Breaking

Showing posts with label vaiko. Show all posts
Showing posts with label vaiko. Show all posts

Thursday, September 21, 2023

September 21, 2023

நீட் முதுநிலை தேர்வில் கட் ஆப் பூஜ்ஜியம்… மருத்துவக் கல்விக்கு நீட் என்பது ஒரு மோசடியான தகுதித் தேர்வு

நீட் முதுநிலை தேர்வில் கட் ஆப் பூஜ்ஜியம்… மருத்துவக் கல்விக்கு நீட் என்பது ஒரு மோசடியான தகுதித் தேர்வு : வைகோ காட்டம்!!

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்யமாக இருந்தாலும் எம்.டி, எம்.எஸ். படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று ஒன்றிய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்திருக்கிறது. “ஏற்கெனவே பதிவு செய்துள்ள விண்ணப்பத்தாரர்கள் மீண்டும் பதிவுசெய்யத் தேவையில்லை. இருப்பினும், அவர்கள் தங்கள் விருப்பங்களைத் திருத்த அனுமதி அளிக்கப்படும். அவர்கள் மருத்துவ கலந்தாய்வுக் குழு இணையதளத்துடன் தொடர்பு கொள்ளலாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு தான் தகுதி என்று ஒன்றிய பாஜக அரசு விடாப்பிடியாக இருந்து வரும் நிலையில், தற்போது முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றிருந்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று அறிவித்திருப்பதன் மூலம் நீட் முடிவு தேர்வு வெறும் கண்துடைப்பு என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை தகுதியாகக் கொள்ளாமல், நீட் கட்டாயம் என்று கூறும் ஒன்றிய அரசு, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதி இருந்தால் மட்டும் போதும் மதிப்பெண் ஒரு பொருட்டல்ல என நிர்ணயம் செய்திருக்கிறது. இதிலிருந்தே மருத்துவக் கல்விக்கு நீட் என்பது ஒரு மோசடியான தகுதித் தேர்வு என்பது தெரிகிறது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக 20 மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதே நிலைதான் பிற மாநிலங்களிலும் இருக்கிறது. எனவே ஒன்றிய பாஜக அரசு மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்

Wednesday, January 18, 2023

January 18, 2023

சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளை களஆய்வு செய்ய வலியுறுத்தல் Insist on Field Study of Juvenile Correctional Schools

சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளை களஆய்வு செய்ய ஆணையம் வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

மாநிலம் முழுவதும் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளைக் களஆய்வு செய்திட ஆணையம் அமைத்திட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை தாம்பரம் கன்னடபாளையம் குப்பைமேடு பகுதியைச் சேர்ந்த கோகுல்ஸ்ரீ (17) என்பவரை ரயில்வே காவலர்கள் சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்து செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.

கடந்த டிசம்பர் 31-ம் மாலை 5 மணியளவில் அவர் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டார் என்று அவரது தாய்க்கு தகவல் கூறியிருக்கிறார்கள். ஆனால், அவரது உடலில் காயங்கள் இருப்பதைப் பார்த்து அவரது தாய், சத்தம் போட்டதும் அவரை மிரட்டி வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

இதுகுறித்து செங்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து கோகுல்ஸ்ரீயின் தாய் பிரியா விஷயத்தை சொல்லியுள்ளார். அவரும் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இரண்டு மருத்துவ அறிக்கையிலும் சிறுவன் கோகுல்ஸ்ரீ கொடூரமாக அடித்து சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு நகர காவல்துறை இதை கொலைவழக்காக மாற்றி செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் மோகன், துணை கண்காணிப்பாளர் நித்தியானந்தம் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கை சட்டம் ஒழுங்கு காவல்துறையிலிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

அபலைப்பெண் பிரியாவை சட்டவிரோதமாக அடைத்து வைத்து வெள்ளைத் தாளில் கையெழுத்து கேட்டு மிரட்டியவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கணவனை இழந்து ஐந்து பிள்ளைகளுடன் ஆதரவற்ற நிலையில் உள்ள விதவைத்தாய் பிரியாவிற்கு தகுந்த பாதுகாப்பும், அவரின் தகுதிக்குற்ப வேலைவாய்ப்பும் நிவாரணமும் அரசு வழங்க வேண்டும், அத்துடன் வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளை கள ஆய்வு செய்ய ஆணையம் அமைத்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கின்றேன்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Thursday, August 11, 2022

August 11, 2022

செவிலியா் வேலைவாய்ப்பில் தமிழகம், புதுவை புறக்கணிப்பு

செவிலியா் வேலைவாய்ப்பில் தமிழகம், புதுவை புறக்கணிப்பு: வைகோ குற்றச்சாட்டு

ஜிப்மா் மருத்துவமனை செவிலியா் வேலைவாய்ப்பில் தமிழகம், புதுவையை மத்திய அரசு புறக்கணித்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளா் வைகோ குற்றம்சாட்டினாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில், செவிலியா் காலிப் பணியிடங்களுக்காக 2022 ஜூலை 13-ஆம் தேதியிட்ட வேலை வாய்ப்புக்கான அறிவிப்பின்படி 139 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு செய்வதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டது.

அதன்படி, ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 11 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குப் பிறகு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தோ்வு மையங்கள் திட்டமிட்டு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் செவிலியா்கள் தோ்வு எழுத இயலாதபடி ஒன்றிய அரசு திட்டமிட்டு புறக்கணித்துள்ளது.

எனவே, மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ள இணையதள சேவையை குறிப்பிட்ட தேதி வரை செவிலியா்கள் விண்ணப்பிக்கும் வகையில், தமிழகம், புதுவையில் தோ்வு எழுதும் மையங்களை இணையதளத்தில் உடனடியாக மத்திய அரசு இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் வைகோ.

Monday, August 08, 2022

August 08, 2022

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர முடியுமா?

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர முடியுமா? நாடாளுமன்றத்தில் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

(அ) உக்ரைனில் போர் காரணமாக, மருத்துவக் கல்வியை தொடர முடியாமல், தாயகம் திரும்பிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தி தேசிய மருத்துவ ஆணையத்தின் முன் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தில்லி வந்து போராட்டம் நடத்தினார்களா?

(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?

(இ) உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் சேர்க்கைக்காக எம்.பி.க்கள் மற்றும் பொது பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டதா? அப்படியெனில், அதன் விவரங்கள் மற்றும் அதற்கு என்ன பதில் தரப்பட்டது?



(ஈ) போர் காரணமாக உக்ரைனில் இருந்து வந்த மருத்துவ மாணவர்களுக்கு பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் மறுசேர்க்கை வழங்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அதன் விவரங்கள் என்ன?



வைகோவின் கேள்விகளுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் அளித்த பதில்:-



(அ) முதல் (ஈ) வரை: உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் பிரச்னை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன.



வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு “திறன் தணிக்கை தேர்வு (Screening Test) விதிமுறைகள்- 2002” அல்லது “வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி உரிமம் விதிமுறைகள்- 2021” கீழ் வருகிறது. இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 மற்றும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019 இன் படி, வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து இந்திய மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவ மாணவர்களை இடமாற்றம் செய்வதற்கான விதிமுறைகள் எதுவும் இல்லை. வெளிநாட்டு மருத்துவ மாணவர்களை இடமாற்றம் செய்ய இந்திய மருத்துவ ஆணையத்தால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

இந்திய மருத்துவ ஆணையம் வகுத்துள்ள திட்டத்தின் கீழ், இளங்கலை மருத்துவப் படிப்பின் கடைசி ஆண்டில் (கரோனா பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் மோதல் போன்றவை காரணமாக, வெளிநாட்டு மருத்துவ நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது) இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்தனர். இதன்படி, அந்தந்த நிறுவனத்தால் படித்து முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது



இந்திய மருத்துவ ஆணையம் அறிவித்த பின்பு, வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு, வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான தேர்வில் (FMG) தகுதி பெற்றவுடன், இரண்டு ஆண்டுகளுக்கு கட்டாய சுழற்சி மருத்துவப் பயிற்சி (CRMI) பெற வேண்டும். அதன்பிறகு, இந்திய நிலைமைகளின் படி மருத்துவப் பயிற்சிகள் வழங்கப்படும்.



வெளியுறவுத் துறை அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட தகவலின்படி, மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஆவணங்களை சுமூகமான முறையில் வழங்குவதற்காக, கிவ் நகரில் உள்ள இந்திய தூதரகம், உக்ரைனில் உள்ள சம்பந்தப்பட்ட அனைத்து பல்கலைக் கழகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. இதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அவற்றைத் தீர்ப்பதற்கும், மாணவர்களுக்கு உதவுவதற்கும் தூதரகத்தின் இணையதளத்தில் அனைத்து விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

Wednesday, June 29, 2022

June 29, 2022

தமிழில் தோ்ச்சி சதவீதம் சரிவு: உண்மை நிலையை கண்டறிய வலியுறுத்தல்

தமிழில் தோ்ச்சி சதவீதம் சரிவு: உண்மை நிலையை அறிய வேண்டும் - மதிமுக

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழ் மொழிப் பாடத்தில் மாணவா்கள் அதிகளவில் தோ்ச்சி அடையாதது குறித்து தமிழக அரசு முறையாக ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் என்று மதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மதிமுக உயா்நிலைக் குழு, மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் அந்தக் கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அவைத் தலைவா் திருப்பூா் சு.துரைசாமி தலைமை வகித்தாா். மதிமுக பொதுச் செயலாளா் வைகோ முன்னிலை வகித்தாா். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: குடியரசுத் தலைவா் தோ்தலில் நீண்ட நெடிய நாடாளுமன்ற அனுபவமும், கொள்கை உறுதியும் மிக்க யஷ்வந்த் சின்ஹா வெற்றிபெற மதிமுக ஆதரவு அளிக்கும்.

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை குறித்து நிகழ்ச்சி நிரலில் மீண்டும் சோ்க்கப்பட்டால், அந்தக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும். அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் தமிழ் மொழிப் பாடத்தில் 5.16 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெறாதது அதிா்ச்சி அளிக்கிறது. பள்ளிக் கல்வித் துறை இதுகுறித்து முறையாக ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும். மொழிப் பாடத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியா் பணி இடங்கள் காலியாக இருப்பின் அவற்றை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Friday, May 13, 2022

May 13, 2022

தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை?

மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடுத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மே 12 ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. முஸ்லிம் மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து, தேர்வு எழுத வந்தனர். தேர்வுமைய கண்காணிப்பாளர் சரஸ்வதி, அந்த மாணவிகளை தேர்வு அறைக்குள் செல்ல விடாமல் தடுத்துள்ளார். ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதக் கூடாது என்றும், அதை அகற்றி விட்டு சீருடையில் தேர்வு எழுதும்படியும் கூறி உள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான 6 முஸ்லிம் மாணவிகளும், தாங்கள் அணிந்து வந்த ஹிஜாப்பை அகற்றி விட்டு, சீருடையில் தேர்வு எழுதினர் என்ற தகவலை அறிந்து மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் சமூக ஆர்வலர்கள் அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு போராட்டம் நடத்தி உள்ளனர். பா.ஜ.க. ஆட்சி நடத்தும் கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு, அம்மாநிலத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவுகின்றது. அத்தகைய இந்துத்துவ சனாதன சக்திகளால் துணிச்சல் பெற்றுள்ள ஒருசிலர், தமிழ்நாட்டில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையுடன் செயல்பட்டு, மதவெறியைத் தூண்ட முயற்சிப்பதைத்தான் உளுந்தூர்பேட்டை நிகழ்வு காட்டுகின்றது.

இந்தியாவிலேயே மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தமிழ்நாட்டு மண்ணில், மதவெறியைத் தூண்ட முயற்சிப்போரை, முளையிலேயே இனம் கண்டு கிள்ளி எறிய வேண்டும்.

உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முஸ்லிம் மாணவர்களை ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதக் கூடாது என்று உத்தரவிட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது, கல்வித் துறை விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Total Pageviews

Search This Blog