Tamilnadu Government
November 28, 2025
Showing posts with label raining holiday. Show all posts

Friday, November 28, 2025
Tuesday, July 30, 2024
Friday, December 01, 2023
School Education Department
December 01, 2023
பள்ளிகளுக்கு மழை விடுமுறை - புதிய நடைமுறை - பள்ளிக்கல்வித் துறை தகவல்

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் ஏற்பட்டு வரும் குழப்பங்களுக்கு விரைவில் தீா்வு காணப்படும் என பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் பருவமழை காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்த முடிவை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் எடுக்கும் நடைமுறை தற்போது அமலில் இருக்கிறது.
அதன்படி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை, மழை பாதிப்புகள் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையின்படி பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்படுகிறது. அவ்வாறு விடுமுறை விடப்படும் நாட்களை ஈடுசெய்யும் வகையில் கல்வித்துறை சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தி மாணவ-மாணவிகளுக்கான கற்பித்தல் பணிகளை மேற்கொள்கின்றன. இந்த நிலையில் சில மாவட்டங்களில் மழை காலங்களில் விடுமுறை விடுவதில் சில குழப்பங்கள் ஏற்படுகிறது.
இந்தச் சூழலில் நிகழாண்டு மழை காலங்களில் விடுமுறை விடுவதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்படுகின்றன. மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்கள் விடுமுறை பற்றி முடிவெடுக்கலாம் என்ற உத்தரவு சா்ச்சையானது. இதனால் பள்ளி தலைமையாசிரியா்கள், கல்வித் துறை அலுவலா்கள் அதிருப்தி அடைந்தனா்.
அதேபோன்று வியாழக்கிழமை பலத்த மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு விடுமுறை தரப்படவில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னையை ஒட்டிய சில பகுதிகளும் வருகின்றன.
இதனால் அந்தப் பகுதிகளில் உள்ளவா்களுக்கு விடுமுறையில் குழப்பம் ஏற்பட்டது. இந்த சிக்கல்களை சரிசெய்வதற்கான மாற்று நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

Thursday, November 23, 2023
raining holiday
November 23, 2023
துாறலுக்கே லீவு கேட்பதா கலெக்டர் அதிருப்தி!!!

துாறலுக்கே லீவு கேட்பதா தஞ்சை கலெக்டர் அதிருப்தி...
''சின்ன துாறல் விழுந்தாலே பெற்றோர் பள்ளிக்கு லீவு எதிர்பார்க்கின்றனர். மழையில் நனைந்தபடியே பள்ளி சென்றதால் தான் உங்கள் முன் நான் கலெக்டராக நிற்கிறேன்'' என தஞ்சாவூர் கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கமங்கலம் கிராமத்தில் நேற்று மக்கள் நேர்காணல் முகாமில் பங்கேற்ற அவர் பேசியதாவது: மழை தொடர்பான எச்சரிக்கை வந்து விட்டாலோ சின்ன துாறல் வந்து விட்டாலோ காலையிலேயே பல பெற்றோர் எனக்கு போன் செய்து 'பள்ளிக்கு லீவு உண்டா?' என கேட்கின்றனர். மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் விடுமுறை விட வேண்டும்.நான் கேரளாவை சேர்ந்தவன். அங்கு ஜூன் 1 முதல் மழை துவங்கி விடும். பல நேரங்களில் மழையில் நனைந்தபடி பள்ளி சென்றுள்ளேன். மழைக்கு விடுமுறை என்று நினைத்து நான் வீட்டில் இருந்திருந்தால் உங்கள் முன் கலெக்டராக நின்றிருருக்க மாட்டேன். தயவு செய்து பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். வாழ்க்கையில் கல்வி மட்டும் தான் மற்றவர்களால் திருட முடியாத சொத்து. எந்த கஷ்டமானாலும் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
raining holiday
November 23, 2023
மழை நேரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது எப்படி?: கலெக்டர்களுக்கு பறந்த அறிவுரை
How to make school holidays during rainy season?: Advice for collectors - மழை நேரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது எப்படி?: கலெக்டர்களுக்கு பறந்த அறிவுரை
மழைகாலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு 7 கட்டுப்பாடுகளை முதன்மை கல்வி அதிகாரி
விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்:
தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றாலோ, போக்குவரத்து பாதிக்கப்பட்டோலோ மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். மிதமான மழைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கூடாது.
மழை நிலவரத்தை ஆராய்ந்து 3 மணி நேரத்திற்கு முன்பாகவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள் மழையின் தீவிரத்தை ஆராய்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும். மழையின் தீவிரத்தை உணர்ந்து அதிகம் பாதிக்க கூடிய குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்க வேண்டும். மாவட்டம் முழுவதற்கும் விடுமுறை அளிப்பதை தவிர்க்க வேண்டும்.
கோயில் திருவிழாக்களின் போது அளிக்கப்படும் விடுமுறையை வேறொரு நாளில் பள்ளி வைத்து ஈடு செய்ய வேண்டும். மழை காரணமாக அளிக்கப்படும் விடுமுறைகளை சனிக்கிழமைகளில் பள்ளி வைத்து ஈடு செய்ய வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் கற்க முடியும்.
மழையால் பாதிக்கப்பட்டு பள்ளிகளில் மழைநீர் தேங்கியிருந்தால், உடனடியாக மழைநீர் வெளியேற்றப்பட்டு போதுமான வசதிகள் செய்து தரப்படும். இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Wednesday, November 22, 2023
raining holiday
November 22, 2023
மழை விடுமுறை - சூழலுக்கு ஏற்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு - நடைமுறையில் சாத்தியமா?
மழை விடுமுறை - சூழலுக்கு ஏற்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு - நடைமுறையில் சாத்தியமா? Rainy holidays - School head teachers decision according to context - Practically possible?
மழைக் காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை விடப்படுவது எப்பொழுதும் உள்ள நடைமுறை. விடுமுறை விடப்படுவதற்கான முக்கிய காரணம் மாணவர்கள் மழையில் நனைந்து அதைத்தொடர்ந்து வரும் நாட்களில் நோய்வாய்ப்பட்டு விடுப்பு எடுக்காமல் இருப்பதற்காகவும் தான்.
தற்போது உள்ள தகவல் தொடர்பு வசதியில் தொலைக்காட்சி வழியாக மாவட்ட ஆட்சியர் விடுப்பு அறிவித்தால் மாவட்டம் முழுவதும் சென்றடையும் வாய்ப்பு உள்ளது.
இந்த அறிவிப்பு மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பொருந்தும் என்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பம் இன்றி முடிவெடுக்க முடியும்.
சூழலுக்கு ஏற்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தையே ஏற்படுத்தும்.
பள்ளி தலைமை ஆசிரியரால் பள்ளி விடுமுறை என்ற தகவலை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க முடியாது. முதல் நாள் மாலை 4:30 மணி வரையில்தான் தகவல்களை மாணவர்களுக்கு சேர்க்க முடியும். காலையில் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு விடுப்பு விட நினைத்தாலும் மாணவர்களுக்கு அந்த தகவல் சென்று சேர வாய்ப்பு இல்லாததால் மாணவர்கள் நனைந்து பள்ளிக்கு வந்து பள்ளி விடுப்பு என்று தெரிந்து மீண்டும் இல்லம் திரும்ப நேரிடும்.
இந்த குழப்பமான நடைமுறையினால் விடுமுறை அளிக்கும் நோக்கமே சிதைந்து விடுகிறது.
பள்ளி வேலை நாட்கள் கணக்கிடுவதிலும் ஒரு மாவட்டத்தில் சீரற்ற முறையில் இருக்கும். ஈடுசெய்யும் வேலை நாள் அறிவிப்பதிலும் குழப்பம் ஏற்படும்.
மழைக்காக விடப்படும் விடுமுறைகளை மாவட்டம் அல்லது தாலுக்கா முழுமைக்கும் மாவட்ட நிர்வாகமே அறிவித்த முன்பிருந்த நடைமுறையே சிறப்பானதாகும்.
raining holiday
November 22, 2023
பள்ளிகளுக்கு விடுமுறை தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
விடுமுறை தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம்
“தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம்”
“நாகை, மயிலாடுதுறை, மாவட்டங்களில் மாணவர்களின் பாதுகாப்பு, உள்ளூர் வானிலை நிலவரம், உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சூழலுக்கு ஏற்ப அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே விடுமுறை குறித்து முடிவு செய்யலாம்” -மாவட்ட ஆட்சியர்கள் ஜானி டாம் வர்கீஸ், மகாபாரதி உத்தரவு
நாகை மாவட்டத்தில் மழை நீடிக்காது என்பதால், பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். மழைக்காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களே விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடலாம் என்று நாகை, மயிலாடுதுறை ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Friday, November 17, 2023
raining holiday
November 17, 2023
பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிப்பதில் 7 வகையான விதிமுறைகளை பின்பற்ற பள்ளிக்கல்விதத்துறை முதன்மைச்செயலாளர் உத்தரவு

பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிப்பதில் 7 வகையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றிக்கையில், “அதி கனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிக்க | மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள்
மேலும், “லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்க கூடாது” என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, விடுமுறை குறித்த முடிவை பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்” எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, மாவட்டம் முழுவதுமான மழை நிலவரம், பாதிப்புகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும் எனவும், மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்க கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நாள்களை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை போன்ற நாள்களில் வகுப்புகளை நடத்த வேண்டும். விடுமுறை காரணமாக எந்தப் பாடங்களும் விடுபடாமல் மாணவர்களுக்கு முழுமையாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. மாணவர்கள் பாதுகாப்பு: பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி இருந்தல் கூடாது. அவ்வாறு தேங்கியிருந்தால், அவற்றை அப்புறப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன்பின்னர்தான் பள்ளிகள் செயல்பட வேண்டும்” எனவும் கூறப்பட்டுள்ளது.
Monday, July 24, 2023
Sunday, July 09, 2023
Thursday, November 03, 2022
raining holiday
November 03, 2022
கனமழை விடுமுறை அறிவிப்பு - 04.11.2022
கனமழை காரணமாக இன்று (04-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள்

1.சென்னை (பள்ளி, கல்லூரிகள்)
2.திருவள்ளூர் (பொன்னேரி, ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர் தாலுக்கா மட்டும் பள்ளிகள்)
3.காஞ்சிபுரம் (குன்றத்தூர் தாலுக்கா பள்ளி, கல்லூரிகள்)
4.மயிலாடுதுறை (பள்ளி, கல்லூரிகள்)
5.திருவாரூர் (பள்ளி, கல்லூரிகள்)
6.தஞ்சாவூர் (பள்ளிகள்)
7.நாகை (பள்ளிகள்)
புதுச்சேரி,காரைக்கால் (நாளை மற்றும் நாளை மறுநாள்) இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை கனமழை விடுமுறை அறிவிப்பு - 04.11.2022
கனமழை காரணமாக நாளை புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - அமைச்சர் நமச்சிவாயம்
தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களுக்கு நாளை ( 04.11.2022 )விடுமுறை?
இந்த பதிவை தொடர்து பாருங்கள்...உடனுக்குடன் Update செய்யப்படும்