Breaking

Showing posts with label Tamil Nadu Open University. Show all posts
Showing posts with label Tamil Nadu Open University. Show all posts

Thursday, January 04, 2024

January 04, 2024

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை.யில் பி.எட். சிறப்புக் கல்வி பட்டப் படிப்பு: ஜனவரி 20 வரை விண்ணப்பிக்கலாம்



தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை.யில் பி.எட். சிறப்புக் கல்வி பட்டப் படிப்பு: ஜனவரி 20 வரை விண்ணப்பிக்கலாம் Tamil Nadu Open University B.Ed. Special Education Degree Course: Apply till January 20

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். சிறப்புக் கல்வி தொலைநிலை பட்டப்படிப்புக்கு ஜன.20 வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்து பல்கலைக்கழகத்தின் பதிவாளா் இ.இரா.செந்தில்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பி.எட். சிறப்புக் கல்வி பட்டப் படிப்பை வழங்கி வரும் இரு பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகமும் ஒன்று. இந்தப் படிப்பு யுஜிசி, இந்திய மறுவாழ்வுக் கழகத்தின் அங்கீகாரத்துடன் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தப் படிப்பு பி.எட். (பொது) பட்டத்துக்கு இணையானது என தமிழக அரசால் (அரசாணை எண் 56; 2012) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப் படிப்பை முடித்தவா்கள் அரசு பொது மற்றும் சிறப்புப் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியா்களாக பணியாற்றலாம். இந்த நிலையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2024-ஆம் ஆண்டுக்கான பி.எட். சிறப்புக் கல்வி பட்டப் படிப்புக்கான நுழைவுத் தோ்வின் இணையவழி விண்ணப்ப படிவம், விளக்கக் கையேடு ஆகியவற்றை கடந்த டிச.29-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. சோ்க்கைக்கு விண்ணப்பிக்க ஜன.20-ஆம் தேதி கடைசி நாள்.

இந்தப் படிப்பில் சேர விரும்புவோா் விளக்கக் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதியுடன் இருப்பது அவசியம். விண்ணப்ப படிவம் மற்றும் விளக்கக் கையேடு https://tnou.ac.in/prospectus.bed.php என்ற இணையதளத்தில் கிடைக்கும். மேலும் தகவல்களுக்கு 044-24306617 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, December 31, 2023

December 31, 2023

திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை அரசு வேலைவாய்ப்புக்கு ஏற்க மறுப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம்

திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை அரசு வேலைவாய்ப்புக்கு ஏற்க மறுப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம்

திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை அரசின் வேலைவாய்ப்புக்கு ஏற்க மறுப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பித்த கோபி கிருஷ்ணா என்பவர் 10-ம் வகுப்புக்குப் பிறகு நேரடியாக திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலமாக இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்று, அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு தனித்தேர்வு எழுதி 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதாகக்கூறி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது இதை எதிர்த்து கோபி கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘கடந்த 2009-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி 10 + 2 + 3 என்ற அடிப்படையில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, அதன்பிறகு இளநிலைப் பட்டம் என்ற வரிசையில் கல்வி கற்றவர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற அரசாணையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஆனால் மனுதாரர் 10-ம் வகுப்புக்குப்பிறகு நேரடியாக முனைவர் பட்டமே பெற்றுவிட்டார்.

அதன் பிறகு 12-ம் வகுப்பை படித்து அதிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த தலைகீழ் நடைமுறையை யாரும் அங்கீகரிக்கவில்லை. அரசு நிர்ணயித்துள்ள கல்வித் தகுதியின்படி உரிய தகுதியை மனுதாரர் பெறவில்லை என்பதால் அவர் மீது இரக்கம் மட்டுமே காட்ட முடியும். அரசு வேலைவாய்ப்பை வழங்க வேண்டுமென நிவாரணம் வழங்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
அதேநேரம், வழக்கமான நடைமுறைப்படி கல்வியைப் பெற முடியாதவர்களுக்காகவே திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களை உருவாக்கி நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் மத்திய, மாநில அரசுகள் சட்டங்களை உருவாக்கியுள்ளன. ஆனால் இந்த திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை அரசு வேலைவாய்ப்புக்கு ஏற்க மறுப்பதால் பல விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட்டு வழக்கு தொடரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

எனவே சமூக நலன் கருதி திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை ஏற்க மறுப்பதை மத்திய, மாநில அரசுகள் மறு பரிசீலனை செய்ய வேண்டும். அதுவரை தற்போது அமலில் உள்ள சட்டங்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும், எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.வழக்கமான நடைமுறைப்படி கல்வியை பெற முடியாதவர் களுக்காகவே திறந்த நிலைப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.

Friday, August 04, 2023

August 04, 2023

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.க்கு ‘ஏ பிளஸ்’ அந்தஸ்து



தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.க்கு ‘ஏ பிளஸ்’ அந்தஸ்து

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு ‘ஏ பிளஸ்’ அந்தஸ்தைதேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழு (நாக் கமிட்டி) வழங்கியுள்ளது. இதுகுறித்து திறந்தநிலை பல்கலை. பதிவாளர் சு.பாலசுப்ரமணியன் (பொறுப்பு) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திறந்தநிலை பல்கலைக்கழகம் 2002-ம் ஆண்டு தமிழக அரசால்நிறுவப்பட்டது. இது பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) 2எப், 12பி தகுதி பெற்றுள்ளது. தற்போது தொலைநிலைக் கல்விமுறையில் படிப்புகளை வழங்கும்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.க்கு நாக்கமிட்டி 4-க்கு 3.32 புள்ளிகளை வழங்கியுள்ளது. இதன்மூலம் ‘ஏ பிளஸ்’ தகுதியை பெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கற்றல், கற்பித்தல், மதிப்பீடு, ஆராய்ச்சி, உள்கட்டமைப்புகள், கற்றல் வளம், மேலாண்மை, தலைமைத்துவம் உள்ளிட்ட அளவுகோல்களை மையமாக கொண்டு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் 16 திறந்தநிலை உயர்கல்வி நிறுவனங்களில் நாக் கமிட்டியின் தரவரிசையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. 2-ம் இடத்தில் உள்ளது. பழங்குடியினர், திருநங்கைகள், சிறைவாசிகள், சமூகத்தில் பின்தங்கியோருக்கு உயர்கல்வி வழங்க எடுத்து வரும் முயற்சிகளுக்கும் நாக் கமிட்டி பாராட்டு தெரிவித்துள்ளது.

Total Pageviews

Search This Blog