Breaking

Showing posts with label post office. Show all posts
Showing posts with label post office. Show all posts

Monday, September 11, 2023

September 11, 2023

Post Office Account இருக்கா? இன்னும் 20நாள் தான் இருக்கு..இதை கட்டாயம் செஞ்சி முடிச்சிருங்க!

போஸ்ட் ஆப்பிஸ் அக்கவுண்ட் இருக்கா? இன்னும் 20நாள் தான் இருக்கு..இதை கட்டாயம் செஞ்சி முடிச்சிருங்க!

ஆதார் அட்டை இணைக்காவிட்டால், உங்களின் தபால் அலுவலக கணக்கு முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

( *எப்படி இணைப்பது என்று இந்தப் பதிவில் கடைசியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.*)

வங்கியில் எப்படி சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறோமோ, அதேபோல, அரசுக்கு சொந்தமான தபால் நிலையங்களிலும் சேமிப்பு கணக்கு வைத்துக் கொள்ளலாம்.

சிறந்த வருமானத்தை மட்டும் பெறுவதுடன், நீங்கள் முதலீடு செய்த பணத்துக்கு உத்தரவாதமும், பாதுகாப்பும், வட்டி வகிதமும் பன்மடங்கு நன்மையை தரக்கூடியது.

அதாவது, தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ், சுகன்யா சம்ரித்து யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் போன்ற 9 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த 9 வகையான திட்டங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனால் தபால் அலுவலக கணக்கிற்கு பெருமளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். *ஆதாரை இணைப்பது கட்டாயம்:*

இந்நிலையில், தபால் அலுவலக கணக்கை திறப்பதற்கு முன், வாடிக்கையாளர்கள் சில முக்கியமான விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.

அதில் குறிப்பாக, அஞ்சலகக் கணக்குடன் ஆதாரை எண்ணை இணைக்க வேண்டும். செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சிறு சேமிப்பு கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள மக்கள் தங்களது தபால் அலுவலக கணக்குடன் இணைக்கத் தவறினால், தபால் அலுவலக கணக்கு செயலிழக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்களின் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு முடக்கப்பட்டால், உங்களால் முதலீடு செய்ய முடியாது.

முதலீட்டின் முதிர்வு பலன்களை பெற வாய்ப்பு இருக்காது மேலும், கணக்கில் வட்டி வரவு வைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. *எப்படி இணைப்பது?

முதலில் https://www.indiapost.gov.in/VAS/Pages/CustomerLinking.aspx என்ற இணையதளத்திற்கு செல்லவும். அதில், உங்கள் கணக்கின்  User ID மற்றும் Password-ஐ உள்ளிட வேண்டும்.

பின்னர், உங்கள் ஆதாரை எண்ணை உள்ளிட்டு, எந்த கணக்குடன் இணைக்க நினைக்கிறீர்களோ அதை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர், ஆதார் எண் இணைக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த உங்கள் எண்ணிற்கு மெசேஜ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆதார் அட்டை, உங்கள் கணக்கின் கடவுச்சொல்லுடன் அருகில் உள்ள தபால் அலுவலகம் சென்று இணைத்துக் கொள்ளலாம்.

Wednesday, February 08, 2023

February 08, 2023

3167 அஞ்சல்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு?

3167 அஞ்சல்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு? 3167 Extension of time to apply for postal jobs?

அஞ்சல் தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிக்க பொருத்தமான மாற்றங்களை உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றும், விண்ணப்பிக்கும் கடைசி தேதியை மூன்று நாட்கள் நீட்டிக்கப்படும் என்றும் அஞ்சல்துறை அஞ்சல் பொது நிர்வாக துணை இயக்குனர் ராசிசர்மா தொலைபேசியில் தெரிவித்தாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பதிவில், கிராமின் டாக் சேவக் (GDS) காலியிடங்களுக்கு ஜனவரி 27 முதல் ஆன் லைன் விண்ணப்பங்கள் அனுப்பலாம் என்றாலும் அதைச் செய்ய முடியாமல் தமிழ்நாடு மாநில தேர்வு முறைமையில் 10 ஆம் வகுப்பு தேறிய தேர்வர்கள் தவித்து வருகிறார்கள்.

இந்தியா முழுவதும் 40000 கிராமின் டாக் சேவக் (GDS) காலியிடங்களுக்கு பணி நியமனங்களை அஞ்சல் துறை மேற்கொள்ளவுள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்கள் 3167.

10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இந்த நியமனங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பாட வாரியாக கேட்கப்பட்டு உள்ளது. மாநில பாட முறையில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களே உண்டு. ஆனால் ஆன்லைன் விண்ணப்பத்தில் 6 வது பாடமும் இடம் பெற்றுள்ளது. அது "தெரிவு மொழி" என்பது மற்ற மாநிலங்களில் இது இருக்கிறது. ஆகையால் பிற மாநில தேர்வர்களுக்கு பிரச்சினை இல்லை. 6 வது பாடமே இல்லாத, இரு மொழித் திட்டம் நடைமுறையில் உள்ள தமிழ்நாடு தேர்வர்கள் பாட விவரங்களை நிரப்பாவிட்டால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ஆன்லைன் முறைமை விடவில்லை.

நான் அஞ்சல் துறை செயலாளர் வினீத் பாண்டே தமிழ்நாடு தலைமைப் பொது மேலாளர் பி.செல்வக்குமார் ஆகியோருக்கு இது குறித்து கடிதங்களை எழுதி இருந்தேன். இன்று என்னிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அஞ்சல் பொது நிர்வாக துணை இயக்குனர் ராசி சர்மா அவர்கள் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும், 6 வதாக உள்ள "தெரிவு மொழி" பகுதி தமிழ்நாடு தேர்வர்களுக்கு தடையாக இல்லாத வகையில் மாற்றப்படும் என்றும், விண்ணப்ப கடைசி தேதி நான்கு நாட்கள் நீட்டிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாடு தேர்வர்கள் தீர்வைப் பயன்படுத்தி உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்

Sunday, February 05, 2023

February 05, 2023

40,000 அஞ்சல்துறை வேலைவாய்ப்பு.... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

40,000 அஞ்சல்துறை வேலைவாய்ப்பு.... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

India Post recruitment Gramin Dak Sevak: அகவிலைப்படி உண்டா?

ஆம் உண்டு! மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றி அமைக்கப்படும் போதெல்லாம் அவர்களுக்கும் மாற்றி அமைத்து வழங்கப்படும்

நாட்டின் கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் (Branch Post Master), துணை கிளை போஸ்ட் மாஸ்டர் (Assistant Branch Post Master), அஞ்சல் உதவியாளர் (Gramin Dak Sevaks (GDS) அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம், நாடு முழுவதும் 40,889 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள், 10ம் வகுப்பு, குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்த பதவிக்கு எந்தவித எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வும் இல்லாமல், 10ம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலே தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

1 . தமிழ்நாட்டில் காலியிடங்கள் எண்ணிக்கை:

தமிழ்நாட்டில் மட்டும் 3,167 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. இது, முழுக்க முழுக்க மத்திய அரசு வேலையா?

ஆம். இருந்தாலும், அஞ்சல்துறை துறை சாராத சேவை அமைப்பின் (Extra Departmental system in the Department of Posts) கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை, படிகள் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும், அஞ்சல் துறையில் முழு நேர ஊழியர்களுக்கான சம்பள விகிதம் இவர்களுக்கு பொருந்தாது. (Gramin Dak Sevaks are holders of civil posts but they are outside the regular civil service)

3. அகவிலைப்படி உண்டா?

ஆம் உண்டு! மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றி அமைக்கப்படும் போதெல்லாம் அவர்களுக்கும் மாற்றி அமைத்து வழங்கப்படும் 4. ப்ரோமோஷன் உண்டா?

ஆம்! குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட இந்த கிராம அஞ்சல் உதவியாளர்கள் துறைத் தேர்வின் மூலம் இந்திய அஞ்சல் துறையில் உள்ள நிர்வாகப் பிரிவின் கீழ் (Post of Administrative Offices (Circle Office and Regional Office) வரும் குரூப் 'சி' பணிக்கு (பல்நோக்கு பணியாளர் - Multi Tasking Staff) தகுதி பெறலாம்.

அதேபோன்று, 5 ஆண்டு பணி முன் அனுபவம் உடைய, கிராம அஞ்சல் உதவியாளர்கள் எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமல், இந்திய அஞ்சல் துறை சார்நிலைப் பணிகளில் (Posts of Subordinate Office) அடங்கிய குரூப் சி (பல்நோக்கு பணியாளர் - Multi Tasking Staff) நிலைக்கு தகுதியுடைவராவார். குறைந்தது 3 ஆண்டு பணி முன்அனுபவம் உள்ள அஞ்சல் உதவியாளர்கள் துறைத் தேர்வின் மூலம் கூட இந்த பதவியை அடையலாம்.

அதன்பின், போஸ்ட்மேன், மெயில்கார்டு உள்ளிட்ட பதவிகளுக்கு உயர்வு பெற வாய்ப்புண்டு.

5. பணியின் தன்மை என்ன? பகுதி நேர ஊழியர்களாக பயன்படுத்தப்படுவார்கள். அதாவது நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 மணி நேரம் மட்டுமே வேலை இருக்கும்.

6. ஓய்வு பெறும் வயது என்ன? இந்தப் பணியாளர்கள் 65-ஆவது வயது வரை பணியில் இருப்பார்கள்.

7. படித்த இளைஞர்கள் அப்ளை செய்யலாமா? இன்றைய இளைஞர்கள் அரசு வேலை வாய்ப்புகளில் நாட்டம் செலுத்தி வருகின்றன.

பொதுவாக, வட இந்தியாவில் யுபிஎஸ்சி,எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு தாயராகி வரும் தேர்வர்கள், இந்த கிராம உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வது வழக்கம். வேலை நேரங்கள் போக இதர நேரத்தில் தேர்வுக்கு தயார் படுத்திக்கொள்கின்றனர். எனவே, நீங்கள் வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் வருமானம் ஈட்டி வரும் நபராக இருந்தால் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இல்லையேல், ஏதேனும் தனியார் நிறுவனத்தில் பணி செய்து கொண்டு, எஸ்எஸ்சி தேர்வெழுதி நல்ல பதவியில் அமரலாம்.

Saturday, January 21, 2023

January 21, 2023

அஞ்சல் துறையில் நேரடி முகவர் வேலை; நாளை மறுநாள் நேர்காணல் Direct agent work in postal industry; Interview the day after tomorrow

அஞ்சல் துறையில் நேரடி முகவர் வேலை; நாளை மறுநாள் நேர்காணல் Direct agent work in postal industry; Interview the day after tomorrow

சென்னை அஞ்சல் அலுவலகத்தின் நாளை மறுநாள் வேலைவாய்ப்பிற்கான நேர்காணல் நடைபெறுகிறது.

இந்திய அஞ்சல் துறையில் (India Post Office) காப்பீட்டு விற்பனை பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு சென்னையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் வரும் திங்கள்கிழமை (ஜனவரி,23, 2023) நேர்காணல் நடைபெற உள்ளது.

சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய கோட்டம் அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு / கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனை செய்யும் நேரடி முகவர்களை (Direct Agents for sale of Postal Life Insurance / Rural Postal Life Insurance products) தேர்ந்தெடுக்க நாளை மறுநாள் (ஜனவரி 23ம் தேதி)

நேர்காணல் நடைபெற இருக்கிறது. வேலை தேடுபவர்கள், காப்பீட்டு முகவர்களாக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம்.

பணி விவரம்:

ஆயுள் காப்பீட்டு / கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனை செய்யும் நேரடி முகவர்கள் கல்வி மற்றும் பிற தகுதிகள்:

இதில் பங்கேற்க குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது.

ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் இருப்பவர்களுக்கு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும்.

கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தாங்கள் வசிக்கும் சொந்த பகுதி பற்றி நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். சென்னை மாநகராட்சியில் வசிப்பவராக இருப்பது அவசியம்.

இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுய தொழில் செய்பவர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

ஊதிய விவரம்:

இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் தங்களின் பணித்திறன் (பாலிசியின் பிரீமியம் அடிப்படையில்) ஊக்கத்தொகை அல்லது கமிஷன் மட்டுமே வழங்கப்படும்.

வயது வரம்பு:

இதில் பங்கேற குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்தவர்களாக இருக்க வேண்டும். 50 வயது மேற்பட்டவராக இருக்கக் கூடாது. குறிப்பு: நேர்காணலுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்: மூன்று புகைப்படம் (பாஸ்போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் -வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்று ஆகிவைகள்.. இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய் தேசிய சேமிப்பு பத்திரம்(NSC) அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை (KVP) பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் நடைபெறும் நாள் : ஜனவர்-,23,2023 / காலை 10 மணி முதல் நேர்காணல் நடைபெறும் இடம்: எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகம்.

Tuesday, August 23, 2022

August 23, 2022

மத்திய அரசின் தங்கப்பத்திரம் திட்டம்:அஞ்சலகங்களில் ஆக.26 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் தங்கப்பத்திரம் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை அஞ்சலகங்களில் அளிக்க இம் மாதம் 26 ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதுதொடா்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் கோ.சிவாஜிகணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் தங்க பணமாக்கத் திட்டத்தின் கீழ் தங்கப்பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 1 கிராம் 24 காரட் தங்கப்பத்திரத்தின் விலை ரூ.5197 ஆகும். இந்தப் பத்திரங்களுக்கான விண்ணப்பங்கள் அனைத்து அஞ்சலகங்களிலும் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இம் மாதம் 26 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தனிநபா் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும், முதலீட்டு தொகைக்கு 2.50 சதவிகித வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிா்வடையும் அன்றுள்ள விலைக்கு நிகராக பணமும் பெறலாம்.

பத்திரம் வாங்கும்போது வாடிக்கையாளா்கள் ஆதாா் அட்டை, பான் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். வங்கிக் கணக்கு எண் கட்டாயமாகும். பத்திரம் தங்க கிராமின் மடங்காக உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி ஸ்ரீபுரம் பகுதிகளில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog