Breaking

Showing posts with label Eng colleges. Show all posts
Showing posts with label Eng colleges. Show all posts

Friday, December 06, 2024

Wednesday, July 06, 2022

July 06, 2022

225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்!!

தமிழகத்தில் உள்ள 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடிப்படை வசதிகள், உரிய கட்டமைப்பு, உரிய பேராசிரியர்கள் இல்லாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸில் தெரிவித்துள்ளது. 476 பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்த அண்ணா பல்கலைக்கழகம், 225 கல்லூரிகளில் உரிய உட்கட்டமைப்பு வசதிகள், தகுதியான பேராசிரியர்கள், உரிய கட்டமைப்பு இல்லாததை கண்டறிந்த நிலையில் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது.

மேலும் குறைபாடுகளை 2 வாரத்திற்குள் சரி செய்தால் மட்டுமே நடப்பாண்டில் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும், இதுதொடர்பாக உரிய விளக்கமளிக்காவிட்டால் அங்கீகார நீட்டிப்பும், மாணவர் சேர்க்கைக்கும் அனுமதியும் வழங்கப்படாது என்றும் அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே பிஇ., பி.டெக்., பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு இதுவரை 1,43,313-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகவும், 96,759-க்கும் மேற்பட்டோர் கட்டணம் செலுத்தியுள்ளனர். 65,171 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

Wednesday, April 13, 2022

April 13, 2022

இன்ஜி., கல்லுாரிகளில் வகுப்புகள் எப்போது?

இன்ஜினியரிங் வகுப்புகள்

வரும் கல்வியாண்டில், இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்லுாரிகளில் வகுப்புகள் துவங்குவதற்கான கால அட்டவணையை, ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலர் ராஜிவ்குமார் அறிவிப்பு:நாடு முழுதும் உள்ள அனைத்து வகை இன்ஜினியரிங் கல்லுாரிகள் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள், ஏ.ஐ.சி.டி.இ., என்ற, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன.

ஒருங்கிணைப்பு பயிற்சி

இந்த கல்லுாரிகள், ஏ.ஐ.சி.டி.இ., வழங்கும் கால அட்டவணைப்படி, தங்கள் வகுப்புகளை நடத்த வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான கால அட்டவணையை, ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்களுக்கு, செமஸ்டர் தேர்வு விடுமுறை முடிந்து, செப்., 15க்குள் புதிய வகுப்புகளை துவங்க வேண்டும்.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, அக்டோபர் 10ம் தேதிக்குள் ஒருங்கிணைப்பு பயிற்சி வகுப்புகளை துவங்க வேண்டும். கவுன்சிலிங் வழியாகவும், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டிலும், மாணவர் சேர்க்கையை முடித்து, அக்., 25க்குள், முதலாம் ஆண்டு வகுப்புகளை துவங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog