 ]

அகவிலைப்படி உயர்வு குறித்த முதல்வர் உரையின் செய்திக்குறிப்பு.

சுதந்திர திருநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (15.8.2022) தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஆற்றிய உரை (பக்கம் 8ல் அகவிலைப் படி குறித்த செய்தி)!

CLICK HERE TO DOWNLOAD

Monday, June 27, 2022

June 27, 2022

முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் - DA அறிவிப்பு வெளியாகுமா?

முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் - DA அறிவிப்பு வெளியாகுமா?

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் ,துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிப்பதுக்கு உண்டான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும்,செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விவாதிக்க உள்ளதாகவும், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

மேலும் கொரோனா பரவலை கட்டுபடுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.முக்கிய கொள்கை முடிவுகளுக்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படுமென அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

எனவே, அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகுமா என எதிர்நோக்கி உள்ளனர்.

Wednesday, June 22, 2022

June 22, 2022

தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுமா..?

தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுமா..?

      தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மட்டுமல்லாமல் அகவிலைப்படி நிலுவைத் தொகையும் இன்னும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த முறை அகவிலைப்படி வழக்கத்தை விட அதிகமாக உயர்த்தப்படலாம் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தால் விலைவாசி உயருகிறது. இதனால் அரசு ஊழியர்களுக்கு செலவுகள் அதிகமாகிறது. எனவே, விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என அரையாண்டுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும்.

அகவிலைப்படி உயர்வு குறித்து ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி வழக்கமாக 3% உயர்த்தப்படும். அதிகபட்சமாக 6% வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில மாதங்களாக பணவீக்கம் மிக கடுமையாக உயர்ந்துள்ளது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சில்லறை பணவீக்கம், மொத்த விலை பணவீக்கம் இரண்டுமே அதிகமாக உள்ளதால் விலைவாசி உயர்வு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக அகவிலைப்படி 3% உயர்த்தப்படும். இந்நிலையில், ஜூலையில் 4% முதல் 5% வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பணவீக்க விகிதம் மிக அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என கூறுகின்றனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அல்லது 5% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் 4-5% அகவிலைப்படி உயர்த்தப்படும் என அரசு ஊழியர் சங்கத்தினர் கூறுகின்றனர்.

Thursday, June 16, 2022

June 16, 2022

01.01.2022 முதல் அகவிலைப்படியை 14% அதிகரித்து 28% ஆக அனுமதித்து தமிழக அரசு உத்தரவு - செய்தி வெளியீடு எண் : 960 நாள்: 16.06.2022

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசு

அகவிலைப்படி உயர்வினால் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் 22,510 ஊழியர்கள் பயன்பெறுவர்
ரேஷன் கடை ஊழியர்களுக்கு 01.01.2022 முதல் அகவிலைப்படியை 14% அதிகரித்து 28% ஆக அனுமதித்து தமிழக அரசு உத்தரவு!!

செய்தி வெளியீடு எண் : 960

நாள்: 16.06.2022

செய்தி வெளியீடு

நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 2202.2021 முதல் பெற ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14% அகவிலைப்படி அனுமதிக்கப்பட்டிருந்தது.

1.01.2022 முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14% அகவிலைப்படி உயர்வினை வழங்குமாறு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருமு.கூஸ்டாலின் அவர்கள் கனிவுடன் பரிசீவிந்து 1.01.2022 முதல் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பணையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 28. அகவிலைப்படி பெறவும். அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்களை பெறவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக்கடைகளில் பணிபுரியும் 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2852 கட்டுநர்கள், என மொத்தம் 72510 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

Monday, April 25, 2022

April 25, 2022

'மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி?

AIADMK co-ordinator Panneer Selvam has stressed that the Chief Minister should take immediate action to increase the internal rate of return for Tamil Nadu government employees as well as central government employees. His statement: Last, in 2020, as the corona epidemic began to spread, a complete curfew was imposed across the country. As a result, the revenues of the central and state governments fell. The increase in the internal rate of return for Central Government employees was suspended; The federal government announced that a decision on that would be taken later. Currently, the central government has announced an increase in the internal rate of return for central government employees from 31 per cent to 34 per cent. However, the Tamil Nadu government has not issued any notice for the increase in the internal rates for state government employees. Tamil Nadu government employees expect the central government to announce an increase in the rate of increase to 34 per cent in the current assembly session, as announced by the central government. The Chief Minister should immediately intervene and take action to increase the internal rate of return for Tamil Nadu government employees in parallel with the central government employees, said Panneer Selvam. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

'மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, தமிழக அரசு ஊழியர்களுக்கும், அகவிலைப்படியை உயர்த்த, முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒபன்னீர்செல்வம் வலியுறுத்தல்ருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை: கடந்த, 2020-ல், கொரோனா தொற்று பரவல் துவங்கியதால், நாடு முழுதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால், மத்திய - மாநில அரசுகளின் வருவாய் சரிந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது; அதுபற்றி பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக

தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை, 31 சதவீதத்தில் இருந்து, 34 சதவீதமாக உயர்த்தி, மத்திய அரசு அறிவித்து விட்டது. ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான எந்த அறிவிப்பையும், தமிழக அரசு வெளியிடவில்லை.

மத்திய அரசு அறிவித்தது போல, அகவிலைப்படி உயர்வை, 34 சதவீதமாக உயர்த்தி, நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என்று, தமிழக அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். முதல்வர் உடனே தலையிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Sunday, April 24, 2022

April 24, 2022

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அளிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அளிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், "கொரோனா தொற்று காரணமாக 01-01-2020 முதல்‌ மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்ததோடு, இந்த அகவிலைப்படி உயர்வை - வழங்குவது குறித்து 01-07-2021-க்கு பிறகு முடிவு எடுக்கப்படும்‌ என்றும்‌, அவ்வாறு முடிவு எடுக்கும்போது 01-01-2020 முதல்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு அதன்‌ பணப்‌ பயன்‌ 01-07-2021 முதல்‌ அளிக்கப்படும்‌ என்றும்‌ அறிவித்தது, மத்திய அரசின்‌ இந்த அறிவிப்பினைத்‌ தொடர்ந்து தமிழ்நாடு அரசும்‌ இதனை நடைமுறைப்படுத்தியது. ஓபிஎஸ் வலியுறுத்தல்

இதனைத்‌ தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மறுபரிசீலனை செய்து 01-01-2020 முதல்‌ 21 விழுக்காடு, 01-07-2020 முதல்‌ 25 விழுக்காடு, 01-01-2021 முதல்‌ 28 விழுக்காடு, 01-07-2021 முதல்‌ 31 விழுக்காடு என உயர்த்தி, அதன்‌ பணப்‌ பயனை 01-07-2021 முதல்‌ வழங்கியது. இதனைத்‌ தொடர்ந்து 01-01-2022 முதல்‌ மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 34 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ளது.

அதே சமயத்தில்‌, தமிழ்நாட்டில்‌ ஏற்பட்ட ஆட்சிமாற்றம்‌ காரணமாக, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 17 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாக 01-01-2022 முதல்‌ தான்‌ ரொக்கமாக வழங்கப்படுகிறது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு 01-07-2021 முதல்‌ வழங்கப்பட்ட 31 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 01-01-2022 முதல்‌ வழங்கப்பட்டது. ஆறு மாத காலம்‌ தாமதமாக வழங்கப்பட்டது.

தற்போது 01-01-2022 முதல்‌ மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி மத்திய அரசு 31-03-2022 அன்றே அறிவித்துவிட்டது, இந்த அகவிலைப்படி - உயர்வு அறிவிக்கப்பட்டு 24 நாட்கள்‌ கடந்துள்ள நிலையில்‌, தமிழ்நாடு அரசு ஊழியர்‌ சங்கங்கள்‌ அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டுமென்று ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ள நிலையில்‌, அகவிலைப்படிக்கான நிதி - ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டும், இது குறித்து எந்த அறிவிப்பையும்‌ தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. அகவிலைப்படி உயர்வை அளிக்க வேண்டும் இந்த விஷயத்தில்‌ அரசு மவுனமாக இருப்பதைப்‌ பார்க்கும்போது, சென்ற முறை ஆறு மாதம்‌ காலந்தாழ்த்தியதைப்‌ போல்‌ இந்த முறையும்‌ அரசு தாமதப்படுத்துமோ என்ற சந்தேகம்‌ அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியதாரர்கள்‌ மத்தியில்‌ மேலோங்கியுள்ளது. கொரோனா தொற்று ஓரளவு குறைந்து, அரசின்‌ வருமானமும்‌ அதிகரித்துள்ள நிலையில்‌, 15 நாட்கள்‌ ஈட்டிய விடுப்பை ஒப்புவித்து பணமாக்கும்‌ முறையும்‌ ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்‌, மத்திய அரசு அறிவித்துள்ளது போல்‌, அகவிலைப்படி உயர்வையாவது 01-01-2022 முதல்‌ 34 விழுக்காடாக உயர்த்தி, அதாவது மூன்று விழுக்காடு உயர்த்தி நடப்பு சட்டமன்றக்‌ கூட்டத்‌ தொடரிலேயே அறிவிக்க வேண்டும்‌ என்று அரசு ஊழியர்கள்‌ எதிர்பார்த்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில்‌ உடனடியாகத்‌ தலையிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஒய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 01-01-2022 முதல்‌ 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக, அதாவது மூன்று விழுக்காடு உயர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Wednesday, March 30, 2022

March 30, 2022

Cabinet approves release of an additional instalment of Dearness Allowance to Central Government employees and Dearness Relief to Pensioners, due from 01.01.2022 - Press Information Bureau Government of India

Press Information Bureau Government of India

Cabinet approves release of an additional instalment of Dearness Allowance to Central Government employees and Dearness Relief to Pensioners, due from 01.01.2022

The Union Cabinet chaired by the Prime Minister, Shri Narendra Modi, has given its approval to release an additional instalment of Dearness Allowance (DA) to Central Government employees and Dearness Relief (DR) to pensioners w.e.f. 01.01.2022 representing an increase of 3% over the existing rate of 31% of the Basic Pay/Pension, to compensate for price rise.

This increase is in accordance with the accepted formula, which is based on the recommendations of the 7th Central Pay Commission.

The combined impact on the exchequer on account of both Dearness Allowance and Dearness Relief would be Rs.9,544.50 crore per annum. This will benefit about 47.68 lakh Central Government employees and 68.62 lakh pensioners.

Tuesday, January 04, 2022

January 04, 2022

அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைப்பா?

அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைப்பா?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை ஒமைக்ரான் தொடர்பாக ஏதாவது பெரும் செலவு ஏற்படலாம் என்ற கோணத்தில் நிறுத்தி வைப்பு எனும் செய்தியின் உண்மைத்தன்மை...

>>> Office Memorandum No. 1/1/2022-E- 11(13/1) Government of India Ministry of Finance Department of Expenditure, North Block., New Delhi E(X)/F/DoE/Pt-II/23 Dated the 3 January 2022...

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என மத்திய நிதியமைச்சகத்தின் பெயரில் மேற்கண்ட போலி உத்தரவு ஒன்று வலம் வருகிறது.

இது போன்ற எந்த உத்தரவையும் மத்திய நிதியமைச்சகம் வெளியிடவில்லை. என தெரிவித்துள்ளது.

Monday, January 03, 2022

January 03, 2022

மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை ஓமைக்ரான் தொடர்பாக ஏதாவது பெரும் செலவு ஏற்படலாம் என்ற கோணத்தில் நிறுத்தி வைப்பு???

Thursday, December 30, 2021

December 30, 2021

2020 ஜன.1 முதல் அகவிலைப்படி வழங்க வேண்டும்; அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்

மத்திய அரசு வழங்கியதை போல, தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவை தொகையை 2020 ஜன., 1 முதல் வழங்க வேண்டும் என மதுரையில் அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியது.

மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் லட்சுமிநாராயணன் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 1.1.2021 முதல் அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31 சதவீதமாக உயர்த்தி வழங்கவும், சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தை பொங்கலையொட்டி போனஸ் ரூ.3 ஆயிரம் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது வரவேற்கத்தக்கது. மத்திய அரசு ஊழியர்கள் 1.7.2021 முதல் 31 சதவீத அகவிலைப்படியை ரொக்கமாக பெற்று வருகின்றனர். மேலும் மத்திய அரசு கடந்த 1.1.2020 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவையை 2021 டிச., சம்பளத்துடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.

தமிழக அரசு அகவிலைப்படி நிலுவையை 2020 ஜன., 1 முதல் வழங்க வேண்டும்.போனஸ் சட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்குகிறது. மூன்றாண்டுகளாக தமிழக அரசு ரூ.3 ஆயிரம் மட்டுமே வழங்குகிறது. எனவே தமிழக அரசு போனஸாக ரூ.7 ஆயிரம் அறிவிக்க வேண்டும்.

ஏ, பி பிரிவினர், கிராம ஊராட்சி துாய்மை காவலர்களுக்கும் பொங்கல் கருணைத்தொகை வழங்க வேண்டும் என்றார்.நிர்வாகிகள் ஜெயராஜராஜேஸ்வரன், கல்யாணசுந்தரம், மணிகண்டன், மாரியப்பன் உடனிருந்தனர்.

Wednesday, December 29, 2021

December 29, 2021

DA HIKE 31% - Flowchart 2022

அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 17% இருந்து 31% ஆக உயர்ந்ததால் எந்த GP உள்ளவர்களுக்கு எவ்வளவு DA ஊதியம் கிடைக்கும் என்பதை விளக்கும் Pay Matrix Chart

Friday, December 24, 2021

Total Pageviews

Search This Blog