Monday, December 08, 2025
Saturday, November 22, 2025
Friday, August 18, 2023
நீட் தேர்வை எதிர்த்து நாளை திமுக போராட்டம் - மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் - உதயநிதி
"என்ன விமர்சனம், கேலி, கிண்டல் வந்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம்
*போராட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்
*தேர்தல் பிரச்சாரத்தில் நீட் தேர்வு ரத்து செய்வோம் என நான் உறுதி கொடுத்தேன்: அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்
*நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன்: என்னை போல் அனைவரும் உணர வேண்டும்" - அமைச்சர் உதயநிதி
நீட் தேர்வு ரத்து தொடர்பான விஷயத்தில் முழு பொறுப்பதையும் ஏற்பதாக கூறி, அதில் மக்களை ஏமாற்றமாட்டேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரத போராட்டம்
நீட் தேர்வை எதிர்த்து, நாளை தமிழக மாவட்ட தலைநகரங்களில் திமுக மாணவரணி, மருத்துவரணி, இளைஞரணி ஆகியவை சார்பில் கண்டன உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
ஆளுநரின் நிலைப்பாடு, மத்திய அரசின் செயல் போன்றவற்றை கண்டித்து நடைபெறும் இந்த போராட்டம் குறித்து தமிழகத்தின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
முழு பொறுப்பையும் ஏற்கிறேன்
அப்போது, நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பான பொறுப்பை உணர்வதாக குறிப்பிட்டு, நீட் தொடர்பாக கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றும் மக்களை ஏமாற்ற மாட்டேன் என கூறினார்.
மேலும், நாளை நடைபெறவுள்ள போராட்டத்தில் திமுகவின் முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் இந்த போராட்டத்தில் தங்களுடன் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Wednesday, March 01, 2023
ஆசிரியர்களுக்கென புதிய திட்டங்களை தன் பிறந்த நாளன்று அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர்
ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கபட்டு வரும் கல்விச் செலவு (tuition fee) ரூ.50,000/- வரை உயர்த்தி வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு
"ஆசிரியர்களின் நலனைக் காக்க புதிய திட்டம்" அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி வழங்கப்படும்
அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவு ரூ.50 ஆயிரமாக உயர்வு
"அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடையே சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்"
"சுமார் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்"
- முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும் ஆசிரியர் சமூகத்தை சிறப்பிக்கும் விதமாகவும் ஆசிரியர்களின் நலனைக் காக்கவும் புதிய திட்டங்களை செயல்படுத்த நமது அரசு முடிவு செய்துள்ளது.
மாறிவரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கென அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (Tablet) வழங்கப்படும்.
மாணவர் வாழ்க்கை ஏற்றம்காண அயராது உழைக்கும் ஆசிரியர் பெருமக்களின் உடல்நலம் காக்க அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக தற்போது ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கபட்டு வரும் கல்விச் செலவு (tuition fee) ரூ.50,000/- வரை உயர்த்தி வழங்கப்படும்.
அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடையே சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
இத்தகு திட்டங்கள் சுமார் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்ற செய்தியை இந்தத் தருணத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
பள்ளிக் கல்வித்துறை தொடர்பாக முதலமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!
பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிய கட்டமைப்பு வசதிகள் திறப்புவிழா
சென்னை மார்ச் 1, 23-
சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் இருக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டடத்தில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுப் புலம் (Assessment cell), முன்னோட்டக் காட்சி அரங்கம் (Preview theatre), விரிவுபடுத்தப்பட்ட 14417 உதவி எண்ணுக்கான அழைப்பு மையம் ஆகியவற்றை நிர்மாணித்திருக்கிறது பள்ளிக் கல்வித் துறை.
இவற்றை பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையில், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இவற்றைத் திறந்து வைத்தார். பள்ளிக் கல்வி தொடர்பான தமிழ்நாடு அரசின் திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்த காரணமாக உள்ள ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தன் பிறந்தநாளன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிடும் செய்தி காணொலியாக இங்குள்ள முன்னோட்டக் காட்சி அரங்கத்தில் திரையிடப்பட்டது.
"மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும் ஆசிரியர் சமூகத்தை சிறப்பிக்கும் விதமாகவும் ஆசிரியர்களின் நலனைக் காக்கவும் புதிய திட்டங்களை செயல்படுத்த நமது அரசு முடிவு செய்துள்ளது,
மாறிவரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கென அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (Tablet) வழங்கப்படும்.
மாணவர் வாழ்க்கை ஏற்றம்காண அயராது உழைக்கும் ஆசிரியர் பெருமக்களின் உடல்நலம் காக்க அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.
உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக தற்போது ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கபட்டு வரும் கல்விச் செலவு (tuition fee) ரூ.50,000/- வரை உயர்த்தி வழங்கப்படும்.
அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடையே சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். இத்தகு திட்டங்கள் சுமார் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்ற செய்தியை இந்தத் தருணத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்'' என தன் உரையில் முதலமைச்சர் ஆசிரியர்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.
முன்னதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவாக அமைக்கப்பட்டுள்ள வெளியீட்டுப் பிரிவுப் புத்தக விற்பனை மையத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளியீட்டுப் பிரிவு புத்தகங்களையும் வழங்கினார்.
நிகழ்வில் பள்ளிக் கல்விக்கான அரசு முதன்மைச் செயலாளர் திருமிகு. காகர்லா உஷா இ.ஆ.ப உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
Wednesday, January 18, 2023
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை..
நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சென்னையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டதிருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு கடந்த 2020ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ம் தேதி விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு அரசின் வேட்புமனு மீதான விசாரணையை 4 வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீட் தொடர்பான வழக்கை நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருக்க விரும்பவில்லை எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்த நிலையில், நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கு விசாரணைக்கு வரும் போது தமிழ்நாடு அரசின் சார்பாக எடுத்துரைக்க வேண்டிய அம்சங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது
Friday, December 23, 2022
மாணவர்கள் நலன் காக்க மனம் திட்டம் துவக்கம்
மாணவர்கள் நலன் காக்க மனம் திட்டம் துவக்கம்
மாணவர்களின் மன நலனை மேம்படுத்த, 'மனம்' திட்டத்தை, முதல் கட்டமாக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள, 36 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 'மனம்' என்ற மாணவர்களின் மன நலன் காக்கும் சிறப்பு திட்டம் துவக்கப்பட்டு, 'மன நல நல்லாதரவு மன்றங்கள்' அமைக்கப்பட்டு உள்ளன.
இவற்றில், மருத்துவக் கல்லுாரி முதல்வர், மன நலத் துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவர்கள், உதவிப் பேராசிரியர்கள், மாணவ - மாணவியர் அடங்கிய குழு அமைக்கப்படும்.
மாணவர்களின் நல்வாழ்வுக்கான நெறிமுறைகள் குறித்த புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்படும். மாணவர்களின் கலை, கற்பனை உட்பட தனித் திறன்களைக் கண்டறிந்து, மேம்பாட்டுக்கான வழிவகை உருவாக்கப்படும்.
உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள், உடனடியாக மன நல மருத்துவரை தொடர்பு கொள்ள, அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும், 'மனம்' தொலைபேசி எண், '14416' பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இத்திட்டம் முதல் கட்டமாக, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் துவக்கப்பட்டுள்ளது. பின், அனைத்து கல்லுாரிகள் மற்றும் பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 22.84 கோடி ரூபாய் மதிப்பில், 75 புதிய மேம்படுத்தப்பட்ட, நவீன மருத்துவ உபகரணங்கள் உள்ள, 108 அவசர கால ஊர்திகளை, முதல்வர் துவக்கி வைத்தார்.
மேலும் 2.36 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, இடைநிலை பராமரிப்பு மையத்தையும் திறந்து வைத்தார்.
Wednesday, December 21, 2022
நம்ம ஸ்கூல்” திட்டம்: முதல் நாளில் ரூ.50 கோடி நன்கொடை
அரசு பள்ளிகளை தனியார் பங்களிப்போடு மேம்படுத்தும் முன்னோடித் திட்டமான “நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்” திட்டத்தை நேற்று முன்தினம் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “ எல்லாவற்றையுமே அரசே செய்துவிட முடியாது. மக்களும் கைகோர்க்க வேண்டும்.
அரசு பள்ளியால் பயன்பெற்றவர்கள் தங்களது நன்றியின் அடையாளத்தை இத்திட்டத்தின் மூலம் தெரிவிக்கலாம்.
நீங்கள் செலுத்தக்கூடிய ஒரு ரூபாய் நன்கொடையும் கூட கூடுதல் வெளிப்படைத்தன்மையுடனும், கடமையுணர்வுடனும், நம் பள்ளிகள், நம் ஆசிரியர்கள், நம் குழந்தைகளின் வளர்ச்சிக்கென செலவிடப்படும்” என்று உறுதி அளித்தார். இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளில் மட்டும் ரூ.50 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
Monday, December 19, 2022
அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான ‘நம்ம ஸ்கூல்’ திட்டம்: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்
அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான ‘நம்ம ஸ்கூல்’ திட்டம்: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், ‘நம்ம ஸ்கூல்’ என்னும் புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடக்கி வைக்கவுள்ளாா்.
அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில்நிறுவனங்களில் உயா்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவா்களும், தொழிலதிபா்களாக உள்ள முன்னாள் மாணவா்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும் (என்.ஜி.ஓ) தங்களது சமூகப் பொறுப்புணா்வு நிதி (சி.எஸ்.ஆா்) மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவா், வண்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் இத் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
இதன் தொடக்க விழா சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் திங்கள்கிழமை (டிச.19) நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடக்கி வைத்து அதற்கான இணையதளத்தை அறிமுகப்படுத்துகிறாா்.
இந்த இணையதளம் மூலம் இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்புகிறவா்கள், எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம். மேலும், பணிகள் முறையாக நிதி மூலம் பயன்படுத்தப்படுகிா என்பதையும் நிதி வழங்கியவா்கள் அறியும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவா் விஸ்வநாதன் ஆனந்த், ‘நம்ம ஸ்கூல்’ பவுண்டேசன் தலைவா் வேணு சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.
Sunday, December 18, 2022
அரசு பள்ளிகளை மேம்படுத்த 'நம்ம ஸ்கூல்'திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
அரசு பள்ளிகளை மேம்படுத்த நம்ம ஸ்கூல் என்னும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், நம்ம ஸ்கூல் என்னும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
இத்திட்டம் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும் (என்.ஜி.ஓ) தங்களது சமூகப் பொறுப்புணர்வு நிதி (சி.எஸ்.ஆர்) மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ஏதுவாக இத்திட்டம் தொடங்கப்படுவதோடு, இதற்கான இணையதளத்தையும் முமுதலமைச்சர் நாளை அறிமுகம் செய்கிறார்.
இந்த இணையதளம் மூலம் இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்புகிறவர்கள், எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், பணிகள் முறையாக நிதி மூலம் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் நிதி வழங்கியவர்கள் அறியும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, November 16, 2022
கோயிலின் கீழ் செயல்படும் 2 பள்ளிகள் 4 கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம்: தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலின் கீழ் செயல்படும் இரண்டு பள்ளிகள் நான்கு கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி, மலைப்பகுதிகளில் உள்ள 1545 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை 33.56 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதற்கு முதலமைச்சர் காலை உணவு திட்டம் என்ற பெயர் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் மதுரையில் திட்டத்தை தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி பரிமாறிய முதல்வர் மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி சாப்பிட்டார். இந்நிலையில், பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலின் கீழ் செயல்படும் இரண்டு பள்ளிகள், நான்கு கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
Wednesday, November 02, 2022
ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.
மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை நவம்பர் மூன்றாம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடப்படும். மேலும், தஞ்சாவூரிலுள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
Wednesday, October 19, 2022
15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளனர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
தரமான கல்வியை நமது அரசு பள்ளிகள் வழங்கிவருவதால் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளதாக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து சட்ட மன்றத்தில் முதல்வர் பேசியதாவது:
கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளி கல்வித்துறையானது மகத்தான பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழும் வண்ணம் காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், மாதிரிப்பள்ளிகள், நான் முதல்வன், தகைசால் பள்ளிகள் என நமது அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
இந்த சூழலில் பள்ளிக்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு என அரசு பள்ளிகளுக்கு சுமார் 26,000 புதிய வகுப்பறைகளும், 7,500 கி.மீ. சுற்று சுவரும், பராமரிப்பு பணிகளுக்கு என சுமார் ரூ.2,500 கோடி நிதியும் என மொத்தம் சுமார் 12,300 கோடி தேவை என கண்டறியப்பட்டு அவற்றை படிப்படியாக ஏற்படுத்தி பெறுவதற்கு என பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டுத்திட்டம் எனும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்தின் படி நடப்பாண்டில் சுமார் ரூ.1,430 கோடி ஒதுக்கப்பட்டு ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகிறது.
தரமான கல்வியை நமது அரசு பள்ளிகள் வழங்கிவருவதால் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் கூடுதலாகா சேர்ந்துள்ளனர். எனவே அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய வகுப்பறைகளுக்கான தேவைகளும் உயர்ந்துள்ளதால், கூடுதல் வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்பறையில், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு சுமார் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 6,000 புதிய வகுப்பறைகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு சுமார் ரூ.250 கோடி மதிப்பீட்டில் சுமார் 1,200 வகுப்பறைகளும் என மொத்தம் ரூ.1050 கோடி மதிப்பீட்டில் 7,200 வகுப்பறைகள் நடப்பாண்டில் கூடுதலாக கட்டப்படும்
பள்ளிகளின் பராமரிப்பு பணிகளுக்கு என நடப்பாண்டியில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள சுமார் ரூ.150 கோடி நிதியுடன் சேர்த்து தற்போது ரூ.115 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசு பள்ளிகளை உரிய முறையில் பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அரசு பள்ளிகளை நாடி வரும் தரமான பள்ளி கட்டமைப்பு கிடைக்க பெறுவதோடு பாதுகாப்பான கற்றல் சூழல் ஏற்படும் என தெரிவித்தார்.
Saturday, October 01, 2022
பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளா்கள் நியமனம்: ஆசிரியா்கள் சங்கம் நன்றி - Appointment of Lecturers in Polytechnic Colleges: Thanks to Teachers Association
தமிழகத்தில் காலியாக இருந்த 1,024 விரிவுரையாளா் பணியிடங்களை நிரப்பிய தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளா் காலி பணியிடங்களுக்கு உரிய நபா்களை தோ்வு செய்ய ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் கடந்த 2019 நவ. 27-இல் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து கடந்த ஆண்டு டிச.8 முதல் 13 வரை கணினி வழித் தோ்வுகள் நடத்தப்பட்டு 1,024 பேருக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக தலைமை செயலகத்தில் 11 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் ஸ்டாலின் கடந்த புதன்கிழமை வழங்கினாா்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நடு அரசு பாலிடெகனிக் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளா் ப.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் நீண்ட நெடுங்காலமாக விரிவுரையாளா்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. இதையடுத்து தமிழக அரசு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு 1,024 பணியிடங்களை நிரப்பியுள்ளது. இதற்காக உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா், தொழில்நுட்பக் கல்வி ஆணையா் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, September 14, 2022
பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் 'சிற்பி' திட்டம் எப்படி செயல்படும்? - முழு விவரம்
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி, மாணவர்கள் ஒழுக்கத்திலும் கல்வியிலும் மேலும் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், நல்வழிப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘சிற்பி‘ (SIRPI – Students In Responsible Police Initiatives) என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டம் செயல்படும் விதம் தொடர்பாக முழுமையான விவரம்: முதற்கட்டமாக 100 அரசு பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் 50 மாணவர்கள் விருப்பத்தின்பேரில் தன்னார்வலர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு நற்பண்புகள் மற்றும் உடற்பயிற்சி குறித்த வகுப்புகள் நடத்தப்படும்.
இவர்கள் 8 சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கல்வி, வரலாறு, பொது அறிவு குறித்து எடுத்துரைக்கப்படும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக, விளையாட்டுப் பயிற்சி, உடற்பயிற்சி, கவாத்து ஆகியவையும் கற்றுக் கொடுக்கப்படும். நல்லொழுக்கம், நாட்டுப்பற்று, தேசிய ஒற்றுமை, பிறருக்கு உதவுதல், தாம் கற்ற கல்வியையும், கண்டு களித்த வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் நல்ல அனுபவங்கள் குறித்து பிறருக்கு கற்றுத் தருதல் போன்ற நல்ல பண்புகளை வளர்க்க இச்சிறப்பு வகுப்புகள் உதவும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, பொதுமக்கள் அமைதியாக வாழ்வதற்கு உறுதுணையாக இருக்கும் காவல்துறையின் செயல்பாடுகள், அமைப்பு, பணிகள் குறித்தும், அவசர உதவி மையங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும், சென்னை பெருநகர காவல் துறையின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும்.
இவ்வகுப்புகள் மூலம் அவர்களை சிற்பியாக உருவாக்கி, இந்த சிற்பிகள் மூலம் அப்பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் நற்பண்புகள் கற்பிக்கப்பட்டு, கல்வி, ஒழுக்கம், விளையாட்டு என அனைத்திலும் சிறந்த மாணவர்களாக அனைவரையும் உருவாக்குவதே 'சிற்பி' திட்டத்தின் நோக்கமாகும்.
Tuesday, September 13, 2022
தமிழக அரசின் அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..
தமிழக அரசின் துறை வாரியான திட்ட பணிகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை செயலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, முன்னோடியாக கலந்து கொண்டுள்ளார்.
நிதிநிலை அறிக்கை, திட்டங்களின் நிலை என்ன, கூடுதலாக எடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் என்ன? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. 2022- 23ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் துறைசார்ந்து எந்த நிலையில் இருக்கின்றன? அதற்கான நிதிகள் எவ்வாறு செலவழிக்கப்படுகிறது? திட்டங்கள் சரியாக சென்று சேர்கிறதா? முடியும் தருவாயில் உள்ள திட்டங்கள் எத்தனை? உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனை நடைபெறவுள்ளது.
துறைவாரியான திட்ட பணிகள், வருங்காலத்தில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்தும், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் தலைமையிலான அனைத்துத்துறை செயலர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவிருக்கிறது. மேலும் பருவமழை தொடங்கும் முன் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்குவர் என தகவல் வெளியாகியுள்ளது.
Saturday, September 10, 2022
அக்டோபர் 15 முதல் அரசு ஊழியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு - ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமைந்ததற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்தான் காரணம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, மற்ற மாநிலங்களைவிட அனைத்து துறைகளிலும் முன்னோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமைந்ததற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்தான் காரணம். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என தெரிவித்தேன்.
போராட்டக் காலத்தை பணிக்காலமாக வரைமுறைப்படுத்தி அளிக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழிவாங்கப்பட்டனர். அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளேன். தற்காலிக பணியில் இருக்கும் ஆசிரியர்கள் 60 வயது வரை பணியை தொடரலாம்.
அக்டோபர் 15 முதல் அரசு ஊழியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக வெளிப்படைத்தன்மையுடன் நடக்கும். பள்ளி கல்வி துறையை சீரமைக்க கொண்டு வரப்பட்ட அரசாணையில் சில மாற்றங்கள் கொண்டு வந்து இருக்கிறோம். கல்வி துறையில் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிர்வாக பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்படுவர். துறை அமைச்சர்களிடம் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் நிச்சயம் தன் கவனத்துக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
















