Breaking

Showing posts with label tribal student enrollment. Show all posts
Showing posts with label tribal student enrollment. Show all posts

Thursday, March 06, 2025

Thursday, February 22, 2024

February 22, 2024

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்



Anbil Mages instructs officials, teachers to increase student enrollment in government schools அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்

2024-2025 ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் அலுவலர்கள், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் முழு முயற்சியோடு பணியாற்றிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி மட்டுமே சமத்துவம் மலரச்செய்யும் மிகப்பெரிய ஆயுதம்”என்ற மறைந்த முதல்வர் கருணாநிதியின் கூற்றை மெய்ப்பித்திடும் வகையில் தமிழக முதல்வர் எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களில் கல்வி வளர்ச்சியில் நம் தமிழகம் முன்னிலை பெறவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, தொடங்கப்பட்ட பல்வேறு புதிய திட்டங்களால் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெற்றிநடை போட்டு வருவதைக் காணலாம். கல்வியில் ஒரு மாநிலம் உயர்ந்த நிலையைப் பெறுகின்ற பொழுது, பல்வேறு துறைகளில் இயல்பாகவே உயர்வு பெறும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தமிழக முதல்வர் பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகப்படுத்தியுள்ளார். எந்த நோக்கத்துக்காக நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளதோ அதை மனதிற்கொண்டு, அந்நோக்கத்தைச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

தமிழக முதல்வர் பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை செலவாகக் கருதாமல் கல்விக்கான முதலீடாகக் கருதுவதாக தெரிவித்துள்ளார். இதனை பள்ளிக் கல்வித் துறையில் உள்ள அலுவலர்கள், இருபால் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

மாணவர் நலமே மாநில வளம் என்னும் உயரிய எண்ணத்தோடு செயல்பட்டு வருவதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். தமிழக முதல்வர் பள்ளிக் கல்வித்துறைக்கு 2021-22 –ஆம் நிதியாண்டுக்கு ரூபாய். 32,599.54 கோடியும்; 2022-23-ஆம் நிதியாண்டுக்கு ரூ.36,895.89 கோடியும்; 2023-24-ஆம் நிதியாண்டுக்கு ரூ.40,299.32 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளார். நடப்பு ஆண்டில் ரூபாய். 44,042 கோடி ஒதுக்கியுள்ளார். ஆக மொத்தம் ரூபாய். 1,53,796 கோடி பள்ளிக்கல்வித் துறைக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு கல்வித்துறைக்கென இதுவரை 57-திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருவதால் மாணவர்களின் கல்வித் தரம் உயரும் வகையில் மிக பெரிய வளர்ச்சியை கல்வித்துறை பெற்றுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன். இதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளது. இடைநிற்றல் மிகவும் குறைந்துள்ளது.இல்லம் தேடிக்கல்வித் திட்டத்தால் கரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் தேக்க நிலை முற்றிலும் குறைந்துள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட்டுள்ளது. “நான் முதல்வன்” திட்டத்தால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களில், பலர் நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில வாய்ப்பு உருவாகியுள்ளது.

கலைத்திருவிழாவின் மூலம், மாணவர்களிடத்தில் பொதிந்துள்ள பல்வகை ஆற்றலை வெளிக்கொணர்கின்ற சூழல் உருவாகியுள்ளது. “நம்பள்ளி நம்பெருமை” திட்டத்தினால் அரசுப் பள்ளிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.“முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” இந்திய ஒன்றியத்திலேயே, முதன்முதலாக நம் தமிழகத்தில் தான் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டு, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் பள்ளிக்கு வருகை கூடியுள்ளதோடு கற்கும் ஆர்வமும் கூடியுள்ளதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம்.

இதன் மூலம் “வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்“ என்ற மகாகவியின் கனவு நிறைவேறியிருக்கிறது. “மணற்கேணித் திட்டம்” – நன்கு திட்டமிட்ட வழிகாட்டுதலுடன் கூடிய கற்றல் பயணத்துக்கு வழிவகுத்து கற்றனைத்தூறும் அறிவைச் சுரந்து கொண்டிருக்கிறது. மாணவர்களின் மனதுக்கு மகிழ்வூட்டும் கல்விச் சுற்றுலா, ஊஞ்சல், தேன்சிட்டு இதழ்கள், தமிழ்மொழியின் ஆற்றலை பெருமையை மாணவர்கள் விரும்பி அறிந்திட தமிழ்க்கூடல், மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சி, வாசிப்பு இயக்கம் போன்ற பல்வேறு நல்ல திட்டங்களை தமிழக முதல்வர் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகின்றது.“விழுதுகள்” திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளில் பயின்ற மேனாள் மாணவர்களை அழைத்து வந்து அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பட அவர்களின் பங்களிப்பை உறுதி செய்யும் முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன.

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டினை முன்னிட்டு, பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கென ரூபாய். 7,500 கோடி மதிப்பீட்டில் “பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்” என்ற மாபெரும் திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்திட அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று இதுவரை, 2487 கோடி மதிப்பிலான 3601 வகுப்பறைகள், ஆய்வகங்கள், உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிதியாண்டில் மேலும் ரூபாய். ரூ.1,000 கோடி பள்ளிக் கட்டமைப்புக்கென ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் உயர்ந்த நோக்கத்தோடு கடந்த மூன்று ஆண்டுகளில் 38 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 28 பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் உயர்தர கற்றல், கற்பித்தல் சூழலை உருவாக்கவும், அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech labs) மற்றும் 22,931 தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classrooms) அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. மேலும் 80,000 ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட உள்ளது, இதனால் வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வசதிகளுடன் கற்றல் கற்பித்தல் பணிகள் நடைபெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆகியோர் ஒன்றிணைந்து அனைத்து பள்ளி வயதுடைய குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்த்திட பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்திட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Tuesday, April 11, 2023

April 11, 2023

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - அடுத்த வாரத்தில் தொடங்க திட்டம்



அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - அடுத்த வாரத்தில் தொடங்க திட்டம் - Admissions to Government Schools - Scheduled to begin next week

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக் கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதம் தொடங்கப்படும். கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சேர்க்கைப் பணிகள் தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டன.

இதற்கிடையே, கடந்த ஆண்டு கரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியது. எனினும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட்டன. இதனால், மாணவர் சேர்க்கை எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தனியார் பள்ளிகள் ஏப்ரல் மாதத்துக்குள் சேர்க்கையை முடித்து விடுகின்றன. அதற்கேற்ப அரசுப் பள்ளிகளும் சேர்க்கைப் பணிகளை முன்கூட்டியே தொடங்க வேண்டுமென பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டன. இதையடுத்து, வரும் கல்வியாண்டுக்கான(2023-24) அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது,

‘‘அரசுப் பள்ளிகளில் சேர்க்கை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. எனவே, விருப்பமுள்ள பெற்றோர் 1 முதல் 9-ம் வகுப்பு வரை சேர்க்கைக்கு அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று, பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு ஓரிரு நாட்களில் வழங்கப்படும்’’ என்றனர்.

Tuesday, January 31, 2023

January 31, 2023

உயா்கல்வியில் பழங்குடியின மாணவா் சோ்க்கை 47% வளா்ச்சி



உயா்கல்வியில் பழங்குடியின மாணவா் சோ்க்கை 47% வளா்ச்சி 47% growth in tribal student enrollment in higher education உயா்கல்வியில் பழங்குடியின (எஸ்.டி.) மாணவா்கள் சோ்க்கை என்பது கடந்த 2014-15 ஆம் ஆண்டிலிருந்து 47 சதவீதம் அளவுக்கு வளா்ச்சி பெற்றிருப்பது அகில இந்திய உயா்கல்வி கணக்கெடுப்பு (அய்ஷே 2020-21) அறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.

அதுபோல, தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவு மாணவா்களின் உயா் கல்வி சோ்க்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது. இதுகுறித்து ஆய்ஷே அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 2020-21ஆம் ஆண்டில் உயா் கல்வியில் 4.13 கோடி மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றனா். இதில் 14.2 சதவீதம் போ் எஸ்.சி. பிரிவையும், 5.8 சதவீதம் போ் எஸ்.டி. பிரிவையும், 35.8 சதவீதம் போ் ஓபிசி பிரிவையும் சோ்ந்தவா்கள். எஞ்சியுள்ள 44.2 சதவீதம் போ் பிற சமூகத்தைச் சோ்ந்தவா்கள்.

சோ்க்கை விகித வளா்ச்சி:

உயா்கல்வியில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவு மாணவா்களின் சோ்க்கை விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது.

உயா் கல்வியில் எஸ்.சி. பிரிவு மாணவா்களின் சோ்க்கை விகிதம் கடந்த 2014-15-ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக அதிகரித்து, 2019-20 ஆம் ஆண்டில் சோ்க்கை பெற்ற எஸ்.சி. பிரிவு மாணவா் எண்ணிக்கை 21.6 லட்சமாக இருந்தது. இது 2020-21-இல் மீண்டும் 4.2 சதவீதம் அதிகரித்து 24.1 லட்சமாக உயா்ந்தது. இதன்படி, 2014-15-ஆம் ஆண்டிலிருந்து எஸ்.சி. பிரிவு மாணவா்களின் சோ்க்கை விகிதம் 27.96 சதவீதமாக உயா்ந்துள்ளது.

அதுபோல, எஸ்.டி. பிரிவு மாணவா் சோ்க்கை முந்தைய 2019-20 ஆம் ஆண்டில் 4.3 சதவீதமாக அதிகரித்தது, 2020-21 ஆம் ஆண்டில் 11.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2014-15-ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பிரிவு மாணவா்களின் சோ்க்கை விகிதம் 47 சதவீதமாக உயா்ந்துள்ளது.

ஓபிசி பிரிவு மாணவா்களைப் பொருத்தவரை 2019-20ஆம் ஆண்டில் 1.42 கோடி மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்ற நிலையில், 2020-21-இல் 1.48 கோடி பேராக அதிகரித்தது. 2014-15-ஆம் ஆண்டிலிருந்து ஓபிசி மாணவா் சோ்க்கை விகிதம் என்பது 31.67 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது. ஒட்டுமொத்த சோ்க்கை 20.9% அளவுக்கு அதிகரிப்பு:

உயா்கல்வியில் ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. 2018-19-இல் 2.7 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கை, 2019-20 ஆம் ஆண்டில் 3 சதவீத அளவுக்கும், 2020-21-இல் 7.4 சதவீத அளவுக்கும் வளா்ச்சி கண்டுள்ளது. 2014-15-ஆம் ஆண்டு முதல் உயா்கல்வி ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கை 20.9 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது.

2020-21-இல் உயா்கல்வியில் சோ்க்கை பெற்ற 4.13 கோடி பேரில், மாணவா்கள் 2.12 கோடி, மாணவிகள் 2.01 கோடி போ் ஆவா்.

உயா்கல்வி சோ்க்கை விகிதம் 27.3%:

ஒட்டுமொத்த உயா்கல்வி சோ்க்கை விகிதம் (ஜிஇஆா்) என்பது 27.3 சதவீத அளவை எட்டியுள்ளது. ஒட்டுமொத்த மக்கள்தொகையில் கல்லூரிகளில் சோ்க்கை பெறும் 18 முதல் 23 வயதுடையவா்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஜிஇஆா் கணக்கிடப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள் வாரியான சோ்க்கையைப் பொருத்தவரை, அரசு பல்கலைக்கழகங்களில் 73.1 சதவீதம் பேரும், தனியாா் உயா் கல்வி நிறுவனங்களில் 26.3 சதவீதம் பேரும் சோ்க்கை பெற்றுள்ளனா்.

Total Pageviews

Search This Blog