Breaking

Showing posts with label Competitive Exams. Show all posts
Showing posts with label Competitive Exams. Show all posts

Thursday, April 13, 2023

April 13, 2023

போட்டித் தேர்வு பயிற்சி மையம் - பல்கலை துணைவேந்தர் தகவல்



பெரியார் பல்கலைக்கழகத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் - துணைவேந்தர் தகவல் - Competitive Exam Coaching Center - University Vice Chancellor Information

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது, என துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெரியார் பல்கலைக்கழகம் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, தமிழக அரசின் உத்தரவுப்படி, சென்னைக்கு அடுத்தபடியாக கோவையைத் தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது. பெரியார் பல்கலைக்கழக எல்லைக்குட்பட்ட மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் தமிழக அரசின் முழு நிதி மற்றும் நிர்வாகப் பங்களிப்புடன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.

இதில் ஒரே சமயத்தில் 200 மாணவர்கள் பயிற்சி பெறலாம். பல்கலைக்கழக மாணவர்களுக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி சேர்க்கை நடைபெறவுள்ளது. சேர்க்கை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.

பயிற்சி வகுப்புகள் பல்கலைக்கழகத்தின் திருவள்ளுவர் மைய நூலகத்தின் 3-வது தளத்தில் நடைபெறவுள்ளன. இங்கு பாடம் சார்ந்த சுமார் 1,10,000 புத்தகங்களும், போட்டித்தேர்வுகளுக்கு 5,000 புத்தகங்களும் உள்ளன. போட்டித்தேர்வுகளில் விருப்பமுள்ள மாணவர்கள் பயிற்சி வகுப்பில் பங்கு பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Friday, March 31, 2023

March 31, 2023

TNPSC போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

TNPSC போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி? - Free Coaching Classes for TNPSC Competitive Exams: How to Apply?

டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் TNPSC குரூப் 1, 2, 2a,3,4 ஆகிய தேர்வுகளுக்கு கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகளை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடத்தவுள்ளது. டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் TNPSC குரூப் 1, 2, 2a, 3, 4 ஆகிய தேர்வுகளுக்கு கட்டணமின்றி இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இவ்வாண்டு அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அரசின் அறிவிப்பு வரும் முன்னரே வெற்றி பெறுவதற்கான பயிற்சிகளை அறிந்து கொள்வதுதான் நமது நோக்கமாகும்.விண்ணப்பிக்க தகுதியான மாணவர்களுக்கு கட்டணமில்லாமல் பயிற்சி அளிக்க அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் தயாராக உள்ளது. மாணவர்களின் கல்வித் தகுதியை முழுமையாக அறிந்து கொள்ள தமிழ்நாடு அரசின் தேர்வாணைய இணையதளத்தை (www.tnpsc.gov.in) பார்க்கவும்.

தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்களும்,அரசுத் துறைகளில் அனுபவம் பெற்றவர்களும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். இவ்வகுப்புகளை, அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து நடத்தி வருகிறது.பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய, அனைத்து மாணவர்களும் பயன் பெறும் வகையில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 12 ஆண்டுகளாக 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். களத்தில் நமக்கு கிடைத்த முன் அனுபவங்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகின்றோம். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 வரை வகுப்புகள் வாரந்தோறும் நடக்கும். 01.04.2023 அன்று முதல் வகுப்பு தொடங்குகிறது. மாணவர்கள் TNPSC-யின் குரூப் தேர்வுகளில் முழுமையாக பங்கேற்று தேர்வெழுதும் முழுத் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் முன்பதிவு செய்துவிட்டு வயது மற்றும் இருப்பிட ஆதாரத்தின் நகலுடன், ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப் படமும் கொண்டு வர வேண்டும். மேலும் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். பயிற்சி நடைபெறும் இடம். Dr. அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம், சிஐடியு அலுவலகக் கட்டிடம், 2வது தளம், நெ. 6/9, கச்சாலீஷ்வரர் கோயில் அக்ராஹரம், ஆர்மேனியன் தெரு, சென்னை- 600001.

பயிற்சியில் சேர விரும்புவோர், 90950 06640, 63698 74318, 97906 10961,94446 41712 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள் நம்பிக்கையோடு உறுதியாக தேர்வை எதிர்கொண்டால் எளிதாக வெற்றியை பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு 9444641712 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, March 28, 2023

March 28, 2023

ஆசிரியர் பணி: போட்டி தேர்வு கூடாது - Teacher Job: No competitive examination

ஆசிரியர் பணி: போட்டி தேர்வு கூடாது

'டெட்' என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை அறிக்கை:

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, 2012 முதல், ஆசிரியர் தகுதி தேர்வு நடக்கிறது. 2012, 2013ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும், ஆசிரியர் வேலை கிடைத்தது. பின், வேலை கிடைக்கவில்லை.

தொடர்ந்து, 2014ம் ஆண்டில் தகுதி தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 'வெயிட்டேஜ்' முறை அமல்படுத்தப்பட்டது. இதற்கு தேர்வர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, அதற்கு பதில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆசிரியர் பணி நியமனத்துக்கு மற்றொரு போட்டி தேர்வு நடத்தப்படும் என, 2018ல் அறிவிக்கப்பட்டது.

இதனால், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள், பணி வாய்ப்பு கிடைக்காமல் மீண்டும் ஒரு தேர்வு எழுத வேண்டிய நிலையில் உள்ளனர்.

'அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட போட்டி தேர்வு ரத்து செய்யப்படும்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

எனவே, ஆசிரியர் நியமனத்துக்கான போட்டி தேர்வை ரத்து செய்து, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Monday, January 23, 2023

January 23, 2023

போட்டித் தேர்வு வடிவமைப்போர் பட்டியல் வெளியானதால் சர்ச்சை

போட்டித் தேர்வு வடிவமைப்போர் பட்டியல் வெளியானதால் சர்ச்சை Controversy due to publication of competitive exam designer list

கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியிட தேர்வுக்கான பாடத்திட்டத்தை வடிவமைக்கும் குழுவில் இடம் பெற்றுள்ள பேராசிரியர்களின் விபரங்கள் வெளியாகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.

அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளுக்கு, போட்டி தேர்வு மூலம் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ரகசியமானது

இந்த தேர்வுக்கான பாடத்திட்டத்தை வடிவமைக்கும் முயற்சியில் கல்லுாரிக் கல்வி இயக்குனரகம் ஈடுபட்டுள்ளது.

பாடத்திட்டம் வடிவமைப்பதற்காக, பாட வாரியாக துறை சார்ந்த நிபுணர்கள் பல்வேறு கல்லுாரிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த சுற்றறிக்கை, கல்லுாரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தியிடம் இருந்து, தொடர்புடைய பேராசிரியர்களுக்கு, அந்தக் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் வாயிலாக அனுப்பப்பட்டு உள்ளது.

பாடத்திட்டத்தை வடிவமைக்கும் பேராசிரியர்களின் பெயர்கள், துறை வாரியாக, 14 பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த பட்டியல் ரகசியமானது; வெளியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், சமூக வலைத்தளங்களில், சுற்றறிக்கையோடு சேர்த்து, பாடம், துறை நிபுணர்களின், பணி விபரம், பணிபுரியும் கல்லுாரி, தொடர்பு எண் ஆகியவையும் பரவலாக பகிரப்படுகிறது.

கேள்விக்குறி

பேராசிரியர்கள் கூறியதாவது:

ரகசியமாக வைக்க வேண்டிய பெயர்ப்பட்டியல் பொதுவெளியில் பகிரப்பட்டுள்ளது. எனில், பாடத்திட்டங்கள் குறித்த தகவல் எந்த அளவுக்கு ரகசியம் பேணப்படும் என்பது கேள்விக்குறி தான்.

இதைக்கூட கவனமாக கையாளாதவர்கள், தேர்வை எப்படி நடத்துவர். இந்தப் பொறுப்பை, டி.என்.பி.எஸ்.சி., வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

இவ்வாறு கூறினர்.

Saturday, December 31, 2022

December 31, 2022

தமிழக அரசின் சார்பில் இயங்கும் கட்டணமில்லா போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்கள் - Free Competitive Exams Coaching Centers run by the Government of Tamil Nadu

தமிழக அரசின் சார்பில் இயங்கும் கட்டணமில்லா போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்கள் - Free Competitive Exams Coaching Centers run by the Government of Tamil Nadu

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், SSC,IBPS,RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி, நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்று தற்போது பணியிலிருக்கும் அரசு அலுவலர்களைக் கொண்டும், அனுபவம் வாய்ந்த கல்லூரி பேராசிரியர்களைக் கொண்டும் இம்மையங்களில் பயிற்சி வகுப்புகள் சிறந்த முறையில் நடத்தப்படுகிறது. இரண்டாம் நிலைக்காவலர் (ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறைக்காவலர். தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் 164 தேர்வர்களுக்கு இப்பயிற்சி மையங்களில் 3 மாத காலம் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

மேற்படி பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் அன்று நடத்தப்பட்டு அண்மையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில், இப்பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 17 தேர்வர்கள் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று அடுத்தக்கட்ட உடல்தகுதி தேர்விற்கு தகுதி பெற்றுள்ளனர்.

Total Pageviews

Search This Blog