Ration Shop
April 12, 2025
Showing posts with label Ration Shop. Show all posts

Saturday, April 12, 2025
Friday, October 13, 2023
UPI
October 13, 2023
ரேஷன் கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்
ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்
ரேஷன் கடைகளில் யு.பி.ஐ வசதியை பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே கூறியிருந்தது. அதன்படி முதல்கட்டமாக இன்று (அக்.,13) முதல் சென்னையில் உள்ள கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரில் 1,500 கடைகளிலும், புறநகரில் 562 கடைகளிலும் இந்த வசதி அமலுக்கு வந்துள்ளது.

Thursday, September 07, 2023
Ration Shop
September 07, 2023
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகின்ற 18ஆம் தேதி இதற்கு விடுமுறை!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகின்ற 18ஆம் தேதி அனைத்து நியாய விலை கடைகளுக்கும் விடுமுறை.
விநாயகர் சதுர்த்தி விடுமுறையான செப்டம்பர் 18 ஆம் தேதி தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் விடுமுறைப் பட்டியலின்படி, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான விடுமுறை செப்டம்பர்17-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது.இது தற்போதுசெப்டம்பர்18-ஆம் தேதி என மாற்றி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் விநாயகர் சதுா்த்தி பண்டிகையானது செப். 18-ஆம் தேதிதான் கொண்டாடப்படுவதாக பல்வேறு கோயில்களின் நிா்வாகிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் செப்டம்பர் 18 ஆம் தேதி(திங்கள்கிழமை)விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகள் செயல்படாது என்று நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

Thursday, July 27, 2023
Ration Shop
July 27, 2023
தமிழகத்தில் வரும் ஞாயிறு ரேஷன் கடைகள் செயல்படும்!

பொது விநியோகத் திட்டம் - நியாய விலைக் கடைகளுக்கு 30.07.2023 அன்று பணி நாளாகவும், அதற்கு ஈடாக 26.08.2023 அன்று விடுமுறை நாளாக மாற்றியமைத்தல் - தொடர்பாக.
நிர்வாக காரணங்களுக்காக, அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் 30.07.2023 (ஞாயிற்றுக் கிழமை) அன்று பணி நாளாகவும், அதற்கு ஈடாக 26.08.2023 (சனிக் கிழமை) அன்று விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்
தமிழகத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூன் 24 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக இந்த முகாமானது வருகின்ற ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 20,765 நியாய விலைக் கடைகளில் நடைபெறுகின்றன.
இந்நிலையில், மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் பணிக்காக வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 30) அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பணிநாளுக்கு ஈடாக ஆகஸ்ட் 26-ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, June 11, 2023
Saturday, October 15, 2022
Tn Ration
October 15, 2022
தமிழக அரசு நியாய விலைக்கடையில் மாபெரும் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் அனைத்து மாவட்ட நியாய விலைக் கடைகளுக்கு 6,500க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணிகளை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பணி: நியாய விலைக்கடை விற்பனையாளர்
காலியிடங்கள்: 5578
தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை தொகுப்பூதியமாக மாதம் ரூ.6,250 வழங்கப்படும். ஓராண்டுக்குப் பின்னர் மாதம் ரூ.8,600 - 29,000 வழங்கப்படும்.
பணி: உதவியாளர்
காலியிடங்கள்: 925
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை தொகுப்பூதியமாக மாதம் ரூ.5,500. ஓராண்டுக்குப் பின்னர் மாதம் ரூ.7,800 - 26,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் ரூ.150, கட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்போர் ரூ.100 செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பத்தாரர் சார்ந்துள்ள வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்படையிலும், தொடர்புடைய இதர அரசாணைகள் மற்றும் சட்டப்பிரிவுகளின் கீழ் வரும் முன்னுரிமைகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் மாவட்ட வாரியான காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
Friday, October 14, 2022
Tn Ration
October 14, 2022
தமிழக ரேஷன் கடைகளில் 4,000 காலி பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி தேதி 14-11-2022 - All districts Notification Notification - Click here
தமிழக ரேஷன் கடை பணியின் பெயர் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் 4000
விண்ணப்பிக்க கடைசி தேதி 14-11-2022 விண்ணப்பிக்கும் முறை
தமிழக ரேஷன் கடை காலிப்பணியிடங்கள்
கோயம்புத்தூர் – 233 பணியிடங்கள்
விழுப்புரம் – 244 பணியிடங்கள்
விருதுநகர் – 164 பணியிடங்கள்
புதுக்கோட்டை – 135 பணியிடங்கள்
நாமக்கல் – 200 பணியிடங்கள்
செங்கல்பட்டு – 178 பணியிடங்கள்
ஈரோடு – 243 பணியிடங்கள்
திருச்சி – 231 பணியிடங்கள்
மதுரை – 164 பணியிடங்கள்
ராணிப்பேட்டை – 118 பணியிடங்கள்
திருவண்ணாமலை – 376 பணியிடங்கள்
அரியலூர் – 75 பணியிடங்கள்
தென்காசி – 83 பணியிடங்கள்
திருநெல்வேலி – 98 பணியிடங்கள்
சேலம் – 276 பணியிடங்கள்
கரூர் – 90 பணியிடங்கள்
தேனி – 85 பணியிடங்கள்
சிவகங்கை – 103 பணியிடங்கள்
தஞ்சாவூர் – 200 பணியிடங்கள்
ராமநாதபுரம் – 114 பணியிடங்கள்
பெரம்பலூர் – 58 பணியிடங்கள்
கன்னியாகுமரி – 134 பணியிடங்கள்
திருவாரூர் – 182 பணியிடங்கள்
வேலூர் – 168 பணியிடங்கள்
மயிலாடுதுறை – 150 பணியிடங்கள்
திருப்பத்தூர் – 240 பணியிடங்கள்
கள்ளக்குறிச்சி – 116 பணியிடங்கள்
திருப்பூர் – 240 காலிப்பணியிடங்கள்
நிறுவனம் தமிழக ரேஷன் கடை
பணியின் பெயர் விற்பனையாளர் மற்றும் கட்டுநர்
பணியிடங்கள் 4000
விண்ணப்பிக்க கடைசி தேதி 14-11-2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Wednesday, September 07, 2022
Tn Ration
September 07, 2022
புதிய குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கம்: செப்.10ல் குறைதீர் முகாம்!
புதிய குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கம்: சென்னையில் செப்.10ல் குறைதீர் முகாம்!
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், புதிய அட்டை வாங்குதல் உள்ளிட்டவற்றுக்கான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் சென்னையில் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.
சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் செப்டம்பர் 10 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர்-2022 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 10.09.2022 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.
மேலும், பொதுவிநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்தச் சேவையினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Thursday, June 16, 2022
Tn Ration
June 16, 2022
01.01.2022 முதல் அகவிலைப்படியை 14% அதிகரித்து 28% ஆக அனுமதித்து தமிழக அரசு உத்தரவு - செய்தி வெளியீடு எண் : 960 நாள்: 16.06.2022
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசு
அகவிலைப்படி உயர்வினால் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் 22,510 ஊழியர்கள் பயன்பெறுவர் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 01.01.2022 முதல் அகவிலைப்படியை 14% அதிகரித்து 28% ஆக அனுமதித்து தமிழக அரசு உத்தரவு!!
செய்தி வெளியீடு எண் : 960
நாள்: 16.06.2022
செய்தி வெளியீடு
நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 2202.2021 முதல் பெற ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14% அகவிலைப்படி அனுமதிக்கப்பட்டிருந்தது.
1.01.2022 முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14% அகவிலைப்படி உயர்வினை வழங்குமாறு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருமு.கூஸ்டாலின் அவர்கள் கனிவுடன் பரிசீவிந்து 1.01.2022 முதல் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பணையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 28. அகவிலைப்படி பெறவும். அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்களை பெறவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அகவிலைப்படி உயர்வினால் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக்கடைகளில் பணிபுரியும் 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2852 கட்டுநர்கள், என மொத்தம் 72510 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

Sunday, January 30, 2022
Tn Ration
January 30, 2022
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு: தமிழக அரசு புதிய உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நியாய விலைக்கடைகளில் கை ரேகை பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், க்யூ.ஆர் ஸ்கேன் செய்து பொருட்களை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைரேகை பதிவு செய்வதில் பிரச்னை எழுந்தாலும், பொருட்களை வினியோக்க வேண்டும் எனவும், குடும்ப அட்டை எண்ணை, விற்பனை முனையத்தில் பதிவு செய்து, ரேஷன் பொருட்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக மண்டல மற்றும் வட்டார அளவில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும், பயிற்சி வழங்க வேண்டும் எனவும், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.