Breaking

Showing posts with label ADMISSION NOTIFICATION. Show all posts
Showing posts with label ADMISSION NOTIFICATION. Show all posts

Thursday, July 10, 2025

Saturday, April 12, 2025

Thursday, May 16, 2024

Thursday, November 09, 2023

November 09, 2023

சைனிக் பள்ளி சேர்க்கை - நுழைவுத் தேர்வு அறிவிப்பு - டிச.16-ம் தேதி கடைசி நாள்



சைனிக் பள்ளி சேர்க்கை - நுழைவுத் தேர்வு அறிவிப்பு - டிச.16-ம் தேதி கடைசி நாள் Sainik School Admission - Entrance Test Notification - Dec 16 Last Date

சைனிக் பள்ளி சேர்க்கை - நுழைவுத் தேர்வு அறிவிப்பு

சைனிக் பள்ளிகளில் 6, 9-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் டிச.16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றில் 2024-25-ம் கல்வியாண்டில் 6, 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு அடுத்தாண்டு ஜனவரி 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு, https://aissee.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாகடிச.16-ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும். கட்டண விவரம்:

இதற்கு விண்ணப்ப கட்டண மாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.500-ம், இதர பிரிவினர் ரூ.650-ம் இணையவழியில் செலுத்த வேண்டும். இதுதவிர விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள், ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங் களை என்டிஏ வலைதளத்தில் (www.nta.ac.in) சென்று அறிந்து கொள்ளலாம்.

மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் aissee@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Thursday, May 11, 2023

Tuesday, January 24, 2023

January 24, 2023

மே மாதம் இறுதி செமஸ்டர்; அண்ணா பல்கலை அறிவிப்பு

மே மாதம் இறுதி செமஸ்டர்; அண்ணா பல்கலை அறிவிப்பு Final semester in May; Anna University Notification



சென்னை : 'இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு, நடப்பு கல்வி ஆண்டின் இறுதி செமஸ்டர் தேர்வு, மே மாதம் துவங்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு, டிசம்பரில் தேர்வுகள் முடிந்து, விடுமுறை விடப்பட்டது. நேற்று கல்லுாரிகள் மீண்டும் திறக்கப்பட்டு, அடுத்த செமஸ்டருக்கான பாடங்கள் துவங்கியுள்ளன.

இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு, மே மாதம் நடத்தப்பட உள்ளது. இதன்படி, சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி உள்ளிட்ட நான்கு கல்லுாரிகளில் வகுப்புகள், மே, 15ல் முடியும்.

பின், மே, 22 முதல் இறுதி செமஸ்டர் தேர்வுகள் துவங்கும். தேர்வுக்கு பின், கோடை விடுமுறை அளிக்கப்படும். ஜூன், 21ல் கல்லுாரிகள் மீண்டும் திறக்கப்படும். முதலாம் ஆண்டு தவிர, மற்ற மாணவர்களுக்கு இந்த அட்டவணைப்படி தேர்வு நடத்தப்படும்.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும், வேறு அட்டவணை வெளியிடப்படும். தேர்வு அட்டவணைக்கு ஏற்ப, மாணவர்கள் தங்கள் படிப்புக்களை திட்டமிட வேண்டும் என, அண்ணா பல்கலைதெரிவித்துள்ளது

Wednesday, November 16, 2022

November 16, 2022

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் - எம்.டி. (சித்தா) பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை 2022-2023ஆம் கல்வியாண்டு மாணவர்கள் சேர்க்கை அறிவிக்கை

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம்.

எம்.டி. (சித்தா) பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை 2022-2023ஆம் கல்வியாண்டு

அறிவிக்கை

தமிழ்நாட்டில் அமைந்துள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி பாளையங்கோட்டை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான AIAPGET 2022- (Siddha)ல் தகுதி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவங்களை www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப்படிவங்கள் இயக்குநரக அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த இடங்களிலோ வழங்கப்படமாட்டாது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள தகவல் தொகுப்பேட்டில் அறியலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், கோரப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநரகம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு 25.11.2022 மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

Monday, July 25, 2022

Tuesday, July 12, 2022

July 12, 2022

THE TAMIL NADU Dr.AMBEDKAR LAW UNIVERSITY - ADMISSION NOTIFICATION : 2022-2023 - PDF

Applications are invited from eligible candidates through ONLINE MODE for Admission to the 5 Years Integrated Law Degree Courses for the Academic Year 2022-2023.


Applications are invited from eligible candidates through Online Mode for Admission to the 5 Years Integrated Law Degree Courses for the Academic Year 2022-2023.

CLICK HERE TO DOWNLOAD PDF

Total Pageviews

Search This Blog