Breaking

Showing posts with label பிளஸ் 2 மாணவி. Show all posts
Showing posts with label பிளஸ் 2 மாணவி. Show all posts

Wednesday, July 27, 2022

July 27, 2022

காரைக்குடியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை: ஒரே மாதத்தில் இது 5வது சம்பவம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் நேற்று பிளஸ் 2 மாணவி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், நேற்றிரவு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தமிழகத்தில் கடந்த ஒரே மாதத்தில் மட்டும் பிளஸ் 2 பயிலும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது இது ஐந்தாவது சம்பவமாகும்.

நேற்றிரவு பிளஸ் 2 மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறோம். மாணவியின் உடல் கூறாய்வு முடிந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காரைக்குடி காவல் உதவி கண்காணிப்பாளர் வினோஜ் கூறியுள்ளார்.



இந்த சம்பவம்,நேற்று, விருத்தாசலம், ஆயியாா் மடம் பகுதியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அடுத்த நாளே மற்றொரு சம்பவம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இந்த ஒரே மாதத்தில் மட்டும் பிளஸ் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது இது ஐந்தாவது சம்பவமாகும்.



முன்னதாக, கள்ளக்குறிச்சியில் ஜூலை 13ஆம் தேதி பள்ளி விடுதிக் கட்டத்திலிருந்து குதித்து மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த வன்முறை தமிழகத்தையே உலுக்கியது.



இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தொடர்ந்து பிளஸ் 2 மாணவிகளின் தற்கொலைச் சம்பவங்கள் பெற்றோர்கள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைக்கான காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், தொடர்ந்து பிளஸ் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதை கவனத்தில் கொண்டு, மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாததால் அவர்களுக்கு பொதுத் தேர்வை எதிர்கொள்வதில் இருக்கும் அச்சம் போன்றவற்றை களைய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.



சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், எந்தச் சூழலிலும் மாணவா்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது; தலைநிமிரும் எண்ணம்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். மேலும், அண்மைக் காலமாக தமிழகத்தில் நடந்த சில நிகழ்வுகளை எண்ணிப்பாா்க்கின்ற போது, மிகுந்த மன வேதனையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.



அதுபோல, கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, July 18, 2022

July 18, 2022

அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி - சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

மேச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி 2வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார். கால்முறிவு ஏற்பட்ட நிலையில் மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சேலத்தில் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி பள்ளி கட்டிடத்தின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

*சிறுமிக்கு கால்முறிவு மற்றும் தாடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சியர்

*குடும்ப பிரச்சினையால் தற்கொலை முயற்சி என மாவட்ட ஆட்சியர் தகவல்
சேலம்: சேலம் மாவட்டம் மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர், இன்று (ஜூலை 18) காலை பள்ளியின் 2ம் மாடியில் இருந்து கீழே குதித்தார். தற்கொலைக்கு முயன்ற மாணவியை கண்டு சக மாணவிகள் கூச்சலிட்டதும், அங்கு திரண்ட ஆசிரியர்கள், படுகாயமடைந்த மாணவியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மாணவியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.

இதையும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: ஆசிரியைகள் இருவர் கைது
அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த கோகிலவாணி என்ற மாணவி இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு வந்துள்ளார். இதையடுத்து மாணவி பள்ளியின் இரண்டாம் மாடியில் உள்ள வகுப்பறைக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் கூச்சலிட்ட நிலையில், உடனடியாக அங்கு வந்த பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உடனடியாக தகவல்றிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் காவல் துறையினர் நேரில் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் மாணவி குடும்பத்த தகராறு காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது . பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் இதற்கு காரணம் இல்லை என்றும் தன்னுடைய இந்த தற்கொலை முயற்சிக்கு அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மாணவி தரப்பில் தெரிவித்ததாக தெரிகிறது. இரண்டாம் மாடிலிருந்து குதித்து தற்கொலை முயற்சித்ததில் சிறுமியின் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது மற்றும் தாடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது . மருத்துவர்கள் தொடர்ந்து மாணவிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இருப்பினும் மாணவியின் மனநிலையை அறிந்த அவருக்கு கவுன்சிலிங் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் அரசு பள்ளி மாணவியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Total Pageviews

Search This Blog