Fundamental Rules
January 20, 2026
Showing posts with label Aided schools. Show all posts

Tuesday, January 20, 2026
Wednesday, November 19, 2025
Tuesday, December 10, 2024
Sunday, December 08, 2024
Sunday, May 19, 2024
Saturday, April 06, 2024
Wednesday, February 21, 2024
DSE
February 21, 2024
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிநிரவல்: பள்ளிக்கல்வித் துறை வழிமுறைகள் வெளியீடு

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
கூட்டு மேலாண்மை நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிதி உதவிபெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அவர்களை அந்த நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள பிற பள்ளிகளில் தகுந்த காலிப் பணியிடங்களில் பணி நிரவல் செய்ய வேண்டும். ஆனால், கூட்டுமேலாண்மை பள்ளிகளால் அதே நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பிற பள்ளிகளில் தகுந்த காலிப்பணியிடம் இருந்தும் பணிநிரவல் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவ்வாறு பணிநிரவல் செய்ய தவறிய நிலையில் உரிய விதிகளை பின்பற்றி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டத்துக்குள் பள்ளிக் கல்வி இயக்குநரால் பணி நிரவல் செய்து ஆணை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், சிறுபான்மை பள்ளி நிர்வாகம் தங்களிடம் உள்ள அரசுமானியம் பெறும் நிரப்ப தகுந்தகாலியிடங்களுக்கு பிற பள்ளிகளில் இருந்து உபரி ஆசிரியர்களை ஈர்த்துக் கொள்ள ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மேலும், அத்தகைய கோரிக்கைகளுக்கு உடனே பணிநிரவல் ஆணை வழங்க வேண்டும்.
அதன்படி கூட்டு மேலாண்மை பள்ளி மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிநிரவல் முடிந்த பின்னர், அதில் எஞ்சிய உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்யும் நடவடிக்கையானது எமிஸ் வலைதளம் வழியாக மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த கல்வியாண்டு நிறைவடைய உள்ள நிலையில், பணிநிரவலாகும் உபரி ஆசிரியர்களை இந்த கல்வியாண்டின் இறுதி வேலை நாளில் புதிய பள்ளியில் பொறுப்பேற்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, January 19, 2024
morning breakfast
January 19, 2024
அரசு நிதியுதவி பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்? - அமைச்சர் அன்பில் மகேஸ்
Breakfast scheme for government funded schools too? - Minister Anbil Mahes அரசு நிதியுதவி பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்? - அமைச்சர் அன்பில் மகேஸ்
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து முதல்வர் பரிசீலித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது: ஆசிரியர் பணியிடங்களை அதிக எண்ணிக்கையில் நிரப்ப வேண்டும் என்பது அரசின் ஆசை.நிதி அமைச்சகத்திடம் காலிப் பணியிட விவரங்களைக் கொடுக்கிறோம். அவர்கள் நிதி சுமைக்கு ஏற்ப பணியிடங்களை நிரப்ப அனுமதிக்கின்றனர்.
காலை உணவுத் திட்டத்தை பொறுத்தவரையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த முதல்வர் திட்டமிட்டு வருகிறார். அதற்கான சாதகமான அறிவிப்பு நிதி நிலை அறிக்கை கூட்டத்தில் வரும் 1 முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தாலும் வரலாம். நாம் நம்முடைய பள்ளியை தன்னிறைவு பெற்ற பள்ளிகளாக வைத்திருக்க வேண்டும். வட்டாரக் கல்வி அலுவலர்கள் என்று பள்ளிக் கல்வித் துறையால் தெரிவிக்கப்பட்டாலும், எங்களை பொறுத்தவரையில் சிறந்த கல்வித் துறை அதிகாரிகளாகத்தான் அவர்களை பார்க்கிறோம். அதனை நிரூபிக்கும் வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில், தமிழ்நாடு நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தமிழ்மணி, தலைவர் கஜேந்திரன், தமிழ்நாடு அரசின் ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் குமார், பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத்தலைவர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Sunday, January 14, 2024
ASSOCIATION
January 14, 2024
சிறுபான்மை பள்ளிகளுக்கு வழங்கும் நலத்திட்டத்தை நிதி உதவி பள்ளிகளுக்கும் வழங்க - "தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு" - கோரிக்கை

📌சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் தமிழகமுதல்வர் கூறியதாக வந்துள்ள பத்திரிக்கை செய்திகளில் கிராமப்புற
சிறுபான்மை நிதிஉதவி பள்ளிகளில்
1-5 வகுப்பு மாணவர்களுக்கு
காலை சிற்றுண்டி திட்டம்
மற்றும் 6-12 தமிழ்வழியில் பயின்ற சிறுபான்மை நிதியுதவி பள்ளிகளில்
புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம்,
பணிநியமன வயது தளர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு
நிரந்தர அங்கீகாரம் வழங்குதல்
குறித்த அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் வெளிவரும் என அறிவித்துள்ளதாக வந்துள்ளது.
📌இது மதசார்பற்ற, சமதர்ம, சமூகநீதி கொள்கைக்கு முரணாக உள்ளது.
📌ஆகவே இது போன்ற நலத்திட்டங்களை நீட்டித்தால் அதை அனைத்து நிதிஉதவி பள்ளிகளுக்கும் சேர்த்தே வழங்க வேண்டும்.
📌சிறுபான்மை - சிறுபான்மையற்ற எனப்பாகுபாடு காட்டக்கூடாது
📌அனைத்து நலத்திட்டங்களையும் சிறுபான்மையினருக்கு தருவது போல மற்ற அரசு நிதிஉதவிப் பள்ளிகளுக்கும் கொண்டு வர வேண்டும்.
📌ஏனெனில் அனைத்து பள்ளிகளிலும் ஏழை எளிய மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் சிறுபான்மை பள்ளிகளுக்கு மட்டும் சலுகைகள் வழங்குவது சமூக நீதியாக கருத இயலாது.
📌எனவே சிறுபான்மையினர் பள்ளிக்கு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கும் வகையில் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு இருக்க வேண்டும்
என
தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு கேட்டுக் கொள்கிறது
நன்றி
Friday, November 03, 2023
TET Exemption
November 03, 2023
Petition to DPI for TET Exemption - AIDED பள்ளிகளில் BT/SGT களாக பணி நியமனம் பெற்றவர்கள் - TET விலக்கு கோரி DPIல் மனு
AIDED பள்ளிகளில் BT/SGT களாக பணி நியமனம் பெற்றவர்கள் - TET விலக்கு கோரி DPIல் மனு
Appointed as BT/SGTs in AIDED Schools - Petition to DPI for TET Exemption
23.08.10 to 16.11.12 காலகட்டத்தில் AIDED பள்ளிகளில் BT/SGT களாக பணி நியமனம் பெற்றவர்கள் - TET விலக்கு கோரி DPIல் மனு... தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் ஏற்கனவே இருந்த துறை சார்ந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி 16.11.2012 வரை நிரந்தரப் பணியிடத்தில் நியமனம் பெற்று ஆசிரியர் தகுதித்தேர்வு நிபந்தனையுடன் கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்து , ஒரு தவிர்ப்பாணை வெளியிட தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்திட பணிந்து வேண்டுதல் சார்பாக மனு...

Tuesday, October 24, 2023
JOB NEWS
October 24, 2023
Aided School Teachers Wanted!
Monday, August 28, 2023
Aided schools
August 28, 2023
அரசு பள்ளி போல அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் சலுகைகள் கிடைக்குமா?

அரசிடம் போதிய நிதி வசதியும், இடமும் இல்லை என்ற காலகட்டம் அப்போது இருந்தது. ஏழை ,எளிய மக்களுக்கு கல்வி புகட்ட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அப்போது செல்வந்தர்கள் பலரும் தமக்கு சொந்தமான இடங்களை இலவசமாக பள்ளிகளுக்கு எழுதி வைத்து,
அந்த இடத்தில் தமது சொந்த செலவில் வகுப்பறைக் கட்டிடங்களும் கட்டிக் கொடுத்து, அவர்களே ஆசிரியர்களுக்கு ஊதியமும் வழங்கி பள்ளியை நடத்தி வந்தனர். ஒரு கட்டத்தில், அரசே முன் வந்து, அந்தப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ஊதியம் மட்டும் வழங்கி வருகிறது. இவ்வாறாக உருவானதுதான் அரசு உதவி பெறும் பள்ளிகள்.
1950-களுக்குப் பின், தமிழகத்தின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது இந்த அரசு உதவி பெறும் பள்ளிகள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது அரசு சார்பில் பல பள்ளிகள் திறக்கப்பட்டாலும், ஆரம்ப காலங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகள் தான் ஏழை, எளிய கிராமப்புற மக்களின் கல்வித்தரத்தை உயர்த்தியது என்பது நிதர்சனமான உண்மை. அரசு பள்ளிகள் இல்லாத ஒரு சில ஊர்களில் மாணவர்களுக்கு கல்வியறிவை அளிப்பதில் கிராமப்புற அரசு உதவி பெறும் பள்ளிகள் பெரும் பங்கு வகித்துள்ளது. அரசு - அரசு சார் என இரு வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமுக, பொருளாதார நிலை ஏறக்குறைய ஒரே நிலையில் தான் இன்று வரையிலும் உள்ளது.
இந்தச் சூழலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு அது ஏமாற்றத்தை அளிக்கிறது. அரசு மேல்நிலைப் பள்ளிகள் இல்லாத இடங்களில் பெற்றோர் பாதுகாப்பு கருதி தமது பெண் குழந்தைகளை அருகில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர்.
அந்தப் பள்ளிகளில் படிப்பதாலேயே இவர்களுக்கு பெண் கல்வி ஊக்கத் தொகை மறுக்கப்படுகிறது. “தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ள காலை உணவுத் திட்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதால், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஏழை,எளிய குழந்தைகள் பயனடைய வாய்ப்பில்லை. இது தவிர்க்கப்பட வேண்டும்” என்கின்றனர் பெற்றோரும், கல்வியாளர்களும்.
இது தொடர்பாக பேசிய தொழில் கல்வி கணினி ஆசிரியர் சங்க மாநில செய்தி தொடர்பாளர் ஆசிரியர் முத்துக் குமரன் கூறுகையில், “அரசு, அரசு உதவி பெறும் பள்ளி என்ற பாகுபாடு இன்றி அனைத்து குழந்தைகளையும் ஒருசேர பாவிக்கும் நிலைமையை தமிழக முதல்வர் ஏற்படுத்தி தர வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் 7.5 சதவீத ஒதுக்கீடு கிடைக்காததால், அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2, முடித்த ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைப்பதில்லை. கல்லூரியில் படிக்கும் போது பெண் கல்வி ஊக்கத் தொகை இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
முதல்வர் உதவித்தொகைத் திட்டத்தில் தேர்வு எழுத பிளஸ் 1 மாணவர்களுக்கு அனுமதி அளித்தல், மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு உள்ளிட்ட அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும்” என்று கூறுகிறார்.
“இதுதொடர்பாக பலமுறை பள்ளிக்கல்வித் துறைக்கு மனுக்கள் அளித்துள்ளோம். ஆனாலும், அரசு உதவி பெறும் பள்ளிகளை இரண்டாம் நிலையிலேயே வைத்துள்ளது வருத்தம் அளிக்கிறது” என்று கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.