Breaking

Showing posts with label PGT. Show all posts
Showing posts with label PGT. Show all posts

Tuesday, September 19, 2023

September 19, 2023

முதுநிலை ஆசிரியா்கள் காலிப்பணியிடங்கள்: பட்டியல் அனுப்ப உத்தரவு



முதுநிலை ஆசிரியா்கள் காலிப்பணியிடங்கள்:பட்டியல் அனுப்ப உத்தரவு

தமிழக அரசுப் பள்ளிகளில் அடுத்த ஓராண்டுக்குள் ஏற்படவுள்ள முதுநிலை ஆசிரியா்கள் காலிப்பணியிடங்களின் பட்டியலை அனுப்பி வைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநா் எஸ்.கோபிதாஸ் (மேல்நிலைக்கல்வி), அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: CLICK HERE TO DOWNLOAD PDF தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் அடுத்த ஓராண்டுக்குள் ஏற்படவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களின் காலிப்பணியிட விவரங்கள் கணக்கெடுக்கப்பட உள்ளன. இதையடுத்து தங்கள் எல்லைக்கு உட்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள நேரடி நியமன காலிப்பணியிட விவரங்களை தயாா் செய்ய வேண்டும்.

அதன்படி கடந்த ஜூன் 1 முதல் 2024 மே 31-ஆம் தேதி வரை ஓய்வு பெறவுள்ள முதுநிலை ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா்கள் மற்றும் கணினி பயிற்றுநா்களின் விவரப் பட்டியலை பணியிடம் வாரியாக தனித்தனியாக தயாா் செய்து துரிதமாக இயக்குநரகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

இதில் எவ்வித தவறுகளும் நடைபெறாதவாறு பணிகளை உரிய முறையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் செய்து முடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, September 10, 2023

September 10, 2023

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை எண்ணும் எழுத்தும் திட்டத்தில் இருந்து விடுவிக்க வேண்டும்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை எண்ணும் எழுத்தும் திட்டத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் - மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை எண் ணும் எழுத்தும் திட்டத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன

மதிய உணவு

மாணவர்கள் காலாண்டு தேர்வை எதிர்கொள்ள உள்ள நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை எண்ணும் எழுத்தும் திட்டத்தில் இருந்து விடுவித்து, மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் திறனை வளர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்,அனைத்து அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் மதிய உணவு அளித்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Friday, March 24, 2023

March 24, 2023

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள், இனி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு / பணி மாறுதல் பெற முடியாது - நீதிமன்றத் தீர்ப்பினால் யாருக்கு நன்மை? யாருக்கு தீமை?

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக இனிமேல் முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றவர்கள் வரவே முடியாது என்றும், பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே வரமுடியும் என்றும் வந்துள்ள நீதிமன்றத் தீர்ப்பினால் யாருக்கு நன்மை? யாருக்கு தீமை?

பட்டதாரி ஆசிரியராக இருக்கும் ஒருவர் தம்முடைய பட்டதாரி ஆசிரியர் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு முதுகலை ஆசிரியர்/ உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் என்ற இரண்டு பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறுகிறார். (உரிய தகுதியைப் பொறுத்து)

முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றவுடன் அந்தத் தேதியை அடிப்படையாகக் கொண்டு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறுகிறார். @kaninikkalvi

பட்டதாரி ஆசிரியர் பணிக்காலத்திற்காக அவருக்குக் கிடைத்தது முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு.

ஆனால் இவ்வளவு நாள்களாக விதிகளைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குழப்பத்தால் அவர் முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்ற பிறகும் கூட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற்று இருந்தார். அவ்வாறு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகவும் வந்தார். ஆனால் அவ்வாறு வருவது அவருக்கு பதவி உயர்வு அல்ல. பணிமாறுதல் மட்டுமே. ஏனெனில் முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இரண்டும் சமமான ஊதிய அமைப்பைக் கொண்டவை. பட்டதாரி ஆசிரியராக இருந்து அந்தப் பணிக்காலத்தை வைத்து முதுகலை ஆசிரியராகச் சென்றவர் ஒரே நேரத்தில் அங்கு பணியாற்றும் முதுகலை ஆசிரியர் பணிக்காலத்தை வைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டியலிலும் இடம் பெறுகிறார். இங்கு பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றாத காலத்தையும் கணக்கில் கொண்டு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணிமாறுதலுக்கும் வருகிறார் என்பது எவ்வளவு பெரிய முரண்பாடு.

அதனால் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக வரக்கூடாது என்ற தீர்ப்பினால் அவர்களுக்கு எவ்வித பண இழப்பும் இல்லை; அதே போல் அவர்களுக்கு உரிமையானது எதையும் இழக்கவில்லை.

இதற்கு முன்னர் ஆண்டுக்கு 500 முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் 500 பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெற்றார்கள். 300 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் வெறும் 50 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பயன்பெற்றார்கள். அதில் 250 பேர் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களாக இருந்து பணிமாறுதலில் வந்துவிட்டனர்.

இனிமேல் என்ன ஆகும்? @kaninikkalvi ஆண்டுக்கு 500 முதுகலை ஆசிரியர்களாகவும், 300 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் ஆகமொத்தம் 800 பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெறுவர். தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு போன்ற பாடங்களில் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியில் சேர்ந்தவர்கள் தங்களது மொத்தப் பணிக்காலத்திலும் ஒரு பதவி உயர்வைக் கூட காணாமல் பணிநிறைவு அடைந்த நிலை இனிமேல் வராது.

அவ்வகையில் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு எவ்வித பண இழப்பும் இல்லாமல் அதே நேரத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தங்கள் பணிக்காலத்தில் ஒரு பதவி உயர்வு பெற்று ஊதிய உயர்வினைப் பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நல்ல நிலையை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த இயக்கம் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் என்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

உண்மை நிலை என்னவென்பதை அனைத்துப்பாட பட்டதாரி ஆசிரியர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.

Wednesday, February 08, 2023

February 08, 2023

மாநகராட்சி பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்



மாநகராட்சி பள்ளிகளில் 51 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 51 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை மேயர் பிரியா வழங்கினார்.

இதுகுறித்து பெருநகர மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 229முதுநிலை ஆசிரியர்கள் ஏற்கெனவே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் மேலும் 51 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் 12 தமிழ் ஆசிரியர்கள், ஆங்கிலம் 5, கணிதம் 4. இயற்பியல் 3, வேதியியல் 5, தாவரவியல் 4, விலங்கியல் 4, வணிகவியல் 2, பொருளாதாரம் 6, வரலாறு 2, அரசியல் அறிவியல் 1, மனையியல் 2, உடற்கல்வி ஆசிரியர் 1 என மொத்தம் 51 ஆசிரியர்களுக்கு மேயர் பிரியா நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நியமிக்கப்பட்ட ஆசிரியர் களுக்கு மேயர் பிரியா,“சென்னை பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் ஆசிரியர்கள் ஒவ்வொரு வாரமும் பாடவாரியாக வாராந்திரத் தேர்வு நடத்தி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும். கற்றல் அடைவுத் திறன் குறைவாக உள்ள மாணவர்களை பாடப்பிரிவுகளின் அடிப்படையில் கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்.

அன்றன்று நடத்தும் பாடங்களை மாணவர்கள் ஆர்வமுடன் கற்கும் வகையில் நாள்தோறும் வீட்டுப்பாடம் வழங்கி கண்காணிக்க வேண்டும்” என்று ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, September 05, 2022

September 05, 2022

முதுநிலைக் கல்விக் கட்டணத்தில் 30 சதவீதம் வரை குறைப்பு

உயா்த்தப்பட்ட முதுநிலைக் கல்விக் கட்டணத்தில் 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக தில்லி இந்திய தொழில் நுட்ப நிறுவனம்(ஐஐடி) சனிக்கிழமை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த கல்விக் கட்டண உயா்வை கண்டித்து தில்லி, மும்பை ஐஐடி மாணவா்கள் இந்த நிறுவனத்தின் வளாகங்களில் கடந்த சில நாட்களாக மௌனப் போராட்டத்தை நடத்திவந்தனா்.

தில்லி ஐஐடி நிறுவனத்தில் புதிதாக எம்.டெக். படிப்பில் சேருபவா்களுக்கு முந்தைய ஆண்டுகளில் பெறப்பட்ட கட்டணத்தை விட 100 சதவீதம் அதிகமாக உயா்த்தப்பட்டது. முன்பு ரூ. 26,450 (விடுதி கட்டணம், உணவு மற்ற செலவுகளை தவிா்த்து) இருந்த கட்டணம் தற்போது ரூ. 53,100 ஆக உயா்த்தப்பட்டதாக இந்திய மாணவா்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியது.

இதை முன்னிட்டு இந்திய மாணவா் கூட்டமைப்பு, ஐஐடி- தில்லி, ஐஐடி-மும்பை மாணவா் கூட்டமைப்பு மற்றும் ஐஐடி-தில்லியின் அம்பேத்கா் பெரியாா் புலே படிப்பு வட்டம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து தங்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.

தில்லி- ஐஐடி வளாகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்கள், கட்டண உயா்வை ஏற்க மறுத்து சுவரொட்டிகள் வைத்து பதாகைகளை ஏந்தி வெள்ளிக்கிழமை மௌன போராட்டத்தையும் தொடங்கினா்.

இந்த நிலையில் மாணவா்களின் இந்தப் போராட்டத்தை மதிக்கும் வகையில் ஐஐடி-தில்லி கல்விக் கட்டணத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

அதில் ‘கட்டண உயா்வு‘ தொடா்பாக மாணவா்களின் ஒரு பகுதியினா் மௌனப் போராட்டத்தை நடத்தினா். இதையடுத்து, தில்லி ஐஐடியின் இயக்குனா் ஒரு குழுவை அமைத்தாா். அந்த குழு அளித்த பரிந்துரைகளைத் தொடா்ந்து, தில்லி ஐஐடியின் புதிய எம்.டெக். மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தில் 30 சதவீதக் குறைக்கப்பட்டுள்ளது.

2021-22 ஆம் ஆண்டு மாணவா்களது இரண்டாம் பருவம் (செமஸ்டா்) அல்லது அதற்குப் பிறகு சோ்ந்தவா்களுக்குக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எம்.டெக். முழுநேரக் கல்விக் கட்டணம் ஒரு பருவத்திற்கு ரூ. 25,000 என்பதிலிருந்து ரூ. 17,500 ஆக குறையும். மற்ற முதுநிலை பாட திட்டங்களின் கல்விக் கட்டணங்களும்,பிற கூறுகளின் கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘கொவைட் -19’ நோய்த் தொற்று மற்றும் பணவீக்கம் உள்ளிட்டவைகளால் நாங்கள் போராடி வரும் நிலையில் நூறு சதவீதம் கட்டணம் உயா்த்தப்பட்டது.

ஐஐடி-தில்லி நிறுவனம் தொடா்ந்து மாணவா் விரோத நிலைப்பாட்டில் நிற்க முடிவு செய்தால், தற்போதைய அமைதியான போராட்ட தீவிரப்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படும்‘ என இந்திய மாணவா்கள் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது.
September 05, 2022

காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

01.09.2022 நிலவரப்படி காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை-1 / கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

Thursday, August 11, 2022

August 11, 2022

முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதியானவர் தேவை

கீழ்கண்ட நிரந்தர முதுகலை பாட ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதியானவர் தேவை M.A. , Economics , B.Ed . , | SCA ( அருந்ததியர் )
25.08.2022 - க்குள் கல்வி அனுபவ சான்றிதழ் நகல்கள் மற்றும் விண்ணப்பங்களை பின்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

Tuesday, April 05, 2022

April 05, 2022

2013-14 ஆம் கல்வியாண்டில் தரமுயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 30.06.2024 வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு!

Friday, March 25, 2022

March 25, 2022

01.01.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் (மே.நி.க.) உத்தரவு - உடற்கல்வி இயக்குனர் நிலை 1

March 25, 2022

01.01.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் (மே.நி.க.) உத்தரவு - வணிகவியல்

March 25, 2022

01.01.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் (மே.நி.க.) உத்தரவு - பொருளியல்

Total Pageviews

Search This Blog