Breaking

Showing posts with label MBA/MCA. Show all posts
Showing posts with label MBA/MCA. Show all posts

Tuesday, October 19, 2021

Friday, August 20, 2021

August 20, 2021

MBA.,MCA., சேர்க்கை ஆன்லைன் பதிவு துவக்கம்

சென்னை:தமிழகத்தில் உள்ள கல்லுாரிகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், அண்ணா பல்கலை உள்ளிட்ட அரசு பல்கலைகளின் இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், இன்ஜினியரிங் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளுக்கு, ஒற்றைச் சாளர முறையில், 'ஆன்லைன்' வழி மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், இந்த மாணவர் சேர்க்கை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகள், அரசு உதவி இன்ஜினியரிங் கல்லுாரிகள், மண்டல கல்லுாரிகள், அண்ணாமலை பல்கலை கல்லுாரிகள், சுயநிதி கல்லுாரிகள் உள்ளிட்டவற்றில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புக்கு, ஆன்லைன் வழியிலான சேர்க்கை துவங்கிஉள்ளது.

அண்ணா பல்கலை நடத்திய, 'டான்செட்' நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், இந்த சேர்க்கை நடக்கிறது. இதில் சேர விரும்பும் மாணவர்கள், https://www.tn-mbamca.com/ என்ற இணையதளத்தில், வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Wednesday, August 11, 2021

August 11, 2021

MBA மற்றும் MCA படிப்புகளில் சேர இன்று முதல் வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

MBA மற்றும் MCA படிப்புகளில் சேர இன்று முதல் வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
MBA மற்றும் MCA படிப்புகளில் சேர gct.ac.in மற்றும் tn-mbamca.com என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.

பதிவுக் கட்டணத்தை கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மற்றும் நெட் பேங்கிங் வாயிலாக செலுத்தலாம்.

- தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு.

Saturday, August 07, 2021

August 07, 2021

அண்ணா பல்கலை. தொலைதூரக் கல்வி- எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி கலந்தாய்வு: ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மூலம் எம்பிஏ,எம்சிஏ, எம்எஸ்சி படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை.யின் தொலைதூரக் கல்வி மையத்தில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ‘டான்செட்’ தேர்வு அல்லது தொலைதூரக் கல்விக்கான நுழைவுத் தேர்வுமூலம் நடைபெறும். இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொலைதூர கல்வி மையத்தின்சார்பாக எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி (சிஎஸ்) படிப்புக்கான சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பம் தற்போது தொடங்கப்படுகிறது. அதன்படி, எம்பிஏ, எம்சிஏ-க்கு தகுதி உள்ள மாணவர்கள் https://cdefee.annauniv.edu/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கி, பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் நவ.31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். எம்எஸ்சி படிப்புக்கான விண்ணப்பத்தை டிச.3-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், எந்த நுழைவுத் தேர்வும் எழுதாத மாணவர்கள் டிச.5-ல் நடைபெறும் நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளலாம். அதற்கான விண்ணப்பமும் இணையதளத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து கலந்தாய்வு டிசம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை. தொலைதூர கல்வித் திட்டத்தின் கீழ் பயிலும்மாணவர்களுக்கு, நவம்பர்–டிசம்பர் மாத பருவத் தேர்வுகளுக்கான கட்டணத்தை ஆன்லைனில் ஆக.18வரை செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 044–22357225 என்றஎண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, August 05, 2021

August 05, 2021

MBA, MCA சேர்க்கைக்கு ஆக.11 முதல் விண்ணப்பிக்கலாம்!

எம்பிஏ மற்றும் எம்சிஏ முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஆகஸ்ட் 11 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

2021-2022ஆம் கல்வியாண்டிற்கு இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த மாணாக்கர்கள் அரசு / அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகள் / அண்ணா பல்கலைக் கழகம் / துறைகள் (University Departments) / வட்டார மையங்கள் (Regional Centers) / அண்ணாமலை பல்கலைக்கழகம் / சென்னைப் பல்கலைக்கழகம் / இதர பல்கலைக்கழகங்கள்/ சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ. / எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். 1. விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றுகளுடன் www.gct.ac.in / www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.

2. விண்ணப்பதாரர்கள் எம்பிஏ மற்றும் எம்சிஏ முதுநிலை பட்டப் படிப்புகளுக்குத் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு தொடங்கும் நாள்: 11.08.2021, முடிவடையும் நாள்: 31.08.2021. 3. பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking வாயிலாக மட்டுமே செலுத்த முடியும்.

4. இந்தக் கல்வியாண்டில் MBA / MCA முதுநிலைப் பட்டப்படிப்பு கலந்தாய்வு நடைமுறைகளான விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் பதிவேற்றம், சான்றிதழ் சரிபார்ப்பு, கல்லூரி தேர்ந்தெடுத்தல், தற்காலிக மற்றும் இடைக்கால ஒதுக்கீட்டு ஆணை ஆகியவை அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும்.

5. மேலும் விவரங்கள் அறிய www.gct.ac.in / www.tn-mbamca.com என்ற இணையதள முகவரியில் “INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES” பக்கத்தில் பார்க்கவும்.

கூடுதல் தகவல்களுக்கு 0422 - 2451100

Monday, August 02, 2021

August 02, 2021

MBA நுழைவுத் தேர்வு - ,CAT தேர்வு தேதி அறிவிப்பு – ஆகஸ்ட் 4 முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம் !

நாடு முழுவதும் MBA நுழைவுத் தேர்வான CAT தேர்விற்கு தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வினை எழுத ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IIM
பிரிவின் பெயர் CAT 2021
கடைசி தேதி 04.08.2021 – 15.09.2021
விண்ணப்பிக்கும் முறை Download Below
CAT தேர்வு 2021 :

MBA நுழைவுத் தேர்வாக நாடு முழுவதும் நடத்தப்படும் தேர்வு Common Admission Test (CAT) ஆகும். இதில் தேர்ச்சி பெறுவோர் Indian Institute of Management பயிலகத்தில் சேர்த்து பயில இயலும். CAT தேர்வு கல்வித்தகுதி :
இந்த தேர்வு எழுத விரும்புவோர் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
General பிரிவு விண்ணப்பதாரர்கள் – ரூ.2,200/-
SC/ST/PWD பிரிவு விண்ணப்பதாரர்கள் – ரூ.1,100/-
CAT தேர்வு தேதி 2021 :

இந்த CAT தேர்வுகள் ஆனது வரும் 28.11.2021 அன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகள் Online Computer Based முறையில் நடத்தப்படும். அவற்றிற்கான ஹால் டிக்கெட்கள் வரும் 27.10.2021 அன்று முதல் வினியோகிக்கப்படவுள்ளது. விண்ணப்பிக்கும் முறை :
இத்தேர்வு எழுத விரும்புவோர் வரும் 04.08.2021 அன்று முதல் 15.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification

Download Important Date

Official Site

Friday, March 26, 2021

March 26, 2021

தொலைதூரக் கல்வியில் எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை

தொலைதூரக் கல்வியில் எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்பில் சேர பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையம் வாயிலாக எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி(கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்புகள் தொலைதூரக் கல்வி முறையில் வழங்கப்படுகின்றன. பொது மேலாண்மை, தொழில்நுட்ப மேலாண்மை, விற்பனை மேலாண்மை, மனிதவள மேலாண்மை, நிதி சேவை மேலாண்மை உட்பட 8 பாடப்பிரிவுகளில் வழங்கப்படும் எம்பிஏ படிப்பில் நடப்பு ஆண்டில் சேர ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ‘டான்செட்’ அல்லது தொலைதூரக் கல்வி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்சிஏ படிப்புக்கு பிசிஏ பட்டதாரிகள், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் எனில் 45 சதவீத மதிப்பெண் போதும். மேலே குறிப்பிட்ட நுழைவுத் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும். எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர பிளஸ் 2 அல்லது பட்டப் படிப்பில் கணிதத்தை ஒரு பாடமாக படித்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு நுழைவுத்தேர்வு ஏதும் கிடையாது.
ஆன்லைன் விண்ணப்பம் மாணவர்கள் ஆன்லைன் (http://cde.annauniv.edu) வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புக்கு ஏப்.15-ம் தேதிக்குள்ளும், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு ஏப். 21-ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். எம்பிஏ, எம்சிஏ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ஏப்.18-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். கலந்தாய்வு ஏப்.24-ம் தேதி நடைபெறும். சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருச்சி, விழுப்புரம் ஆகிய இடங்களில் கல்வி மையங்கள் செயல்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Saturday, March 13, 2021

March 13, 2021

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு - மத்திய அரசு அறிவிப்பு!

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு - மத்திய அரசு அறிவிப்பு!
ஆகஸ்ட் 1ம் தேதி ஒரே கட்டமாக நீட் தேர்வு.
11 மொழிகளில் எழுத்துத் தேர்வாக நடைபெறும்.
தேசிய தேர்வு ஆணையம் அறிவிப்பு. நாடு முழுவதும் ஆகஸ்ட் 1-ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு
நடப்பாண்டு முதல் நர்சிங், சித்தா, யுனானி ஆகிய படிப்புகளில் சேரவும் நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் வருகிற 2021 கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1ம் தேதி நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆங்கிலம், தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை எம்.பி.பி.எஸ், மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டு முதல் சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இயற்கை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும், பிஎஸ்சி நர்சிங் மற்றும் உயிர் வேதியியல், உயிர் விலங்கியல், நுண்ணறிவியல் போன்ற கலை அறிவியல் கல்லூரியில் உள்ள உயிர் அறிவியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நடப்பு கல்வி ஆண்டு முதல் நீட் தேர்வு எழுதாமல் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. பொதுவாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்கும் கனவோடு முயற்சிக்கும் நடுத்தர மாணவர்கள், அது கிடைக்காத பட்சத்தில் பிஎஸ்சி நர்சிங் போன்ற படிப்புகளையே தேர்வு செய்வார்கள். தற்போது அதற்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மாணவர்களால் மருத்துவத்திற்க்கு செல்ல முடியாத ஒரு நிலை உருவாகும் என மாணவர்களும் கல்வியாளர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Sunday, December 06, 2020

December 06, 2020

BHARATHIAR UNIVERSITY - M.B.A. Admission 2020 -21

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
BHARATHIAR UNIVERSITY, COIMBATORE - 641046 BHARATHIAR SCHOOL OF MANAGEMENT bsmed
AND ENTREPRENEUR DEVELOPMENT
UNIVERSITY WEBSITE ANNOUNCEMENT AND PRESS RELEASE
M.B.A. Admission 2020 -21
Unfilled seats will be filled by the university at the university level for Bharathiar School of Management and Entrepreneur Development (BSMED) through Verandah Admission to be held on 10.12.2020 at 11.00.a.m. at BSMED For any enquries you may contact: 0422 2428275,
Email: bsmedonline@buc.edu.in Interested candidates must bring the following certificates.
1. S.S.L.C Mark Sheet
2. H.S.C. Mark Sheet
3. Community Certificate
4. Transfer Certificate & Conduct Certificate obtained from the institution
last studied
5. UG Mark Statement
6. Provisional Certificate
7. Degree Certificate
8. TANCET 2020 Hall Ticket and Mark Sheet
9. Medical fitness certificate
10. Two copies of passport size photograph
A soli peso
Dr. RUPA CUASEELAN
THIS OU MAINEN
AND THE OPVELOPMENT BATHILAR UNIVERSITY 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Friday, November 20, 2020

November 20, 2020

MBA, MCA கலந்தாய்வுகளில் நிரம்பாத 14,311 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காப்பாற்றப்படுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எம்பிஏ, எம்சிஏ கலந்தாய்வுகளில் நிரம்பாத 14,311 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் வீணாகாமல் காப்பாற்ற, முதுநிலைப் படிப்புகளுக்கு கல்லூரிகளில் விண்ணப்பம் பெற்று இடங்களைப் பூர்த்தி செய்வதைப் போல், இந்த இடங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புபவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் டான்செட் நுழைவுத்தேர்வு எழுத வேண்டியது அவசியம். இதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தால் டான்செட் நுழைவுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி (ஜிசிடி) மூலமாக எம்பிஏ, எம்சிஏ இணையவழிக் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. எம்சிஏ படிப்புக்குக் கடந்த நவ.6 மற்றும் 7-ம் தேதிகளிலும், எம்பிஏ படிப்புக்கு நவ.10-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெற்றது. அதில் நிரப்பப்படாத இடங்களை நிரப்புவதற்கான துணைக் கலந்தாய்வு கடந்த 18 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெற்றது. கலந்தாய்வின் முடிவில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் 3,647 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதுகுறித்துத் தமிழ்நாடு எம்பிஏ, எம்சிஏ மாணவர் சேர்க்கைச் செயலரும், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வருமான பி.தாமரை கூறும்போது, ''எம்பிஏ, எம்சிஏபடிப்புகளுக்கு இரு கட்டங்களாக இணையவழிக் கலந்தாய்வு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. டான்செட் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்பட்ட தரவரிசை மற்றும் இன சுழற்சி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. எம்பிஏ படிப்பில் 12,996 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 5,384 பேர் விண்ணப்பித்தனர். 2,795 பேர் கல்லூரிகளைத் தேர்வு செய்து சேர்ந்தனர். எம்சிஏ படிப்பில் 4,962 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இதற்கு1,671 பேர் விண்ணப்பித்து, 852 பேர் கல்லூரிகளைத் தேர்வு செய்தனர். இரு படிப்புகளிலும் 3,647 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 14,311 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன'' என்றார். இது குறித்து அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் கழக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ''அனைத்துக் கல்லூரிகளிலும், அனைத்து மாணவர்களும் பட்ட மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று நோக்கத்தில்தான் டான்செட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆயிரக்கணக்கில் காலியாக இருப்பது கவலை அளிக்கிறது. அதே நிலைதான் இந்த ஆண்டும் ஏற்பட்டுள்ளது. இந்த இடங்களைக் காலியாகவே விடுவது சரியாகாது. முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு அந்தந்தக் கல்லூரிகளிலேயே விண்ணப்பம் பெற்று, மாணவர் சேர்க்கை நடத்துவதைப் போல, எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்த ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இதற்கு டான்செட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம். இதனால் மாணவர்கள் அருகில் உள்ள கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு உருவாகும். இதேபோல் அரியர் மாணவர்களும் தேர்வு முடிவுகளை அறிந்த பின்னர், இந்தப் படிப்புகளில் சேர வாய்ப்பு கிடைக்கும். இப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்து வருவதால், வரும் கல்வியாண்டுகளில் பொது நுழைவுத்தேர்வு, பொதுக் கலந்தாய்வைத் தவிர்த்து, கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தும் போதே, எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தலாம். இது குறித்துத் தமிழக உயர் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Tuesday, November 17, 2020

November 17, 2020

எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., சேர்க்கை - நாளை துணை கவுன்சிலிங்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கான துணை கவுன்சிலிங் நாளை நடக்கிறது.
தமிழகத்திலுள்ள பல்கலை, இன்ஜி., கல்லுாரிகள், கலை, அறிவியல் கல்லுாரிகள், மேலாண்மை கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை 'ஆன்லைன் கவுன்சிலிங்' வாயிலாக நிரப்பப்பட்டது. முதலில், எம்.சி.ஏ., படிப்புக்கும், தொடர்ந்து எம்.பி.ஏ., படிப்புக்கும் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. கவுன்சிலிங் முடிந்தும், பல கல்லுாரிகளில் இடங்கள் காலியாக உள்ளன.காலியிடங்களை நிரப்ப, கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியில், எம்.பி.ஏ., -- எம்.சி.ஏ., படிப்புகளுக்கு நாளை துணை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பொது கவுன்சிலிங் முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, விண்ணப்பித்து கலந்து கொள்ள இயலாதவர்கள், கல்லுாரி ஒதுக்கீடு பெறாதவர்கள், 'டான்செட் - 2020' தேர்வு எழுதி இதுவரை கவுன்சிலிங்கிற்கு இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்காதவர்கள், பதிவு செய்யாதவர்கள் ஆகிய அனைவரும் துணை கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்ப மற்றும் கவுன்சிலிங் கட்டணத்துடன், நாளை காலை, 10.00 மணிக்கு முன், மாணவர்கள் நேரிடையாக கோவை ஜி.சி.டி., கல்லுாரிக்கு சென்று பங்கேற்கலாம். இந்த துணை கவுன்சிலிங், தரவரிசை மற்றும் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அடிப்படையில் நடத்தப்படுகிறது. தகவல்களுக்கு www.gct.ac.in/www.tn-mbamca.com என்ற, இணையதளத்தை பார்க்கலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Friday, November 13, 2020

November 13, 2020

எம்பிஏ, எம்சிஏ துணைக் கலந்தாய்வுத் தேதி அறிவிப்பு: கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடக்கிறது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வரும் நவ.18-ம் தேதி எம்பிஏ, எம்சிஏ துணைக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வரும், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளின் முதலாமாண்டில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை, 2020-21 ஆம் கல்வியாண்டில் நிரப்புவதற்கான இணையவழிக் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றது. எம்சிஏ படிப்புக்குக் கடந்த நவ.6 மற்றும் 7-ம் தேதிகளிலும், எம்பிஏ படிப்புக்கு நவ.10-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெற்றது. அதில் நிரப்பப்படாத இடங்களை நிரப்புவதற்கான துணைக் கலந்தாய்வு வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்துத் தமிழ்நாடு எம்பிஏ, எம்சிஏ மாணவர் சேர்க்கைச் செயலரும், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வருமான பி.தாமரை கூறியதாவது: ''எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான துணைக் கலந்தாய்வு வரும் நவ.18-ம் தேதி கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறுகிறது. முதல்கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்கள், விண்ணப்பித்துக் கலந்துகொள்ள முடியாமல் தவறவிட்டவர்கள், டான்செட் தேர்வெழுதி விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இக்கலந்தாய்வு நடைபெறுகிறது. எனவே, மாணவர்கள் உரிய சான்றிதழ்கள், கலந்தாய்வுக் கட்டணத்துடன் 18-ம் தேதி காலை 10 மணிக்கு முன்பு அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு நேரில் வர வேண்டும். தரவரிசை மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே துணைக் கலந்தாய்வு நடைபெறும். எஸ்சி பிரிவில் காலியாக உள்ள இடங்களை எஸ்சி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு நவ.19-ம் தேதி கலந்தாய்வு நடைபெறும்''. இவ்வாறு தாமரை கூறினார் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
November 13, 2020

எம்.பி.ஏ., -- எம்.சி.ஏ., சேர்க்கை 18ம் தேதி துணை கவுன்சிலிங்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''தமிழகத்தில், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, தரவரிசை எனப்படும், ரேங்க் பட்டியல், வரும், 16ம் தேதி வெளியிடப்படும். வரும், 18 அல்லது 19ம் தேதி, கவுன்சிலிங் துவங்கும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். \தலைமைச் செயலகத்தில், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் எண்ணிக்கை, 1,300 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 2.92 லட்சம் பேர், '108 ஆம்புலன்ஸ்' வாகனத்தில், மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கொரோனா காலத்தில், 7.96 லட்சம் பேர், மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். சென்னையில், ஆம்புலன்ஸ் ரெஸ்பான்ஸ் டைம், 8.01 நிமிடமாக உள்ளது. சர்வதேச தரத்தில் உள்ள நேரத்தை எட்டியுள்ளோம். இன்னும், 200 வாகனங்கள் வழங்க உள்ளோம். ஊபர், ஓலோ போன்ற வாகனங்களை, முன்பதிவு செய்ததும், வாகனங்கள் வருவதை, மொபைல் போனில் பார்ப்பது போல, ஆண்ட்ராய்டு மொபைலில், ஆம்புன்ஸ் வருவதை பார்க்கும் வசதி ஏற்படுத்தப்படும். 16ல் தரவரிசை மருத்துவ படிப்புக்கு, நேற்று முன்தினம் வரை, 34 ஆயிரத்து, 424 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பத்தில் தவறு இருந்தால், அதை சரி செய்து கொள்ளும்படி, தேர்வுக் குழுவிற்கு, மெயில் அனுப்பலாம். இந்த ஆண்டு, 4,061 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இது, அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. திட்டமிட்டபடி வரும், 16ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன்பின், ஓரிரு நாளில், 18 அல்லது, 19ம் தேதி, கவுன்சிலிங் துவங்கும். மருத்துவ கவுன்சிலிங், உரிய விதிமுறைகளை பின்பற்றி, நேரடியாக பெரிய இடத்தில் நடத்தப்படும். உடன் தந்தை அல்லது தாயார் அனுமதிக்கப்படுவர். சமூக இடைவெளியை பின்பற்றி, திட்டமிட்ட எண்ணிக்கை விண்ணப்பதாரர்கள் மட்டும், கவுன்சிலிங்கிற்கு வரவழைக்கப்படுவர்.சான்றிதழ்களை சரி பார்க்க, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Thursday, November 12, 2020

November 12, 2020

MCA கலந்தாய்வில் 813 இடங்கள் மட்டுமே நிரம்பின: 4,149 இடங்கள் காலியாக உள்ளன

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எம்சிஏ படிப்புக்கான கலந்தாய்வில் 813 மாணவர்கள் மட்டுமேகல்லூரியை தேர்வு செய்துள்ளதால், 4,149 இடங்கள் காலியாக உள்ளன. தமிழக கல்லூரிகளில் உள்ளஎம்சிஏ படிப்புக்கான இடங்கள் டான்செட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு கடந்த பிப்.29-ம் தேதி நடந்தது. இதில், எம்சிஏவுக்கான தேர்வை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த மே 19-ம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து, கோவையில் உள்ள அரசு தொழில்நுட்பகல்லூரி, எம்சிஏ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விண்ணப்பத்தை இணையவழியில் தொடங்கியது. அதன்படி, 1,800-க்கும்மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதில், 1,671 பேரின் விண்ணப்பம்தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, தமிழக கல்லூரிகளில் எம்சிஏ படிப்புக்கான 4,962 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 6-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி முடிவடைந்தது. இதில், மொத்தம் 813 மாணவர்கள் மட்டுமே தங்களுக்கான கல்லூரியை தேர்வு செய்துள்ளனர். இதனால், மொத்தம் 4,149 இடங்கள் காலியாகவே உள்ளன. டான்செட் தேர்வில் 1 மதிப்பெண்ணுக்கும் குறைவாக எடுத்தவர்களுக்கும் அரசுமற்றும் முன்னணி தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. 10 மதிப்பெண்ணுக்கும் குறைவாக பெற்றவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. பல்கலைக்கழக தேர்வு முடிவுவெளியாகாத நிலையில் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிந்தது. பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், விண்ணப்ப கட்டணம், கல்லூரி நுழைவுக் கட்டணம் வீணாகிவிடுமே என்ற சந்தேகத்திலேயே பலரும் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கவில்லை. இதனால், கலந்தாய்வை தள்ளிவைக்கும்படி உயர்கல்வித் துறைக்கு கல்வியாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், கலந்தாய்வுக்கு 1,671 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 813 பேர் மட்டுமே கல்லூரியை தேர்வு செய்துள்ளது உயர்கல்வித் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், விண்ணப்ப கட்டணம், கல்லூரி நுழைவுக் கட்டணம் வீணாகிவிடுமே என்ற சந்தேகத்திலேயே பலரும் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கவில்லை. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Saturday, September 12, 2020

September 12, 2020

MCA பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள நிபுணத்துவ உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 06 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு தின ஊதிய அடிப்படையில் ரூ.713 வழங்கப்பட உள்ளது.
எம்சிஏ, எம்பிஏ உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்
பணி : நிபுணத்துவ உதவியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 06
கல்வித் தகுதி : MCA (Master of Computer Application), MBA, M.Com, M.Sc உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஊதியம் : ரூ.713 (நாள் ஒன்றுக்கு)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை :விருப்பமும் உள்ளவர்கள் https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 19.09.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Dean, The Registrar, Anna University, Chennai - 600 025.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் குறுகிய பட்டியல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Tuesday, September 01, 2020

September 01, 2020

MBA பட்டதாரிகளுக்கு ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் NABARD வங்கியில் வேலை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியில் காலியாக உள்ள இணை ஆலோசகர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எம்பிஏ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : இணை ஆலோசகர்
கல்வித் தகுதி : எம்பிஏ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
வயது வரம்பு : மேற்கண்ட பணியிடத்திற்கு 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்: மாதம் ரூ.55,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.nabcons.com/downloads/Advertisement_Corporate_Office-Delhi.pdf?fbclid=IwAR2uwmsJNXXXNQn2tPzh8_WtsMssocJLAAUdjYM470TIyPHNTxEXQ8gWfn4 என்ற இணையதளம் மூலம் 03.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 03.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : கணினி தேர்வு திறன் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nabcons.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Sunday, August 30, 2020

August 30, 2020

MBA/MCA படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு: இன்று முதல் தொடக்கம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கவுள்ளது. கரோனா பரவல் காரணமாக கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கரோனா பரவல் காரணமாக எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியிலான விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் 2020-2021-ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்டுதோறும் நேரடியாக நடைபெறுவது வழக்கம்.நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக மாணவா்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் முறையில் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் www.gct.ac.in, www.tn.mbamca.com என்கிற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். எம்பிஏ, எம்சிஏ மாணவா் சோ்க்கை ‘டான்செட்’ நுழைவுத் தோ்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கட்-ஆஃப் முறைப்படி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு மாணவா் சோ்க்கை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog