PG NEET
January 15, 2026
Showing posts with label PG NEET. Show all posts

Thursday, January 15, 2026
Thursday, September 21, 2023
PG NEET
September 21, 2023
மைனஸ் மதிப்பெண் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் சேரலாம் என்றால், நீட் தேர்வு தகுதியை குறைக்கிறதா, அதிகரிக்கிறதா?
மைனஸ் மதிப்பெண் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் சேரலாம் என்றால், நீட் தேர்வு தகுதியை குறைக்கிறதா, அதிகரிக்கிறதா? - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினா?.
இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தகுதி மதிப்பெண்கள் பூஜ்ஜியம் பெர்சைன்டைல் ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதியவர்கள் அனைவருமே, கோடிக்கணக்கில் பணம் இருந்தால் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்பது தான் இதன் பொருளாகும். நடப்பாண்டிற்கான முதுநிலை நீட் தேர்வில் 30 பேர் ஒற்றை இலக்கத்திலும், 14 பேர் பூஜ்ஜியம் மதிப்பெண்களும், 13 எதிர்மறை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு இப்போது கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இது மருத்துவக் கல்வியின் தரத்தை எந்த வகையில் உயர்த்தாது, கண்டிப்பாக குறைக்கும். இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.
மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டில் 8 ஆயிரத்துக்கும் கூடுதலான முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் நிரப்பப்படாமல் போகும் என்றும், அந்த இடங்களை நிரப்ப தகுதியான மாணவர்கள் இல்லை என்பதால் தான் தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதாக மத்திய அரசின் தரப்பிலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் தரப்பிலும் கூறப்படுகிறது. இது சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் ஆகும். காலியாக இருக்கும் இடங்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவை தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் தான் உள்ளன. அவற்றின் வருமானம் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. முதுநிலை நீட் தேர்வுக்கான விதிகளின்படி, மொத்தம் 800 மதிப்பெண் கொண்ட தேர்வில் பொதுப்போட்டிப் பிரிவினருக்கு 291 மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 257 மதிப்பெண்களும் தகுதி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுதிய 2 லட்சத்து 517 பேரில், 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் மேற்கண்ட மதிப்பெண்களை பெற்று முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் உள்ள மொத்த இடங்களே 45,337 தான். அவற்றை நிரப்ப அந்த இடங்களை விட கிட்டத்தட்ட மும்மடங்கினர் தகுதி பெற்று இருக்கும் போது, தகுதி மதிப்பெண்களை குறைத்து கூடுதலாக 80,000 பேருக்கு தகுதி வழங்க வேண்டிய தேவை என்ன?
முதுநிலை மருத்துவப் படிப்பில் காலியாக இருக்கும் இடங்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்கள் தனியார் கல்லூரிகளில் தான் உள்ளன. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தமிழக அரசின் கல்வி நிறுவனங்களில் ஆண்டு கல்விக் கட்டணமே ரூ.20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை தான். ஆனால், தனியார் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கல்விக்கட்டணம் ரூ.40 லட்சத்துக்கும் அதிகம் ஆகும். இந்த அளவு கல்விக்கட்டணத்தை செலுத்துவது இதுவரை தகுதி பெற்ற மாணவர்களால் சாத்தியமில்லை என்பதால் தான், 8000 இடங்கள் நிரம்பவில்லை. இப்போது அந்தக் கட்டணத்தை செலுத்தும் அளவுக்கு புதிய போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கவே தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டு 80,000 பேருக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது சமூக அநீதி ஆகும். முதுநிலை மருத்துவக் கல்வி இடங்கள் வீணாகக் கூடாது, அவ்வாறு வீணானால் மருத்துவ வல்லுனர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்விக் கட்டணத்தை குறைத்து, அந்த இடங்கள் அனைத்தையும் அரசே கலந்தாய்வு மூலம் நிரப்பினால், ஏற்கனவே தகுதி பெற்ற மாணவர்களைக் கொண்டு அனைத்து இடங்களையும் நிரப்ப முடியும். ஆனால், தகுதியான மாணவர்கள் தேவையில்லை, பணம் வைத்துள்ள மாணவர்கள் தான் தேவை என்று தேசிய மருத்துவ ஆணையமும், தனியார் கல்லூரிகளும் எதிர்பார்ப்பது தான் அனைத்து சிக்கல்களுக்கும், சீரழிவுகளுக்கும் காரணம் ஆகும்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு 2010-ஆம் ஆண்டு முதன்முறையாக அறிவிக்கப்பட்ட போது, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதும் தான் அதன் நோக்கங்கள் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அவை இரண்டுமே நடக்கவில்லை. மாறாக தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தகுதியைப் பற்றிக் கவலைப்படாமல் கோடிக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதற்கு துணை செய்வதற்காகவே நீட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது இப்போது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பதே உண்மை. எனவே, மருத்துவப் படிப்புக்கான அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
PG NEET
September 21, 2023
முதுநிலை மருத்துவப் படிப்புகள்: ‘நீட்' தகுதி மதிப்பெண் ரத்து

சென்னை, செப்.20: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் தேர்வில் பங்கேற்றிருந்தால் போதுமானது என்றும், தகுதி மதிப்பெண் எதுவும் தேவையில்லை என்றும் மத்திய மருத்துவக் கலந்தாய் வுக் குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ மற்றும் பல் மருத்துவப் பட்டமேற்படிப்பான எம்டிஎஸ் படிப்புகளுக்கான இடங் கள் முதுநிலை நீட் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என் பிஇஎம்எஸ்) நடத்துகிறது. நாடு முழுவதும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத் துவ இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங் கப்படுகின்றன.
இந்த இடங்களுக்கும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் இடங்க ளுக்கும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்குமான கலந் தாய்வை மத்திய மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியில் நடத்தி வருகிறது. எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ மற்றும் எம்டிஎஸ் படிப்புகளுக் கான 2023-24-ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு https://mcc.nic.in/ என்ற இணையதளத்தில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி தொடங்கியது.
கள் மூன்று சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. மூன்றாம் சுற்று முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், முதுநிலை மருத்து வப் படிப்புகளுக்கு அதிக இடங்கள் காலியாகவுள்ளதால், நீட் தேர்வு எழு திய அனைவரையும் பங்கேற்கச் செய்து, அந்த இடங்களை நிரப்புவதற்காக நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக மருத்துவக் கலந்தாய்வு குழு அறி வித்துள்ளது. எனவே, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் புதிய விதிகளின்படி, நீட் தேர்வு எழுதிய அனைவரும் இணை யவழியில் பதிவு செய்து பங்கேற்கலாம் என்றும், ஏற்கெனவே பதிவு செய்க வர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை என்றும் தெரிவிக்க டுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனிய.... மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ நடத்தி வருகிறது.
மாநில இடங்களுக்கான கலந்தாய்வு: https://www.tnhealth.tn.gov. in/, https://tnmedicalselection.net/ ஆகிய இணையதளங்களில் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கியது.
இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், காலியாக வுள்ள இடங்களை நிரப்புவதற்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு புதிய அறி விப்பின்படி தகுதி மதிப்பெண் எதுவுமின்றி நடைபெறவுள்ளது.

Wednesday, March 15, 2023
PG NEET
March 15, 2023
முதுநிலை மருத்துவ படிப்பு நீட் தேர்வு முடிவு வெளியீடு

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டுள்ளன.
மருத்துவப் பட்ட மேற் படிப்புகளான எம்.டி., - எம்.எஸ்., மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு, தமிழகத்தில் 4,000 இடங்கள் உட்பட 42 ஆயிரத்து 500 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், தேசிய தகுதி மற் றும் நுழைவுத் தேர்வான 'நீட்' மதிப்பெண் அடிப்படை யில் நிரப்பப்படுகின்றன.
வரும், 2023 - 24ம் கல்வி யாண்டு மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு, 5ம் தேதி நடந்தது. இதில், தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., முடித்த 25 ஆயிரம் பேர் உட்பட, 2.09 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை, www.natboard.edu.in, nbe.edu.in ஆகிய இணையதளங்களில், தேசிய தேர்வுகள் வாரியம் நேற்று வெளியிட்டது. மொத்தம் 800 மதிபெண்களுக்கு நடந்த தேர்வில், 'கட் - ஆப்' மதிப்பெண்ணாக பொதுப் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு 291; பொதுப் பிரிவினரில் மாற்றுத் திறனாளிகளுக்கு 274; இதர பிற்படுத்தப்பட்டோரான ஓ.பி.சி., - எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர்களுக்கு 257 மதிப்பெண் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை, வரும் 31ம் தேதி வெளியிடுவதாக, தேசிய தேர்வுகள் வாரியம் அறிவித்திருந்த நிலையில், 17 நாட்களுக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டுஉள்ளது.
இதை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டி உள்ளார்
NEET- PG 2023 Result - Download here
CLICK HERE TO DOWNLOAD PDF

Saturday, February 25, 2023
PG NEET
February 25, 2023
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுமா? தேசிய தேர்வு வாரியம் உச்சநீதி மன்றத்தில் பதில்
முதுநிலை நீட் தேர்வை
ஒத்திவைத்தால் மாற்று தேதி கிடைக்காது
தேசிய தேர்வு வாரியம் உச்சநீதி மன்றத்தில் பதில்
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்தி வைக்க முடியாது என தேசிய தேர்வு வாரியம் உச்சநீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 2023-24ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொதுநுழைவுத் தேர்வு வரும் மார்ச் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என மருத்துவ மாணவர்கள் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதுதொடர்பான வழக்கில் மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “நீட் பயிற்சிக்காகவே மாணவர்கள் ஒருநாளில் 12 மணி நேரத்தை செலவிடுவதால், அவர்களுக்கு தேர்வுக்கு தயாராக போதிய நேரமில்லை. மேலும், எம்பிபிஎஸ் மாணவர்கள் தங்களது இன்டர்ன்ஷிப் பயிற்சியை நிறைவு செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்” என்று வாதிட்டார். அப்போது தேசிய தேர்வு வாரியம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா படி, “மார்ச் 5ம் தேதி நடைபெறவுள்ள முதுநிலை நீட் தேர்வுக்கு நாடு முழுவதுமிருந்து 2.09 லட்சம் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். தேர்வை ஒத்தி வைத்தால் மாற்று தேதி விரைவில் கிடைக்காது” என்று கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதி மன்ற அமர்வு, வழக்கு விசாரணையை நாளை மறுதினத்துக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

Monday, February 06, 2023
PG NEET
February 06, 2023
முதுநிலை மருத்துவப் படிப்பில் 1,311 இடங்கள் நிரப்பப்படவில்லை: மத்திய அமைச்சருக்கு திமுக எம்பி கடிதம்

புது தில்லி: 2022-23 ஆம் கல்வியாண்டில் முதுநிலை மருத்துவப் படிப்பில் 1,311 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன், மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவின் கவனத்திற்கு கொண்டு சென்று கடிதம் எழுதியுள்ளாா். கடிதத்தில் 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள காலியிடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதில் மகாராஷ்டிரம் (325), கா்நாடகம் (268), தமிழகம் (100) ஆகிய மூன்று மாநிலங்களில் அதிக அளவிலும் குறிப்பாக நிா்வாகப் பிரிவு ஒதுக்கீடுகளில் இந்த முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்தின் மற்ற விவரங்கள் வருமாறு: 2022-23 கல்வியாண்டில் மருத்துவத்தில் எம்.டி, எம்.எஸ்., டிப்ளோமட் ஆஃப் நேஷனல் போா்டு (டிஎன்பி) போன்ற முதுநிலை மருத்துவப் படிப்பில் 1,311 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. முதுநிலை மருத்துவ இடங்கள் என்பது மதிப்புமிக்க சொத்து என்று உச்சநீதி மன்றம் கருத்துக் கூறியுள்ளது. சோ்க்கை முடிந்த நிலையில், இந்த இடங்கள் நிரப்பப்படாமல் வீணாக கைவிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதால் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது. எம்டி, எம்எஸ் முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடுகளில் 640 இடங்களும், நிா்வாக ஒதுக்கீடுகளில் 589 இடங்களும், டிஎன்பி முதுநிலைப் படிப்பில் 82 இடங்கள் என மொத்தம் 1,311 இடங்கள் காலியாக உள்ளன.
மோசமான நீட் கலந்தாய்வு முறை தோ்வால் ஏற்படும் பாதிப்புகள், சுகாதார சேவைகளுக்கான இயக்குநா் ஜெனரலகம் (டிஜிஹெச்எஸ்) மருத்துவப் படிப்பிற்கான இடங்களை கையாள்வதில் மெத்தனமாக நடந்து கொள்வது போன்றவை இதற்குக் காரணமாக உள்ளன. ஒவ்வொரு முதுநிலை மருத்துவப் படிப்பு இடமும் நாட்டின் தேசிய சொத்தாக இருக்கும் நிலையில், காலியாகும் இந்த சிறப்பு இடங்களை நிரப்புவதில் உரிய நேரத்தில் கலந்தாய்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை. நிகழாண்டில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வுக்கு ஜனவரி 10-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்படி குறுகிய காலத்தில் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படுகிறது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி தகுதியின் அடிப்படையில் பெறப்பட்ட இடங்கள் ‘இடஒதுக்கீட்டில்’ கணக்கிடப்படுவதால், பல தகுதி வாய்ந்த ஏழை, எளியவா்களுக்கு நியாயமான முறையில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இது தொடா்பாக ஏற்கெனவே இரண்டு முறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு கலந்தாய்விற்கும் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது.
இதனால், பொறுப்பற்ற முறையில் திறனின்று செயல்படும் டிஜிஹெச்எஸ் நிா்வாகத்தை மறுசீரமைக்க வேண்டும். குழப்பங்களுக்குரிய அதிகாரிகள் மீது துறை ரீதியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீட் தோ்வு நடத்தப்பட்டுதான் மருத்துவப் படிப்பில் மாணவா்கள் சோ்க்கப்படுகிறாா்கள். இந்த நிலையில், முதுநிலைப் பட்டப் படிப்பில் சேரும் மாணவா்களுக்ககான கெடுபிடி தேவையில்லை. நாட்டில் மக்கள்தொகைக்கு சமமாக தகுதி வாய்ந்த மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், மருத்துவ நிறுவனங்கள் முழு திறனுடன் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என அவா் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா்

Sunday, January 15, 2023
PG NEET
January 15, 2023
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு | தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த அன்புமணி கோரிக்கை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முதுநிலை மருத்துவப் படிப்புக்காக மார்ச் 5ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் நிரம்பி விட்டன. கடந்த சில நாட்களாக விண்ணப்பிக்கும் தமிழர்களுக்கு சொந்த மாநிலத்தில் தேர்வு மையங்கள் மறுக்கப்படுகின்றன நீட் (பி.ஜி) தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த 7ம் தேதி தொடங்கப்பட்டாலும் கூட, அதற்கான தகுதிகள் கடந்த 13ம் தேதி தளர்த்தப்பட்டதால், அதன் பிறகு தான் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் அதிகம் விண்ணப்பித்தனர். வாய்ப்பு மறுக்கப்படுவதால் அவர்கள் வெளி மாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் நிலை உருவாகியுள்ளது
வெகு தொலைவு பயணித்து தேர்வு எழுதுவது மன உளைச்சலை ஏற்படுத்தும். அது தேர்வு செயல்பாட்டை பாதிக்கும். தமிழகம், புதுச்சேரியில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள நிலையில், இந்த இரு மாநிலங்களிலும் அதிக தேர்வு மையங்களை தேசிய தேர்வு முகமை அமைத்திருக்க வேண்டும்
தேர்வு முகமை செய்த தவறால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும். அதன் விவரங்கள் ஆன்லைன் விண்ணப்ப தளத்தில் பிரதிபலிப்பதை தேர்வு முகமை உறுதி செய்ய வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்
Tuesday, September 20, 2022
PG NEET
September 20, 2022
Increase in NEET pass percentage this year - நடப்பாண்டில் நீட் தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு: கூடுதலாக 119 பேர் மருத்துவ படிப்பிற்கு தகுதி
நடப்பாண்டில் நீட் தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு: கூடுதலாக 119 பேர் மருத்துவ படிப்பிற்கு தகுதி
விழுப்புரம் மாவட்டத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளதால் கடந்த ஆண்டைவிட, நடப்பாண்டு கூடுதலாக 119 பேர் மருத்துவ படிப்பிற்கு செல்கின்றனர்.
இந்தியாவில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சியாகும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர்.ஆரம்பத்தில், நீட் தேர்வில் அதிகளவில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று வந்தனர்.
இந்த நிலையை மாற்றி அரசு பள்ளி மாணவர்களும், அதிகளவில் தேர்ச்சி பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இப்பயிற்சி விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனுார், காணை, கண்டமங்கலம், விழுப்புரம், வானுார், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லுார், முகையூர், மரக்காணம், ஒலக்கூர், மயிலம், வல்லம், செஞ்சி, மேல்மலையனுார் ஆகிய 14 மையங்களில் நடத்தப்பட்டு வருகிறது.வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகள் முதுகலை ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது.இப்பயிற்சியில் வாரம்தோறும் தேர்வு மற்றும் நீட் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களின் திறமையை வளர்த்து வருகின்றனர்.இத்தேர்வில் கடந்த 2019-20ம் ஆண்டு பங்கேற்ற 368 மாணவர்களில் 58 பேர் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, 2020-21ம் ஆண்டில் பங்கேற்ற 330 பேரில் 65 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதேபோன்று, நடப்பு 2021-22ம் ஆண்டில் பங்கேற்க 735 பேரில், 184 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைவிட, நடப்பாண்டில் 119 நீட் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களிடையே நீட் தேர்வு குறித்து அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக உள்ள விழுப்புரம் மாவட்ட மாணவர்களிடையே நீட் தேர்வு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Thursday, September 01, 2022
Postponement of NEET Post Graduate Consultation
September 01, 2022
நீட் முதுகலை கலந்தாய்வு ஒத்திவைப்பு
Postponement of NEET post graduate consultation to 19th September
The NEET post graduate consultation scheduled to be held today has been postponed to September 19. The NEET entrance exam for 2022 postgraduate medical courses was held on 21st May.
நீட் முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு
இன்று நடைபெற இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2022 முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது.

Tuesday, August 30, 2022
PG NEET
August 30, 2022
'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் தடுக்க கருவிழியை பதிவு செய்ய வேண்டும்
Iris should be registered to prevent impersonation in 'NEET' examination
'நீட்' தேர்வில் ஆள் மாறாட்டத்தை தடுக்க மாணவர்களின் கருவிழியை பதிவு செய்ய வேண்டும் என, சி.பி.ஐ., - சி.பி.சி.ஐ.டி., தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக, சென்னை மாணவர் உதித்சூர்யா உட்பட சிலர் மீது, 2019ல் தேனி சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்தனர்.கைதான இடைத்தரகர் கேரளா, திரூர் உன்னியலைச் சேர்ந்த ரஷீத் உயர் நீதிமன்றக் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.ஏற்கனவே விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், 'இவ்வழக்கில் தொடர்புடைய மாணவர்களுக்காக வெளிமாநில தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டம் மூலம் சிலர் தேர்வு எழுதியுள்ளனர்.
'இதுபோல் பிற மாநிலங்களில் நடந்திருக்க வாய்ப்புள்ளது. வரும் காலங்களில் இதுபோல தவறுகள் நடக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து சி.பி.ஐ., பதிலளிக்க வேண்டும்' என்றார்.இந்த வழக்கை நீதிபதி எம்.நிர்மல்குமார் மீண்டும் நேற்று விசாரித்தார். சி.பி.சி.ஐ.டி., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை:நீட் ஆள்மாறாட்ட வழக்கில், 13 பேர் கைதாகியுள்ளனர். மூன்று பேர் கீழமை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இரண்டு பேர் முன்ஜாமின் பெற்றுள்ளனர்.
தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது போட்டோ, கைரேகையை தவிர கண்ணின் கருவிழியை பதிவு செய்து பாதுகாக்க வேண்டும்.மாணவர்கள், பெற்றோர் பெயர், முகவரியை முறையாக பதிவு செய்ய வேண்டும். அதற்கு பள்ளி நிர்வாகம் அல்லது அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரியின் சான்றொப்பம் பெற வேண்டும்.இதில், மாறுபாடு இருந்தால் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான தற்காலிக அனுமதி வழங்கும் முன் ஆதார், இ.எம்.ஐ.எஸ்., எண், மாணவர், பெற்றோர் பெயர் இரட்டைப் பதிவுகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவித்தது.இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை பைசல் செய்தார்.

Monday, August 29, 2022
Postponement of NEET Consultation
August 29, 2022
Postponement of NEET - PG Counseling - NEET - PG கலந்தாய்வு ஒத்திவைப்பு
Postponement of NEET - PG Consultation
The National Medical Commission postponed it without specifying a date while it was announced to start on September 1
Postponement due to additional seats in postgraduate medical courses.
NEET - PG கலந்தாய்வு ஒத்திவைப்பு
செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது தேசிய மருத்துவ ஆணையம்
முதுநிலை மருத்துவ படிப்புகளில் கூடுதல் இடங்களை சேர்க்க வேண்டியதன் காரணமாக ஒத்திவைப்பு.

Saturday, May 14, 2022
PG NEET
May 14, 2022
திட்டமிட்டப்படி மே 21ம் தேதி மருத்துவ முதுநிலை நீட் தேர்வு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
மருத்துவ முதுநிலை நீட் தேர்வு
வரும் 21ம் தேதி 2022-க்கான முதுநிலை நீட் தேர்வை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது. முதுநிலை மருத்துவ படிப்புக்கான 2022ம் ஆண்டு நீட் தேர்வை தள்ளி வைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆறுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அவற்றில், ‘ஏற்கனவே 2021ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் கலந்தாய்வு தற்போது நடைபெறுவதால், 2022க்கான தேர்வை நடத்தினால் பெரும் குழப்பம் ஏற்படும். எனவே, வரும் 21ம் தேதி நடைபெறும் முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
நீதிபதி டி.ஒய்.சந்திராசூட் அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் உட்பட அனைவரும். ‘2021-க்கான முதுநிலை மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைக்காதவர்கள், 2022ம் ஆண்டுக்கான நீட் தேர்வு எழுத வாய்ப்புள்ளது. எனவே, வரும் 21ம் தேதி நடைபெறும் 2022ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும்,’ என கோரினர். ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா பாட்டி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘முதுநிலை நீட் தேர்வை வரும் 21ம் தேதி நடத்த தடை விதிக்க முடியாது. இது, அரசின் கொள்கை சார்ந்த விஷயம் என்பதால் நீதிமன்றம் அதில் தலையிட விரும்பவில்லை. தேர்வு தேதியை மாற்றக்கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது,’ என அறிவித்தனர்.

Thursday, May 12, 2022
Friday, February 04, 2022
PG NEET
February 04, 2022
2022-ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தள்ளிவைப்பு: ஒன்றிய அரசு தகவல்
மார்ச் 12-ம் தேதி 2022-ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்வுகள் 6 முதல் 8 வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2021-ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருவதால் 2022-ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கும், எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
அந்தவகையில், 2022 கல்வியாண்டிற்கான மருத்துவ மேற்படிப்புக்கு NEET PG 2022 நீட் தேர்வுக்கு மார்ச் 12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் 2021-ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருவதால் 2022-ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படடுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.