Breaking

Showing posts with label Collector Information. Show all posts
Showing posts with label Collector Information. Show all posts

Sunday, February 12, 2023

February 12, 2023

அதிக கல்வித் தகுதியுடன் பணியில் சேர்ந்த சமையல் பணியாளர்கள் பணிநீக்கம் செய்த ஆட்சியர் உத்தரவு ரத்து

அதிக கல்வித் தகுதியுடன் பணியில் சேர்ந்த சமையல் பணியாளர்கள் பணிநீக்கம் செய்த ஆட்சியர் உத்தரவு ரத்து Cancellation of the order of the Collector dismissing the cooks who joined the service with higher educational qualifications

அதிக கல்வித் தகுதியுடன் பணியில் சேர்ந்த சமையல் பணியாளர்களை பணிநீக்கம் செய்து திருச்சி ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் சமையல் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, பணி நியமனம் செய்யப்பட்டது. இதில், அதிக கல்வித் தகுதியுடன் சிலர் பணியில் சேர்ந்ததாகக் கூறி அவர்களது பணி நியமனத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், பணி நியமனம் குறித்த விளம்பரத்தில் கல்வித் தகுதி பற்றி அறிவிப்பு எதுவும் இல்லை என்று மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

அதனை ஏற்ற நீதிமன்றம், வேலை வாய்ப்பு அறிவிப்பில், கல்வி குறித்த தகுதி இல்லை என உறுதி செய்தது. இதையடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

Thursday, January 19, 2023

January 19, 2023

இளைஞர்களுக்கு விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவை பயிற்சி: ஆட்சியர் தகவல்

ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞர்களுக்கு விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவை பயிற்சி: சென்னை ஆட்சியர் தகவல் Customer Service Training at Airports for Youth: Collector Information

சென்னை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவை பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர் களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக, பி.டி.சி. ஏவியேஷன் அகாடமி நிறுவனம் மூலம் விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவை மற்றும் தொடர்புடையை நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியை பெற 18 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 3மாதங்கள். விடுதியில் தங்கிப்படிக்க வசதி மற்றும் இப்பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகையான ரூ.20 ஆயிரத்தை தாட்கோ வழங்கும்.

பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில் AASSC (AEROSPACE AND AVIATION SKILL SECTOR COUNCIL)-யால் அங்கீரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். மேலும், இன்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஏர்இந்தியா, கோ பர்ஸ்ட், விஸ்த்ரா ஆகிய தனியார் விமான நிறுவனங்களில் பணிபுரியும் வகையில்100 சதவீத வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, சென்னைஆட்சியர் அலுவலகத்தில் உள்ளதாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தையோ, 044 2524 6344, 94450 29456 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, July 12, 2022

July 12, 2022

மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்: கலெக்டர் தகவல் - பதிவு செய்ய கடைசி நாள் 19ம் தேதி

திருவள்ளூர் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இது குறித்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு ஆண், பெண் இருபாலருக்கும் தடகளம், நீச்சல், பளுதூக்குதல், பூப்பந்து, கூடைப்பந்து, வளைகோல் பந்து, கபடி, கையுந்து பந்து, கால்பந்து, டென்னிஸ் ஆகிய போட்டியில் நடத்தப்பட உள்ளது. எனவே வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை மற்றும் 25ம் தேதி காலை 7 மணி முதல் தொடங்கி நடத்தப்பட உள்ளது. அதன்படி வரும் 21ம் தேதி காலை 7 மணி முதல் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகளம், கபடி, கால்பந்து ஆகிய போட்டிகள், 22ம் தேதி காலை 7 மணி முதல் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வளைகோல் பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து ஆகிய போட்டிகள் மேலும் 23ம் தேதி காலை 8 மணியளவில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பளுதூக்குதல் போட்டி, 23ம் தேதி காலை 7 மணியளவில் முகப்பேர் டென்னிஸ் விளையாட்டரங்கில் டென்னிஸ், நீச்சல் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது.

மேலும் 25ம் தேதி காலை 8 மணியளவில் திருவெற்றியூர் பூந்தோட்ட தெரு அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பூப்பந்து போட்டி நடைபெற உள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நபர்கள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாள் 19ம் தேதி மாலை 5 மணிவரை.

மேலும், தகவல்களை பெற திருவள்ளுர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்

Tuesday, May 17, 2022

May 17, 2022

வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

Collector Alby John Varghese said he could apply for a loan in the employment program. Report by Collector Alby John Varghese: The maximum loan for manufacturing industries can be Rs. 25 lakhs and Rs. 10 lakhs for service industries by integrating the Rural Employment Guarantee Scheme. Must be 8th grade proficient and 18 years of age or older to be eligible. There is no annual income ceiling for getting a loan. Individual entrepreneurs, manufacturing cooperatives, self-help groups, and trusts can also benefit. The public sector will be given a subsidy of 15 per cent of the project cost if they start a business in an urban area and a 25 per cent subsidy if they start a business in a rural area.

Special categories Backward, Scheduled Castes and Tribes will be given a subsidy of 25 per cent of the project cost if they start a business in an urban area and 35 per cent if they start a business in a rural area.

The Tiruvallur District Business Center has provided loans to 285 people this year and a grant of Rs 8.25 crore has been allocated for this. Those who want to get loan assistance through this scheme should apply at www.kviconline.gov.in/pmegpeportal. Further details on the project can be obtained by contacting the General Manager, District Business Center, CIDCO Business Center, Kakkalur, Tiruvallur - 602003. Thus stated in it.
கடன்பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை:

ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தினை ஒருங்கிணைத்து உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்ச கடனாக ரூ.25 லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சமும் பெறலாம். இதில் பயன்பெற 8ம் வகுப்பு தேர்ச்சியும், 18 வயது நிரம்பியவராகவும் இருப்பது அவசியம். கடனுதவி பெற ஆண்டு வருமான உச்ச வரம்பு கிடையாது. தனிநபர் தொழில் முனைவோர்கள், உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள், சுய உதவிகுழுக்கள், அறக்கட்டளைகள் ஆகியோரும் பயன் பெறலாம். பொது பிரிவினர் நகர் புறத்தில் தொழில் தொடங்கும் பட்சத்தில் திட்ட மதிப்பீட்டில் 15 சதவிதம் மானியமும், ஊரக பகுதியில் தொழில் தொடங்கினால் 25 சதவீதம் மானியமும் வழங்கப்படும்.

கலெக்டர் தகவல்

சிறப்பு பிரிவினர்களான பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினர் நகர்புறத்தில் தொழில் தொடங்கும் பட்சத்தில் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதமும், ஊரக பகுதியில் தொழில் தொடங்கினால் 35 சதவீத மானியமும் வழங்கப்படும்.

திருவள்ளூர் மாவட்ட தொழில் மையம் மூலம் இந்த ஆண்டில் 285 பேருக்கு கடனுதவியும், இதற்காக மானிய தொகையாக ரூ.8.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் கடன் உதவி பெற விரும்புவோர் இணையதள முகவரி www.kviconline.gov.in/pmegpeportalல் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இத்திட்டம் தொடர்பான விவரங்கள் பெற பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழில் பேட்டை, காக்களுர், திருவள்ளூர் - 602003 என்ற முகவரியில் நேரில் அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Thursday, April 07, 2022

April 07, 2022

நாளை (08.04.22) தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்

Statement by Chengalpattu Collector Rahul Nath. A small-scale employment camp is held every Friday at all the District Employment and Career Guidance Centers, which are affiliated offices of the Department of Employment, Department of Employment and Training, Government of Tamil Nadu. Accordingly, an employment camp will be held at the district employment office tomorrow. Job seekers who have completed 10th, 12th class, undergraduate ITI and diploma can attend this employment camp and get employment.

Those with the above qualifications and aspirations can attend the Private Sector Employment Camp to be held tomorrow at 10 a.m. at the District Employment and Career Guidance Center, located on the campus of the Government Vocational Training Center, Chengdu. It has been stated that the employment office registration of those who are employed in this camp will not be canceled. செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள அறிக்கை. தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின், வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், வெள்ளிக்கிழமைதோறும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. அதன்படி, நாளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.

மேற்காணும் கல்வித்தகுதி, விருப்பம் உள்ளவர்கள் நாளை காலை 10 மணிக்கு செங்கல்பட்டு, வெண்பாக்கம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது என கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog