CourtOrder
July 02, 2025
Showing posts with label CourtOrder. Show all posts

Wednesday, July 02, 2025
Thursday, May 08, 2025
Saturday, November 16, 2024
Thursday, November 14, 2024
Monday, May 06, 2024
Sunday, February 04, 2024
CourtOrder
February 04, 2024
TRB தேர்வில் கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மையினருக்கு விலக்கு அளிக்க மறுப்பு
இன்று நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மையினருக்கு விலக்கு அளிக்க மறுப்பு
தமிழகத்தில் இன்று (பிப்.4) நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மையினருக்கு விலக்கு அளிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசுதான் முடிவு எடுக்க முடியும் எனக் கூறியுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 582 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்தாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி கடந்த ஜன.7-ல் நடைபெறவிருந்த கட்டாயத் தமிழ் தகுதித்தேர்வு புயல், மழை காரணமாக பிப்.4-க்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த கட்டாயத் தமிழ் தகுதித்தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள்பெற்று தேர்ச்சி பெற்றால் மட்டுமேபிரதான தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கட்டாயத் தமிழ்தகுதித்தேர்வில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கக்கோரியும், இதுதொடர்பாக அரசு ஊழியர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்கக்கோரியும் மொழி சிறுபான்மை விண்ணப்பதாரர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், கடந்த 2016-ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தில், அரசுப் பணிக்கு தகுதிபெற்று தமிழ் மொழியில் தகுதிபெற்றிருக்காவிட்டால், பணி நியமனத்துக்குப் பின் 2 ஆண்டுகளில் தமிழ் மொழிக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இதில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, போட்டித் தேர்விலேயே தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மொழி சிறுபான்மையினர் அரசு பணியை பெறுவதில் பாதிப்பு ஏற்படும். எனவேமொழி சிறுபான்மையின விண்ணப்பதாரர்கள் தமிழ் தகுதித்தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும், என கோரப்பட்டிருந்தது.
ஓராண்டு அவகாசம் வேண்டும்: இந்த வழக்கு தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.இளங்கோ, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் மற்றும் மொழி சிறுபான்மையின விண்ணப்பதாரர்கள் தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் ஓராண்டாவது அவகாசம் வழங்க வேண்டும் என வாதிட்டார். அதற்கு ஆட்சேபம் தெரிவித்து அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன் ஆகியோர் இதுதொடர்பாக சட்ட திருத்தம் கொண்டு வந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. அதன் அடிப்படையில்தான் இந்தபோட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எனவே மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த தேர்வை 41 ஆயிரத்து 485 விண்ணப்பதாரர்கள் எழுதவுள்ள நிலையில் கடைசி நேரத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அது தேர்வு நடைமுறைகளை பாதிக்கும். எனவே மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று விலக்கு அளிக்க முடியாது. இதுதொடர்பாக தமிழக அரசுதான் முடிவு செய்ய முடியும். இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியோர் வரும் மார்ச் 7-க்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
Saturday, December 30, 2023
government jobs
December 30, 2023
பணி விதிகளின்படி தகுதி பெற்றிருக்க வேண்டும் - இல்லையென்றால், அரசு வேலை பெற உரிமையில்லை
பணி விதிகளின்படி தகுதி பெற்றிருக்க வேண்டும் - இல்லையென்றால், அரசு வேலை பெற உரிமையில்லை!!!
அரசு கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், விண்ணப்பங்களை வரவேற்றது. கோபிகிருஷ்ணா என்பவர் அளித்த விண்ணப்பத்தை, தேர்வு வாரியம் நிராகரித்தது.
சர்ச்சை இல்லை இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தள்ளுபடி செய்தார். அதைத் தொடர்ந்து, கோபிகிருஷ்ணா, மேல்முறையீடு செய்தார். மனுவை, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன், வழக்கறிஞர் கே.சதீஷ்குமார் ஆஜராகினர்.
மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, தேர்வு வாரியம் நிர்ணயித்துள்ள தகுதியை, மனுதாரர் பெற்றுள்ளார். நிர்ணயித்த முறைப்படியே தகுதி பெற்றிருக்க வேண்டும் என்பதால், மனுதாரர் தகுதியை செல்லாது எனக் கூற முடியாது, என்றார்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின், இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரைப் பொறுத்தவரை, கல்வித் தகுதியை பெற்றுள்ளார் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை. ஆனால், அந்த தகுதி, அரசாணையில் குறிப்பிட்டுள்ள முறைப்படி பெறப்பட்டதா என்பது தான் கேள்வி.கடந்த 2009 ஆகஸ்டுடில் பிறப்பித்த அரசாணைப்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 2, மூன்றாண்டு பட்டப்படிப்பு என்ற வரிசையில் தான், கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். அதாவது, 10ம் வகுப்பு, பிளஸ் 2க்கு பின்னரே, பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.தமிழக அரசு பிறப்பித்த இந்த அரசாணை செல்லும் என, ஏற்கனவே உயர் நீதிமன்றமும் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின், என்ன காரணங்களாலோ, பிளஸ் 2 படிக்கவில்லை. ஏற்கவில்லை
பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு, தேசிய தகுதி தேர்வு என, அனைத்து தகுதிகளையும் பெற்ற பின், 2019ல் தனித் தேர்வு வாயிலாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளார். பிளஸ் 2 படிப்புக்கு முக்கியத்துவம் இல்லை என்றால், அதை மனுதாரரும் படித்திருக்க மாட்டார்.ஆனால், பல ஆண்டுகளுக்கு பின், அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். அரசாணையை கவனத்தில் கொண்டுள்ளார். எனவே, பிளஸ் 2 தகுதி பெறுவது கட்டாயம். அந்த தகுதியை, பட்டப்படிப்பில் சேர்வதற்கு முன் பெற்றிருக்க வேண்டும். உதவிப் பேராசிரியருக்கான தகுதியை பெற்றிருந்தும், பிளஸ் 2 படிப்பை கடைசியில் முடித்துள்ளார். இந்த நடைமுறையை, நீதிமன்றம் ஒருபோதும் ஏற்கவில்லை.
பணி விதிகளின்படி அல்லது அறிவிப்பாணையின்படி, தகுதியை பூர்த்தி செய்திருக்க வேண்டும். இல்லையென்றால், வேலை பெற உரிமையில்லை.
மனுதாரர் பெற்றுள்ள கல்வித் தகுதி, அரசு நிர்ணயித்த முறைப்படி இல்லாததால், வேலை பெறுவதற்கு அவை செல்லத்தக்கதாக கூற முடியாது.மனுதாரர் மீது இரக்கம் கொள்ளலாம்; அவருக்கு நிவாரணம் வழங்க, சட்டம் அனுமதிக்கவில்லை. பார்லிமென்ட், சட்டசபை இயற்றும் சட்டங்கள் வாயிலாக, பல்கலைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. திறந்தநிலை பல்கலைகளும், சட்டத்தின் வாயிலாக தான் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு என, ரெகுலர் முறையில் படிக்காதவர்களுக்கு கல்வி வழங்குவது தான், இந்த பல்கலைகளின் நோக்கம். இவை, தகுதியானவர்களுக்கு பட்டங்கள் வழங்குகின்றன.மறுக்கின்றனசட்டங்களின் வாயிலாக ஏற்படுத்தப்படும் பல்கலைகள், இந்த கல்வித் தகுதிகளை வழங்கும்போது, அவற்றை அரசு பணிக்கு ஏற்காமல், அரசு துறைகள் மறுக்கின்றன. இத்தகைய படிப்பை படித்த மாணவர்களின் நிலை பரிதாபமானது.
எனவே, சமூக நலன் கருதி, இந்த விஷயத்தில், மத்திய, மாநில அரசுகள் மறுஆய்வு செய்யலாம். அதுவரை, இருக்கிற சட்டத்தைத் தான் நீதிமன்றம் கணக்கில் கொள்ள முடியும். மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Tuesday, November 14, 2023
CourtOrder
November 14, 2023
பணியின்போது இறந்த சத்துணவு பணியாளரின் வாரிசுக்கு பணி வழக்க நீதிமன்றம் உத்தரவு.
Order of Labor Court to heir of food worker who died on duty. - பணியின்போது இறந்த சத்துணவு பணியாளரின் வாரிசுக்கு பணி வழக்க நீதிமன்றம் உத்தரவு.
கருணை அடிப்படையில் பணி வழங்க கோரிய பெண்ணுக்கு, சத்துணவு திட்ட அமைப்பாளர் பணி வழங்கும்படி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மனைவி கோமதி. இவரது தாய், பால்வார்த்துவென்றான் தொடக்கப்பள்ளியில், 2006ல் சத்துணவு சமையலராக பணி அமர்த்தப்பட்டார்.
பணியில் இருந்தபோது, 2017 ஆக.,8ல் மரணம் அடைந்தார்.
கருணை அடிப்படையில் வேலை கேட்ட கோமதிக்கு, 2021 ஆக.,9ல் சமையலர் பணி வழங்கி உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், 'சத்துணவு அமைப்பாளர் பணி வழங்கக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், சமூக நலத்துறை துணை செயலர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்தும் பரிசீலிக்கவில்லை.
'எனவே, மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோமதி மனு தாக்கல் செய்தார்.
மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.தமிழ்ச்செல்வன் ஆஜரானார்.
இருதரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பெண் சமையலர் அல்லது சமையல் உதவியாளர் மரணம் அடைந்தால், அவரது வாரிசுக்கு சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க வேண்டும் என, 2019 ஜூன், 17ல்அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மனுதாரர் 2021 ஆக., 9ல் நியமிக்கப்பட்டுள்ளார்; 2017 அக்.,9ல் விண்ணப்பித்துள்ளார்; அரசாணை 2019 ஜூன், 17ல் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
எனவே, 2019ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்கீழ், சலுகை கோர முடியாது என்ற அரசு தரப்பு வாதம் ஏற்புடையது அல்ல.
எனவே, போளூர் தாலுகாவில் காலியாக உள்ள, 53 பணியிடங்களில், ஏதாவது ஒரு இடத்தில், மனுதாரரை எட்டு வாரத்தில் சத்துணவு அமைப்பாளராக நியமித்து, மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் உத்தரவிட்டுள்ளது.

Tuesday, August 22, 2023
CourtOrder
August 22, 2023
அரசு ஊழியர்களின் பிரசவ காலத்தில் கணவருக்கும் விடுமுறை: உயர்நீதிமன்ற நீதிபதி

மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுமுறை வேண்டும் எனவும், அதற்காக தனிச்சட்டம் உருவாக்குவது அவசியம் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி விக்டோரியா கவுரி கருத்து தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு தமிழகத்தில் 12 மாதங்களாக உள்ளது. மகளிர் தங்கள் பிரசவ காலத்திற்கு சம்பளத்துடன் இந்த விடுப்பு வழங்கப்படுகிறது. சில தனியார் நிறுவனங்கள் தங்கள் பெண் பணியாளர்களுக்கு சில மாதங்கள் மட்டும் விடுப்பு அளிக்கின்றன. இந்த நிலையில் மனைவியின் பிரசவத்தின்போது தனக்கு விடுமுறை வழங்கவில்லை என தென்காசி மாவட்டம் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி, ''மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுமுறை வழங்க தனிச்சட்டம் உருவாக்குவது அவசியம். மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பாக இருக்க கணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும்.
குழந்தையை வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது'' என கருத்து தெரிவித்துள்ளார்.
Wednesday, August 02, 2023
Tuesday, July 25, 2023
CourtOrder
July 25, 2023
50 சதவீதத்துக்கும் மேல் ஆசிரியர் பணியிடங்கள் காலி - அக்டோபர் 10 வரை அவகாசம்!

தமிழகம் முழுவதும் உள்ள பார்வை மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பள்ளிகளில் உள்ள காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, அந்த பள்ளிகள் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும் படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னையை அடுத்த பூந்தமல்லி, திருச்சி, தஞ்சாவூர், சேலம், மதுரை புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, தர்மபுரி மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இந்த பள்ளிகளில், முதல்வர் மற்றும் முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 50 சதவீதத்துக்கும் மேல் காலியாக இருப்பதாக கூறி, வழக்கறிஞர் புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மொத்தமுள்ள 10 பள்ளிகளில் ஐந்து பள்ளிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும்,14 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, 20 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், 10 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், 74 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் 61 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரி எவரும் நியமிக்கப்படவில்லை எனவும், காலிப் பணியிடங்களை நிரப்பாததால் பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அரசு கண்டு கொள்ளவில்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். கல்வி உரிமைச் சட்டப்படி இந்த பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, அக்டோபர் 10ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Wednesday, July 05, 2023
Monday, June 12, 2023
Sunday, May 28, 2023
Thursday, May 18, 2023
Thursday, May 04, 2023
Thursday, March 23, 2023
VIDEOS
March 23, 2023
கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை கருதி உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு
கடல் அலையில் சிக்கி பலியான மாணவன்.. கல்வி நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு - The student who got caught in the sea wave died.. High Court ordered the educational institutions
கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை கருதி உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு கல்விச் சுற்றுலா மற்றும் பிற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
@kalviseithi காஞ்சிபுரம், திம்மசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியின் NSS சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, கூவத்தூர் முதல் தென்பட்டிணம் இடையிலான கடலோர பகுதியில் சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூன்றாம் ஆண்டு மாணவர் மதனகோபால், கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். கல்வி நிறுவனம், மாநில அரசு, மத்திய அரசு, அண்ணா பல்கலைக்கழகத்தின் அலட்சியத்தால் இறந்த மதனகோபாலின் மரணத்துக்கு, ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி அவரது தாய் சர்மிளா மற்றும் சகோதரி திவ்யபாரதி ஆகியோர் 2015ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். "இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட ஆட்சியர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில், "இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்துவது குறித்து கல்லூரி தரப்பில் தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. தகவல் கொடுத்திருந்தால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது தனியார் கல்லூரி தரப்பில், "கடலில் யாரும் இறங்கக் கூடாது என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 54 மாணவ - மாணவியருக்கும் அறிவுறுத்தல் வழங்கியிருந்தோம். அதை மீறி, மதனகோபாலும், மற்றொரு மாணவரும் கடலில் குதித்தனர். அலையில் சிக்கிய இருவரையும் காப்பாற்ற முயற்சித்தபோது, மதனகோபால் உயிரிழந்து விட்டார். எனவே, இந்த நிகழ்வுக்கு கல்லூரியை பொறுப்பாக்க முடியாது" என வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, "மாவட்ட ஆட்சியருக்கு நிகழ்ச்சி குறித்து தெரிவித்து ஒப்புதல் பெற்றிருந்தால், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். 21 வயது மாணவர் உயிரிழந்திருக்கமாட்டார். எனவே, மாணவரின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். மேலும், கல்விச் சுற்றுலா மற்றும் பிற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது, மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கல்வி நிறுவனங்கள் எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்."

Saturday, February 11, 2023
Latest News
February 11, 2023
2003-ம் ஆண்டு பணி நியமனம் பெற்ற போலீஸ்காரர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
2003-ம் ஆண்டு பணி நியமனம் பெற்ற போலீஸ்காரர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு 2003 recruits to be included in old pension scheme - Court orders
2003-ம் ஆண்டு பணி நியமனம் பெற்ற ஆண் போலீஸ்காரர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய திட்டத்தை 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்படுத்தியது. இந்த திட்டம் அமலுக்கு வந்தபின்னர், பணி நியமனம் பெற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதிய திட்டமே பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
கடந்த 2002-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தங்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர உத்தரவிட வேண்டும் என்று சிவசக்தி உள்ளிட்ட 25 போலீஸ்காரர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், '2002-ம் ஆண்டு 3 ஆயிரத்து 500 போலீஸ்காரர்கள் தேர்வு செய்வது தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த தேர்வு நடைமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மனுதாரர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கூடாது' என்று என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

Tuesday, January 31, 2023
High Court order
January 31, 2023
10-ஆம் வகுப்பு தோ்வில் தமிழுக்கு விலக்கு அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு: பிப். 6-இல் விசாரணை
10-ஆம் வகுப்பு தோ்வில் தமிழுக்கு விலக்கு அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு: பிப். 6-இல் விசாரணை Petition against order exempting Tamil in 10th class exam: Feb. Investigation at 6
‘பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்துக்கு விலக்கு அளிக்கும் வழிகாட்டுதலை ரத்து செய்ய மறுத்து சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மனு மீது வரும் பிப். 6-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும்’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கூறியது.
தமிழக பள்ளிகளில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கி கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதனால் பாதிக்கப்பட்ட, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழியைத் தாய்மொழியாக கொண்ட மாணவா்கள் சாா்பில் தமிழக அரசிடம் விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி தமிழக அரசு வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டது. அதில், பிற மாநிலத்திலிருந்து புலம்பெயா்ந்து தமிழக பள்ளிகளில் படித்து வரும் மாணவா்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் பகுதி 1-இல் தமிழ் மொழிப் பாடத் தோ்வு எழுதுவதிலிருந்து குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அரசின் இந்த வழிகாட்டுதலை எதிா்த்து தமிழக மொழியியல் சிறுபான்மையினா் அமைப்பு சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ் மொழிப் பாட விலக்கு என்பது 2023-24 கல்வியாண்டு வரை நீட்டிக்கப்பட வேண்டும். மேலும், தமிழக அரசின் வழிகாட்டுதலை ரத்து செய்து உத்தரவிடுவதோடு, மொழியியல் சிறுபான்மை உறுப்பினா் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கும் இந்த விலக்கு அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கேரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பரில் விசாரித்த உயா்நீதிமன்றம், ‘தமிழ அரசின் வழிகாட்டுதலின்படி, வேறு மாநிலங்களிலிருந்து புலம்பெயா்ந்த மாணவா்கள் மட்டுமே இந்த விலக்கு பெற விண்ணப்பிக்க முடியும். மேலும், இந்த வழிகாட்டுதலை ரத்து செய்து உத்தரவிட முடியாது’ என்று உத்தரவிட்டது. அதே நேரம், மொழியியல் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு 2020-22-ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் தமிழ் மொழித் தோ்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து தமிழக மொழியியல் சிறுபான்மையினா் அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கெளல், ஏ.எஸ்.ஓகா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் வழிகாட்டுதல் மற்றும் உயா்நீதிமன்ற உத்தரவு குறித்து மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் விவரித்தாா். அதைக் கேட்ட நீதிபதிகள், ‘மாணவா்கள் நலனுக்காக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்படும்’ என்றனா்.
மேலும், ‘தமிழகத்துக்கு புலம்பெயா்ந்த மாணவா்களுக்கு மட்டும் இந்த விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மொழியியல் சிறுபான்மையினருக்கும் ஏன் இந்த விலக்கு அளிக்கப்படக் கூடாது’ என்று தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘2023-ஆம் ஆண்டுக்கும் விலக்கு அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்’ என்று கூறி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.