Breaking

Showing posts with label Competitive Exam Training. Show all posts
Showing posts with label Competitive Exam Training. Show all posts

Thursday, April 13, 2023

April 13, 2023

போட்டித் தேர்வு பயிற்சி மையம் - பல்கலை துணைவேந்தர் தகவல்



பெரியார் பல்கலைக்கழகத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் - துணைவேந்தர் தகவல் - Competitive Exam Coaching Center - University Vice Chancellor Information

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது, என துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெரியார் பல்கலைக்கழகம் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, தமிழக அரசின் உத்தரவுப்படி, சென்னைக்கு அடுத்தபடியாக கோவையைத் தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது. பெரியார் பல்கலைக்கழக எல்லைக்குட்பட்ட மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் தமிழக அரசின் முழு நிதி மற்றும் நிர்வாகப் பங்களிப்புடன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.

இதில் ஒரே சமயத்தில் 200 மாணவர்கள் பயிற்சி பெறலாம். பல்கலைக்கழக மாணவர்களுக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி சேர்க்கை நடைபெறவுள்ளது. சேர்க்கை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.

பயிற்சி வகுப்புகள் பல்கலைக்கழகத்தின் திருவள்ளுவர் மைய நூலகத்தின் 3-வது தளத்தில் நடைபெறவுள்ளன. இங்கு பாடம் சார்ந்த சுமார் 1,10,000 புத்தகங்களும், போட்டித்தேர்வுகளுக்கு 5,000 புத்தகங்களும் உள்ளன. போட்டித்தேர்வுகளில் விருப்பமுள்ள மாணவர்கள் பயிற்சி வகுப்பில் பங்கு பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Thursday, January 26, 2023

January 26, 2023

4, 5-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கு பயிற்சி Training for class 4 and 5 teachers

4, 5-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கு பயிற்சி Training for class 4 and 5 teachers

அரசுப் பள்ளிகளில் 4, 5-ஆம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு பாடம் சாா்ந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக முதன்மைக் கருத்தாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு மதுரையில் வெள்ளிக்கிழமை (ஜன.27) முதல் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) சாா்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுற்றறிக்கை:

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு அண்மையில் பயிற்சி தரப்பட்டது. தொடா்ந்து 4, 5-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கு பாடம் சாா்ந்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

அதன்படி, முதன்மைக் கருத்தாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், எஸ்சிஇஆா்டி பொறுப்பாளா்கள் ஆகியோருக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் மதுரையில் வெள்ளிக்கிழமை நடத்தப்படவுள்ளது. இதற்கு தோ்வு செய்யப்பட்டவா்கள் பட்டியலும் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பட்டியலில் உள்ள ஆசிரியா்கள் உட்பட அனைவரும் பயிற்சியில் பங்கேற்க ஏதுவாக பணிவிடுவிப்பு உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, December 29, 2022

December 29, 2022

இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வு - தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

வனப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வு!

அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடைபெறும் மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை, எளிய ஆர்வலர்களுக்கு பயனளிக்கும் வகையில் இப்பயிற்சி மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், இப்பயிற்சி மையத்தில் செப்டம்பர் 26 முதல் நவம்பர் 28 வரை மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இந்திய வனப்பணி முதன்மைத் தேர்விற்காக 9 ஆர்வலர்கள் தங்கி பயின்றார்கள். அவர்களில் 5 ஆர்வலர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 3 ஆர்வலர்கள் மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த ஆர்வலர்களுக்கு இப்பயிற்சி மையத்தின் மூலம் மாதிரி ஆளுமைத் தேர்வு, பணியில் உள்ள ஓய்வுபெற்ற அகில இந்திய குடிமைப்பணி அலுவலர்களாலும், தலைசிறந்த வல்லுநர்களாலும் நடத்தப்பட உள்ளது. இது தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்கள் தங்களது மாதிரி ஆளுமைத் தேர்வை மிகச்சிறப்பான முறையில் எதிர்கொள்ள ஏதுவாக அமையும்.

இப்பயிற்சி மையத்தின் மூலம் தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்கள் தவிர, மேற்குறித்த வனப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த பிற ஆர்வலர்களும், இப்பயிற்சி மையத்தில் 02.01.2023 மற்றும் 03.01.2023 அன்று நடைபெறவுள்ள மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கு பெறலாம்.

அவ்வாறு பங்கு பெற விரும்பும் ஆர்வலர்கள், தங்களது விருப்பத்தினை, (DAF-I மற்றும் DAF-II) aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30.12.2022-க்குள் அனுப்பலாம். இதுதொடர்பான விவரங்களை www.civilserviceindia.com என்ற இணையதளத்தில் காணலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tuesday, May 17, 2022

May 17, 2022

குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இணையவழி பயிற்சி

Rao, Director, Employment and Training, said that direct and online training classes for students with disabilities preparing for the Group 4 examination will start from the 20th. In this regard, he issued a statement yesterday: Direct and e-training classes for students with disabilities writing the Group-4 examination conducted by the Tamil Nadu Civil Service Examination Board will be held from the 20th at the State Career Guidance Center functioning under the Department of Employment and Training at Chennai-32 Kindi. Those who wish to attend this training class should use the link https://t.me/+huB_ieZ54OEzODc9. Therefore, students with disabilities preparing for the Group-4 competition are requested to attend this training class directly. It has been said thus.
TNPSC குரூப் 4 தேர்வு

குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நேரடி மற்றும் இணையவழி பயிற்சி வகுப்புகள் வரும் 20ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் சென்னை-32 கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் - 4 தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான நேரடி மற்றும் இணையவழி பயிற்சி வகுப்புகள் வரும் 20ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இணையவழி பயிற்சி

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://t.me/+huB_ieZ54OEzODc9 என்ற இணைப்பினை பயன்படுத்தி கொள்ளவும். எனவே, குரூப்-4 போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Monday, May 16, 2022

May 16, 2022

குரூப் - 4 தேர்வு - மே 20 முதல் பயிற்சி: தமிழக அரசு

மே 20 முதல் பயிற்சி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதவுள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மே 20 ஆம் தேதி முதல் பயிற்சி வழங்கப்படும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

தமிழக அரசு அறிவிப்பு

“வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் சென்னை, கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான (Ortho & Visually Challenged only) நேரடி மற்றும் இணையவழி பயிற்சி வகுப்புகள் மே 20 முதல் நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை பயன்படுத்தி கொள்ளவும் https://t.me/+huB_ieZ54OEzODc9.

Total Pageviews

Search This Blog