Breaking

Showing posts with label CUET exam. Show all posts
Showing posts with label CUET exam. Show all posts

Friday, September 22, 2023

September 22, 2023

2024ல் JEE,NEET,CUET தேர்வுகள் எப்போது?

2024ல் ஜேஇஇ, நீட், கியூட் தேர்வுகள் எப்போது?

தேசிய தேர்வுகள் முகமை, நாட்டின் மிக முக்கிய நுழைவுத் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான முக்கிய நுழைவுத் தேர்வுகள் எப்போதும் நடக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் முக்கிய தேர்வாகப் பார்க்கப்படுவது ஜேஇஇ தேர்வு, இதில் தேர்ச்சி பெற்றால்தான் இந்தியாவில் உள்ள ஐஐடி, என்ஐடிகளில் சேர்க்கை பெற முடியும். அந்த வகையில், 2024ஆம் ஆண்டு ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் நடைபெறும் என்றும், இரண்டாவது தேர்வு ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தது க்யூட் தேர்வு. இது 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறவிருப்பதாகவும், இளநிலை நீட் தேர்வு மே மாதம் நடைபெறவிருப்பதாகவும், குறிப்பாக மே 5ஆம் தேதி நடைபெறலாம் எனறும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 2024 - 25ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த காலண்டரையும் என்டிஏ விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை, என்டிஏ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும். ஜேஇஇ

ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான தேதிகள் அடுத்த வாரம் வெளியிடப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு முன்னதாகவே தேதிகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. அதுபோல, நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களும் விரைவாகவே தொடங்கவிருக்கின்றன.

இதற்கான விண்ணப்பங்கள் அல்லது தேர்வுகள் குறித்து jeemain.nta.nic.in அல்லது nta.ac.in -இல் அறியலாம்.

நீட்

2023ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், 2024ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, February 23, 2023

February 23, 2023

CUET 2023 - நுழைவுத் தோ்வு: கணிதம், கணக்குப் பதிவியல் தாள்களுக்கு 15-20 நிமிஷங்கள் கூடுதல் அவகாசம்



CUET 2023 - Entrance Test: 15-20 minutes extra for Maths, Accounts Papers

CUET 2023 - நுழைவுத் தோ்வு: கணிதம், கணக்குப் பதிவியல் தாள்களுக்கு 15-20 நிமிஷங்கள் கூடுதல் அவகாசம்

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தோ்வில் (க்யூட்) கணிதம், கணக்குப் பதிவியல் தாள்களை எழுதும் மாணவா்களுக்கு 15 முதல் 20 நிமிஷங்கள் கூடுதல் அவகாசம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாணவா்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். யுஜிசி கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அறிவித்ததன் அடிப்படையில், அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கை பிளஸ்-2 மதிப்பெண்அடிப்படையில் அல்லாமல், க்யூட் நுழைவுத் தோ்வு மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் இந்தத் தோ்வு நடத்தப்படுகிறது. நிகழாண்டுக்கான க்யூட்-யுஜி தோ்வு வரும் மே 21 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கு மாா்ச் 12-ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

இந்த நிலையில், க்யூட்-யுஜி தோ்வில் கணிதம், கணக்குப் பதிவியல் தாள்களுக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. க்யூட் தோ்வில் கணிதம் மற்றும் கணக்குப்பதிவியல் தாள்களை எழுதும் மாணவா்களுக்கு 15 முதல் 20 நிமிஷங்கள் கூடுதல் அவகாசம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தோ்வில் மொழிப் பாடம் உள்பட ஓா் மாணவா் தெரிவு செய்யும் அதிபட்ச பாடங்களின் எண்ணிக்கை 10-ஆக உயா்த்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tuesday, February 14, 2023

February 14, 2023

மத்திய பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளில் சேர பொது நுழைவுத்தேர்வு - மார்ச் 12 - ந் தேதி கடைசிநாள்

மத்திய பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளில் சேர பொது நுழைவுத்தேர்வு - மார்ச் 12 - ந் தேதி கடைசிநாள் Last date for admission to Central Universities and Colleges is March 12

மத்திய பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளில் சேர பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் மார்ச் 12 - ந் தேதி கடைசிநாள்...



CLICK HERE TO DOWNLOAD

Friday, February 10, 2023

February 10, 2023

CUET நுழைவுத் தேர்வு: இன்று இரவு முதல் விண்ணப்பிக்கலாம்!



CUET நுழைவுத் தேர்வு: இன்று இரவு முதல் விண்ணப்பிக்கலாம்! CUET Entrance Test: Apply From Tonight!

கியூட் நுழைவுத் தேர்வு: இன்று இரவு முதல் விண்ணப்பிக்கலாம்!

பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான (கியூட்) இளங்களை இரண்டாம் பதிப்புக்கான விண்ணப்ப செயல்முறை இன்று இரவு முதல் தொடங்கி மார்ச் 12 வரை நடைபெறும்  என்று யுஜிசி தலைவர் எம். ஜெகதேஷ் குமார் தெரிவித்தார். மே 21 முதல் 31ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்பட உள்ளது.

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் 2023 ஆம் ஆண்டிற்கான இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் பொதுத் தேர்வை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கான கியூட் தேர்வு விண்ணப்பப் படிவ விநியோகம் இன்றிரவு முதல் இணைய வழியில் தொடங்கும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 12  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து மாணவர்கள் என்.டி.ஏ. இணையதளத்திலிருந்து அட்மிட் கார்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பல்கலைக்கழக மானியக் குழு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை மாணவர் சேர்க்கை பொது நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படும் என்றும் அது 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்தப்படாது என்றும் அறிவித்தது.

அதே வேளையில் பல்கலைக்கழகங்களில் இளங்கலை சேர்க்கை செயல்முறை ஜூலை 2023க்குள் முடிக்கப்பட்டு புதிய கல்வி அமர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தொடங்கும் என்றார்.

விண்ணப்பதாரர்கள் 2023ல் நடைபெறும் இளங்களை கியூட் தேர்வுக்கு  https://cuet.samarth.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 கியூட் இளங்களைத் தேர்வு 13 மொழிகளில் அதாவது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளில் நடத்தப்படும்  என்றார்.

Saturday, September 24, 2022

September 24, 2022

CUET - UG மதிப்பெண்களை பதிவு செய்ய செப்., 30 வரை அவகாசம்

NTA Declares the Result/NTA Scores of Common University Entrance Test (UG) – 2022 – Reg.

The National Testing Agency (NTA) has been mandated to conduct the Common University Entrance Test (UG) – 2022 for admission into all UG Programmes in all Central Universities for academic session 2022-23 under the Ministry of Education, (MoE).

The Common University Entrance Test (CUET) provided a common platform and equal opportunities to candidates across the country, especially those from rural and other remote areas and help establish better connect with the Universities. A single Examination enabled the Candidates to cover a wide outreach and be part of the admissions process to various Central Universities and other participating Universities

CUET - UG மதிப்பெண்களை பதிவு செய்ய செப்., 30 வரை அவகாசம் - Deadline to register CUET - UG Marks is 30 Sep

தமிழகம் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களது மதிப்பெண்ணை இணையதளத்தில் பதிவிட கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவிட செப்.,30 வரை நீட்டித்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.

CLICK HERE TO DOWNLOAD

Thursday, September 15, 2022

September 15, 2022

CUET-UG தேர்வு முடிவு இன்று இரவு வெளியீடு - Direct Link Click Here

CUET-UG தேர்வு முடிவை இன்று இரவு 10 மணி அளவில் தேசிய தேர்வு முகமை வெளியிடுகிறது

CUET-UG exam result will be released by National Examinations Agency at 10 pm tonight


UGC Chairman Jagadish Kumar informed that the National Examination Agency will announce the result of CUET-UG examination at 10 pm tonight. He said that the entrance examination for admission to undergraduate courses in the Union Universities was conducted in 6 phases from July 16 to August 30.

CUET-UG தேர்வு முடிவை இன்று இரவு 10 மணியளவில் தேசிய தேர்வு முகமை வெளியிடும் என யூஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தகவல் தெரிவித்தார். ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜூலை 16 முதல் ஆக.30 வரை 6 கட்டமாக நடந்தது என கூறினார்.

Information regarding Declaration of Result for Common University Entrance Test [CUET (UG)] – 2022 – Reg.

The National Testing Agency has conducted Common University Entrance Test [CUET (UG)] - 2022 from 15 July 2022 to 30 August 2022 at 489 Examination Centres located in 259 cities across India and 09 cities outside India in six phases.

The above-mentioned examination was conducted in 20 days and 38 slots. The number of opportunities to make corrections in the particulars of online Application Forms were given to facilitate the candidates. A last opportunity after completion of examination has been provided to candidates for correction in particulars filled in the online Application Form of CUET (UG) – 2022 from 13 to 15 September 2022 (up to 10:00 A.M.).

Candidates were asked to challenge against the Provisional Answer Key from 08 to 10 September 2022. Challenges received online were placed before the concerned Subject Experts for verification. The NTA has now finalized the Answer Keys. This massive exercise involved a total of 2219 Question papers in 13 mediums.

The Result will be prepared based on the Final Answer Keys and the same will be available by 10:00 pm today i.e. 15 September 2022.

The candidates are advised to visit NTA website www.nta.ac.in and https://cuet.samarth.ac.in/ for the latest updates regarding CUET (UG) – 2022 results.

For further clarifications related to CUET (UG) – 2022, candidates can write at NTA at cuetug@nta.ac.in or ak@cuet.nta.ac.in

CUET-UG தேர்வு - Direct Link Click Here

Tuesday, August 02, 2022

August 02, 2022

முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு செப். மாதம் நடைபெறும்: யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவிப்பு

முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு செப். மாதம் நடைபெறும்: யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவிப்பு

சென்னை: முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என்று யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்துள்ளார். செப்டம்பர் 1 முதல் 7 வரையிலும் மற்றும் செப்டம்பர் 9 முதல் 11ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழமுதுநிலை படிப்புக்கான CUET தேர்வு செப். மாதம் நடைபெறும்: யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவிப்புகங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஏற்கனவே CUET தேர்வு அண்மையில் நடைபெற்றது.

Wednesday, July 13, 2022

July 13, 2022

Extension of Last Date for Submission of Online Application Form for Common University Entrance Test [CUET (PG)-2022]

Extension of Last Date for Submission of Online Application Form for Common University Entrance Test [CUET (PG)-2022] and further correction facility therein

In continuation to the Public Notice dated 19.05.2022, 18.06.2022 and 02.07.2022 , NTA has decided to extend the last date of submission of Online Application Form for Common University Entrance Test [CUET (PG)-2022].

The Extended/Revised last date of submission of Online Application Forms and making corrections (including Centre Cities of Examination etc.) in the particular of the Online Application Form shall be as follows:

Note: Corrections in the particulars in the Online Application Forms shall be accepted and submission of additional fee (depending on the changes made in the form) upto 11:50 pm on 22 July, 2022.

The candidates are requested to undertake the correction(s) very carefully as no further chance of correction will be provided to the candidates after the above mentioned correction policy.

The candidates are advised to keep visiting the NTA website(s) https://cuet.nta.nic.in/ https://nta.ac.in/ for latest updates.

For any queries or/clarifications, candidates can call NTA Help Desk 011- 40759000 or write to NTA at cuet-pg@nta.ac.in.

CLICK HERE TO DOWNLOAD PDF

Tuesday, July 12, 2022

July 12, 2022

ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 20 வரை CUET நுழைவு தேர்வுக்கு ஏற்பாடு: தேர்வு அட்டவணையை வெளியீடு - NTA

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர்கள் சேர்க்கைக்கு நடத்தப்படும் கியூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான தேர்வு தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது. குறுகிய இடைவெளியில் அட்டவணை வெளியிடப்பட்டதற்கு மாணவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் உயர்க்கல்வித்துறையின் கீழ் மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. இந்த பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானிய குழு ஏற்கனவே அறிவித்தது. மேலும் ஆர்வமுள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் உயர்க்கல்வி நிறுவனங்கள் ஆகியவையும் இதில் இணைந்து கொள்ளலாம் என்றும் கூறியது. ஆங்கிலம், இந்தி, கனடா, உள்பட 13 மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. 10 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் நாடு முழுவதும் 544 மையங்களில் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் தேசிய தேர்வு முகமையின் cuet.samarth.ac.in என்ற இணையதளம் மூலம் ஹால்டிக்கெட் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் ஒரே நேரத்தில் பார்வையிட முயன்றதால் இணையதளத்தில் தாமதம் ஏற்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Monday, July 04, 2022

July 04, 2022

M.A., M.Sc., M.Com., சேர நடத்தப்படும் CUET - PG தேர்வுக்கு ரும் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

மத்திய பல்கலைக்கழகங்களில் M.A., M.Sc., M.Com., சேர நடத்தப்படும் CUET - PG தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் 10-ம் தேதிக்குள் cuet.nta.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

-தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

CLICK HERE TO DOWNLOAD

Tuesday, April 19, 2022

April 19, 2022

மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) - ஆண்டு தோறும் 2 முறை நடத்த ஒன்றிய அரசு முடிவு!

It has been reported that the Government of the United States has decided to conduct the General Entrance Examination for Central University Student Admission twice a year. The U.S. government recently announced that a public entrance exam called CUET will be held to enroll in undergraduate courses at federal universities across the country. Thus, the general entrance examination is compulsory today for admission to Puducherry Central University and Thiruvarur Central University in Tamil Nadu.

The National Examinations Agency plans to hold the examination by the end of next month. In this context, it has been reported that the United States Government plans to hold a general entrance examination twice a year for the admission of Central University students from the next academic year. The plan is for students who finish 12th grade to write both exams at 45-day intervals so that students can raise their scores on the 2nd chance, according to Union Education Ministry officials. It is noteworthy that the Government of Tamil Nadu is opposing the general entrance examination for Central University students like the NEED examination. மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (CUET)

மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை ஆண்டு தோறும் 2 முறை நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர CUET எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அண்மையில் ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு இன்று பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆகிறது.

2 முறை நடத்த ஒன்றிய அரசு முடிவு!

இந்த தேர்வை அடுத்த மாதம் இறுதியில் நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை ஆண்டிற்கு 2 முறை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இந்த 2 தேர்வுகளையும் 45 நாட்கள் இடைவெளியில் எழுதும் வகையில் திட்டம் வகுக்கப்படுகிறது இந்த முடிவால் மாணவர்கள் 2வது வாய்ப்பில் தங்கள் மதிப்பெண்களை உயர்த்தி கொள்ள முடியும் என்று ஒன்றிய கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர். நீட் தேர்வை போன்று மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வையும் தமிழ்நாடு அரசு எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Saturday, April 09, 2022

April 09, 2022

கியூட் நுழைவு தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

Application registration for the public entrance exam, 'QUETE', is set to begin tomorrow at 54 central universities across the country.

Entrance examinations were conducted on behalf of the respective institutions to enroll students in undergraduate and postgraduate courses in Central Universities and Higher Education Institutions. Some companies, based on a plus 2 score, conducted student admissions.

The University Grants Commission (UGC) has announced that a general entrance examination will be held at all types of central universities for admission. It has been said that in the process of enrolling students in the coming academic year, public entrance examination will be compulsory. Accordingly, enrollment is to be conducted at the Tamil Nadu Central University at Thiruvarur and at the Gandhi Grama Niladhari Institute at Dindigul. For that, the first registration for the 'Cute' entrance exam is scheduled to start tomorrow. The National Examinations Agency has announced that registrations can be made till the 30th. Further details can be found at cuet.samarth.ac.in/

நாடு முழுதும் உள்ள, 54 மத்திய பல்கலைகளில், பட்டப்படிப்பில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வான, 'கியூட்'டிற்கு, நாளை முதல் விண்ணப்ப பதிவு துவங்க உள்ளது.

மத்திய பல்கலைகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு, அந்தந்த நிறுவனங்கள் சார்பில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. சில நிறுவனங்கள், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை நடத்தின. இந்நிலையில், அனைத்து வகை மத்திய பல்கலைகளிலும், மாணவர் சேர்க்கை நடத்த, பொதுவான நுழைவு தேர்வு நடத்தப்படும் என, பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., அறிவித்துள்ளது. வரும் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கையில், பொது நுழைவு தேர்வு கட்டாயம் என்று, கூறப்பட்டுள்ளது.

அதன்படி, திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராம ஊரக கல்வி நிறுவனம் ஆகியவற்றில், மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. அதற்கான, 'கியூட்' நுழைவு தேர்வுக்கு நாளை முதல் பதிவு துவங்க உள்ளது. வரும், 30ம் தேதி வரை பதிவுகளை மேற்கொள்ளலாம் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை, cuet.samarth.ac.in/என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

Thursday, April 07, 2022

April 07, 2022

Online Applications for Common University Entrance Test [CUET (UG) – 2022] – Reg - 06 April 2022

Inviting Online Applications for Common University Entrance Test [CUET (UG) – 2022] – Reg.

In pursuance of the UGC Notification No. 2-1712022 (CPP-ID), dated: 27 March 2022, the National Testing Agency (NTA) is inviting online applications for the Common University Entrance Test CUET (UG) – 2022 for admission to the undergraduate courses in Central Universities, for the academic year 2022-23.

CUET (UG) – 2022 will provide a single-window opportunity to students seeking admission to the Central Universities (CUs) across the country for various Undergraduate Programmes.

CUET (UG) – 2022 is a bouquet of tests in various Languages, Domain-specific Subjects, and General Test. Candidates can select any one or more of the tests offered under CUET (UG) - 2022, as per the requirements of the University/ies where admission is sought.

The CUET (UG) – 2022 will be conducted in 13 languages, i.e. English, Hindi, Assamese, Bengali, Gujarati, Kannada, Malayalam, Marathi, Odia, Punjabi, Tamil, Telugu, and Urdu.

The CUET (UG) – 2022 will be held in 547 cities within India and in 13 cities outside India (AnnexureI), as per the details given below:

CLICK HERE TO DOWNLOAD

Monday, April 04, 2022

April 04, 2022

12 ஆம் வகுப்பு என்பது நுழைவுத் தேர்வுக்கான தகுதித் தேர்வு அல்ல; சியுஇடி தேர்வை திரும்பப் பெறுவீர்!

"If the CUET allows the entrance test, the score of 12 will not be valid. Class 12 will be like a qualifying test for the entrance test. This will severely affect the poor, simple and rural students. Therefore, action should be taken to withdraw the entrance notice immediately," the AIADMK coordinator said. O. Panneerselvam insisted.

In a statement, he said, "The Union Ministry of Education has announced that the entrance examination for admission to courses in Central Universities will be held from the academic year 2022-2023, in the face of the inability to cancel the NEED examination for medical admissions, which has caused great dissatisfaction among students, parents and academics. Has caused.

Variety in 45 Central Universities across India and its affiliated colleges In order to fill the 1.8 lakh seats for undergraduate and postgraduate courses, the Central University Eligibility Test (CUET) CEET examination will be conducted from the academic year 2022-2023. The Central Ministry of Education has stated that the news has come in the press. Although the DMK government has objected to the examination being conducted on the basis of the National Education Policy, it has been reported that the registration for the entrance examination has begun and applications for the entrance examination can be submitted till the 30th of this month and the examination will be conducted in 13 languages, including Tamil. This confirms that admission to Central Universities and its affiliated colleges is through entrance examinations.

If this situation continues, I would like to inform you that in the future, admission to undergraduate and postgraduate courses in all universities and its affiliated colleges may become compulsory and there will be no value for the marks obtained in Class XII. Also, Class XII will be like a qualifying exam for the entrance exam. Poor, simple, rural students will be severely affected by this.

The DMK government should immediately take the necessary constructive steps to withdraw this entrance test without nominally objecting to it. The DMK has the responsibility to pinch this on the bud. The government has. Poor, simple rural student, students are currently suffering due to the tail wagging left in the NEET exam. Apart from that, in the case of this entrance examination, keeping in mind that this is the right moment, DMK will take necessary steps to withdraw the entrance examination notice without delay. There is an expectation among students, alumni and academics that the government should take over.

Therefore, I urge the Chief Minister to bring this issue to the notice of the Central Government immediately, to put the necessary pressure on it and to take immediate action to withdraw the entrance examination notice. ” "சியுஇடி நுழைவுத் தேர்வை அனுமதித்தால் 12 ஆம் மதிப்பெண்ணிற்கு மதிப்பு இருக்காது. 12 ஆம் வகுப்பு என்பது நுழைவுத் தேர்விற்கான ஒரு தகுதித் தேர்வு போல் ஆகிவிடும். இதன் மூலம் ஏழை, எளிய, கிராமப்புற மாணவ மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுவர். ஆகையால், நுழைவுத் தேர்வு அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கான நீட் தேர்வினை ரத்து செய்ய இயலாமல் போராடிக் கொண்டிருக்கின்ற நிலைமையில், 2022-2023 ஆம் கல்வி ஆண்டிலிருந்து மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது மாணவ, மாணவியர், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இருக்கின்ற பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான 1.8 இலட்சம் இருக்கைகளை நிரப்ப ஏதுவாக, 2022-2023 ஆம் கல்வியாண்டிலிருந்து மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, அதாவது Central University Eligibility Test (CUET) சியுஇடி தேர்வு நடத்தப்படும் என்றும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வினை எழுதத் தகுதியுடையவர்கள் என்றும், பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணிற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் தரப்படாது என்றும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் நடத்தப்படும் இந்தத் தேர்வுக்கு திம.க அரசு எதிர்ப்புத் தெரிவித்து இருந்தாலும், நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிவிட்டதாகவும், நுழைவுத் தேர்வுக்கு இந்த மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இந்தத் தேர்வு தமிழ் மொழி உட்பட 13 மொழிகளில் கணினி வழியில் நடத்தப்படும் என்றும் செய்திகள் வந்துள்ளன. இதிலிருந்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு மூலம்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால், வருங்காலங்களில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகக்கூடும் என்பதோடு மட்டுமல்லாமல் பன்னிரெண்டாம் வகுப்பில் பெறும் மதிப்பெண்ணிற்கு ஒரு மதிப்பு இருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு என்பது நுழைவுத் தேர்விற்கான ஒரு தகுதித் தேர்வு போல் ஆகிவிடும். இதன் மூலம் ஏழை, எளிய, கிராமப்புற மாணவ மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த நுழைவுத் தேர்வுக்கு பெயரளவில் எதிர்ப்புத் தெரிவிக்காமல், இதனை திரும்பப் பெறத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை திமுக அரசு உடனடியாக எடுக்க வேண்டும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு தி.மு.க. அரசுக்கு உண்டு. நீட் தேர்வில் தும்பை விட்டு வாலைப் பிடித்ததன் காரணமாக ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் தற்போது அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல் அல்லாமல், இந்த நுழைவுத் தேர்வு விஷயத்திலாவது, இதுதான் சரியான தருணம் என்பதை மனதில் நிலைநிறுத்தி, காலந்தாழ்த்தாமல் நுழைவுத் தேர்வு அறிவிப்பினை திரும்பப் பெறத் தேவையான நடவடிக்கைகளை திமுக. அரசு எடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே உள்ளது.

எனவே, முதல்வர் அவர்கள் இந்தப் பிரச்சனையை மத்திய அரசின் கவனத்திற்கு உடனடியாக எடுத்துச் சென்று, தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, நுழைவுத் தேர்வு அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Total Pageviews

Search This Blog