Breaking

Showing posts with label 11th Std. Show all posts
Showing posts with label 11th Std. Show all posts

Monday, February 14, 2022

February 14, 2022

பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் அதிகாரிகள் ஆலோசனை

பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் அதிகாரிகள் இன்று ஆலோசனை

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தேர்வு துறை அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

தமிழகத்தில், கொரோனா தடுப்புக்கான ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடக்கின்றன. நர்சரி பள்ளிகளையும், ௧6ம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.இந்நிலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஏப்ரலில் பொதுத்தேர்வு நடத்துவதற்கு, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, பள்ளி கல்வி அதிகாரிகளும், அரசு தேர்வு துறை அதிகாரிகளும் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.இதில், பொதுத்தேர்வை எத்தனை நாட்கள் நடத்துவது; ஒவ்வொரு பாடத்துக்கும் இடைவெளி விடுவதா; தொடர்ச்சியாக நடத்தி முடிப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வு உட்பட மற்ற வகுப்புகளுக்கு எப்போது தேர்வு நடத்துவது என்றும் ஆலோசிக்கப்பட உள்ளது.பின், சுகாதார துறையினருடன் ஆலோசிக்கப்பட்டு, தேர்வு அட்டவணை இறுதி செய்யப்படும் என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tuesday, February 08, 2022

February 08, 2022

பிளஸ் 1 மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் தேர்வு

பிளஸ் 1 மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் தேர்வு

பிளஸ் 1 மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், உற்சாகமூட்டும் தேர்வு நடத்தப்படும் என்று, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பிப்., 1 முதல் நேரடி வகுப்புகள் துவங்கின. நடப்பு கல்வி ஆண்டுக்கான பாட திட்டங்களை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதேநேரத்தில், பிளஸ் 1 மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை முடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு இதுவரை எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. அதனால் அவர்களுக்கு, பொதுத்தேர்வு ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. இந்நிலையில், பிளஸ் 1 மாணவர்களை தயார்படுத்தும் வகையில், உற்சாகமூட்டும் தேர்வு நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பல மாவட்டங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து தேர்வு நடத்தப்படும்.

ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்றரை மணி நேரம் தேர்வு நடக்கும். இந்த தேர்வானது பயம் ஏற்படுத்தும் வகையில் இல்லாமல், மாணவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலான, உற்சாகமூட்டும் வகையிலான தேர்வாக நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Total Pageviews

Search This Blog