Breaking

Showing posts with label Government Law College. Show all posts
Showing posts with label Government Law College. Show all posts

Monday, July 20, 2026

Friday, June 05, 2026

Thursday, May 14, 2026

Saturday, January 25, 2025

Sunday, May 05, 2024

Friday, September 29, 2023

September 29, 2023

தேசிய சட்டப் பல்கலையில் மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 13



தேசிய சட்டப் பல்கலையில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு. வழங்கப்படும் படிப்புகள்:

பி.ஏ.எல்.எல்.பி., (ஹானர்ஸ்) - 5 ஆண்டுகள்எல்.எல்.எம்., - ஓர் ஆண்டுபிஎச்.டி.,

தகுதிகள்:

இளநிலை பட்டப்படிப்பிற்கு 12ம் வகுப்பு தேர்வில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல், எல்.எல்.எம்., படிப்பில் சேர்க்கை பெற குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் எல்.எல்.பி., படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.

பிஎச்.டி., படிப்பில் சேர எல்.எல்.எம்., படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய படிப்புகளில் தற்போது இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., / எஸ்.டி., அல்லது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிப்பெண்களில் 5 சதவீத சலுகை உண்டு.

தேர்வு முறை:

அனைத்து படிப்பிற்கான மாணவர் சேர்க்கையும் ஏ.ஐ.எல்.இ.டி., எனும் நுழைவுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. சென்னை, மதுரை, பெங்களூரு, கொச்சி, மும்பை, டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் நுழைவுத்தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 13

விபரங்களுக்கு: https://nludelhi.ac.in/

Thursday, September 14, 2023

September 14, 2023

Master of Laws (M.L. or LL.M) படிப்புக்கு செப்.30 வரை விண்ணப்பிக்கலாம்



Master of Laws (M.L. or LL.M) படிப்புக்கு செப்.30 வரை விண்ணப்பிக்கலாம்

எல்எல்எம் சட்ட படிப்புக்கு செப்.30 வரை விண்ணப்பிக்கலாம்

சீர்மிகு சட்டப் பள்ளியில் முதுநிலை சட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் ரஞ்சித் ஒமென் ஆபிரகாம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் எல்எல்எம்எ-னும் 2 ஆண்டு முதுநிலை சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பணிகள்தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

விருப்பமுள்ள பட்டதாரிகள் www.tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக இன்று (செப்.14) முதல் 30-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி, கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, July 17, 2023

Thursday, June 01, 2023

Thursday, August 11, 2022

August 11, 2022

69 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - சட்டக்கல்வித் துறையின் முதல்பெண் இயக்குநர்

தமிழக சட்டக்கல்வித் துறையின் முதல் பெண் இயக்குநராக பேராசிரியர் ஜெ.விஜயலட்சுமி சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டத் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் சட்டக்கல்வி இயக்குநரகத்தின் இயக்குநராக இருந்த டி.சொக்கலிங்கம் கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்றார். அதன்பின் இயக்குநர் பணியானது பேராசிரியர் ஜெ.விஜயலட்சுமிக்கு முழு கூடுதல் பொறுப்பாக கடந்த மே 31-ம் தேதி வழங்கப்பட்டது. இந்நிலையில், சட்டக்கல்வித் துறையின் புதிய இயக்குநராகவும் தற்போது அவரே நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 25-ம்தேதி பொறுப்பேற்றுக் கொண்ட விஜயலட்சுமி, பாண்டிச்சேரியில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்புகளை முடித்துள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், சட்டத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதலாவது பெண் ஆராய்ச்சியாளர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் இளநிலை பேராசிரியராகக் கல்விப்பணியை தொடங்கிய இவர், 24 ஆண்டுகால கற்பித்தல் அனுபவம் கொண்டவர்.

செங்கல்பட்டு, வேலூர், சென்னை பட்டறைப்பெரும்புதூர் மற்றும் புதுப்பாக்கம் அரசு சட்டக்கல்லூரிகளில் முதல்வராகவும் இவர் பணியாற்றியுள்ளார். சட்டக்கல்வி இயக்குநரகத்தின் 69 ஆண்டுகால வரலாற்றில் பெண் இயக்குநர் பொறுப்பேற்றிருப்பது இதுவே முதல்முறை.

Monday, August 08, 2022

August 08, 2022

5 ஆண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடக்கம்

5 ஆண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று தொடக்கம்

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 14 அரசு மற்றும் ஒரு தனியார் சட்டக் கல்லூரிகளில் உள்ள, ஒருங்கிணைந்த 5 ஆண்டு பி.ஏ.. எல்.எல்.பி. படிப்புகளுக்கு 1,731 இடங்கள் உள்ளன.

இதுதவிர, சென்னை பெருங்குடி வளாகத்தில் அமைந்துள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டு ஹானர்ஸ் படிப்புக்கு 624 இடங்கள் உள்ளன. இவை நடப்பாண்டு இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 12-ல் தொடங்கி, 29-ம் தேதி வரை நடைபெற்றது.

விண்ணப்பித்தவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்களை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அந்த விவரங்களை http://www.tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

இதையடுத்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று (ஆக. 8) முதல்வரும் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்ததும், தகுதியான மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வரும் 13-ம் தேதி வழங்கப்படும். அவ்வாறு ஆணை பெற்றவர்கள், தேர்வுசெய்த படிப்புகளில் ஆகஸ்ட் 16 முதல் 18-ம் தேதிக்குள் சேர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tuesday, July 12, 2022

July 12, 2022

THE TAMIL NADU Dr.AMBEDKAR LAW UNIVERSITY - ADMISSION NOTIFICATION : 2022-2023 - PDF

Applications are invited from eligible candidates through ONLINE MODE for Admission to the 5 Years Integrated Law Degree Courses for the Academic Year 2022-2023.


Applications are invited from eligible candidates through Online Mode for Admission to the 5 Years Integrated Law Degree Courses for the Academic Year 2022-2023.

CLICK HERE TO DOWNLOAD PDF

Monday, February 28, 2022

February 28, 2022

திருச்சியில் உள்ள தேசிய சட்டப்பள்ளி மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் தமிழ்நாடு ஓதுக்கீடு என்று இரண்டிலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

திருச்சியில் உள்ள தேசிய சட்டப்பள்ளி மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் தமிழ்நாடு ஓதுக்கீடு என்று இரண்டிலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவு.

Total Pageviews

Search This Blog