Breaking

Showing posts with label Old Pension Issue. Show all posts
Showing posts with label Old Pension Issue. Show all posts

Sunday, August 09, 2026

August 09, 2026

பழைய ஓய்வூதியத் திட்டமா? புதிய ஓய்வூதியத் திட்டமா? ஓய்வூதியத்தில் என்ன நடக்கிறது? தமிழக அரசிடம் தலைமைச் செயலக சங்கம் எழுப்பியுள்ள காரசார கேள்விகள்!

Friday, June 19, 2026

Saturday, June 13, 2026

Monday, May 04, 2026

Tuesday, January 13, 2026

Thursday, December 18, 2025

Wednesday, December 17, 2025

Friday, November 14, 2025

Monday, November 03, 2025

Wednesday, August 13, 2025

Wednesday, January 15, 2025

Sunday, January 12, 2025

Wednesday, June 26, 2024

Wednesday, January 31, 2024

January 31, 2024

தேர்தலுக்குள் பழைய பென்ஷன் திட்டம் - அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை



தேர்தலுக்குள் பழைய பென்ஷன் திட்டம் - அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

தமிழக அரசின் உதவி பெறும் கல்லுாரி அலுவ லர்கள் சங்க மண்டல மாநாடு மதுரையில் நடந் தது. இதில், விசிக தலை வர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:

கர்நாடகாவில் காங்கி ரஸ் அரசு பழைய பென் ஷன் திட்டத்தை கொண்டு வந்துள்ள நிலையில், தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண் டரை ஆண்டுகளாகியும், இந்தத் திட்டத்தை செயல் படுத்தாதது ஏமாற்றம் தருகிறது. லோக்சபா தேர் தலுக்கு முன் இந்தத் திட் டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்

Friday, January 26, 2024

January 26, 2024

கர்நாடகத்திலும் வந்தது பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழ்நாட்டுக்கு வருவது எப்போது?

கர்நாடகத்திலும் வந்தது பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழ்நாட்டுக்கு வருவது எப்போது? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?

கர்நாடக அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கடந்த சில மாதங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திய ஆறாவது மாநிலம் என்ற பெருமையை கர்நாடகம் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கக்கூட அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.

கர்நாடக அரசின் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையில், கர்நாடகத்தில் 2006&ஆம் ஆண்டு மார்ச் 31&ஆம் தேதிக்கு முன்பாக அறிவிக்கை செய்யப்பட்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு, 2006&ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி கர்நாடகத்தில் 11,300 பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர தகுதி பெற்றுள்ளனர். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதை நிறைவேற்ற வேண்டும் என்று அம்மாநில அரசு ஊழியர் சங்கத்தினர், கடந்த சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் சித்தராமைய்யாவை சந்தித்து வலியுறுத்தியிருந்தனர். இந்த நிலையில் தான் கர்நாடக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் இராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில், பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மாநிலங்களைத் தொடர்ந்து ஆறாவது மாநிலமாக கர்நாடகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதன் மூலம், இந்தியாவில் இனி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவே முடியாது என்ற மாயை தகர்க்கப்பட்டிருக்கிறது. இது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவில் 2004ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்தும், தமிழ்நாட்டில் 2003ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்தும் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பிந்தைய சமூக பொருளாதார பாதுகாப்பை அழித்து விடும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், சமூக நீதிக்கு பெயர்பெற்ற தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பான தேர்தல் வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. இன்னும் கேட்டால் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிதாகும். பிற மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இந்த தொகை அவ்வாறு செலுத்தப்படவில்லை; மாறாக இந்தத் தொகை தனிக்கணக்கில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனால் அந்நிதியை அரசின் கணக்கிற்கு மாற்றிக் கொள்வதில் எந்தவிதமான தடையும் இல்லை. ஆனாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் அரசு ஊழியர்கள், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, இக்கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 26&ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். ஆனாலும் கூட அதுகுறித்து சிறிதும் கவலைப்படாமல் தமிழக அரசு செயல்படுகிறது.

வாழ்நாளின் பெரும் பகுதியை அரசுப் பணிகளில் கழித்தவர்கள், அவர்களின் பணி ஓய்வுக்காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க ஓய்வூதியம் வழங்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்.

Friday, July 28, 2023

July 28, 2023

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பரிசீலனை - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்



பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பரிசீலனை - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் Consideration of re-implementation of old pension scheme - Finance Minister Thangam South Government information

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பொறையாத்தா கடைத் தெருவில் உள்ள 107 வயது நிறைந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு நேற்று வந்த தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கோபாலகிருஷ்ணனுக்கு ஓய்வூதியத்துக்கான வாழ்நாள் சான்றை நேரில் வழங்கினார்.

அவரிடம் மருத்துவச் செலவுக்காக ரூ.50 ஆயிரம் ரொக்கம், மக்களைத் தேடி மருத்துவ பெட்டகம் ஆகியவற்றையும் அமைச்சர் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கூறியது: 100 வயதுக்கு மேல் உள்ள 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு அவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று கருவூலத் துறை அதிகாரிகள் வாழ்நாள் சான்று வழங்கி வருகின்றனர். 1916-ல் பிறந்த கோபாலகிருஷ்ணன், 2-ம் உலகப் போர் நடந்தபோது இந்திய ராணுவத்தில் மோட்டார் மெக்கானிக்காக பணியாற்றியுள்ளார். சுங்கம், காவல் துறைகளிலும் பணியாற்றி 1972-ல் ஓய்வு பெற்றார்.

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றார்.

Wednesday, April 12, 2023

April 12, 2023

ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் வரை ஊதிய உயர்வுக்கு அரசு ஊழியர்கள் தகுதியுடையவர்கள்

ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் வரை ஊதிய உயர்வுக்கு அரசு ஊழியர்கள் தகுதியுடையவர்கள்

Saturday, March 04, 2023

March 04, 2023

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் விவகாரம்- தமிழ்நாடு அரசு அனுப்பிய சுற்றறிக்கை சொல்வது என்ன?

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் விவகாரம்- தமிழ்நாடு அரசு அனுப்பிய சுற்றறிக்கை சொல்வது என்ன?

ஓய்வூதிய திட்டம் தொடர்பான தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கை குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது

புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் மாறுவது தொடர்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளதாகவும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற விரும்பும் அரசு ஊழியர்கள் விவரங்களை சேகரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தமிழ்நாடு அரசு பிறப்பித்திருந்த உத்தரவு தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2004-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய ஓய்வூதிய திட்டமான தேசிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு பென்சன் திட்டம் என்ற சிபிஎஸ் திட்டம் அமலில் உள்ளது. இப்பங்களிப்பு பென்சன் திட்டத்தில் ஓய்வூதியம் என்பது உத்தரவதம் எதுவும் இல்லை என்பது அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு. பழைய ஓய்வூதிய திட்டப் பலன்கள், இப்புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை என்பதும் அரசு ஊழியர்களின் அதிருப்தி. ஆகையால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்கின்றனர் அரசு ஊழியர்கள். கடந்த சட்டசபை தேர்தலின் போதும் இந்த பிரச்சனை எதிரொலித்தது. தற்போது ஆளும் திமுக, தமது தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தது. இது தமிழ்நாடு அரசு ஊழியர்களிடையே வரவேற்பையும் பெற்றது. திமுக ஆட்சி அமைந்தது முதல் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. அதேநேரத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் சில விளக்கங்கள் தரப்பட்டன. இதனை அரசு ஊழியர்கள் ஏற்கவில்லை. மேலும் தமிழ்நாடு தழுவிய அளவில் சிபிஎஸ் ஓய்வூதிய திட்டத்தை ஒழிப்பதற்கான இயக்கங்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் முன்னெடுத்தனர். அண்மையில் சென்னையில் பிரம்மான்டமான மாநாடும் நடத்தப்பட்டது. சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் இம்மாநாட்டை நடத்தி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை ஒரு தகவல் வெகுவேகமாக பரவியது. தமிழ்நாடு அரசு நிதித்துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து விலகி பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற விரும்பும் அரசு ஊழியர்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன என்பது அத்தகவல். ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்காக இந்த சுற்றறிக்கை அனுப்பப்படவில்லை என்கின்றன தலைமை செயலக வட்டாரங்கள்.

இது தொடர்பாக தலைமை செயலக வட்டாரங்கள் கூறியதாவது:

பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு பணியில் இணைந்தவர் நிரந்தரமாக்கப்பட்ட போது புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. அவர்கள் பணி ஓய்வு பெறும் போது புதிய ஓய்வூதியத்தின் கீழ் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு ஆதரவாகவே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பான விவரங்களைத்தான் தமிழ்நாடு அரசு கேட்டிருந்தது. இவ்வாறு தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Wednesday, March 01, 2023

March 01, 2023

யாருக்கெல்லாம் பழைய ஓய்வூதியம்? அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவு

யாருக்கெல்லாம் பழைய ஓய்வூதியம்? அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவு

எந்தெந்த அரசு ஊழியா்களுக்கெல்லாம் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகள் குறித்த விவரங்களை அளிக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, அனைத்துத் துறை செயலாளா்களுக்கும் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு:- தலைமைச் செயலகம் மற்றும் துறைத் தலைமை அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், அரசு கூட்டுறவு சங்கங்கள்

ஆகியவற்றில் அரசு ஊழியா்கள் பணிபுரிந்து வருகிறாா்கள். அவா்களில் யாருக்கெல்லாம் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோ அதுகுறித்த விவரங்களை அனுப்ப வேண்டும். அதாவது, 2003-ஆம் ஆண்டில் இருந்து இதுவரையிலும் அதுபோன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை,

நீதிமன்ற வழக்கு விவரங்களுடன் இணைத்து அனுப்ப வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு தீவிரமாக ஆய்வு செய்து அதில் இறுதி முடிவுகளை எடுக்கும் என்று தனது உத்தரவில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் முருகானந்தம் தெரிவித்துள்ளாா்.

Tuesday, February 07, 2023

February 07, 2023

Old Pension Scheme: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, அரசு தரப்பில் லேட்டஸ்ட் அப்டேட்

Old Pension Scheme: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, அரசு தரப்பில் லேட்டஸ்ட் அப்டேட் - Old Pension Scheme: Super News for Employees, Latest Update from Govt

📚பழைய ஓய்வூதியத் திட்டம் 2023: மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் சில மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

👉இப்போது நாட்டின் அனைத்து மாநில மற்றும் மத்திய ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஊழியர்களும் சில அமைப்புகளும் கோரி வருகின்றனர். வரும் நாட்களில் நாட்டின் பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும், 2024 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலும் நடக்க உள்ளன.

👉இந்த நிலையில் ஊழியர்களை மகிழ்விக்க அரசு மீண்டும் இந்த திட்டத்தை அமல்படுத்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

👉எனினும், இது குறித்த நிலையான தகவல் எதுவும் அரசு தரப்பிலிருந்து இன்னும் வரவில்லை.

👉இதற்கிடையில், இனி பல அரசியல் கட்சிகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு அம்சமாக்கி, தாங்கள் ஆட்சி அமைந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்து வருகின்றன.

👉இதனால் உஷாரான மத்திய அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த புதிய திட்டங்களைத் தயார் செய்து வருகிறது. 👉பழைய ஓய்வூதியத்திட்டம் குறித்த ஆலோசனைகள்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பல வித ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றது. இதற்காக ஏற்பட்ட பேச்சுவார்த்தைகளில் அரசும், ஓய்வூதிய ஒழுங்குமுறை அதிகாரிகளும் 3 வகையான தீர்வுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

👉முதல் தீர்வு:

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், கடைசியாக பெறப்பட்ட சம்பளத்தில் பாதி சம்பளம் ஓய்வூதியமாகப் பெறப்படும். ஆனால் இதற்கு ஊழியர்கள் பங்களிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை ஆந்திர அரசு செயல்படுத்தி வருகிறது..

👉இரண்டாவது தீர்வு:

இரண்டாவது தீர்வு என்னவென்றால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும். இதில் ஊழியர்களின் பங்களிப்பு உள்ளது, ஆனால், அதற்கு நிகரான ரிட்டர்ண் இல்லை என ஊழியர்கள் புகார் கூறுகிறார்கள். NPSல் இருக்கும் ஊழியர்களின் குறையை நீக்கும் வகையில், குறைந்தபட்ச வருமானம் 4 முதல் 5 சதவிகிதம் வரை இருக்கலாம் என்று அறிகுறிகள் தென்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர, என்பிஎஸ்-ல் முதிர்வு நேரத்தில் ஊழியர்களுக்கு 60 சதவீதம் தொகை வழங்கப்படுகிறது. இதையும் ஓய்வூதியத்தில் சேர்த்தால், ஓய்வூதியத்தின் அளவு அதிகரிக்கலாம். 👉மூன்றாவது தீர்வு:

அடல் ஓய்வூதியத் திட்டத்தைப் போல, (அடல் பென்ஷன் யோஜனா) குறைந்தபட்ச ஓய்வூதியம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பது மூன்றாவது தீர்வாக உள்ளது. தற்போது இதில் ரூ.1000 முதல் ரூ.5000 வரை ஓய்வூதியம் உள்ளது. அடல் பென்ஷன் யோஜனாவை PFRDA கவனித்து வருகிறது. ரூ.5000 என்ற வரம்பை ரத்து செய்ய முடியும் என்று PFRDA கூறுகிறது. ஆனால் இதற்கு நிதி பற்றாக்குறை சூழ்நிலையை சமாளிக்க உதவும் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும்..

👉இந்த மூன்று தீர்வுகளும் பிஎஃப்ஆர்டிஏ மூலம் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இதில் என்ன முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதில் இன்னும் சந்தேகம் உள்ளது.

👉பிஎஃப்ஆர்டிஏவில் புதிய தலைவர் நியமனத்திற்காக காத்திருப்பது இதற்கு மிகப்பெரிய காரணமாக கருதப்படுகிறது..

Total Pageviews

Search This Blog