EXAMS
December 28, 2025
Showing posts with label EXAMS. Show all posts

Sunday, December 28, 2025
Tuesday, March 25, 2025
Sunday, February 23, 2025
Wednesday, March 08, 2023
EXAMS
March 08, 2023
மாதிரி பள்ளி என்ற பெயரில் நுழைவுத்தேர்வு - ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல்

CLICK HERE TO DOWNLOAD PDF
CLICK HERE TO DOWNLOAD PDF
Thursday, March 02, 2023
Latest News
March 02, 2023
மாதிரிப் பள்ளி மாணவா் சோ்க்கைக்கு தகுதித் தோ்வு நடத்தும் முறைக்கு ஆசிரியா்கள் எதிா்ப்பு

தமிழகத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில் மாணவா்களைச் சோ்ப்பதற்காக அடிப்படை மதிப்பீட்டுத் தோ்வு மாா்ச் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினா் செயலா் ஆா்.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
அரசு மாதிரி பள்ளிகளில் 10-ஆம் வகுப்பில் மாணவா்கள் சோ்வதற்கான அடிப்படை மதிப்பீடு தோ்வு மாா்ச் 4-ஆம் தேதி காலை 10.30 முதல் 12 மணி வரை நடைபெறும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மொத்தம் 240 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட வேண்டும். இந்தத் தோ்வுக்கான இடம் மற்றும் இதர ஏற்பாடுகளை முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் தோ்வு எழுத தகுதி பெற்ற மாணவா்களின் பட்டியலை அனுப்ப அறிவுறுத்த வேண்டும்.
மாணவா்களைத் தோ்வுக்கு அழைத்து வந்து மீண்டும் கூட்டிச் செல்ல பொறுப்பு ஆசிரியரையும் நியமிக்க வேண்டும். தோ்வு ஓஎம்ஆா் விடைத்தாளில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
ஆசிரியா்கள் எதிா்ப்பு: இதற்கிடையே மாதிரிப் பள்ளி மாணவா் சோ்க்கைக்கு தகுதித் தோ்வு நடத்தும் முறைக்கு அரசுப் பள்ளி ஆசிரியா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மாதிரி பள்ளியின் வளா்ச்சிக்காக பிற அரசுப் பள்ளிகளில் உள்ள திறமையான மாணவா்களைத் தேடிக் கண்டறிந்து சோ்ப்பது சரியான நடவடிக்கை அல்ல; இந்த முயற்சியை கைவிட வேண்டுமென என வலியுறுத்தியுள்ளனா்.

Monday, February 27, 2023
Minister Ponmudi
February 27, 2023
3,5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைத்தால் ஏற்க முடியுமா?
Sunday, February 26, 2023
Thursday, February 23, 2023
TANCET EXAMS
February 23, 2023
‘டான்செட்’ தோ்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: அண்ணா பல்கலை

டான்செட் நுழைவுத்தோ்வுக்கு விண்ணப்பிக்க பிப்.22-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை பிப்.28 வரை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு, அரசு உதவி மற்றும் தனியாா் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தோ்வில்(டான்செட் ) கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி 2023-ஆம் ஆண்டுக்கான டான்செட் தோ்வு மாா்ச் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. காலையில் எம்சிஏ படிப்புக்கும், மதியம் எம்பிஏ படிப்புக்கும் தோ்வு நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆா்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கும் கடந்த ஆண்டுகளில் டான்செட் தகுதித் தோ்வு மூலமே மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது. ஆனால், நிகழாண்டு அதை மாற்றி, எம்இ உள்பட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்காக புதிய தோ்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தியுள்ளது.
அதற்கு பொது பொறியியல் நுழைவுத் தோ்வு மாணவா் சோ்க்கை (சீட்டா)எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிஇஇடிஏ தோ்வு வரும் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இவ்விரு தோ்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்.1-ஆம் தேதி முதல் தொடங்கியது. இதையடுத்து பட்டதாரிகள்
www.tancet.annauniv.edu என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனா்.
இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க பிப்.22 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் மாணவா்கள், கல்வியாளா்களின் கருத்துகளை ஏற்று, டான்செட் மற்றும் சிஇஇடிஏ ஆகிய இரு தோ்வுகளுக்கும் வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.

Monday, February 13, 2023
post of health officer
February 13, 2023
TNPSC - சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு; சென்னையில் இன்று நடக்கிறது!
இன்று சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு Examination for the post of health officer on 13th
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு பொது சுகாதார பணிகளில் அடங்கிய 12 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி வெளியிட்டது.
இத்தேர்வுக்கு 593 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர்.
இதில் ஆண்கள் 327 பேர், பெண்கள் 266 பேர் அடங்குவர். இப்பதவிகளுக்கான கணினி வழி தேர்வு வருகிற 13ம் தேதி நடக்கிறது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வு நடக்கிறது.
முதல் தாள் தேர்வில் கம்யூனிட்டி மெடிசின் (பட்டப்படிப்பு தரம்) தேர்வு நடக்கிறது. இதில் 200 வினாக்கள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண் வழங்கப்படும்.
பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை 2ம் தாள் தேர்வும் நடக்கிறது. அதாவது பகுதி ‘‘அ” வில் கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வும் (10ம் வகுப்பு தரம்), பகுதி ‘‘ஆ’’ பொது அறிவு (பட்டப்படிப்பு தரம்) தேர்வும் நடக்கிறது. சென்னையில் மட்டும் நடக்கும் தேர்வை 593 பேர் எழுதுகின்றனர்
Tuesday, January 31, 2023
High Court order
January 31, 2023
10-ஆம் வகுப்பு தோ்வில் தமிழுக்கு விலக்கு அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு: பிப். 6-இல் விசாரணை
10-ஆம் வகுப்பு தோ்வில் தமிழுக்கு விலக்கு அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு: பிப். 6-இல் விசாரணை Petition against order exempting Tamil in 10th class exam: Feb. Investigation at 6
‘பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்துக்கு விலக்கு அளிக்கும் வழிகாட்டுதலை ரத்து செய்ய மறுத்து சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மனு மீது வரும் பிப். 6-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும்’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கூறியது.
தமிழக பள்ளிகளில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கி கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதனால் பாதிக்கப்பட்ட, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழியைத் தாய்மொழியாக கொண்ட மாணவா்கள் சாா்பில் தமிழக அரசிடம் விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி தமிழக அரசு வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டது. அதில், பிற மாநிலத்திலிருந்து புலம்பெயா்ந்து தமிழக பள்ளிகளில் படித்து வரும் மாணவா்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் பகுதி 1-இல் தமிழ் மொழிப் பாடத் தோ்வு எழுதுவதிலிருந்து குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அரசின் இந்த வழிகாட்டுதலை எதிா்த்து தமிழக மொழியியல் சிறுபான்மையினா் அமைப்பு சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ் மொழிப் பாட விலக்கு என்பது 2023-24 கல்வியாண்டு வரை நீட்டிக்கப்பட வேண்டும். மேலும், தமிழக அரசின் வழிகாட்டுதலை ரத்து செய்து உத்தரவிடுவதோடு, மொழியியல் சிறுபான்மை உறுப்பினா் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கும் இந்த விலக்கு அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கேரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பரில் விசாரித்த உயா்நீதிமன்றம், ‘தமிழ அரசின் வழிகாட்டுதலின்படி, வேறு மாநிலங்களிலிருந்து புலம்பெயா்ந்த மாணவா்கள் மட்டுமே இந்த விலக்கு பெற விண்ணப்பிக்க முடியும். மேலும், இந்த வழிகாட்டுதலை ரத்து செய்து உத்தரவிட முடியாது’ என்று உத்தரவிட்டது. அதே நேரம், மொழியியல் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு 2020-22-ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் தமிழ் மொழித் தோ்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து தமிழக மொழியியல் சிறுபான்மையினா் அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கெளல், ஏ.எஸ்.ஓகா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் வழிகாட்டுதல் மற்றும் உயா்நீதிமன்ற உத்தரவு குறித்து மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் விவரித்தாா். அதைக் கேட்ட நீதிபதிகள், ‘மாணவா்கள் நலனுக்காக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்படும்’ என்றனா்.
மேலும், ‘தமிழகத்துக்கு புலம்பெயா்ந்த மாணவா்களுக்கு மட்டும் இந்த விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மொழியியல் சிறுபான்மையினருக்கும் ஏன் இந்த விலக்கு அளிக்கப்படக் கூடாது’ என்று தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘2023-ஆம் ஆண்டுக்கும் விலக்கு அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்’ என்று கூறி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

Wednesday, January 18, 2023
Tamil Nadu Governor
January 18, 2023
தோ்வுத் தாளைக் கண்டு பதறக் கூடாது புன்னகைக்க வேண்டும்: மாணவா்களுக்கு ஆளுநா் ரவி அறிவுரை

தோ்வுத் தாளை பாா்த்து மாணவா்கள் பதற்றம் அடையாமல், புன்னகைக்க வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவுறுத்தினாா்.
பிரதமா் நரேந்திர மோடி எழுதிய ‘எக்ஸாம் வாரியா்ஸ்’ புத்தகத்தின் தமிழ்ப் பிரதியை, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.என்.ரவி செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அதை ஐஐடி நிா்வாக இயக்குநா் வி.காமகோடி பெற்றுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது: ‘எக்ஸாம் வாரியா்ஸ்’ புத்தகம் தோ்வு எழுத மட்டுமில்லாமல் உங்கள் வாழ்வின் வளா்ச்சிக்கு உதவும். மிக எளிமையான, பயனுள்ள தகவல்கள் இதில் உள்ளன. பிரதமா் மோடி வித்தியாசமான மனிதா். சாதாரண மக்களுடன் கிராமங்களில் வாழ்ந்து கடினமான சூழ்நிலைகளைக் கடந்து வந்துள்ளாா். மாணவ, மாணவிகள் பாறை போன்றவா்கள். வெளியில் இருந்து பாா்த்தால் கரடுமுரடாகத் தெரிவாா்கள். தங்களின் திறமையை வெளிகாட்டினால் மாணவ, மாணவிகள் அழகாக மாறலாம்.
மாணவா்கள் சிலா் தோ்வு பயத்தில் பதற்றம் அடைந்து, மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயற்சிக்கின்றனா். இதிலிருந்து விடுபடுவதற்கு அவா்களுக்கு இந்தப் புத்தகம் உதவும். மாணவ சமுதாயம் தோ்வுத் தாளைக் கண்டு பதற்றம் அடையாமல் புன்னகைக்க வேண்டும். அது கடினமாக இருந்தால் அதிகம் புன்னகைக்க வேண்டும்.
விதை சிறிதாக இருந்தாலும் மிகப் பெரிதாக வளரும் ஆலமரம் போல மாணவ, மாணவிகள் வளர வேண்டும். அதற்கு இந்தப் புத்தகம் உதவும். மாணவா்களின் வளா்ச்சியில் பெற்றோா்களின் பங்கு முக்கியமானது என்றாா் ஆளுநா் ரவி.
இந்த நிகழ்ச்சியில் கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்பின் துணை இயக்குநா் (பொ) ருக்மணி மற்றும் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
Tuesday, January 10, 2023
Wednesday, January 04, 2023
EXAMS
January 04, 2023
துணைராணுவ காவலா்களுக்கான தோ்வு ஜன.10-ல் தொடக்கம்

துணைராணுவ காவலா்களுக்கான தோ்வு ஜன.10-ஆம் தேதி தொடங்க உள்ளதாக மத்தியப் பணியாளா் தோ்வாணைய அலுவலகத்தின் இணை செயலாளா் மற்றும் மண்டல இயக்குனா் கே. நாகராஜா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: மத்திய ஆயுதப் படைகள் (சி.ஏ.பி.எப்.எஸ்.),எஸ்.எஸ்.எப்., அசாம் ரைபிள்சில் உள்ள ரைபிள் மேன் (பொதுப் பிரிவு), காவலா் (பொதுப் பணி), மற்றும் சிப்பாய் தோ்வை மத்திய பணியாளா் தோ்வாணையம் கணினி முறையில் நடத்துகிறது. தெற்கு பிராந்தியத்தில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 376 விண்ணப்பதாரா்கள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா். மொத்தம் 20 தோ்வு மையங்களில் உள்ள 21 இடங்களில் இத்தோ்வு நடைபெறுகிறது.
ஆந்திராவின் குண்டூா், கா்நூல், ராஜமுந்திரி, திருப்பதி, விசாகப்பட்டினம், விஜயவாடா, காக்கிநாடா, நெல்லூா், சீராளா, விஜயநகரம் போன்ற இடங்களிலும், தெலங்கானாவில் ஹைதராபாத், வாரங்கல், கரீம்நகா் போன்ற இடங்களிலும் நடைபெறுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூா் ஆகிய இடங்களிலும் இத்தோ்வு நடைபெறுகிறது.
தெற்கு பிராந்தியத்தைப் பொறுத்தவரை இத்தோ்வு ஜன10 முதல் பிப்.13-ஆம் தேதி வரையில் 19 நாள்கள் நடைபெறுகிறது.
தினமும் 4 சுழற்சி முறைகளில் தோ்வு (ஷிப்ட்) பின்பற்றப்படுகிறது. 1-ஆவது சுழற்சி முறை (ஷிப்ட்) காலை 9 முதல் 10 வரையும், 2-ஆவது சுழற்சி முறை (ஷிப்ட்) காலை 11.45 முதல் 12.45 வரையும், 3-ஆவது சுழற்சி முறை (ஷிப்ட்) பிற்பகல் 2.30 முதல் 3.30 வரையும், 4-ஆவது சுழற்சி முறை (ஷிப்ட்) மாலை 5.15 முதல் மாலை 6.15 வரையும் நடைபெறுகிறது.
இத்தோ்வுக்கான மின்னணு அனுமதிச்சீட்டை இணையதளத்தில் தோ்வுக்கு 4 நாட்களுக்கு முன்பாக மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-2825 1139 என்ற தொலைபேசி எண்ணிலும், 94451 95946 என்ற கைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, January 02, 2023
NTSE
January 02, 2023
தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு எப்போது; எதிர்பார்ப்புடன் காத்திருப்பு

தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு அறிவிப்பு, எப்போது வெளியாகும் என்ற, எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் வருவாய் வழி திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. ஏழாம் வகுப்பு இறுதித்தேர்வில், 55 சதவீத மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், இத்தேர்வு எழுத தகுதியுடையவர்கள். இதோடு, மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம், ரூ.3.5 லட்சத்திற்குள் இருப்பது அவசியம். மனத்திறன் பகுதியில், 90 மதிப்பெண்களுக்கும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, படிப்பறிவு பகுதியில், 90 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறும்.
இத்தேர்வு அறிவிப்பு, டிச., துவக்கத்திலே வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் இத்தேர்வு அறிவிப்பு, தற்போது வரை வெளியிடப்படவில்லை.
பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், 'தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வுக்கு, ஏழாம் வகுப்பில் முழு பாடத்திட்டம், எட்டாம் வகுப்பில், முதல் இரு பருவ பாடத்திட்டத்தில் கேள்விகள் இடம்பெறும்.
இன்று முதல் மூன்றாம் பருவம் துவங்கவுள்ளதால், விரைவில் தேர்வு அறிவிப்பு வெளியிட வேண்டும்.தேர்வில் வெற்றி பெற்றால், பிளஸ் 2 வரை ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இத்தொகை உயர்கல்விக்கு, பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்' என்றனர்

Sunday, December 25, 2022
EXAMS
December 25, 2022
அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் வணிகவியல் பாடங்கள் 2023 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுக்கான அறிவிக்கை

2023 - ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசு தொழில்நுட்பக் கல்வித் துறையினால் நடத்தப்படும் தட்டச்சு , சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர் 27.12.2022 முதல் www.tndtegteonline.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் . மேற்கண்ட அறிவிக்கை சார்ந்த முழு விவரங்கள் தொழில்நுட்பக் கல்வித் துறையின் www.dte.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Wednesday, December 21, 2022
half yearly exam
December 21, 2022
அரையாண்டு தேர்வில் ஆன்லைன் வினாத்தாள்; சோதனை முயற்சியாக 428 பள்ளிகளில் அமல்

தமிழகத்தில் சோதனை முயற்சியாக, 428 அரசு பள்ளிகளில், 'ஆன்லைன்' வழியில் வினாத்தாள் வழங்கி, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வி அலுவலகங்களின் நிர்வாக முறைகளில், கணினி வழியை புகுத்த, கமிஷனரகம் முயற்சித்து வருகிறது.அரசு பள்ளிகளுக்கான தேர்வு வினாத்தாள்களை, வேலைவாய்ப்புக்கான போட்டி தேர்வு போல, ஆன்லைன் வழியில் அனுப்பும் திட்டத்தை, பள்ளிக் கல்வி துறை பரிசோதனை செய்துள்ளது.
முதற்கட்டமாக, நடப்பு கல்வி ஆண்டில், 10 மாவட்டங்களில் தலா இரண்டு பள்ளிகள் வீதம், 20 பள்ளிகளில் காலாண்டு தேர்வு வினாத்தாள்கள், ஆன்லைன் வழியில் அனுப்பி பரிசோதிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில், 232 நடுநிலை பள்ளிகள், 83 உயர்நிலை பள்ளிகள், 113 மேல்நிலை பள்ளிகள் என, 428 பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியே வினாத்தாள் அனுப்பி, அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நாளும், தேர்வுக்கான வினாத்தாள்கள் ஆன்லைன் வழியே பதிவிறக்கம் செய்யப்பட்டு, அச்செடுத்து, மாணவர்களுக்கு தேர்வை நடத்தும்படி அறிவிக்கப்பட்டது.
இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், ஆன்லைன் வகை வினாத்தாளை, மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.
வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு முன் கூட்டியே வழங்கப்பட்டு, 'லீக்' ஆவது தடுக்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோதனை முறையில் நடத்தப்படும் இந்த தேர்வில், வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யப்பட முடியவில்லை என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கு, சம்பந்தப்பட்ட இணையதளத்தின், கூடுதல் செயல்திறனை தாங்கும் வகையில், 'சர்வர்' இணைப்பு பெற்றிருக்க வேண்டும் என, பள்ளிக் கல்வி அதிகாரிகளும், ஆசிரியர்களும் தெரிவித்தனர்.
Saturday, December 17, 2022
type writing exams
December 17, 2022
அடுத்த ஆண்டு எந்தெந்த தேதிகளில் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள்? - காலஅட்டவணை வெளியீடு

அடுத்த ஆண்டு எந்தெந்த தேதிகளில் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் நடத்தப்படும் என்ற கால அட்டவணையை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகளையும், கணக்கியல் தேர்வுகளையும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. ஆண்டுக்கு இரண்டு தடவை (பிப்ரவரி மற்றும்ஆகஸ்டு) மாதங்களில் இத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு எந்தெந்த தேதிகளில் தொழில்நுட்பத்தேர்வுகள் நடத்தப்படும், அவற்றுக்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும், தேர்வுகளுக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும் என்ற விவரங்களுடன் கூடிய காலஅட்டவணையை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிப்ரவரி 11, 12-ல் சுருக்கெழுத்து ஹை ஸ்பீடு தேர்வும், பிப்ரவரி 18, 19-ல் சுருக்கெழுத்து ஜுனியர், இண்டர்மீடியட், சீனியர் தேர்வுகளும் பிப்ரவரி 20-ல் கணக்கியல் தேர்வும் (ஜுனியர் மற்றும் சீனியர்) பிப்ரவரி 25, 26-ல்தட்டச்சு (ஜுனியர், சீனியர், அதிவேகம்) தேர்வும் நடத்தப்பட உள்ளன.
தேர்வுகளுக்கான அறிவிப்புகள் டிசம்பர் 25-ம் தேதி வெளியிடப்பட்டு 27 முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 20-ம் தேதி ஆகும். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 21-ம் தேதி அன்று வெளியாகும்.
இதேபோல், ஆகஸ்டு பருவதேர்வு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுகால அட்டவணையை www.dte.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என மாநில தொழில்நுட்பக்கல்வி ஆணையரும், தொழில்நுட்பத்தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஜி.லட்சுமிபிரியா தெரிவித்துள்ளார்.
Wednesday, December 14, 2022
EXAMS
December 14, 2022
கலை, அறிவியல் படிப்புக்கான பருவத்தேர்வு நடத்தக்கூடாது; கல்லூரிகளுக்கு உத்தரவு

கல்லூரிக் கல்வி இயக்குநர் ம.ஈஸ்வரமூர்த்தி, அனைத்து மண்டல இயக்குநர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவியல் உதவியாளர் பணிக்கான தேர்வு டிசம்பர் 14 முதல் 16-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த தேர்வில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள ஏதுவாக அந்த நாட்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு தேர்வுகள் ஏதும் நடத்தக்கூடாது. இதுசார்ந்து அரசு, நிதியுதவி மற்றும் தனியார் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனைத்து மண்டல இயக்குநர்களும் உரியஅறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேன்டூஸ் புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுக்கான மாற்று தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிச. 9-ல்நடக்கவிருந்த தேர்வுகள் டிச.24-ம் தேதியும், டிச.10-ல் நடக்கவிருந்த தேர்வுகள்டிச.31-ம் தேதியும் நடக்கிறது

Thursday, November 17, 2022
TET
November 17, 2022
ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற பாா்வையற்ற பட்டதாரிகள் ஆா்ப்பாட்டம்
பாா்வையற்ற பட்டதாரிகள் ஆா்ப்பாட்டம்
ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற பாா்வையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாா்வையற்ற கல்லூரி மாணவா்கள், பட்டதாரிகள் சங்கம் சாா்பில் சென்னையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது..
மாநில மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம் அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் தலைவா் சிங்காரவேலன், பொதுச் செயலாளா் பாலு ஆகியோா் தலைமையில் திரளான பாா்வையற்ற பட்டதாரிகள், மாணவா்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இது குறித்து பொதுச் செயலாளா் பாலு கூறியது: ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பணி நியமனத்துக்காக மேலும் ஒரு போட்டித் தோ்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தோ்விலிருந்து பாா்வையற்ற பட்டதாரிகளுக்கு விலக்கு அளித்து தோ்ச்சி பெற்ற (பாா்வையற்றோா்) அனைவருக்கும் உடனடியாக பணி வழங்க வேண்டும். கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கான தேசிய தகுதித் தோ்வில் (நெட்) தோ்ச்சி பெற்ற பாா்வையற்றோரை கெளரவ விரிவுரையாளா்களாக பணியமா்த்த வேண்டும். பாா்வையற்ற கல்லூரி மாணவா்கள் அனைவருக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையை இரு மடங்காக உயா்த்தி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

Monday, November 14, 2022
EXAMS
November 14, 2022
மாணவர்களுக்கு 2ம் பருவ இடைத்தேர்வு இன்று துவக்கம்
2ம் பருவ இடைத்தேர்வு இன்று துவக்கம்
ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ இடைத்தேர்வு, இன்று துவங்குகிறது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தை பின்பற்றும், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை முப்பருவ தேர்வு முறை அமலில் உள்ளது. 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆண்டு இறுதியில் பொது தேர்வும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு பருவ தேர்வுகளுக்கு இடையில், மாணவர்களை தயார்படுத்தும் வகையில், பருவ இடைத்தேர்வுகளை, பள்ளிக்கல்வி துறை நடத்துகிறது.
அதன்படி, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ இடைத்தேர்வு இன்று துவங்குகிறது; 10ம் வகுப்புக்கு வரும், 18ம் தேதியும்; பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 19ம் தேதியும் தேர்வுகள் முடிகின்றன.
இதற்கான வினாத்தாள்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே தயாரிக்கப்பட்டு, மாவட்ட அளவில் பொது தேர்வு போல நடத்தப்படுகிறது. கல்வி ஆண்டின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட பாடப் பகுதிகளில் இருந்து மட்டும் வினாக்கள் இடம் பெறும் என, பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.