Thursday, May 15, 2025
Sunday, July 28, 2024
Friday, May 03, 2024
Wednesday, January 31, 2024
தமிழ் வழி படிப்பு சான்றிதழ்; பல்கலைகளில் இனி பெறலாம்
தமிழ் வழி படிப்பு சான்றிதழ்; பல்கலைகளில் இனி பெறலாம் Certificate of Study in Tamil medium; You can now get it in universities
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு, அரசு பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய, 2010ல் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, நேரடி நியமனத்திற்கான காலியிடங்களில், 20 சதவீதம் பணியிடங்களை, தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய, அந்த சட்டம் வழிவகை செய்தது. ஒன்றாம் வகுப்பு முதல் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை, முழுமையாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதை ஏற்று, சட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதில், பள்ளிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில், சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் அல்லது உரிய அலுவலரிடமிருந்து, தமிழ் வழியில் கல்வி கற்றதற்கான சான்றிதழ்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, உயர் கல்வி, வேளாண், மக்கள் நல்வாழ்வு, கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம், சட்டத்துறை ஆகியவற்றின் எல்லைக்குட்பட்ட கல்லுாரிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில், அக்கல்லுாரிகள் ஏற்கனவே இணைவு பெற்றிருந்த, பல்கலைப் பதிவாளரிடம், தமிழ் வழியில் கல்வி கற்றதற்கான சான்றிதழ்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என, அரசு அறிவித்துள்ளது
Tuesday, September 05, 2023
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்!
Tamil Nadu government letter to the governor regarding the appointment of the university vice-chancellor!
ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்
66 "மாநில பல்கலையில் துணைவேந்தரை நியமிக்க யுஜிசி விதிகளை பின்பற்றினால் போதுமானது; துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை” – பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசு பதில் கடிதம் அனுப்பியுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைகழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. இதனை நிரப்புவதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக அளுநருக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. துணைவேந்தரை தேர்ந்தெடுக்க யுஜிசி பிரதிநிதியை சேர்க்க வேண்டுமென ஆளுநர் நிபந்தனை விதித்ததால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றின்னால் போதும் என்றும், உறுப்பினரை புதிதாக சேர்க்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Friday, August 04, 2023
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.க்கு ‘ஏ பிளஸ்’ அந்தஸ்து
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.க்கு ‘ஏ பிளஸ்’ அந்தஸ்து
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு ‘ஏ பிளஸ்’ அந்தஸ்தைதேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழு (நாக் கமிட்டி) வழங்கியுள்ளது. இதுகுறித்து திறந்தநிலை பல்கலை. பதிவாளர் சு.பாலசுப்ரமணியன் (பொறுப்பு) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திறந்தநிலை பல்கலைக்கழகம் 2002-ம் ஆண்டு தமிழக அரசால்நிறுவப்பட்டது. இது பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) 2எப், 12பி தகுதி பெற்றுள்ளது. தற்போது தொலைநிலைக் கல்விமுறையில் படிப்புகளை வழங்கும்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.க்கு நாக்கமிட்டி 4-க்கு 3.32 புள்ளிகளை வழங்கியுள்ளது. இதன்மூலம் ‘ஏ பிளஸ்’ தகுதியை பெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. கற்றல், கற்பித்தல், மதிப்பீடு, ஆராய்ச்சி, உள்கட்டமைப்புகள், கற்றல் வளம், மேலாண்மை, தலைமைத்துவம் உள்ளிட்ட அளவுகோல்களை மையமாக கொண்டு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் 16 திறந்தநிலை உயர்கல்வி நிறுவனங்களில் நாக் கமிட்டியின் தரவரிசையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. 2-ம் இடத்தில் உள்ளது. பழங்குடியினர், திருநங்கைகள், சிறைவாசிகள், சமூகத்தில் பின்தங்கியோருக்கு உயர்கல்வி வழங்க எடுத்து வரும் முயற்சிகளுக்கும் நாக் கமிட்டி பாராட்டு தெரிவித்துள்ளது.
Wednesday, July 05, 2023
Wednesday, March 22, 2023
பல்கலையில் பேராசிரியர் ஆக விருப்பமா?
தமிழ்நாடு சட்ட பல்கலையில் உதவி பேராசிரியர் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது
பல்கலையில் பேராசிரியர் ஆக விருப்பமா தமிழ்நாடு சட்ட பல்கலையில் உதவி URAR LAW UNIVERSITY பேராசிரியர் காலியிடங் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
காலியிடம்:
தொழில் சட்டம் 1. அரசியல் சாசனம் 4, அறிவுசார் சொத்துரிமை 4, சர்வதேச சட்டம் 1, சுற்றுச்சூழல் 1. தொழிலாளர் 3, மனித உரிமை 1. ஆங்கிலம் 4. பொருளாதரம் 3.
அரசியல் அறிவியல் 2, கம்ப்யூட்டர் சயின்ஸ் 4 உட்பட மொத்தம் 60 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: குறைந்தது 55 சதவீத மதிப்பெண்ணுடன் (எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் 50%) தொடர்புடைய பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : "The Registrar, the Tamil Nadu Dr Ambedkar Law University, Chennai - 600 028
விண்ணப்பக்கட்டணம்: ரூ.1180. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.590
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு.
கடைசிநாள் : 5. 1.2023 மாலை 5:45 மணி
விபரங்களுக்கு : tndalu.ac.in
Thursday, September 01, 2022
சென்னைப் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு - செப்.24-இல் உடனடித் தேர்வு
செப்.24-இல் உடனடித் தேர்வு
சென்னை, ஆக. 31: கடந்த ஏப்ரல் மாதம் நடை பெற்ற பருவத் தேர்வு முடிவுகள் வியாழக்கி ழமை வெளியிடப்படவுள்ள நிலையில், உடன டித்தேர்வு செப்.24-ஆம் தேதி நடைபெறவுள்ள தாகசென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள் ளது.
இது குறித்து அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இளநிலை, முது நிலை மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த பருவத் தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் செப்.1-ஆம் தேதி வியாழக் கிழமை www.unom.ac.in என்ற இணையத எத்தில் வெளியிடப்படும். இதையடுத்து மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாண வர்கள் செப். 5-ஆம் தேதி முதல் செப்.14 வரை www.unom.ac.in என்கிற இணையதள முகவ ரியில் கையொப்பமிட்டு 300 ரூபாய் வரைவு காசோலையினை The Registrar university of madras என்கிற பெயரில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும்.
ஆறாவது பருவத்தில் ஒரு தாள் மற்றும் அரி யர் வைத்துள்ள இளநிலை மாணவர்களுக்கு உடனடி எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும்.
முதுநிலை மாணவர்கள் நான்காவது பருவத் தேர்வில் ஒரு அரியர் வைத்திருந்தால் அவர்க ளுக்கும் உடனடியாக எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு நடைபெறும். இவர்கள் தாங் கள் பயின்று கல்லூரி மூலமாக செப். 5 முதல் செப். 14-ஆம் தேதி வரை www.unom.ac.in என்கிற இணையதள முகவரியில் இளநிலை மாணவர்கள் ரூ.300, முதுநிலை மாணவர்கள் ரூ.350, எம்.பி.ஏ.,எம்.எல்.சட்டப்படிப்புமாண வர்கள் ரூ.600- உடனடி தேர்வுக்கான கட்ட ணமாக செலுத்த வேண்டும். சிறப்பு தேர்வு செப். 24- ஆம் தேதி நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, August 30, 2022
சிறப்பு துணை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சலுகை
பேட்டை, ஆக.29 நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2019 2020-ம் கல்வி ஆண்டில் இளங்கலை இளம் வணிகவியல் மற்றும் இளம் அறிவியல் பாடங்களில் அனைத்து பிரிவுகளிலும் சேர்ந்துப்ப யின்ற மாணவர்கள் ஏப்ரல் 2022-ல் நடைபெற்ற ஒன்று முதல் 5-ம் பருவத் தேர்வில் முழுமையாக தேர்ச்சி பெற்று 6-ம் பருவத் தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாத மற்றும் 6-ம் பருவத் தேர்வில் முழுமையாக தேர்ச்சி பெற்று ஒன்று முதல் 5-ம் பருவத் தேர்வு வரையிலான பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு (எழுத்து தேர்வு அல்லது செய்முறைத் தேர்வு) சிறப்பு துணைத் தேர்வுகள் வருகிற 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வுக் கட்டணம் ரூ.1000 ஆகும்.
மேலும், இறுதி பருவமாகிய (இளநிலை எனில் 6-ம் பருவம், முதுநிலை எனில் 4-ம் பருவம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் எனில் 2-ம் பருவம்) ஏப்ரல் 2022 தேர்விற்கு தகுதியுடைய வருகைப்பதிவு இருந்தும், தேர்வுக்கட்டணம் செலுத்த பல்கலைக்கழகம் மூன்று கடைசி வாய்ப்புகள் வழங்கிய போதும் சில மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தவில்லை. ஆதலால், அவர்களின் நலன் கருதி உரிய கட்டணம் செலுத்தி சிறப்பு தேர்வு எழுத பல்கலைக்கழகம் அமைதி வழங்கியுள்ளது. எனவே, அவ்வாறு உரிய கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்ப டுத்திக்கொள்ளலாம்.
மேற்கூறிய சிறப்புத்துணைத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் வருகிற 1-ந் தேதி வரையில் பல்கலைக்கழக இணையதளத்தின் (www.msuniv.ac.in.) வழியாக தேர்வுக்கட்டணமாகிய ரூ.1000 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
மேற்கூறிய சிறப்பு துணைத்தேர்வுகள் மற்றும் சிறப்பு தேர்வுகள் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து மட்டுமே நடத்தப்படும். தேர்வு அனுமதிச்சீட்டை மாணவர்கள் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இத்தேர்வுகளின் அட்டவணை தேர்விற்கு 5 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்படும். எனவே, மேற்கூறிய சிறப்பு துணைத் தேர்வு அல் லது சிறப்பு தேர்வுகளுக்கு தகுதியுடைய மாணவர்கள் அந்தந்த தேர்வுகளுக்கான கால அட்டவணையை கடைபிடித்து தேர்வு எழுத கேட்டுக் கொள்ளப்படுகிறர்கள்.
மேலும் நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாத மாணவர்கள் தேர்வாணையர் அலுவலகத்தை தேர்வு நாட் களில் அணுகி தேர்வு எழுதலாம். இந்த தகவலை, பல்கலைக்கழக பதிவாளர் (பொ) அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
Wednesday, August 17, 2022
3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
சென்னை: 3 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆணைகளை வழங்கினார்.
அழகப்பா, திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக என்.சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 35 ஆண்டுகால ஆசிரியப் பணி, ஆராய்ச்சி பணி அனுபவமும், 17 ஆண்டு நிர்வாக அனுபவமும் கொண்டவர்.
மேலும், பல்வேறு விருதுகள் பெற்றுள்ள சந்திரசேகர், 21 முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்காக 13 வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக முனைவர் ஜி.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 27 ஆண்டுகால ஆசிரியப் பணி, ஆராய்ச்சி பணி அனுபவமும், நிர்வாகப் பணி அனுபவமும் கொண்டவர். 8 ஆய்வுப் பணிகளை நிறைவேற்றி உள்ளதுடன், தேசிய, சர்வதேச மாநாடுகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.
மேலும், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரிலான வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுள்ளார். கல்விப் பணி, ஆராய்ச்சி தொடர்பாக 22 நாடுகளுக்கு சென்றுவந்தவர். 25 முனைவர்பட்ட மானவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழக துணைவேந்தராக டி.ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார். 32 ஆண்டுகால ஆசிரியப் பணி, ஆராய்ச்சி பணி அனுபவமும், 11 ஆண்டு நிர்வாகப் பணி அனுபவமும் கொண்டவர்.
மேலும், வேளாண் ஆராய்ச்சியில் விரிவான அனுபவம் கொண்ட இவர், 11 புதிய பயிர் வகைகளை வெளியிட்டுள்ளார். 16 புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடித்துள்ளார். 22 புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
Thursday, July 28, 2022
மீன்வள படிப்புகள் - வழங்கப்படும் படிப்புகள்& கல்வி வளாகங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 8
Friday, July 15, 2022
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அனைத்துத் துறைகள் சார்ந்த படிப்புகளுக்கும் பாடங்கள் கற்பிக்க தற்காலிக உதவி பேராசிரியர்கள் நியமனம்!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அனைத்துத் துறைகள் சார்ந்த படிப்புகளுக்கு உண்டான பாடங்கள் கற்பிக்க தற்காலிக உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு ( UGC ) விதிகளின்படி உதவிப் பேராசிரியர் பணிக்கு Ph.D./SET/NET கல்வித்தகுதி உடையவர்கள் மட்டும் கயவிபரக்குறிப்புடன் அனைத்து அசல் மற்றும் சான்றொப்பமிட்ட நகல்களுடன் கலையியல் புலம் , ( Faculty of Arts ) மொழிப்புலத்திற்கு ( Faculty of Languages ) 18-07-2022 ( திங்கள் கிழமை ) அன்று காலை 11.00 மணிக்கும் மற்றும் அறிவியல் புலத்திற்கு ( Faculty of Science ) 19-07-2022 ( செவ்வாய் கிழமை ) காலை 11.00 மணிக்கும் இப்பல்கலைக்கழக ( அபிஷேகப்பட்டி ) வளாகத்தில் நடைபெறும் நேர்காணவில் ( Walk - in Interview ) கலந்து கொள்ளலாம் . என பல்கலைக்கழகப் பதிவாளர் ( பொறுப்பு ) முனைவர் . கு.அண்ணாதுரை தெரிவிக்கிறார்.
மேலும் கிழ்கண்ட அட்டவணைப்படி நேர்காணல் நடைபெறும்.
பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குறிய கேள்வி விவகாரம்.: துணைவேந்தர் விளக்கம்
பெரியார் பல்கலைக்கழக M.A., History பாட தேர்வில் சர்ச்சைக் கேள்வி.
சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேள்வியால் சர்ச்சை*
சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேள்வியால் சர்ச்சையாகி உள்ளது.
4 பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
முதுகலை வரலாறு 2-ம் ஆண்டு தேர்வு வினாத்தாள் பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் கூறியுள்ளார்.
உரிய விசாரணை
சர்ச்சைக் கேள்வி இடம்பெற்றது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று துணைவேந்தர் ஜெகந்நாதன் விளக்கம்.
சர்ச்சை கேள்வி குறித்து பல்கலையின் துணைவேந்தர் ஜெகநாதன் விளக்கம்!
தேர்வுக்கான வினாத்தாள் பெரியார் பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்டது இல்லை, பிற பல்கலை / கல்லூரிகளில் தயார் செய்யப்பட்டது.
இது குறித்து என் கவனத்துக்கு வரவில்லை,உரிய விசாரணை நடத்தப்படும்.
கேள்வி குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மறு தேர்வு குறித்து பரிசீலிக்கப்படும்.
கசிந்துவிடும் என்பதால் முன்கூட்டியே வினாத்தாள்களை படிப்பதில்லை.
Friday, June 17, 2022
TNTEU- Submission of M.Phil Research Proposal for 2021 -2022 Batch – Reg.
TNTEU- Submission of M.Phil Research Proposal for 2021 -2022 Batch – Reg.
*******
I am by direction, to inform you that the Colleges of Education affiliated to Tamil Nadu Teachers Education University, offering M.Phil (One Year) Semster Pattern Programme adhere with M.Phil Regulations and Syllabus from the academic year 2020-2021 onwards. The Principal shall constitute a three member Research Advisory Committee including the supervisor of the candidate at the M.Phil level to monitor the research activities of the College.
The students (admitted during the academic year 2021-2022 only) should submit one research proposal (not exceeding 7 pages) as per the guidelines of the Research Advisory Committee of the concerned College. The Research Advisory Committee shall scrutinize the research proposal and duly signed and forward to the Controller of Examinations, Tamil Nadu Teachers Education University for approval in the prescribed Excel format to the following Email ID: tnteumphilresearch@gmail.com and the hard copy of the same should be addressed to the Controller of the Examinations on or before 06.07.202 GUIDELINES FOR SUBMISSION OF M.Phil RESEARCH PROPOSAL
Every M.Phil. candidate should submit his/her research proposals in the format as given below.
1.0 Statement of the Problem
State the research problem that you have chosen. A problem often implies that a controversy or difference of opinion exists. Research problems can be derived from theory, prior research results, or personal observation and experiences.
2.0 Title of Study
Write the title of your research problem.
3.0 Significance of the Study
Briefly mention the usefulness of the research. Indicate the benefits of the research findings. 4.0 Review of Related Literature Make a brief review of literature relevant to your research problem.
5.0 Hypotheses
Formulate a major hypothesis based on the variables of your research problem. You can formulate some minor hypotheses, too. Hypotheses should be generally based on prior research and / or theory. The hypotheses can be stated in a declarative or question form.
6.0 Methods
6.1 Subjects:
Indicate the population from which you plan to select the sample.
Indicate the sample size: The number of subjects to be selected from the population.
Sampling technique: Indicate where and how the subjects are to be selected.
6.2 Procedure:
Outline the research plan:
Explain the procedure that you are going to follow in carrying out the study. Indicate what data will be needed and what data gathering devices (research tools) will be used.
6.3 Data Analysis:
Explain the methods that will be applied in analyzing the data based on the hypotheses stated CLICK HERE TO DOWNLOAD
Monday, May 30, 2022
Wednesday, March 30, 2022
பல்கலை நுழைவுத் தேர்வு இரண்டு முறை நடத்த திட்டம்
அடுத்த மாதம்
நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலைகளில் இளநிலை படிப்பில் சேர, 'கியூட்' எனப்படும், பல்கலை பொது நுழைவுத் தேர்வு, நடப்பு கல்வியாண்டில் இருந்து நடத்தப்பட உள்ளது.இந்த ஆண்டுக்கான தேர்வு விண்ணப்பம் அடுத்த மாதம் 2ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளது. இது குறித்து யு.ஜி.சி., தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியுள்ளதாவது:மத்திய பல்கலைகளில் இளநிலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், கியூட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. பல தனியார் பல்கலைகளும், கியூட் தேர்வு மதிப்பெண்களை தங்கள் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ள முன் வந்துள்ளன.அடுத்த கல்வியாண்டு முதல், இரண்டு முறை கியூட் நுழைவுத் தேர்வை நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | அரசு பள்ளியில் மகனை சேர்த்த எஸ்.பி. - சமூக வலைதளங்களில் பாராட்டு மழை
பிளஸ் 2 பாட திட்டத்தின்படியே, இந்த நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது. அதனால், மாநில கல்வி வாரிய மாணவர்களுக்கு இந்தத் தேர்வு எழுதுவது கடினமாக இருக்காது. மேலும், இதற்காக, 'கோச்சிங்'எனப்படும் கூடுதல் பயிற்சியும் தேவையில்லை.பல முன்னணி கல்வி நிறுவனங்கள், 100 சதவீத, 'கட் ஆப்' நிர்ணயிக்கின்றன. பிளஸ் 2 தேர்வில், 98 சதவீதம் பெற்றவர்கள் கூட இந்தக் கல்லுாரிகளில் சேர முடியாத நிலை உள்ளது. இனி அது தடுக்கப்படும். வாய்ப்பு
மேலும், நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள கல்லுாரியிலும் சேருவதற்கான வாய்ப்பு இந்த நுழைவுத் தேர்வு மூலம் கிடைக்கும்.புதிய தேசிய கல்விக் கொள்கையிலும், இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து கூறப்பட்டுள்ளது. தற்போது, இந்த தேர்வு முறை நாடு முழுதும் உள்ள மத்திய பல்கலைகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. தனியார் கல்வி நிறுவனங்களும் இதில் இணைந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
Tuesday, March 29, 2022
அங்கீகாரமற்ற தொலைநிலை படிப்பு - அண்ணாமலை பல்கலைக்கு எச்சரிக்கை!
தொலைநிலை படிப்பை நடத்த, மத்திய அரசின் பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற வேண்டும். அங்கீகாரம் பெறாத படிப்புகளை படித்தால், உயர் கல்வியில் சேர முடியாது; வேலை வாய்ப்பும் கிடைக்காது. எனவே, அங்கீகாரம் இன்றி, தொலைநிலை படிப்பை நடத்த, யு.ஜி.சி., தடை விதித்துள்ளது. ஆனால், தமிழக அரசும், உயர் கல்வி துறையும், சம்பந்தப்பட்ட பல்கலைகளும் கவலைப்படாமல், அங்கீகாரம் இன்றி படிப்புகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், யு.ஜி.சி., செயலர் ரஜனீஷ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிவிப்பு:சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, யு.ஜி.சி., அங்கீகாரம் பெறாமல், தொலைநிலை படிப்புகளில் மாணவர்களை சேர்த்து வருகிறது. இது, தொலைநிலை படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகளை முழுமையாக மீறும் செயல். யு.ஜி.சி., அங்கீகாரம் பெறாமல், எந்த உயர் கல்வி நிறுவனமும், தொலைநிலை, திறந்த நிலை மற்றும், 'ஆன்லைன்' படிப்புகளை நடத்த அனுமதி கிடையாது.
இதையும் படிக்க | 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதாமல் ஒரே நாளில் 2.9 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்
அண்ணாமலை பல்கலைக்கு, 2014- - 15ம் ஆண்டு வரை மட்டுமே, தொலைநிலை படிப்புகளை நடத்த அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதன்பின், எந்த படிப்புக்கும் அங்கீகாரம் பெறவில்லை. எனவே, யு.ஜி.சி., அங்கீகாரம் பெறாமல், அண்ணாமலை பல்கலை நடத்தும் படிப்புகள் செல்லத்தக்கதல்ல. அந்த படிப்புகளுக்கும், அதனால், வேலைவாய்ப்பு கிடைக்காமல் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும், அந்த பல்கலையே முழு பொறுப்பு. எனவே, அப்பல்கலை நடத்தும் தொலைநிலை படிப்புகளில், மாணவர்கள் சேர வேண்டாம். அங்கீகாரம் பெறாத பட்டப் படிப்புகளில், மாணவர்களை சேர்த்து வருவது மிகவும் ஆபத்தானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சக ஆசிரியையிடம் 16 லட்சம் மோசடி - பள்ளி தலைமை ஆசிரியைக்கு ஓராண்டு சிறை தண்டனை
ஏற்கனவே, யு.ஜி.சி., அங்கீகாரம் இல்லாமல், அண்ணாமலை பல்கலை தொலைநிலை படிப்புகளில் ஏராளமானோர் சேர்ந்து படித்தனர். அவர்களில் பலர், வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, உயர் கல்வி பெற முடியாமல் பெரும் ஏமாற்றம் அடைந்து, எதிர்கால வாழ்வை இழந்துள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணை வேந்தர் நியமனம்!
இதையும் படிக்க | ஆசிரியர் செயல் திறன் சுய மதிப்பீடு 2021 - 2022 | மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.
துணை வேந்தரை நியமிக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கும் சூழலில் சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் பேராசிரியராக தற்போது பணியாற்றி வரும் குமாரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமித்துள்ளார்.





