Sunday, September 20, 2026
Sunday, September 13, 2026
Saturday, September 12, 2026
Sunday, August 30, 2026
Saturday, July 18, 2026
Tuesday, March 10, 2026
Tuesday, September 30, 2025
Thursday, September 25, 2025
Monday, March 18, 2024
Sunday, January 29, 2023
ஜனநாயகம்னா என்னன்னு தெரியுமா...? பள்ளி மாணவனின் காமெடியான விளக்கம்; வைரலாகும் வீடியோ
நாட்டின் 74-வது குடியரசு தினம் கடந்த 26-ந்தேதி உற்சாகமுடன் நாடு முழுவதும் மக்களால் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, மூவர்ண கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில், பலரும் பல விசயங்களை பற்றி பேசினர். ஆனால், மராட்டியத்தில் உள்ள பள்ளி சிறுவன் ஜனநாயகம் பற்றி பேசிய பேச்சுகள் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகின்றன.
அந்த வீடியோவில் சிறுவன், உண்மையில் இன்றுதான் ஜனநாயக தினம். இந்த நாளில் இருந்தே நாட்டில் ஜனநாயகம் தொடங்கியது. அதனை நான் நேசிக்கிறேன். ஜனநாயகத்தில் நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். சண்டை போடலாம். நண்பர்களாக இருக்கலாம். காதல் செய்யலாம்.
ஆனால், சிறு சிறு தவறுகளை செய்வதிலும், பிராங்க் விளையாடுவதிலும், வனத்தில் நடந்து செல்வதும், குரங்கு போல் மரத்தில் ஏறுவதும் எனக்கு விருப்பம் ஆகும். இது எல்லாவற்றிற்காகவும் எனது தந்தை என்னை அடிக்கமாட்டார். ஏனெனில், ஜனநாயகத்தில் அவருக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், கிராமத்தில் உள்ள சின்ன பையன்கள், எனது ஆசிரியரிடம் என்னை பற்றி புகார் கூறி விடுகின்றனர்.
அதன்பின்பு, பயங்கரவாதிகள் ஜனநாயகத்தின் மதிப்புகளை தூக்கி போட்டு மிதிப்பது போல், ஆசிரியர் என்னை மிதித்து விடுவார். சில சமயங்களில் ஆசிரியர் என்னை உக்கி போட சொல்கிறார். எனது அணுகுமுறை ஜனநாயக முறையில் இல்லை என கூறுவார்.
எனக்கு எதிராக அவருக்கு நிறைய புகார்கள் வரும். உண்மையை கூறுவதென்றால், என்னை போன்ற எளிமையான மற்றும் ஏழ்மையான சிறுவன் இந்த ஒட்டுமொத்த தாலுகாவிலேயே கிடையாது. இத்துடன், என்னுடைய விலைமதிப்பற்ற எண்ணங்களை நான் நிறுத்தி கொள்கிறேன். வாழ்க ஜனநாயகம் என சிறுவன் பேசியுள்ளான்.
இதனை கேட்டு கொண்டிருந்தவர்கள் அடக்க முடியாமல் சிரிக்கும் காட்சிகளும் வீடியோவில் காணப்படுகின்றன. வருங்காலத்தில் ஒரு பெரிய தலைவராக இந்த சிறுவன் வருவான் என டுவிட்டர் பயனாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார். இந்த இளம் வயதில் ஜனநாயகம் பற்றி சிறுவனுக்கு நிறைய புரிதல்கள் உள்ளன என மற்றொருவர் தெரிவித்து உள்ளா
Monday, January 02, 2023
கடந்த ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வை வழங்க முன்வர வேண்டும் : அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
'கடந்தாண்டு ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வை வழங்க அரசு முன்வரவேண்டும்'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வம் கூறினார்.
அவரது அறிக்கை:
தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முதல் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை 1.7.2022 முதல் வழங்குவதாக அறிவிக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின், இது ஆங்கில புத்தாண்டு பரிசு என்று அறிவித்துள்ளார். இது வழக்கமாக வழங்கக் கூடியதுதான். சலுகை அல்ல.
கடந்த 20 மாத ஆட்சிகாலத்தில் 18 மாத அகவிலைப்படி உரியதேதியில் தராமல் முடக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.10 ஆயிரத்து 200 கோடி இழந்துள்ளோம். எனவே , 1.7.2022 முதல் மத்திய அரசு ஊழியருக்கு வழங்குவது போல நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
எங்கள் மாநாட்டில் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என முதல்வர் அறிவித்ததால் அரசு ஊழியர், ஆசிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 20 மாதங்களாக அகவிலைப்படி தவிர வேறு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
எங்கள் கோரிக்கைகளான புதிய பென்ஷன் திட்டம் ரத்து, சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலருக்கும் காலமுறை ஊதியம், புதிய நியமனத்திற்கு வழியில்லாத அரசாணைகள் 115, 139, 152 ஐ ரத்து செய்தல், காலியிடங்களை நிரப்புதல் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும்.
அரசு நிதிநிலை சீரடைந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் புதிய கோரிக்கைகள் எதையும் முன்வைக்கவில்லை. இவற்றை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
இதனை வலியுறுத்தி ஜன.5 ல் முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஜன.8 ல் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுகூடி அடுத்த செயல்பாடு குறித்து அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்
Wednesday, December 21, 2022
கல்வி சுற்றுலா சென்ற பஸ் விபத்தில் சிக்கி ஆசிரியர் உள்பட 6 மாணவர்கள் பலி! 6 students, including the teacher, died in an accident on a bus that went on an educational trip!
கல்வி சுற்றுலா சென்ற பஸ் விபத்தில் சிக்கி ஆசிரியர் உள்பட 6 மாணவர்கள் பலி!- 6 students, including the teacher, died in an accident on a bus that went on an educational trip!
மணிப்பூரில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் ஆசிரியர் உள்பட 6 மாணவர்கள் பலியாகினர் மற்றும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
மணிப்பூரில் நோனி மாவட்டத்தில் இன்று பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் 6 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் பலியாகினர். பழைய கச்சார் சாலையில் பேருந்து திடீரென திருப்ப முயன்றபோது விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பின்னர் இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தில் மேலும் 20 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
தம்பால்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேருந்துகளில் நோனி மாவட்டத்தில் உள்ள கூப்பும் பகுதிக்கு ஆய்வுச் சுற்றுலா சென்றதாகவும், மாணவிகள் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
TNSED School App - 𝗢o𝗦𝗖 𝗦𝗨𝗥𝗩𝗘𝗬 -2022-23ன் போது கவனிக்க வேண்டிய குறிப்புகள்! - TNSED School App - 𝗢o𝗦𝗖 𝗦𝗨𝗥𝗩𝗘𝗬 -Notes to be observed during 2022-23!
------------ 𝗢o𝗦𝗖 𝗦𝗨𝗥𝗩𝗘𝗬 -2022-23 ---------
=-=-=-=-=-=-=-==-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
*OoSC Survey -ன் போது கவனிக்க வேண்டிய குறிப்புகள் :* 👉🏻 TNSED School App ல் OSC Module புதிதாக Update செய்யப்பட்டுள்ளது. இந்த App பயன்படுத்திக் கொள்ளலாம்.
👉🏻 Commonpool ல் மாணவர்களுக்கு 55 வகையான காரணங்கள் (Reason for Dropout) கொடுக்கப்பட்டுள்ளது.
👉🏻 ஒவ்வொரு மாணவருக்கும் பதிவேற்றம் செய்யும் பொழுது, தனித்தனியாக Survey Photoவை Survey Appல் பதிவேற்றம் செய்தல் அவசியம்.
👉🏻 நாம் கொடுக்கப்படும் ஒவ்வொரு காரணத்திற்கும் அதற்கான சான்றுகளை பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
👉🏻 23 வகையான காரணங்கள் கொடுக்கப்படும் பொழுது சான்றுகள் பதிவேற்றம் தேவையில்லை.
👉🏻 Migrated to other Country, State, District & Block கொடுக்கப்படும் பொழுது, எந்த County, State, District, Block & Address ஆகியவை பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
👉🏻 Student Under age & Over age , Homeless/ Street children /Children without Shelter/ Children in bus stand / Railway station போன்ற காரணங்கள் கொடுக்கப்படும் பொழுது, Aadhar, Age proof, Birth Certificate, Date of Birth ஆகியவை பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
👉🏻 Duplicate Entry கொடுக்கப்படும் பொழுது, Actual EMIS No. பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
👉🏻 CWSN, Home-based கொடுக்கப்படும் பொழுது, Ration card & CWSN ID Card விவரங்கள் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
👉🏻 XII Completed கொடுக்கப்படும் பொழுது, Mark Sheet பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
👉🏻 Student Expired கொடுக்கப்படும் பொழுது, Death Certificate பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
👉🏻 Student studying in ITI / Polytechnic & Industrial Schools கொடுக்கப்படும் பொழுது, Name of the institute, Roll number & Department விவரங்கள் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
👉🏻 பிற விடுபட்ட காரணங்களை பதிவற்றம் செய்யும் பொழுது, Ration card No. Holder Name, Category உள்ளிட்ட விவரங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
Thursday, October 27, 2022
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு
வணிக நிறுவனங்கள் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் 31 ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், மேலும் நவம்பர் 7 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது நிதி அமைச்சகம்.
வருமானம் மற்றும் கார்ப்பரேட் வரி விவகாரங்களில் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம், வணிக நிறுவனங்கள் செய்வதற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் அக்டோபர் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அதற்கான காலக்கெடுவை நவம்பர் 7 ஆம் தேதி நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
அதாவது, வருமான வரி சட்டம் பிரிவு 139 இன் துணைப் பிரிவு(1) இன் கீழ் 2022-23 ஆம் கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், இந்த கால கெடுவை வரும் நவம்பர் 7 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு நிறுவனங்கள் 2021-2022 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை அக்டோபர் 31 க்குள் தாக்கல் செய்ய வேண்டும். பரிமாற்ற விலை விதிமுறைகளுக்கு உள்பட்ட நிறுவனங்கள் நவம்பர் 30 க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இது தொடர்பான சுற்றறிக்கையை www.incomectaxindia.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
Tuesday, September 27, 2022
தோ்தல் விழிப்புணா்வு போட்டிகள்:பள்ளி, கல்லூரிகளில் நடத்த உத்தரவு
தோ்தல் விழிப்புணா்வு போட்டிகளை அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூா் மாவட்ட தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியது: தோ்தல் ஆணையம் சாா்பில் தோ்தல் எழுத்தறிவுப் போட்டிகள், மாவட்ட அளவில் சுவா் விளம்பரம் வரைதல், ரங்கோலி போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, பள்ளிகளில் 18 வயதுக்குட்பட்ட மாணவா்களுக்கு ‘என் வாக்கு என் உரிமை - ஒரு வாக்கின் வலிமை’ என்ற கருப்பொருளை மையாகக் கொண்டு சுவரொட்டி வரைதல் போட்டி நடத்தப்பட உள்ளது.
மாவட்டத்தில் 25 பள்ளிகளைத் தோ்வு செய்து அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் போட்டியை நடத்தி முடிக்க வேண்டும். பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களின் விவரங்களை அனுப்ப வேண்டும்.
மாற்றுத்திறனாளி பள்ளிகளில் சுவரொட்டி வரைதல் போட்டியுடன், தோ்தல் ஆணையத்தால் அனுப்பப்படும் பாடல் வரிகளை பின்னணி இசையுடன் பாடவைத்து அதைத் தெளிவாகப் படம் பிடித்து விடியோ காட்சியாக அனுப்ப வேண்டும்.
கல்லூரி மாணவா்களுக்கான போட்டியில் கல்லூரிகளில் உள்ள தோ்தல் எழுத்தறிவு ஒருங்கிணைப்பாளா் மூலம் போட்டிகள் நடத்தப்படும். ‘என் வாக்கு என் உரிமை - ஒரு வாக்கின் வலிமை’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சுவரொட்டி வடிவில் சுவா் இதழ் வரைதல் வேண்டும். போட்டிகளை கல்லூரி நிா்வாகங்கள் அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான சுவரொட்டி இதழ் வரைதல் போட்டியில் ஏ-3 தாளில் இரண்டு பகுதிகளாகப் பிரித்து ஒரு பகுதியில் படமும், அடுத்த பகுதியில் 50 முதல் 100 வாா்த்தைகளுக்குள் படத்துக்கான விளக்கமும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டும். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இதேபோல், அரசு பதிவு பெற்ற மகளிா் குழுக்களுக்கு ரங்கோலி போட்டிகள் நடத்தப்பட உள்ளது. ‘என் வாக்கு என் உரிமை - ஒரு வாக்கின் வலிமை’ என்ற தலைப்பில் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் தலா 20 குழுக்களுக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளன என்றனா்.
மது அருந்திய பள்ளி மாணவர் உயிரிழப்பு
கமுதி, செப். 26: கமுதி அருகே ஞாயிற்றுக் கிழமை மது போதை யில் ஆரம்ப சுகாதார நிலையத் தில்சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்ற பள்ளி மாண கௌதம் வர் உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள போத்தநதி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்ப சாமி மகன் கெளதம் (17). இவர் மண்டலமாணிக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கி ழமை மாலை தனது நண்ப ரான அழகுபாண்டியுடன் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டிற்குச் சென்ற கௌதம் வாந்தி எடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து கௌதமை அவ ரது உறவினர்களானசரவணன், முத்துப்பாண்டி ஆகியோ ரின் உதவியுடன் தாயார் சித் ராதேவி மண்டலமாணிக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்துக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டுவிட்டு வீட்டிற் குச் சென்றுள்ளனர். ஆனால் இரவு 9 மணிக்கு கௌதம் சுயநி னைவின்றி கிடந்ததால் அவரை கமுதி அரசு மருத்துவமனை யில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்து வர்கள் கெளதம் இறந்து விட்ட தாக தெரிவித்துள்ளனர். இது குறித்து சித்ராதேவி அளித்தப் புகாரின் பேரில் மண்டலமா ணிக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
Wednesday, September 14, 2022
1098 இல்லை; புகார்களுக்கு இனி குழந்தைகள் 112 எண்ணையே அழைக்க வேண்டும்
குழந்தைகளுக்காக பிரத்யேகமாக இயங்கும் சைல்ட்லைன் 1098, கடந்த 26 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில் இந்த எண்ணை மத்திய அரசு சிங்கிள் ஹெல்ப்லைன் எண்ணான 112வுடன் இணைத்துள்ளது.
இது குறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் துணைச் செயலர் மனோஜ் குமார் கடந்த 12ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசு குழந்தைகள் உதவி எண் (1098) ஐ 112 என்ற அனைத்துவிதமான அவசர அழைப்புகளுக்கான எண்ணுடன் இணைக்க இருக்கிறது. 112 இந்தியா செயலியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள், சிடாக் என்ற மத்திய உயர்கணினி மேம்பாட்டு மையம் உதவியுடன் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதமானது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மாநில அளவிலான நோடல் அதிகாரிகள், இரண்டாம் நிலை அதிகாரிகளை தேர்வு செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. அதுபோல் சிடாக்குக்கு தேவையான உதவிகளை செய்யவும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கட்டுப்பாட்டு அறைக்கென் பிரத்யேக கட்டிடம் அல்லது இடம் ஏற்படுத்தித் தருமாறும் வலியுறுத்தியுள்ளது. மிஷன் வட்ஸாலயா என்ற திட்டத்தின் படி 1098 என்ற உதவி எண் 112 என்ற எண்ணுடன் இணைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 911 போல் இந்தியாவில் 112: அமெரிக்காவில் 911 என்ற எண் அவசர காலத்திற்குப் பயன்படுத்தப்படுவதுபோல் இந்தியாஇல் 112 என்ற எண்ணை புழக்கத்துக்கு கொண்டு வர அரசு முயற்சித்து வருகிறது. இப்போது ஆம்புலன்ஸுக்கு 108, போலீஸுக்கு 100, தீயணைப்புக்கு 101, தனித்திருக்கும் பெண்கள் பாதுகாப்புக்கு 1090, குழந்தைகள் பாதுகாப்புக்கு 1098 என்ற எண்கள் இருக்கின்றன. இவற்றை தனித்தனியாக நினைவில் கொள்வதற்குப் பதில் 112 என்ற சிங்கிள் எமர்ஜென்சி எண்ணை அழைத்தால் எல்லா சேவைகளையும் பெறலாம் என்று கூறப்படுகிறது.
கவலை தெரிவிக்கும் குழந்தைகள் நல ஆர்வலர்கள்: ஆனால் 26 ஆண்டுகளாக குழந்தைகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்த எண்ணை முடக்கி புதிய எண்ணை அறிவித்த்தால் அது குற்றங்கள், புகார்கள் தெரிவிக்கப்படும் அளவை பாதிக்கும் என்றும் கூறுகின்றனர். மேலும், இவ்வாறாக 112 என்ற எண்ணை குழந்தைகள் அழைத்தால் காவல்துறையினரே இந்த புகார் அழைப்பை ஏற்கும் முதல் நபராகவும் ஆகலாம் இதனாலும் குழந்தைகள் தயங்கி குற்றங்களைத் தெரிவிக்காமல் போகலாம் எனக் கூறுகின்றனர்.
1996ல் டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸின் திட்டமாக அறிமுகமான சைல்டுலைன் தனியார் ட்ரஸ்ட் மூலம் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக நிதியுதவிடன் இயங்கியது. 1098 உதவி எண்ணுக்கு இப்போது ஆண்டுக்கு சராசரியாக 80 லட்சம் புகார்களைப் பெறுகிறது. 700 மாவட்டங்களில் இந்த சேவை உள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் சைல்டு லைன் ஹெல்ப் டெஸ்கும் உள்ளது. இந்நிலையில் இதனை அழித்துவிட்டு 112 சேவையை அமல்படுத்தினால் நிச்சயமாக புகார் எண்ணிக்கை குறையும் என்பதே குழந்தைகள் நல ஆர்வலர்களின் கூற்றாக இருக்கிறது.
Saturday, September 10, 2022
குழந்தைகளின் மூளையை வலுவாக்கும் 6 செயல்பாடுகள்!
| குழந்தைகளின் மூளையை வலுவாக்கும் 6 செயல்பாடுகள்! |
Tuesday, September 06, 2022
மருத்துவரான தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள்!
Sunday, September 04, 2022
படிப்பு போட்டியால் சக மாணவியின் தாயால் விஷம் கொடுக்கப்பட்ட மாணவன் உயிரிழப்பு
காரைக்காலில் 8-ம் வகுப்பு படிக்கும் தனது மகளை விட அதிக மதிப்பெண் எடுப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத தாய் ஒருவர், சக மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஷம் கொடுக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த மாணவியின் தாய் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
காரைக்காலில் 8-ம் வகுப்பு படிக்கும் தனது மகளை விட அதிக மதிப்பெண் எடுப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத தாய் ஒருவர், சக மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஷம் கொடுக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த மாணவியின் தாய் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் மாணவர் பால மணிகண்டன். இவர் காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு பாலமணிகண்டன் நேற்றுமுன்தினம் மதியம் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் தனது தாயிடம் குளிர்பானத்தை குடித்ததில் இருந்து எனக்கு மயக்கமாக உள்ளது என மாணவர் பாலமணிகண்டன் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் பாலமணிகண்டன் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து மாணவனின் தயார் மகனை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்தபோது மாணவன் பாலமணிகண்டன் குடித்த குளிர்பானத்தில் விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே மாணவனிடம் குடித்த குளிர்பானத்தை அவனது தாய் கொடுத்ததாக பள்ளியின் காவலாளி கொடுத்தது தெரியவந்தது. கண்காணிப்பு கேமரா இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் தாயார் தனது கணவருனுடன் பள்ளிக்கு சென்று பள்ளி காவலாளியை விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் காவலாளியை அழைத்து விசாரணை நடத்தினர். மேலும் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது அதே பள்ளியில் பாலமணிகண்டன் வகுப்பில் பயிலும் சக மாணவியின் தாயார் காவலாளியிடம் குளிர்பானம் கொடுக்கும் காட்சி பதிவாகியிருந்தது.
இதையடுத்து மாணவியின் தாயார் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் பாலமணிகண்டன் கல்வியில் சிறந்து விளங்குவதால் இதை பொறுக்க முடியாமல் மாணவியின் தாயார் குளிர்பானத்தில் விஷம் கலந்து அதை காவலாளி மூலம் தனது மகனுக்கு கொடுத்து கொலை செய்ய முயன்றதாக தெரிவித்தார்.
இந்நிலையில் விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவர் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மாணவியின் தாயார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் மாணவர் உயிரிழந்ததையடுத்து ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






