Annamalai University
October 20, 2024
Showing posts with label Annamalai University. Show all posts
Showing posts with label Annamalai University. Show all posts
Sunday, October 20, 2024
Saturday, October 12, 2024
Thursday, September 26, 2024
Saturday, August 24, 2024
Monday, July 29, 2024
Sunday, April 14, 2024
Thursday, March 21, 2024
Tuesday, January 09, 2024
exam news
January 09, 2024
ரத்து செய்யப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிப்பு
Thursday, December 21, 2023
Ramadass
December 21, 2023
குளறுபடிகளின் உச்சம்: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் காலக்கெடு வழங்க வலியுறுத்தல்.
குளறுபடிகளின் உச்சம்: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் காலக்கெடு வழங்க வேண்டும்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் மண்டல வளாகங்களில் காலியாகவுள்ள 232 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளின் விண்ணப்ப நடைமுறையில் விவரிக்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்து குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தகுதியும், அனுபவமும் கொண்ட தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதை தடுப்பதற்காகவே இத்தகைய குழப்பங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றனவோ என்ற ஐயமும், கவலையும் எழுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அரியலூர், ஆரணி, திண்டுக்கல், திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட 13 நகரங்களில் செயல்பட்டு வரும் உறுப்பு பொறியியல் கல்லூரிகளிலும், மதுரை, கோவை, நெல்லை ஆகிய நகரங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல வளாகங்களிலும் காலியாக உள்ள 205 உதவிப் பேராசிரியர்கள், 14 உதவி நூலகர்கள், 13 உடற்கல்வி உதவி இயக்குனர்கள் பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க நவம்பர் 29&ஆம் தேதி முதல் திசம்பர் 13&ஆம் நாள் வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றின் காகித வடிவிலான விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் தாக்கல் செய்ய திசம்பர் 18&ஆம் நாள் கடைசி நாளாகும். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பான்மையினரால் விண்ணப்ப நடைமுறையை நிறைவேற்ற முடியவில்லை.
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கே ஒரு மாதம் காலக்கெடு வழங்கப்படும் நிலையில், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க 14 நாட்கள் மட்டுமே காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. விண்ணப்பம் செய்வதற்கும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்குமான அண்ணா பல்கலைக்கழக இணையதளம் பல நேரங்களில் முடங்கி விட்டது. அதுமட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் காலத்தில் தான் சென்னை புறநகர் பகுதிகளிலும், தென் மாவட்டங்களிலும் கடுமையான மழை & வெள்ளம் ஏற்பட்டது. இயற்கை சீற்றங்களையும், தொழில்நுட்பக் கோளாறுகளையும் கருத்தில் கொண்டு, விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்திருக்க வேண்டும். ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் அதை செய்யவில்லை. அது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். இவற்றை விட இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புவது, உதவிப் பேராசிரியர் பணிக்கு அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வருவோரில் பெரும்பான்மையினரை விண்ணப்பிக்க விடாமல் சதித்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது தான். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 232 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறையே சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி தான் நடைபெறுகிறது.
அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் உதவிப் பேராசிரியர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று கோரி தொடர்ந்த வழக்கில் தான் 232 உதவிப் பேராசிரியர்களை நியமிக்கலாம்; நேர்முகத் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு தகுதி மதிப்பெண்களில் தற்காலிக பேராசிரியர்களுக்கு 5% சலுகை வழங்கப்படும், நேர்முகத் தேர்விலும் தற்காலிக பேராசிரியர்களுக்கு ஓர் ஆண்டு அனுபவத்திற்கு ஒரு மதிப்பெண் வீதம் அதிகபட்சமாக 5 மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு பெரிதும் பயனளிக்கக் கூடியதாகும். தற்காலிக ஆசிரியர்கள் இத்தகைய மதிப்பெண் சலுகையை பெற அவர்கள் பணியாற்றிய காலத்திற்கான அனுபவச் சான்றிதழையும், தடையின்மை சான்றிதழையும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், பெரும்பான்மையான கல்லூரிகளில் பணியாற்றிய தற்காலிக பேராசிரியர்களுக்கு இந்த சான்றுகளை வழங்குவதில் தாமதம் செய்யப்பட்டது.
பலருக்கு சான்றிதழ்களின் நகல்கள் மட்டுமே வழங்கப்பட்டன; உண்மைச் சான்றிதழ்கள் பலருக்கு நேற்று தான் கிடைத்திருக்கிறது, இன்னும் பலருக்கு இன்று தான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது அவற்றை கடந்த 18&ஆம் தேதியே அண்ணா பல்கலைக்கழகத்திடம் அவர்கள் எவ்வாறு தாக்கல் செய்ய முடியும்?
அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக பேராசிரியர்களாக பணியாற்றியவர்கள், அங்கு நிரந்தரமான உதவிப் பேராசிரியர்களாக வந்து விடக் கூடாது என்பதற்காகவே சில புல முதல்வர்கள் இவ்வாறு செய்கிறார்களோ? என்று ஐயப்படுவதற்கு அனைத்து காரணங்களும் உள்ளன. இந்தக் குளறுபடிகளால் தகுதியும், அனுபவமும் உள்ள தற்காலிக பேராசிரியர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை. இதுதொடர்பான குளறுபடிகளை சரி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உண்டு.
Saturday, November 18, 2023
higher educational qualifications
November 18, 2023
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம்: உரிய கல்வித் தகுதி இல்லாததால் நடவடிக்கை!
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம்: உரிய கல்வித் தகுதி இல்லாததால் நடவடிக்கை! Dismissal of 56 assistant professors in Annamalai University: action due to lack of proper educational qualification!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் பல்வேறு துறைகளில் தேவைக்கும் அதிகமாகபணி நியமனங்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நிர்வாகப் பிரச்சினையால் 2012-ல் பல்கலை.யில் நிதிச் சிக்கல் ஏற்பட்டது.இதையடுத்து, அதே ஆண்டுஇறுதியில், பல்கலை. தனி அலுவலராக அரசின் முதன்மைச்செயலராக இருந்த சிவதாஸ்மீனா தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.
அவர் அளித்த அறிக்கையின்படி, 2013-ல் தமிழகமுதல்வராக இருந்த ஜெயலலிதா, பல்கலைக் கழகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். தொடர்ந்து, பல்கலைக்கழகத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்ட சிவதாஸ்மீனா, மற்றொரு அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்தார். அதில், பல்கலை.யில் அதிக எண்ணிக்கையிலான பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளனர். அவர்களை தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு பணி நிரவல் செய்தால், நிதிச் சிக்கல் தீரும் என்று தெரிவித் திருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட துணைவேந்தரின் கட்டுப்பாட்டுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, 2014 முதல் கடந்த 9 ஆண்டுகளாக பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர், தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுக் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு பணிநிரவல் செய்யப்பட்டனர். பின்னர், பல்கலை.யில் தணிக்கைக் குழு ஆய்வு மேற்கொண்ட போது, உரிய கல்வித்தகுதி இல்லாமல் பல்வேறு துறைகளில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக பல்கலை. சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உயர் கல்வித் துறைக்கு தகவல் தெரிவித்து, அதன் வழிகாட்டுதல்படி, மேலாண்மை (எம்பிஏ), பொருளாதாரம், வரலாறு, கணினி அறிவியல்ஆகிய துறைகளைச் சேர்ந்த56 உதவிப் பேராசிரியர்களை பணி நீக்கம் செய்து, பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று முன்தினம் இரவு உத்தரவு அனுப்பியது.
இந்த 56 உதவிப் பேராசிரியர்களில் 38 பேர் பணி நிரவல்அடிப்படையில் பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றி வருகின்றனர். 18 உதவிப் பேராசிரியர்கள் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, November 16, 2023
Annamalai University
November 16, 2023
அண்ணாமலை பல்கலைக்கழக இணை பேராசிரியர்கள் 56 பேர் பணி நீக்கம்.
அண்ணாமலை பல்கலைக்கழக இணை பேராசிரியர்கள் 56 பேர் பணி நீக்கம்.56 Associate Professors of Annamalai University dismissed.
கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இணை பேராசிரியர்கள் 56 பேர் பணி நீக்கம்.
இணை பேராசிரியர்கள் 56 பேரை பணி நீக்கம் செய்து அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
போதிய கல்வி தகுதி இல்லாமல் பணியாற்றி வந்ததாக எழுந்த புகாரின் பேரில் நடவடிக்கை.

Thursday, October 12, 2023
Annamalai University
October 12, 2023
வேளாண் பட்டப்படிப்பில் காலி இடங்களுக்கு நாளை (அக்.13) நேரடி சேர்க்கை அறிவிப்பு.
வேளாண் பட்டப்படிப்பில் காலி இடங்களுக்கு நாளை (அக்.13) நேரடி சேர்க்கை அறிவிப்பு. Direct admission notification tomorrow (Oct 13) for vacant seats in Agriculture Degree.
வேளாண் பட்டப்படிப்பில் காலி இடங்களுக்கு நேரடி சேர்க்கை அறிவிப்பு.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுயநிதி வேளாண் பட்டப்படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு நாளை மறுநாள் நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் சுயநிதி வேளாண் பட்டப் படிப்பு ( B.Sc - Hons Agriculture (Self Supporting ) மற்றும் தோட்டக்கலை ( BSc (Hons Horticulture) படிப்புகளில், பிற்படுத்தப்பட்ட (BC) மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (BCM) வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இருக்கும் காலி இடங்களுக்கு உடனடி மாணவர் சேர்க்கை நாளை (அக்.13) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர்கள், இந்நாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் நடக்கும் சேர்க்கை நிகழ்வில் நேரடியாக பங்கேற்கலாம். பொது கலந்தாய்வில் இடம் கிடைத்து, கலந் தாய்வை தவறவிட்டவர்கள், சான் றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று சேர்க்கையை தவறவிட்டவர்கள், விண்ணப்பிக்க தவறியவர்கள் இந்த நேரடி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
கலந்தாய்வில் மாணவர் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு தரவரிசைப்படி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் அளிக்க இயலாது. மேலும் விவரங்களை, ‘https://annamalaiuniversity.ac.in’ என்ற இணயதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை பல்கலைக் கழக பதிவாளர் சிங்காரவேல் தெரிவித்துள்ளார்.

Wednesday, October 04, 2023
Ramadass
October 04, 2023
அண்ணாமலை பல்கலை. அயல்பணி பேராசிரியர்களை அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களாக அறிவிக்க வலியுறுத்தல்
அண்ணாமலை பல்கலை. அயல்பணி பேராசிரியர்களை அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி அயல்பணி முறையில் அரசு கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், அவர்களின் பணிக்கான எந்தவித ஏற்பளிப்பும் வழங்கப்படாமல் பணியாற்றி வருகின்றனர். துறைத்தலைவர், ஆராய்ச்சி வழிகாட்டி போன்ற உயர்பதவிகளுக்கு தகுதி இருந்தும், அவர்கள் தற்காலிக ஆசிரியர்களைப் போல நடத்தப்படுவது அநீதி.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகம் கடந்த 2012-ஆம், ஆண்டில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியதைத் தொடர்ந்து, அப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து தேவைக்கும் அதிகமாக இருப்பதாக கணக்கிடப் பட்டவர்களில் 369 பேராசிரியர்கள் முதல் கட்டமாக அயல்பணி முறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டனர். அதன்பிறகும் படிப்படியாக அனுப்பப்பட்டவர்களையும் சேர்த்து இது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அரசு கல்லூரிகளில் அயல்பணியில் பணியாற்றுகின்றனர். அயல்பணியில் அனுப்பப்பட்ட பேராசிரியர்கள் அனைவரும் அடுத்த 3 ஆண்டுகளில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் அழைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 2016-ஆம் ஆண்டில் அயல்பணி முறையில் அரசு கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட பேராசிரியர்கள், 7 ஆண்டுகளாக அயல்பணி முறையிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணியமர்த்தியது அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்பதாலும், அவர்கள் அனைவரும் அயல்பணி முறையில் மட்டுமே பணி செய்து வருவதாலும் அவர்களுக்கு அரசு கல்லூரியில் எந்த நிர்வாகப் பொறுப்பும் வழங்கப்படுவதில்லை. அயல்பணி பேராசிரியர்கள் அதிக பணி அனுபவம் கொண்டவர்கள் என்றாலும் கூட, அவர்களை விட குறைவாக பணி அனுபவமும், வயதும் கொண்ட அரசு கலை கல்லூரிகளின் பேராசிரியர்கள் தலைமையின்கீழ் தான் செயல்பட வேண்டியுள்ளது.
அதுமட்டுமின்றி, அரசு கல்லூரிகளில் முனைவர் பட்ட மாணவர்களுக்கு ஆராய்ச்சி வழிகாட்டிகளாக இருக்கவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மதிப்புடனும், பொறுப்புடனும் பணியாற்றி வந்த பேராசிரியர்கள், இப்போது அரசு கல்லூரிகளில் எந்த பொறுப்புகளும் இல்லாமல், கிட்டத்தட்ட கவுரவ விரிவுரையாளர்கள் போன்று பணியாற்றி வருகின்றனர். அதற்கு காரணம், அவர்களுக்கான பணியிடங்கள் எதுவும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஏற்படுத்தப்படாதது தான். இது மிகப்பெரிய சமூக அநீதியாகும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடிக்கு அதன் பேராசிரியர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. ஆனாலும், அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில், அரசின் ஆணையை மதித்து அவர்கள் அனைவரும் அரசு கல்லூரிகளில் பணிக்கு சேர்ந்தனர். அரசு அளித்த வாக்குறுதிப்படி 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கே அழைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றால், அண்ணாமலை பல்கலைக்கழகச் சீரமைப்பு குறித்து இப்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், அப்போதைய அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சிறப்பு அதிகாரியுமான சிவதாஸ் மீனா அளித்த பரிந்துரைப்படி, அயல்பணி பேராசிரியர்களை அவர்கள் பணியாற்றும் அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களாகவே அறிவிக்க முடியும். அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் அனைத்து சிக்கல்களும் தீரும்.
ஆனால், இதுகுறித்த கோரிக்கையை அயல்பணி பேராசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. அயல்பணி பேராசிரியர்களை அரசு கல்லூரிகளின் பேராசிரியர்களாக அறிவிப்பதால் அரசுக்கு எந்த வகையிலும் நிதிச்சுமை ஏற்படாது. அதே நேரத்தில் அயல்பணி பேராசிரியர்களின் உழைப்பை அரசு கல்லூரிகளால் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும். பேராசிரியர்களும் கண்ணியத்துடன் பணி செய்ய முடியும். இதை உணர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக அயல்பணி பேராசிரியர்கள் அனைவரையும் அவர்கள் பணியாற்றும் அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களாக அறிவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Sunday, September 24, 2023
Annamalai University
September 24, 2023
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் துறை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை:27-ந்தேதி நடக்கிறது
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்
வேளாண் துறை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை:27-ந்தேதி நடக்கிறது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் சுயநிதி வேளாண் பட்டப்ப டிப்பு பி.எஸ்சி. (சுயநிதி) மற்றும் பி.எஸ்சி. தோட்டக்கலை (சுயநிதி) படிப்புகளில் உள் ள காலியிடங்களுக்கு உடனடி மாணவர்சேர்க்கை நடைபெறுகிறது. இதில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (பி. சி.), பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினர் (பி. சி.எம்.) மற்றும் எஸ்.டி. பிரிவு உள்ளிட்ட வகுப்பைச் சேர்ந்த வர்கள் இந்த மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளலாம். இதற்கான தகுதியும், விரும்பமும் உள்ளவர்கள் வருகிற 27- ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் மாணவர் சேர்க்கையில் அண்ணாமலை பல்க லைக்கழக வேளாண் புலத்திற்கு நேரடியாக சென்று கலந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வை தவறவிட்டவர்கள், சான் றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று தவறவிட்டவர்களும் இந்த நேரடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளலாம். இந்த கலந்தாய்வில் மாணவர் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு,அதன் படி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு https://annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சிங்காரவேல் வெ ளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Tuesday, September 12, 2023
Annamalai University
September 12, 2023
Annamalai University - Admission Notification 2023-2024 - Last Date - 30.09.23
Annamalai University - Admission Notification 2023-2024 - Last Date - 30.09.23
CLICK HERE TO DOWNLOAD Admission Notification 2023-2024 PDF
CLICK HERE TO DOWNLOAD Admission Notification 2023-2024 PDF
Tuesday, August 01, 2023
Annamalai University
August 01, 2023
அண்ணாமலை பல்கலை.யில் இளங்கலை உள்ளிட்ட 27 பாடப்பிரிவுகளை நடத்த மீண்டும் அனுமதி
Annamalai University re-allowed to run 27 courses including B.Sc - கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் இளங்கலை உள்ளிட்ட 27 பாடப்பிரிவுகளை நடத்த மீண்டும் அனுமதி அளித்துள்ளது.
அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் கதிரேசனின் முயற்சிக்கு பின் மத்திய அரசின் யுஜிசி அனுமதி கிடைத்தது. பல்கலை.யில் அனைத்து பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளை நடத்தவும் அனுமதி வழங்கி யுஜிசி உத்தரவு அளித்துள்ளது.
Friday, July 28, 2023
PROMOTION
July 28, 2023
உதவிப் பேராசிரியர்களுக்கு பேராசிரியர் பதவி உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு
உதவிப் பேராசிரியர்களுக்கு பேராசிரியர் பதவி உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களுக்கு இரட்டைப் பதவி உயர்வாக, மூன்று மாதங்களில் பேராசிரியர் பதவி உயர்வு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பதவி உயர்வு திட்டத்தின் அடிப்படையில், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் என இரட்டை பதவி உயர்வு வழங்குவதற்கு, கடந்த 2018-ம் ஆண்டு பல்கலைக்கழகம் சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்தப் பதவி உயர்வுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இணை பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இரட்டை பதவி உயர்வு வழங்காமல், இணை பேராசிரியர் பதவி உயர்வு மட்டும் வழங்கப்பட்டதை எதிர்த்து இணை பேராசிரியர்கள் கடந்த 2020-ம் ஆண்டு சென்னை உய ர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகம் தரப்பில், "குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இணை பேராசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு மட்டுமே பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும்" என விளக்கம் அளிக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதவி உயர்வு குழு கடந்த 2011-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் பின்னர், கடந்த 2018-ம் ஆண்டு தான் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட ஏழு ஆண்டுகளில் பல உதவி பேராசிரியர்கள் பலர் பதவி உயர்வு கிடைக்க பெறாமல் பணி ஓய்வு பெற்றுள்ளனர். எனவே, மனுதாரர்களுக்கு மூன்று மாதங்களில் பேராசிரியராக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து தீர்ப்பளித்தனர். அரசுப் பள்ளிகளில் ஒரே நாளுடன் முடிவடைந்த காலை உணவுத் திட்டம் - மீண்டும் வருமா?

Tuesday, April 04, 2023
Exam Results
April 04, 2023
அண்ணாமலை பல்கலை. தேர்வு முடிவில் குளறுபடி: மாணவர்கள் போராட்டம்
அண்ணாமலை பல்கலை. தேர்வு முடிவில் குளறுபடி: அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வு முடிவு குளறுபடிகளை கண்டித்து, சி.முட்லூரில் உள்ள சிதம்பரம் அரசுக் கலைக் கல்லூரியில் மாண வர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு சங்கத்தின் கல்லூரி கிளை செய லாளர் அவினேஷ் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் லெனின் மற்றும் மாவட்ட துணை தலைவர் சௌமியா ஆகியோர் கலந்து கொண்டு தேர்வு குளறுபடிகள் குறித்து விளக்கினர். இதில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் கூறுகையில், ‘‘சிதம்பரம்அண்ணாமலை பல்கலைக்கழகத் தின் கீழ் செயல்படும் சி.முட்லூரில் உள்ள சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் கடந்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வை எழுதிய மாணவர்களில் சிலர், தேர்வு எழுதவில்லை என தேர்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் போட்டு அரியர் என்று வந்துள்ளது. மேலும் நன்றாக எழுதிய மாணவர்களுக்கு குறைவாக மதிப்பெண் போட்டு, தோல்வி என குறிப்பிட்டு வந்துள்ளது.
மறுமதிப்பீடு செய்யலாம் என்றால் அதற்கான கட்டண தொகை இளங்கலை மாணவர்களுக்கு ரூ.400, முதுகலை மாணவர்களுக்கு ரூ.800 என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ள தேர்வு முடிவுகளில் இருக்கும் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்; மறுமதிப்பீட்டுக்கான கட்டணத் தொகையை நீக்க வேண் டும்” என்று தெரிவித்தனர்.

Sunday, March 19, 2023
Distance Education
March 19, 2023
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்விப் பிரிவு - தேர்ச்சி பெறாதோருக்கு இறுதி வாய்ப்பு
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்விப் பிரிவு
தேர்ச்சி பெறாதோருக்கு இறுதி வாய்ப்பு
அரக்கோணம், மார்ச் 16: அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூரக் கல்விப்பிரிவில் கடந்த 2002 - 2014 வரையிலான கல்வியாண் டுகளில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக வரும் மே, டிசம்பர் 2023 ஆகிய இரண்டு பருவங்களில் சிறப்பு தேர்வுகள் நடை பெற உள்ளன என அரக்கோணம் அலுவலக பொறுப்பு அலுவலர் தினேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்விப்பிரிவில் கடந்த 2002 முதல் 2014 கல்வியாண்டுகளில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக 2023 மே மற்றும் டிசம்பர் ஆகிய இரண்டு பரு வங்களில் சிறப்பு தேர்வுகள் நடைபெற உள்ளன. எனவே தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இதற்கான விவரங்களுக்கு அண்ணா மலை பல்கலைக்கழக படிப்பு மைய பொறுப்பு அலுவலர் தினேஷை 81228 10012 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மே 2023-க்கான சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மார்ச் 3 முதல் மார்ச் 31-க்குள் பல்கலைக்கழக இணையதள இணைப் பில் தங்களது விவரங்களை பதிவிடலாம்.
2002 -14 இடைப்பட்ட காலத்தில் பயின்று தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு இது மட்டுமே இறுதி வாய்ப்பு. இதையும் தவற விட்டால் தங்களது படிப்பை முடிக்க முடியாத நிலை ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
Saturday, March 18, 2023
Annamalai University
March 18, 2023
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் | தொலைதூரக் கல்வி இயக்ககம் சிறப்பு தேர்வு - மே 2023
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் | தொலைதூரக் கல்வி இயக்ககம் சிறப்பு தேர்வு - மே 2023
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2002 முதல் 2014 வரையிலான கல்வியாண்டில் தொலைதூரக்கல்வி வழியில் பயின்று தேர்ச்சி மாணவர்களுக்காக வரும் மே பெறாத 2023 - ல் சிறப்புத்தேர்வு நடைபெற இருக்கிறது. வரும் மே - மாதம் நடைபெற உள்ள சிறப்புத் தேர்வை எழுத மாணவர்கள் விருப்பமுள்ள www.coe.annamalaiuniversity.ac.in பல்கலைக்கழக என்ற இணையதளத்தில் வரும் 31.03.2023 க்குள் பதிவு செய்யலாம் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள படிப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்