Breaking

Showing posts with label All Government Aided. Show all posts
Showing posts with label All Government Aided. Show all posts

Wednesday, November 19, 2025

Thursday, November 13, 2025

November 13, 2025

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

The text announces a 3% dearness allowance (DA) hike for Tamil Nadu government employees and teachers, effective July 1.

The current DA of 55% will increase to 58%.

Approximately 16 lakh government staff, teachers, and pensioners will benefit.

This will cost the state government an additional 1,829 crore rupees annually.

Tamil Nadu government employees to receive a 3% dearness allowance hike

Chief Minister Stalin has ordered a 3% dearness allowance hike for Tamil Nadu government employees and teachers. Tamil Nadu government statement:

Considering this, Chief Minister Stalin has ordered a DA hike for state government employees, on par with the central government's announced DA hike from July 1.

The current DA of 55% will be increased by 3% to 58%, effective from July 1.

This increase will benefit 16 lakh government officials, teachers, pensioners, and family pensioners.

This will result in an additional annual expenditure of 1,829 crore rupees for the Tamil Nadu government. Thus it is stated. தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர் கள் மற்றும் ஆசிரியர்க ளுக்கு 3 சதவீத அகவி லைப்படி உயர்வு வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்த ரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட் டுள்ள அறிக்கை:

தமிழக மக்கள் நல னில் அன்பும் அக்கறை யும் கொண்டு, பல சீரிய முன்னோடி நலத்திட்டங்க ளைத் தீட்டி, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களுக்கான நலத்திட் டங்களை தீட்டுவதிலும், அவற்றை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் களப் பணியாற்றுவதிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசி ரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.


1 இதைக் கருத்தில் கொண்டு, ஜூலை முதல், மத்திய அரசு அறி வித்துள்ள அகவிலைப்படி உயர்வுக்கு இணையாக, மாநில அரசு பணியாளர்க ளுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள் ளார்.

இதனால் தற்போது, 55 சதவீதமாக உள்ள அக விலைப்படி, 3 சதவீதம் உயர்த்தப்பட்டு, ஜூலை 1 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த உயர்வால், 16 லட்சம் அரசு அலுவலர் கள், ஆசிரியர்கள், ஓய் வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவர். இதனால், தமி ழக அரசுக்கு ஆண்டுக்கு, 1829 கோடி ரூபாய் கூடு தல் செலவு ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Friday, November 03, 2023

November 03, 2023

Petition to DPI for TET Exemption - AIDED பள்ளிகளில் BT/SGT களாக பணி நியமனம் பெற்றவர்கள் - TET விலக்கு கோரி DPIல் மனு

AIDED பள்ளிகளில் BT/SGT களாக பணி நியமனம் பெற்றவர்கள் - TET விலக்கு கோரி DPIல் மனு Appointed as BT/SGTs in AIDED Schools - Petition to DPI for TET Exemption

23.08.10 to 16.11.12 காலகட்டத்தில் AIDED பள்ளிகளில் BT/SGT களாக பணி நியமனம் பெற்றவர்கள் - TET விலக்கு கோரி DPIல் மனு... தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் ஏற்கனவே இருந்த துறை சார்ந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி 16.11.2012 வரை நிரந்தரப் பணியிடத்தில் நியமனம் பெற்று ஆசிரியர் தகுதித்தேர்வு நிபந்தனையுடன் கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்து , ஒரு தவிர்ப்பாணை வெளியிட தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்திட பணிந்து வேண்டுதல் சார்பாக மனு...





Monday, April 17, 2023

April 17, 2023

அரசு உதவிபெறும் பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர் வரிசையாக வழங்கிய பெற்றோர்

தூத்துக்குடி, அரசு உதவிபெறும் பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர் வரிசையாக வழங்கிய பெற்றோர் - Parents have donated the necessary materials to the government aided school in a row

தூத்துக்குடி அருகே அரசு உதவிபெறும் பள்ளிக்கு தேவையான பொருட்களை மாணவர்களின் பெற்றோர் சீர் வரிசையாக வழங்கிய சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது. பண்டாரம்பட்டி பகுதியில் சுமார் 100 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை கடந்த ஆறு ஆண்டுகளாக சீர் வரிசையாக வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சீராக வழங்கினர்.

Thursday, February 16, 2023

February 16, 2023

அரசுப் பள்ளி தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.16 லட்சம் ஊதியம் நிலுவை

அரசுப் பள்ளி தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.16 லட்சம் ஊதியம் நிலுவை

கமுதி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை ரூ.16 லட்சத்தை வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில் அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலைப் பள்ளி என 163 பள்ளிகள் உள்ளன. ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பொது நிதியிலிருந்து ஊதியம் வழங்கும் வகையில் 163 தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா்.

கடந்த 2021 மாா்ச் மாதத்திலிருந்து 2023 பிப்ரவரி மாதம் வரை கரோனா கால நிதிப் பற்றாக்குறை காரணங்களைக் காட்டி, 2 ஆண்டுகளாக ஊதியம் வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக தூய்மைப் பணியாளா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

ஒரு சில பள்ளிகளில் தூய்மைப் பணியாளா்கள் ஊதியமின்றி பணியாற்ற முன்வராததால் பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாணவா்கள் விருப்பபட்டு பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்ய முன்வந்தாலும், அதனால் ஏற்படும் சமூகப் பிரச்னைகளை பள்ளி நிா்வாகம் சந்திக்க நேரிடும் என்பதால், ஆசிரியா்களே பள்ளிகளைச் சுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு நிலுவை ஊதியத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:

கமுதி தாலுகாவில் உள்ள 163 தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலுவை ஊதியத் தொகையை, நிதிநிலைக்கு ஏற்ப விடுவித்து வருகிறோம். தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.16 லட்சம் ஊதியம் நிலுவை உள்ளது. விரைவில் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

Monday, September 05, 2022

September 05, 2022

ஆசிரியா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தக்கோரி அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள், கருப்புப் பட்டைஅணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா்.

இதுகுறித்து அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா் சங்க செயலா் டி.பிரின்ஸ் நிா்மல் கூறுகையில், புதுவை மாநிலத்தில் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள், ஓய்வூதியா்கள் 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.

புதுவையில் அண்மையில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என காத்திருந்தோம். ஆனால் அதற்கான அறிவிப்பு வெளியாகாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

எனவே ஆசிரியா் தினத்தில் எங்களது எதிா்ப்பை காட்டும் வகையில் கருப்புப் பட்டை அணிந்து பணி செய்தோம். தொடா்ந்து பலகட்ட போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றாா்.

Friday, February 25, 2022

February 25, 2022

அனைத்து அரசு நிதியுதவி/ஆதிதிராவிடர் நல உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 28.02.2022 அன்று நடைபெறுதல் சார்ந்து - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

Total Pageviews

Search This Blog