Breaking

Showing posts with label Teacher. Show all posts
Showing posts with label Teacher. Show all posts

Sunday, August 21, 2022

August 21, 2022

'ஆன்லைன் வகுப்பின்போது பூனை வந்ததால் ஆசிரியர் டிஸ்மிஸ்..' 4.8 லட்சம் இழப்பீடு வாங்கிய ஆசிரியர்

சீனாவின் குவாங்சௌ (guangzhou) என்ற நகரத்தில் வசிப்பவர் லுவோ. ஓவிய ஆசிரியரான இவர், கடந்த ஜூன் மாதம் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பெடுத்து வந்தார். அப்போது இவரது வீட்டிலுள்ள செல்லப்பிராணியான பூனை ஆன்லைன் வகுப்பு திரையில் தோன்றியது. இந்த பூனை சுமார் 5 முறை கேமராவில் தெரிந்துள்ளது.

மெய்நிகர் (Virtual) வகுப்புகளை நடத்துகிற கல்விசார் தொழில்நுட்ப நிறுவனம், ஆசிரியர் லூவோ-வின் திரையில் பூனை திடீரென தோன்றியதாக அவரை பணியிலிருந்து நீக்கியது. அதோடு முந்தைய வகுப்பில் 10 நிமிடங்கள் தாமதாக வந்ததாகவும் குற்றம்சாட்டியது.

'ஆன்லைன் வகுப்பின்போது பூனை வந்ததால் ஆசிரியர் டிஸ்மிஸ்..' 4.8 லட்சம் இழப்பீடு வாங்கிய ஆசிரியர் - நடந்தது? கல்விசார் தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து லூவோ நடுவர் மன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்தார். மேலும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் முறையிட்டார். இதனை விசாரித்த நடுவர் மன்றம், ஆசிரியை லூவோவுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் அதன் தீர்ப்பை எதிர்த்து அந்நிறுவனம் மேல்முறையீடு செய்தது.

தற்போது இந்த வழக்கை விசாரித்த குவாங்சௌ டியானே மக்கள் நீதிமன்றத்தின் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது "முதலாளிகள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டுமெனச் சொன்னால், அவர்கள் அலுவலகத்திலிருந்து பணியாற்றுவதைப் போன்ற எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கக் கூடாது.

'ஆன்லைன் வகுப்பின்போது பூனை வந்ததால் ஆசிரியர் டிஸ்மிஸ்..' 4.8 லட்சம் இழப்பீடு வாங்கிய ஆசிரியர் - நடந்தது? நிறுவனங்களின் விதிகள் சட்டங்களுக்கு இணங்குவது மட்டுமல்லாமல், நியாயமானதாகவும் ஏற்புடையதாகவும் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஆசிரியர் லூவோவுக்கு 40,000 யுவான் (இந்திய மதிப்பில் 4.79 லட்சம் ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு ஆசிரியருக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் வகுப்பின்போது பூனை தோன்றியதால் ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Friday, July 01, 2022

July 01, 2022

அரசுப் பள்ளி வகுப்பறையை சொந்த செலவில் சீரமைத்த ஆசிரியா்

திருக்குவளை அருகே அரசுப் பள்ளி ஆசிரியா் ஒருவா் தாம் பணியாற்றும் பள்ளியில் வகுப்பறையை ரூ. 50 ஆயிரம் செலவு செய்து சீரமைத்து கொடுத்துள்ளாா்.

திருக்குவளை அருகேயுள்ள நாகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவா் அருள்ஜோதி. பசுமை சாா்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்த இவருக்கு, அண்மையில் தமிழக அரசு சாா்பில் பசுமை முதன்மையாளா் விருது மற்றும் ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கி சிறப்பித்தது. இந்நிலையில், இவா் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையில் ரூ. 50 ஆயிரத்தில் தாம் பணியாற்றும் பள்ளியில், தரைதளம் சேதமடைந்திருந்த வகுப்பறையை டைல்ஸ் பதித்தும், புதிய ஜன்னல்கள் வைத்தும், வகுப்பறை முழுவதும் வண்ணப்பூச்சு செய்து கொடுத்துள்ளாா். சீரமைப்பு செய்த வகுப்பறையை பள்ளித் தலைமையாசிரியா் பரமேஸ்வரி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்தாா். இதில் ஆசிரியா்கள் லோகநாதன், செல்வரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து, ஆசிரியா் அருள்ஜோதி கூறியது: வளா்ந்து வரும் கிராமப்புற அரசுப் பள்ளிகளை தரம் உயா்த்த நகா்ப்புற கொடையாளா்கள் மற்றும் தொழிலதிபா்கள் முன்வர வேண்டும். இதன்மூலம் நகா்புற பள்ளிகளுக்கு நிகராக கிராமப்புற அரசுப் பள்ளிகளும் உட்புற கட்டமைப்பிலும், தரத்திலும் உயா்ந்து விளங்கும் என்றாா்.

Monday, May 30, 2022

May 30, 2022

புதிய தலைமுறை ஆசிரியர் விருது’2022 - விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

புதிய தலைமுறை ஆசிரியர் விருது’2022 - விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

புதிய தலைமுறை ஆசிரியர் விருது’2022 மானுட மாற்றத்தின் ஆணிவேர்களான ஆசிரியர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஊடகத் துறையில் சமூக அக்கறையோடு திகழும் “புதிய தலைமுறை” குழுமம், "கனவு ஆசிரியர்" அமைப்போடு இணைந்து “புதிய தலைமுறை ஆசிரியர் விருது “ என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

ஆசிரியர்களை மதித்து அவர்களின் நற்செயல்களை ஊக்கப்படுத்தும் சமூகம் தம்மைத் தாமே சிறப்பித்துக் கொள்கிறது. அந்த வகையில் ஒரு மாணவனின் முழுமையான மேம்பாட்டிற்காகவும், சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் சிறந்த பங்களிப்பை ஆற்றி வரும் ஆசிரியர்களுக்கு உயர்ந்த விருதை வழங்கி உலகிற்கு அடையாளப்படுத்தும் முயற்சியே “புதிய தலைமுறை ஆசிரியர் விருது”.

அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் ஆகிய மூன்று வகைப் பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் இதற்குத் தகுதியானவர்கள், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் , தலைமை ஆசிரியர்களும் இதற்குப் பொருத்தமானவர்களே.

விருதுக்கான விண்ணப்பம் மற்றும் விருது பிரிவுகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விருதுக்குத் தகுதியானவர்களைப் பிறரும் பரிந்துரை செய்யலாம்.விண்ணப்பத்தோடு சான்றுகளை இணைத்து அனுப்ப வேண்டும். புகைப்படங்கள், வீடியோ குறுந்தகடுகள், ஊடக வெளியீடுகள்,சான்றிதழ்கள் இணைத்து தொகுத்து அனுப்பலாம்.

விருதுக்குத் தேர்ந்தெடுப்பவர்களைப் பற்றிய தரவுகள் அனைத்தும் தக்க சான்றுகளோடு ஒளி-ஒலிக் காட்சிகளாக “புதிய தலைமுறை” ஊடக குழுவினரால் தயாரிக்கப்பட்டு விருது வழங்கும் விழாவில் மேடையில் திரையிடப்படும். நடுவர்களாக சமூகத்தின் பல்துறை சாதனையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. நடுவர்களின் முடிவே இறுதியானது.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 20.06.2022

மேலும் தகவல்களுக்கு - 9840106949, 8056007208

Puthiyathalaimurai Teacher Award 2022 - Direct Link...

Monday, April 11, 2022

April 11, 2022

மாணவரை அடித்த ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

In the award city, the teacher who scored the student, was ‘suspended’.

Virudhunagar District Principal Education Officer Gnanagauri said: Velmurugan, a postgraduate zoology teacher at Chattarettiyapatti Government High School, caused a stir at the March 3 public change consultation. Then, with the help of the police, the consultation was held. Insulted a fellow teacher, in the presence of students.

A memo was sent on March 22 to explain these. He did not give a proper answer. He did not respond to a request from his superiors. Thus he was ‘suspended ’.Thus he said விருதுநகரில், மாணவரை அடித்த ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியதாவது:சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை விலங்கியல் ஆசிரியரான வேல்முருகன் மார்ச் 3ல் நடந்த பொது மாறுதல் கலந்தாய்வில் குழப்பத்தை ஏற்படுத்தினார். பின், போலீஸ் உதவியுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டது.திருப்புதல் தேர்வில் வினாத்தாள் பற்றாக்குறையை, பொதுத்தேர்வு வினாத்தாள் பற்றாக்குறை எனக் கூறி பதற்றத்தை உருவாக்கினார்.

ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

சக ஆசிரியையை, மாணவர்கள் முன்னிலையில் அவமதித்துள்ளார். இவற்றுக்கு விளக்கம் அளிக்க மார்ச் 22ல் 'மெமோ' அனுப்பப்பட்டது. அவர் உரிய பதில் தரவில்லை.அவர், வகுப்பில் மாணவரை தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக மேலதிகாரிகள் கேட்டதற்கும் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இவ்வாறு அவர் கூறினார்

Tuesday, April 05, 2022

April 05, 2022

ஆசிரியர் பணி வாங்கி தருவதாக ரூ.3.25 கோடி மோசடி

In Dindigul district, Subramaniam, 53, of Chempatty, was arrested by the district crime branch police for allegedly defrauding 38 people of up to Rs 3.25 crore by offering him a job as a teacher.

Subramanian is accustomed to the Chennai General Secretariat officials. 46, a private school teacher from the same area, told Marimuthu that the government would buy jobs through them. Subramanian bought the teaching job and asked for Rs 12 lakh. Depending on it, Marimuthu gave Rs 9.80 lakh.

But Subramanian cheated by not buying the job. Subramanian threatened to kill Subramanian when he asked for his money back. Subramaniam was found to have defrauded 38 people to the tune of Rs 3.25 crore. He was arrested by the police. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி 38 பேரிடம் ரூ.3.25 கோடி வரை மோசடி செய்த செம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியை 53, மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.

சுப்பிரமணி தனக்கு சென்னை தலைமை செயலக அதிகாரிகள் பழக்கம் உள்ளது. அவர்கள் மூலம் அரசு பணி வாங்கி தருவதாக அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் மாரிமுத்துவிடம் 46, கூறினார். ஆசிரியர் பணி வாங்கி தர சுப்பிரமணி ரூ.12 லட்சம் கேட்டார். அதை நம்பி மாரிமுத்து ரூ.9.80 லட்சத்தை கொடுத்தார்.

ஆனால் சுப்பிரமணி வேலை வாங்கி தராமல் மோசடி செய்தார். பணத்தை திருப்பி கேட்ட போது சுப்பிரமணி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து எஸ்.பி., ஸ்ரீனிவாசன் மேற்பார்வையில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., இமானுவேல் ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் வினோதா விசாரித்தனர். 38 பேரிடம் சுப்பிரமணி ரூ.3.25 கோடி வரை மோசடி செய்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tuesday, March 29, 2022

March 29, 2022

பீர் பாட்டிலால் தலைமை ஆசிரியரை குத்த முயற்சி.. பிளஸ் 2 மாணவர் கைது..!



சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவர் தலைமுடியை ஒழுங்காக வெட்டாமல் பின்புறம் கொண்டை போட்டு வந்துள்ளார். இதைக்கண்ட தலைமை ஆசிரியர், அந்த மாணவரை தனது அறைக்கு அழைத்து கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், தலைமை ஆசிரியர் அறையில் சத்தம் போட்டுக் கத்தியதுடன், டேபிளில் இருந்த பொருட்களை கீழே தள்ளிவிட்டு உடைத்துள்ளார்.

சத்தம் கேட்டு வந்த மற்ற ஆசிரியர்கள், மாணவரை சமாதானப்படுத்தி, பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளனர். பெற்றோரை அழைத்து வரச் சென்ற மாணவர், வரும்போது காலி பீர் பாட்டிலை சட்டையில் மறைத்து எடுத்து வந்துள்ளார்.

இதையும் படிக்க | TNPSC - PRESS RELEASES - COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE Results

மாணவர் செய்த செயலைப் பற்றி அவருடைய பெற்றோரிடம் தலைமை ஆசிரியர் சொல்லிக்கொண்டிருக்க, மறைத்துவைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து தலைமையாசிரியரை குத்த முயன்றிருக்கிறார் அந்த மாணவர். இதனால் பதறிப்போன தலைமையாசிரியர் சத்தம் போட, அருகிலிருந்த சக ஆசிரியர்கள் ஓடிவந்து மாணவரைப் பிடித்து அவர் கையிலிருந்த பாட்டிலை வாங்கினர்.

பயந்துபோன தலைமை ஆசிரியர் தனது அறையை உட்பக்கமாக பூட்டிக்கொண்டு, ஆத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். பள்ளிக்கு வந்த போலீசார் மாணவரை சமாதானப்படுத்தி பேசுகையில், ‘இப்படிப்பட்ட செயல்களில் ரெளடிகள்தான் ஈடுபடுவாங்க. நீ, படிக்கிற பையன்’ என்று சொல்ல, அதற்கு மாணவர், “நானும் ரெளடிதான் இப்ப என்ன பண்ணணும்” என்று எதிர்த்து பேசியுள்ளார்.

இதையும் படிக்க | 35 தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு 3 மாத தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு!

இதனிடையே, பள்ளி தலைமை ஆசிரியர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அந்த மாணவர் மீது வழக்குப்பதிவு செய்த ஆத்தூர் நகர போலீசார், மாணவரை கைது செய்தனர். மேலும், மாணவரை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
March 29, 2022

தமிழக அரசுக்கு ஓர் ஆசிரியரின் திறந்த மடல்

தமிழக அரசுக்கு ஓர் ஆசிரியரின் திறந்த மடல்

ஒரு நாட்டின் கட்டமைப்பைச் சீர்குலைக்க வேண்டுமெனில், அந்த நாட்டின் கல்விமுறையின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என எங்கோ படித்த நினைவு இப்பொழுது எட்டிப்பார்க்கின்றது.

கொரோனா காலத்தில் கற்றல் இடைவெளி என்பது மாணவருக்கும், கற்பித்தல் இடைவெளி என்பது ஆசிரியருக்கும் பெருமளவு ஏற்பட்டதன் பலனை நாம் இப்போது அறுவடை செய்துகொண்டிருக்கின்றோம்.

மாணவர்களது உடல்வயது குறைவாக இருந்தாலும், மனவயதில் தேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். காட்சி ஊடகங்களும் சரி, சமூக ஊடகங்களும் அவர்களுக்கு அத்தனையும் கற்றுக்கொடுத்திருக்கின்றன.

மாணவர்களைக் தண்டிக்கக்கூடாது என்னும் உத்தரவை ஆசிரியர்கள் கண்டிக்கவே கூடாது என்னும் மனநிலைக்கு மாணவர்கள் வந்திருக்கின்றனர்.

இன்றைக்கு ஆசிரியருக்கு ஆபாச செய்தி அனுப்பும் மாணவன், ஆசிரியரை அடிக்கத்துணியும் மாணவன், மதுகுடிக்கும் மாணவி, போதையுடன் பள்ளிக்கு வரும் மாணவன், கத்தியுடன் பள்ளிக்கு வரும் மாணவன், பள்ளி வயதில் தன்னை இழக்கும் மாணவிகள் என இப்படியான நடத்தைக் கோளாறுகள் மாணவ,மாணவியரிடம் அதிகரித்து விட்டன.

என்ன செய்தாலும் நம்மை யாரும் தண்டிக்க முடியாது என்னும் மனநிலைக்கு ஆட்பட்டுவிட்டனர் மாணவ,மாணவியர்.

இதற்குக் காரணம் தவறு செய்த மாணவர்கள் மீது, நாம் இதுவரை துறைரீதியாக பெரிய அளவில் நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகை செய்யவில்லை என்பதை, நாம் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஆசிரியரைத் தாக்கிய மாணவனை மீண்டும் அதே பள்ளிக்கு அனுமதித்தால் ஆசிரியர்களின் மனநிலை எப்படி இருக்கும்? சக மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? நடத்தைக் கோளாறுகளுக்கு ஆட்பட்ட மாணவ,மாணவியரை இந்நேரம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியிருக்க வேண்டும்.

ஆசிரியர்களைக் கண்டு மாணவர்கள் பயந்த நிலை மாறி, மாணவர்களைக் கண்டு ஆசிரியர்கள் பயப்பட வேண்டிய சூழலுக்கு நம் தமிழகப்பள்ளிகள் தள்ளப்பட்டு விடக்கூடாது. இனியும் தாமதித்தால் மேற்கத்திய நாடுகளைப் போல, வகுப்பறை வன்முறைகள் அரங்கேறத் தொடங்கிவிடும். அரசுப் பள்ளி ,கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான நடத்தைவிதிகளை மட்டுமல்ல, மீறினால் அதற்கான தண்டனைகளையும் வரையறை செய்து உடனே அதற்கான அறிவிப்பை வெளியிட தமிழ்நாடு.அரசு முன்வர வேண்டும்.

முன்பெல்லாம் 10 பேர் தவறு செய்தவர்கள் என்றால் , அதில் 9 பேர் படிக்காதவர்களாக இருந்தனர். ஆனால் இன்றைக்கு 10 பேர் தவறு செய்துள்ளார்கள் என்றால், அதில் 10 பேருமே படித்தவர்களாகவே இருக்கின்றனர் என்பது நாம் நம்முடைய கல்விமுறையின் மீது கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகின்றது.

மாணவ,மாணவியருக்கு அறிவைக் கொடுக்க பெருமுயற்சி எடுத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் அறத்தைக் கற்பிக்க அறவே மறந்துவிட்டோம்.

மாணவர்களிடம் அலைபேசிக்குத் தடைசொன்ன நாம் இன்றைக்கு அலைபேசியை அத்தியாவசிய கற்றல் உபகரணமாக மாற்றி இருக்கின்றோம்.

நீதி போதனை வகுப்புகள் இன்றைக்கு பள்ளிகளில் அறவே இல்லை. மாணவர்களுக்கு அறம் என்றால் என்னவென்று தெரிவதற்கு வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.

விதிமுறைகளுக்குக் கட்டுப்படும் விளையாட்டு வகுப்புகள் இன்றைக்கு பாடவேளைப் பட்டியலில் மட்டுமோ, அல்லது இன்னொரு பாடத்திற்கு தாரை வார்க்கபடும் பாடவேளையாக மட்டுமோ இருக்கின்றன. உடலையும், மனதையும் ஒருநிலைப்படுத்தும் விளையாட்டுக்களுக்குப் பள்ளியில் விடுமுறை விட்டால், மாணவர்களுக்கு நல்லொழுக்க நெறிகள் எங்கிருந்து வரப்போகின்றது. கற்றல் இணைச் செயல்பாடுகளான ஓவியம், பாட்டு,தோட்டம் அமைத்தல் போன்றவற்றிற்கும் பாடவேளைகளில் இடமளிக்க வேண்டும்

Scout, JRC, NSS போன்றவற்றை மாணவர்களுக்கு கட்டாயமாக்க வேண்டும். இல்லையேல் குறைந்தபட்சம் அதற்கென தனி மதிப்பெண்களையாவது அளித்து, அதற்கொரு முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும். வெறுமனே சம்பிராதயத்திற்கான நடைமுறையாக இருந்தால், இங்கு எதையும் நகர்த்த முடியாது.

பள்ளிகளில் வகுப்பறையைச் சுத்தம் செய்தல், வளாகத் தூய்மைப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுவதை என்றைக்கு இந்தச் சமூகம் தடுக்கத் தொடங்கியதோ, அதற்கான விலையை இன்று கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

மண்ணைக் கீறாமல் விவசாயம் கிடையாது. மனதைக் கீறாமல் கல்வி கிடையாது.

ஆசிரியர்களின் பிரம்புகளுக்குத் தடைவிதித்தால், காவல்துறையின் லத்திகளுக்குப் பதில்கள் சொல்ல வேண்டியிருக்கும்.

ஆசிரியர்கள் முன்னால் கைகட்டுவதைத் தடுக்கப் பார்த்து, குற்றவாளிக்கூண்டில் கைகளைக் கட்ட தயார்படுத்திக்கொண்டிருக்கின்றோம். பாடசாலைகளுக்கு கட்டுப்பாடுகளைப் போதித்து, சிறைச்சாலைகளின் கதவுகளைத் திறக்கத் தொடங்கியிருக்கின்றோம்.

நிறைவாக சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான். கல்விமுறை என்பது அறிவாளிகளை உருவாக்கவிட்டாலும் பரவாயில்லை. ஒருபொழுதும் குற்றவாளிகளை உருவாக்குவதாக இருக்கக்கூடாது.

மாணவர்களின் எதிர்காலத்தின்மீது உண்மையிலேயே நாம் அக்கறை கொள்கின்றோம் என்றால், நடத்தைவிதிகளை மீறும் மாணவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கும் அறிவிப்பை வெளியிடுங்கள். மாணவர்களது தேர்ச்சியின் மீது கட்டுப்பாடுகளை விதியுங்கள்.

ஆசிரியர்களைக் குறைசொல்லி, மாணவர்களது எதிர்காலத்தின்மீது மண் அள்ளிப்போடுவதை உடனே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்குத் தெரிந்ததைக் கொடுப்பதல்ல கல்வி, மாணவர்களுக்குத் தேவையானதைக் கொடுப்பதே கல்வி..

சிகரம்சதிஷ் எழுத்தாளர்- ஆசிரியர்

Saturday, March 26, 2022

March 26, 2022

கூட்டுறவு சங்க முறைகேட்டில் ஈடுபட்டு கைதான அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் - மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை

சேலம் அருகே கூட்டுறவு சங்க முறைகேட்டில் ஈடுபட்ட அரசுப்பள்ளி ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத் தூரில் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிக்கன நாணய சங்கம் செயல் பட்டு வருகிறது. இச்சங்கத் தில் 250க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் பணியா ளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்தில் கொளத்தூர் அடுத்ததார்க் காடு ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரி யர் பிரபு (48), தலைவராக இருந்து வந்தார். இதே போல், நங்கவள்ளியைச் சேர்ந்த சிட்டிமுருகன் (52) என்பவர் செயலாளராக இருந்து வந்தார். இச்சங் கத்தில் போலி ரசீது, நிதி மோசடி என பல்வேறு முறைகேடு நடந்திருப்ப தாக புகார் எழுந்தது.

இதையடுத்து ஓமலூர் சரக துணைப்பதிவாளர் சுவேதா மற்றும் கூட்டுறவு அதிகாரிகள் ஆய்வு செய்த னர். இதில் மத்திய கூட் டுறவு வங்கியில் இருந்து வழங்கப்படும் காசோ லைகளை திருத்தியது உள் ளிட்ட பலவகைகளில் 725 லட்சத்துக்குமேல் முறை கேடு நடந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து சங்க செயலாளரான சிட்டி முருகன் சஸ்பெண்ட்செய் யப்பட்டார்.

இந்த மோசடி தொடர் பாக வணிக குற்றப்புல னாய்வு பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் இன்ஸ்பெக் டர் சித்ராதேவி வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தினார். அதில், காசோலைகளில் திருத் தம் செய்து ரூ.24.91 லட்சம் மோசடி நடந்திருப்பதும், சங்கத்தின் தலைவர் பிரபு (48), செயலாளர் சிட்டிமு ருகன் ஆகியோர் இதில் ஈடு பட்டிருப்பதும் தெரியவந் தது. இதையடுத்து கடந்த இருதினங்களுக்கு இருவ ரும் கைது செய்யப்பட்டு, ஆத்தூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில், கைது செய்யப் பட்ட தலைவர் பிரபு, கொளத்தூர் அடுத்த தார்க்காடு ஒன்றிய நடு நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர் கைது செய்யப்பட்டது குறித்து. போலீசார் தரப்பில் இருந்து கல்வித்துறைக்கு அறிக்கை அளித்தனர். இதன்பேரில் விசாரணை நடத்திய, இடைப்பாடி மாவட்டகல்வி அலுவலர் சிவானந்தம்,ஆசிரியர் பிர புவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இச்சம்ப வம் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.
March 26, 2022

போலிசான்றிதழ் கொடுத்து 31 ஆண்டுகள் பணியாற்றிய அரசு பள்ளி ஆசிரியை - சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடிவு

Monday, March 14, 2022

March 14, 2022

உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் போக மீதமுள்ள காலிப்பணியிட விவரங்கள் !!!

உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் போக மீதமுள்ள காலிப்பணியிட விவரங்கள் !!!
 
காலிப்பணியிட விவரங்கள்

தமிழ்
காலிப்பணியிடம்- 1417
கூடுதல் தேவைப்பணியிடம்-1696
மொத்தம்-3113
உபரி ஆசிரியர்கள்- 316
நிகர காலிப்பணியிடங்கள்- 2797
ஆங்கிலம்
காலிப்பணியிடம்- 878
கூடுதல் தேவைப்பணியிடம்- 1950
மொத்தம்- 2828
உபரி ஆசிரியர்கள்- 500
நிகர காலிப்பணியிடங்கள்- 2328
கணிதம்
காலிப்பணியிடம்- 860
கூடுதல் தேவைப்பணியிடம்- 1208
மொத்தம்- 2068
உபரி ஆசிரியர்கள்- 1005
நிகர காலிப்பணியிடங்கள்- 1063
அறிவியல்
காலிப்பணியிடம்- 1681
கூடுதல் தேவைப்பணியிடம்-1812
மொத்தம்- 3493
உபரி ஆசிரியர்கள்- 827
நிகர காலிப்பணியிடங்கள்- 2666
சமூக அறிவியல்
காலிப்பணியிடம்- 1175
கூடுதல் தேவைப்பணியிடம்- 1458
மொத்தம்- 2633
உபரி ஆசிரியர்கள்- 392
நிகர காலிப்பணியிடங்கள்- 2241

Tuesday, March 01, 2022

March 01, 2022

டியூசன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம்

டியூசன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம்

டியூசன் எடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இடமாறுதலுக்கான கோரிக்கை ரத்தானது தொடர்பாக தஞ்சாவூரை சேர்ந்த ராதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படிக்க | ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது:

“ஏழை, நடுத்தர குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு தரமான கல்வியை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வழங்குகிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு போட்டியாகக் கூட அரசுப் பள்ளிகளை உருவாக்க முடியாத நிலையே உள்ளது. டியூசன் எடுப்பது ஆசிரியர் சமூகத்தில் புற்றுநோய் போல் பரவி பணம் சம்பாதிக்கும் பேராசையை அதிகரிக்கிறது.

தற்போதைய கல்வித்துறையின் நிலைமை நிச்சயமாக சிறந்த செயல்பாட்டிற்கு உகந்ததாக இல்லை. கல்வித் துறையில் இருக்கும் முறைகேடுகள், முரண்பாடுகள் உற்றுநோக்கப்பட வேண்டும்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூசன் நடத்துவது போன்ற புகார் ஆவணங்களை சேகரித்து, மாவட்டம் தோறும் குழுவை ஏற்படுத்தி துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

Monday, February 28, 2022

February 28, 2022

பதவி உயர்வு / பணியிட மாறுதல் பெற்றவர்கள் கவனத்திற்கு

பதவி உயர்வு / பணியிட மாறுதல் பெற்றவர்கள் கவனத்திற்கு..

தாங்கள் பணியேற்பிடைக் காலத்தினை அனுபவிக்கவில்லையெனில் (இரு பள்ளிகளுக்கிடையே குறைந்தது 8 கிலோமீட்டர் தொலைவு இருக்க வேண்டும்) வருகின்ற மார்ச் மாத குறைதீர்நாள் முகாமில் தாங்கள் அனுபவிக்காத பணியேற்பிடைக் காலத்தினை தங்களுடைய ஈட்டிய விடுப்புக் கணக்கில் சேர்த்திட விண்ணப்பம் கொடுத்திடுங்கள்...

இதையும் படிக்க | பரோடா வங்கியில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.03.2022

பதவி உயர்வு பெற்றவர்கள் கவனத்திற்கு...

தங்கள் பதவி உயர்விற்கான ஊதிய நிர்ணயம் செய்ய விண்ணப்பம் அளிக்கும் பொழுது ஜனவரி-22 ஆண்டு ஊதிய உயர்வு பெறுபவர்கள் மட்டும் 01.03.2022 அன்று ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளவும். ஏப்ரல், ஜூலை & அக்டோபர் ஆண்டு ஊதிய உயர்வு பெறுபவர்கள் வழக்கமான இவ்வாண்டிற்கான ஆண்டு ஊதிய உயர்வு பெற்றபின் பதவி உயர்விற்கான ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பக் கடிதத்தினையும், மார்ச் மாத குறைதீர் நாள் கூட்டத்தில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அது தங்களுக்கு நன்மையாக அமையும்...

தகவல் பகிர்வு:
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,
கரூர் மாவட்டம்
February 28, 2022

ஆசாமி பேச்சை நம்பிய ஆசிரியை; 10 பவுன் ஏமாந்து கதறல்

ஆசாமி பேச்சை நம்பிய ஆசிரியை 10 பவுன் ஏமாந்து கதறல்

ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மேரி பிரேமா. வயது 59. பாண்டேஸ்வரம் என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். பள்ளிக்கு செல்ல ஆவடி பஸ் நிலையத்துக்கு சென்று கொண்டு இருந்தார்.

இதையும் படிக்க | வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வேலை -!விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.03.2022

மாஸ்க் அணிந்தபடி வந்த ஒருவர் மேரியிடம் பேசினார். தன்னை அரசு அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டார். இந்த ஏரியாவில் செயின் பறிப்பு அதிகம் உள்ளது. எனவே நகைகளை கழட்டி பையில் வைத்துக்கொள்ளுங்கள் என அட்வைஸ் செய்தார். மேரியும் தங்க செயின் மற்றும் வளையல்களை கழட்டி பையில் வைக்க முயன்றார். அப்போது தன்னுடன் பேசிக்கொண்டு இருந்த நபர் மற்றும் தொடந்து வந்த இன்னொருவர் , 10 சரவனை ஆட்டை போட்டு தப்பினர். ஆசாமிகளை விரட்டி பிடிக்க முயன்றார் மேரி. அதற்குள் அவர்கள் தப்பினர்.போலீசில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்
February 28, 2022

இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்


ஒன்றிய மற்றும் மாவட்டத்துக்குள் நடைபெற்ற மாறுதல் கலந்தாய்வுக்கு பின் ஏற்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் : ( கிடைத்த மாவட்ட தகவல் மட்டும்)


ஒன்றிய மற்றும் மாவட்டத்துக்குள் நடைபெற்ற மாறுதல் கலந்தாய்வுக்கு பின் ஏற்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் : ( கிடைத்த மாவட்ட தகவல் மட்டும்)


மதுரை மாவட்டம்



தூத்துக்குடி


தென்காசி


திருநெல்வேலி மாவட்ட அளவிலான காலிப்பணியிட பட்டியல்

 

(சேரன்மகாதேவி கல்வி மாவட்டம்)


(1) அம்பை ஒன்றியம்

1.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி விக்கிரமசிங்கபுரம் 

2.மன்னார்கோவில்           

3.வெயிலான் சேரி            

4.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அம்பாசமுத்திரம்                  

(2) சேரன்மகாதேவி ஒன்றியம்

1.கல்லிடைக்குறிச்சி ஒன்பதாவது வார்டு 

2.கரம்பை           

3.பாடாபுரம்

(3)  பாப்பாக்குடி ஒன்றியம்

1.தாளையடி

2.இலந்தைகுளம்

3.அனந்த நாடார் பட்டி 

(2 பணியிடம்)

4.கிராமங்கலம்

5.கொண்டா நகரம்

6.குமாரபுரம்

7.கலியன் குளம்

8.நடுக்கல்லூர் 

9.பொது க்குடி 

10.முத்தன் குளம் 

(4) களக்காடு ஒன்றியம்

1.வடகரை 

2.கடம்போடுவாழ்வு நாடார் குடியிருப்பு 


வள்ளியூர் கல்வி மாவட்டம்


(5) ராதாபுரம் ஒன்றியம்

1.கன்னன்குளம் 

2.பெட்டைகுளம் 

3.பாகனேரி 

(6) நான்குநேரி ஒன்றியம்

1.வாகைகுளம் 


திருநெல்வேலி கல்வி மாவட்டம்


(7) மானூர் ஒன்றியம்

1.இத்திகுளம் 

2.புங்க நல்லூர் 

3.மேல பிள்ளையார்குளம்

 (2 பணியிடம்)

 4.தெற்கு அச்சம்பட்டி. 


பாளையங்கோட்டை

நகர் மற்றும் புறநகர்

திருநெல்வேலி நகர் ஒன்றியங்களில் காலி பணியிடம் இல்லை


திருநெல்வேலி மாவட்ட அளவிலான காலிப்பணியிட பட்டியல்

 

(சேரன்மகாதேவி கல்வி மாவட்டம்)


(1) அம்பை ஒன்றியம்

1.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி விக்கிரமசிங்கபுரம் 

2.மன்னார்கோவில்           

3.வெயிலான் சேரி            

4.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அம்பாசமுத்திரம்                  

(2) சேரன்மகாதேவி ஒன்றியம்

1.கல்லிடைக்குறிச்சி ஒன்பதாவது வார்டு 

2.கரம்பை           

3.பாடாபுரம்

(3)  பாப்பாக்குடி ஒன்றியம்

1.தாளையடி

2.இலந்தைகுளம்

3.அனந்த நாடார் பட்டி 

(2 பணியிடம்)

4.கிராமங்கலம்

5.கொண்டா நகரம்

6.குமாரபுரம்

7.கலியன் குளம்

8.நடுக்கல்லூர் 

9.பொது க்குடி 

10.முத்தன் குளம் 

(4) களக்காடு ஒன்றியம்

1.வடகரை 

2.கடம்போடுவாழ்வு நாடார் குடியிருப்பு 


வள்ளியூர் கல்வி மாவட்டம்


(5) ராதாபுரம் ஒன்றியம்

1.கன்னன்குளம் 

2.பெட்டைகுளம் 

3.பாகனேரி 

(6) நான்குநேரி ஒன்றியம்

1.வாகைகுளம் 


திருநெல்வேலி கல்வி மாவட்டம்


(7) மானூர் ஒன்றியம்

1.இத்திகுளம் 

2.புங்க நல்லூர் 

3.மேல பிள்ளையார்குளம்

 (2 பணியிடம்)

 4.தெற்கு அச்சம்பட்டி. 


பாளையங்கோட்டை

நகர் மற்றும் புறநகர்

திருநெல்வேலி நகர் ஒன்றியங்களில் காலி பணியிடம் இல்லை


கன்னியாகுமரி மாவட்டம்


கன்னியாகுமரி மாவட்டத்தில் 33 காலிப்பணியிடங்கள் உள்ளன...


1. திப்பிற மலை

2.ஏழகரம்

 3.மலவிலை

4. ஒரு நூறாம் வயல்

 5.தோட்ட மலை

 6.குற்றியாறு GMS

7.முகிலன் குடி 

8.காட்டுப்புதூர் 

9.போற்றியூர் 

10.குற்றியாறு GMS

11,கடையால் (2)

13.ஜேம்ஸ் டவுன் 

14.பெருஞ்சிலம்பு 

15.கீழ் குளம் 

16.ரத்தின புரம் 

17.பாலூர் 

18.கோதையார் லோயர்கேம்ப் 19.மார்த்தாண்டம் துறை 

20.ஏழு தேசப்பற்று 

21.ஆரல் குமாரபுரம் 

22.ஆதலவிளை 

23.கீரிப்பாறை GMS

24.மைலார் 

25.சிற்றார் GMS

26.சிறமடம் 

27.மங்கலம் 

28.மகாராஜபுரம் 

29.வடக்கன்கரை 

30.ஒற்றையால் விலை 

31.தச்சமலை 

32.காட்டுப்புதூர் 

33.குண்டல்

விருதுநகர் மாவட்டத்தில்  இடைநிலை ஆசிரியர் காலி பணியிடம் நரிக்குடி ஒன்றியத்தில் மட்டுமே உள்ளது.                                          

1)அம்மன்பட்டி.                                                      2) சுல்லங்குடி.                                                        3)தர்மம்.                                                                  4)தேளி.                                                                5)சிறுவனூர்.                                                6)சேந்தநதி.                                                              7)இணக்கனேரி.                                            8)பாப்பாங்குளம்.

திருச்சி மாவட்டம்


ஒன்றியம் வாரியாக காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை


மருங்காபுரி-50

வையம்பட்டி-2

மணப்பாறை-9

மணிகண்டம்-0

அந்தநல்லூர்-0


திருச்சி நகரம்-3 (நகராட்சி பள்ளிகள்)


திருச்சி மேற்கு-0

திருவெறும்பூர்-0

லால்குடி-0

புள்ளம்பாடி-0

மண்ணச்சநல்லூர்-0

துறையூர்-0

முசிறி-0

தொட்டியம்-5

தா.பேட்டை-0

உப்பிலியபுரம்-0


மொத்தம்: 69 காலிப்பணியிடங்கள்


காலிப்பணியிட ஒன்றியம் வாரியாக பள்ளிகள் விபரம்.


மருங்காபுரி ஒன்றியம்-50


தொடக்கப்பள்ளிகள்


1.மாங்கனாப்பட்டி-2

2.க.பொன்னம்பட்டி-1

3.கஞ்சநாயக்கன்பட்டி_4

4.பி.சொக்கநாதபட்டி-1 

5.புத்தகுடி-1

6.மணியங்குறிச்சி-1

7. பீரங்கி மேடு-1

8. மருங்காபுரி-3

9. T.கவுண்டம்பட்டி-1

10. பாலத்துப்பட்டி-1

11.நல்லமநாயக்கன்பட்டி-2

12. ஊத்துக்குளி-1

13. வளநாடு-1

14.ஆமணக்கம்பட்டி-1

15.செவந்தாமபட்டி-1

16.பிராம்பட்டி-1

17.தேனூர்-1

18.வேம்பனூர்-2

19.தோப்புப்பட்டி-1

20.மருதுபட்டி-1

21.ஆரியக்கோன் பட்டி-1

22.மலையாண்டிகோவில்பட்டி-1

23.சோலையம்மா பட்டி-1


நடுநிலைப்பள்ளிகள்


1.எண்டப்புளி-1

2.ஆலம்பட்டி-1 

3.கரடிபட்டி-1

4.கலிங்கப்பட்டி-1

5.பிடாரபட்டி-3

6. சொக்கம்பட்டி-1

7. வடக்கம்பட்டி-1

8. A.புதுப்பட்டி-1

9.நல்லூர்-1

10. அக்கியம்பட்டி-2

11.பொன்னம்பட்டி-1

12.கார்வாடி-2

13.அடைக்கம்பட்டி-1

14.ஆத்துப்பட்டி-1

15.தாழம்பாடி-1



அறிவியல் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம்


(அடைக்கம்பட்டி-1)


வையம்பட்டி ஒன்றியம்-2


PUPS சீத்தப்பட்டி-1

PUMS பண்ணப்பட்டி-1


மணப்பாறை ஒன்றியம்-9


சேர்வைக்காரன்பட்டி - 2

கருத்தகோடாங்கிபட்டி -2

கணவாய்பட்டி -1

அழககவுண்டம்பட்டி -1

வடக்கிபட்டி -1

வெள்ளைய கவுண்டம்பட்டி - 1

நத்தம் புதூர் - 1


திருச்சி நகரம்-3


(நகராட்சி பள்ளிகள்)

உறையூர் கிழக்கு-1

தென்னூர்-1

பீமநகர்-1


தொட்டியம் ஒன்றியம்-5


PUPS காட்டுப்புத்தூர்(மேற்கு)-3

PUPS சீலைப்பிள்ளையார்புதூர்-1

PUPS சமத்துவபுரம்-1


காஞ்சிபுரம் மாவட்டம்:


உத்திரமேரூர் வட்டாரம்-


காலிப்பணியிடங்கள்


சாலவாக்கம்- 3

உத்திரமேரூர் டவுன் - 6

புலியூர் - 1

தளவராம்பூண்டி- 1

தட்டாம்பூண்டி -1

மருத்துவான்பாடி-1

திணையாம்பூண்டி-1

விசூர்-1

ஒழையூர்-1

காரியமங்கலம்-1

நீரடி-1

நீர்க்குன்றம்-1

ஆனம்பாக்கம்-1


சிவகங்கை மாவட்டம் 


சிவகங்கை நகராட்சி.

நகராட்சி நடுநிலைப்பள்ளி.

இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் 3


காளையார்கோவிலில் ஒன்றியம்: 

காலிப்பணியிடங்கள் 


1.காடனேரி

2.மாங்காட்டுப்பட்டி 

3.காஞ்சிரம் 

4.ஆலவிளாம்பட்டி 5.கீழக்கோட்டை


கல்லல் ஒன்றிய காலிப்பணியிட விபரம்.


1. கல்லல்

2. N. மேலையூர்.

3. பட்டமங்கலம் 

4. பேயன்பட்டி.


கண்ணங்குடி வட்டாரம் காலிப்பணியிட விபரம்



 அண்டக்குடி Primary school

2.தேவண்டதாவு Middle school

3 வடகீழ்குடி Middle School


கரூர் மாவட்டம் 

மாவட்டத்திற்குள் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) மாறுதல் கலந்தாய்வுக்கு பின் தற்போதைய காலிப் பணியிடங்கள்:


கரூர் ஒன்றியம் :

காலிப் பணியிடம் இல்லை


தாந்தோணி ஒன்றியம் :

காலிப் பணியிடம் இல்லை


க.பரமத்தி ஒன்றியம் :

காலிப் பணியிடம் இல்லை


தோகைமலை ஒன்றியம்


ஊ. ஒ. தொ. பள்ளி. பிள்ளைகோடங்கிபட்டி  1


கடவூர் ஒன்றியம்:


1.ராசாப்பட்டி

2. பூஞ்சோலைப்பட்டி

3.பால்மடைப்பட்டி

4.தரகம்பட்டி

5.குளக்காரன்பட்டி

6.கரட்டுப்பட்டி

7.ஆலத்தூர்

8.இ.சுக்காம்பட்டி


அரவக்குறிச்சி ஒன்றியம்- SGT VACANT:10


PUPS NAVAMARATHUPATTI

PUMS ARAVAKURICHI

PUPS PARAPATTI

PUPS SENKALIVALASU

PUPS MODAKKUR

PUPS MUTHUGOUNDAMPALAYAM

PUPS ERAMANAYAKANUR

PUPS NAGAMPALLI

PUPS CHOKKALAPURAM

PUPS KALLIMARATHUPATTI


குளித்தலை ஒன்றியம்


ஊ.ஒ.ந.நி.பள்ளி,குமாரமங்கலம்-1


கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்:


நாதிப்பட்டி-1

குப்பமேட்டுப்பட்டி-3

வெள்ளைய கவண்டம்பட்டி-1

தாதம்பட்டி-1

குழந்தைபட்டி-1

பஞ்சப்பட்டி-1

லாலாப்பேட்டை மேற்கு-1













Total Pageviews

Search This Blog