Breaking

Showing posts with label Post Graduate Assistant. Show all posts
Showing posts with label Post Graduate Assistant. Show all posts

Friday, January 12, 2024

January 12, 2024

Post Graduate Medical Students - முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!!



முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற விதி தளர்வு.

- அரசாணை வெளியீடு

முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!! Important Notice for Post Graduate Medical Students!!!

முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான காலம், 2 ஆண்டுகளாக இருந்ததை ஓர் ஆண்டாக குறைத்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியீடு!

படிப்பை முடித்த பின் அரசு மருத்துவமனையில் பணிபுரிய விருப்பம் இல்லாதோர் ₹40 லட்சத்துக்கு பதில், ₹20 லட்சம் கட்டினால் போதும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Graduates who have completed the Post Graduate Degree/ Diploma Courses during the academic year 2022 in Tamil Nadu Government Medical Colleges Orders - Issued.

HEALTH AND FAMILY WELFARE (MCA-1) DEPARTMENT

G.O.(Ms) No.17
Dated: 11.01.2024 சோபகிருது வருடம், மார்கழி மாதம் 26-ஆம் நாள், திருவள்ளுவர் ஆண்டு 2054.

Read:

1 G.O.(Ms).No.351, Health and Family Welfare (MCA-1) Department, dated: 27.10.2023

2 From the Director of Medical Education and Research Letter Ref.No.83866/ME2/1/2023, dated: 06.11.2023 and 30.11.2023 ORDER:

In Government Order first read above, orders were issued regarding the implementation of certain bond condition for the Non- Service Post Graduates who have completed their Post Graduate Degree / Diploma Courses in Tamil Nadu Medical Colleges during the academic year 2023.

2. In the letter second read above, the Director of Medical Education and Research has requested the Government to issue necessary orders to release the certificates in respect of Non Service Post Graduates who completed their course in 2022, with the conditions laid down by the Government Order read above.

3. The Government after careful examination have proposed to accept the request of the Director of Medical Education and Research and decided to issue the following orders:-

i. The bond period for Non Service Post Graduates (Degree / Diploma) who have completed their Post Graduate courses in the year 2022 will be reduced from two years to one year (from the date of joining in the bond service) and the respective prospectus for the Post Graduate Degree course for the academic year 2019-2020 as well as for the Diploma course for the academic year 2020-2021 will be amended accordingly.

Tuesday, October 24, 2023

October 24, 2023

முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க AICTE அழைப்பு - டிச.15 கடைசி நாள்



முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க AICTE அழைப்பு Scholarships for Post Graduate Studies: AICTE Call to Apply

முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்கள் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்ட அறிவிப்பு: ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கேட் அல்லது சிஇஇடி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடவியல் ஆகியபடிப்புகளில் நடப்பு கல்வியாண்டில் (2023-24) சேர்க்கை பெற்ற முதுநிலை மாணவர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தகுதி பெறும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.12,400 உதவித் தொகையாக வழங்கப்படும். அதேநேரத்தில், முதுநிலை படிப்பை பகுதிநேரம், தொலைதூர அடிப்படையில் படிப்பவர்கள் உதவித்தொகை பெற முடியாது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் https://-pgscholarship.aicte-india.org/ என்ற வலைதளம் வழியாக நவ.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், மாணவர்களின் விண்ணப்பங்களை அந்தந்த கல்வி நிறுவனங்கள் டிச.15-க்குள் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை https://www.aicte-india.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, August 18, 2022

August 18, 2022

TRB இன்று( 18.08.22) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு



ஆசிரியர் தேர்வு வாரியம்

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் நிலை 1/ கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனம் 2020-2021

பத்திரிக்கைச் செய்தி

2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 கணினிப் பயிற்றுநர் நிலை1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) எண். 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 2002.2022 வரை கணிணி வழித்தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04,07-2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.

தற்போது விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அறிவிக்கையின்போது முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதிகளை தமிழ்வழியில் ளதாக சில விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்குரிய ஆவணங்களை விண்ணப்பிக்கும் போது முறையாக பதிவேற்றம் செய்யவில்லை. எனவே, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள். தாங்கள் தமிழ்வழியில் பயின்றதற்கான ஆவணங்களை அரசாணை (நிலை) எண். 82, மனிதவள மேலாண்மை (எஸ்) துறை நாள் 16.08.2021 -ன் இணைப்பில் கண்ட படிவத்தில் அனைத்து ஆவணங்களையும் 1ம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழில் பயின்றதற்கான சான்று, 11-12ஆம் வகுப்பு / டிப்ளமோ படிப்பு தமிழில் பயின்றதற்கான சான்று. இளங்கலைப் பட்டத்தினை (UG Degree) தமிழில் பயின்றதற்கான சான்று, முதுகலைப் பட்டத்தினை (PG Degree) தமிழில் பயின்றதற்கான சான்று. கல்வியியல் இளங்கலைப் பட்டத்தினை (B.Ed. Degree) தமிழில் பயின்றதற்கான சான்று மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலை (BPEd. Degree மற்றும் MPEd.. Degree) கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று உரிய அலுவலரின் மேலொப்பத்துடன் பெற்று தயார் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையில் தெரிவித்துள்ளவாறு உரிய படிவத்தில் பெற்று வைத்திருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பத்தில் ஏற்கனவே, தமிழ்வழி ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை 'ஆம்' என பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இவ்வாய்ப்பு வழங்கப்படும்.

எனவே, மனுதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் உள்ள இவ்விவரத்தினை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இணையதளத்தில் உரிய மாதிரிப் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட 2208.2022 முதல் 25.08.2022 பிற்பகல் 5 மணி வரை வாய்ப்பு அளிக்கப்படும். உரிய இணையதள முகவரி குறித்து பத்திரிக்கைச் செய்தி மற்றும் இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

நாள்: 18.08-2022

தலைவர்



CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog