Udayanidhi Stalin
January 21, 2026
Showing posts with label Udayanidhi Stalin. Show all posts

Wednesday, January 21, 2026
Monday, October 21, 2024
Wednesday, October 09, 2024
Friday, May 17, 2024
Saturday, February 17, 2024
Udayanidhi Stalin
February 17, 2024
நீட் விலக்கு - உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
நீட் விலக்கு - உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு NEET Exemption - Udhayanidhi Stalin's sensational speech
ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை, அவர் மறைந்ததும், அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது
நீட் விவகாரத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும் - அமைச்சர் உதயநிதி
நம் பிள்ளைகள் படிக்க கூடாது என்பதற்காக புதிய புதிய தேர்வுகளை திணிக்கிறார்கள்
நீட் தேர்வு ரத்து தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்த இருக்கிறோம், தமிழ்நாட்டில் இருந்து என்றைக்கு நீட்தேர்வு விலக்கு ஏற்படுமோ, அதுதான் முதல் வெற்றி
- ராமநாதபுரம் திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Sunday, January 21, 2024
Udayanidhi Stalin
January 21, 2024
பள்ளி கல்வித்துறை சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சி வரும் 29ம் தேதி துவக்கம் - மாவட்ட வாரியாக தேதி அறிவிப்பு
For the first time in the history of India, the School Education Department is launching a new program - Minister Udayanidhi இந்திய வரலாற்றில் முதன்முறையாக பள்ளிக் கல்வித்துறை புதிய நிகழ்ச்சி - அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்
இந்தியாவில் முதன்முறையாக அனைத்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேரடியாக சந்தித்து பேசும் ‘பெற்றோரை கொண்டாடுவோம்’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மொத்தம் 7 கட்டமாக நடைபெற உள்ள நிகழ்ச்சியை வரும் 29ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு பள்ளிகள் என்றாலே ஏதோ மரத்தடியில் இயங்கும், கல்வித்தரமும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்ற மாயைகள் இப்போது உடைபட தொடங்கியுள்ளன.
அதேபோல், பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், காலை உணவு திட்டம், அரசுப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியில் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையில் மாற்றத்தை உருவாக்கி வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்பறைகள், கல்வி உபகரணங்கள், கழிப்பிடம், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலும் தமிழ்நாடு அரசு இப்போது தனி அக்கறை காட்டி வருகிறது.
அதேபோல், கொரோனா பேரிடர் காலத்தில் ஏற்பட்ட இடைநிற்றலை சரிசெய்ய முன்னெடுக்கப்பட்ட இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், பள்ளி மேலாண்மைக் குழுக்கள், பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிய செயலி, சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி, 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இயக்கம், பயிற்சித் தாள்களுடன் கூடிய பயிற்சிப் புத்தகங்கள், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள்,
மாணவர் மனசு என்ற ஆலோசனைப் பெட்டி, கணித ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி, உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், வகுப்பறை உற்று நோக்கு செயலி மற்றும் மின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி ஆகிய பல்வேறு திட்டங்களை பள்ளிக்கல்வித் துறை சிறப்பாக செய்து வருகிறது. தற்போது, அவற்றில் ஒருபகுதியாக, ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ என்ற நிகழ்ச்சியை பள்ளிக் கல்வித்துறை நடத்த இருக்கிறது. பெற்றோர்களுக்கு விழிப் புணர்வு: பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற இந்த நிகழ்ச்சி மொத்தம் 7 கட்டமாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக, வருகிற 29ம் தேதி மதுரையில் தமிழ்நாடு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செயலர் குமரகுருபரன் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தனியார் பள்ளி இயக்குநர் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
மதுரையில் தொடங்கும் இந்த முதற்கட்ட நிகழ்ச்சியில், தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஒரு பள்ளிக்கு 4 பெற்றோர்கள், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என 30 ஆயிரம் பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பல ஆலோசனைகளை மேற்கொண்டு இருக்கிறார். அதில் பள்ளிகளை மேம்படுத்துதல், மாணவர்களின் கற்றல் திறனை மேலும் அதிகரிப்பது என பல்வேறு கருத்துகள் கேட்டறியப்பட்டு இருக்கிறது. ஆனால், பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை அமைச்சர் நேரில் சந்தித்து, அவர்களின் மனநிலையை கேட்டு அறிவது என்பது இதுவரை நடக்காத ஒன்று. ஏனென்றால், பெற்றோர்கள் தான் மாணவர்களின் முதல் ஆசிரியர், மாணவர்களின் மனநிலையை எளிதில் புரிந்துகொள்பவர்கள் அவர்கள் மட்டுமே. அதற்காகத்தான் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை கையில் எடுத்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன.
ஆனால் அவை அனைத்தும் பெற்றோர்களுக்கு தெரிந்துள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் பெற்றோர்களுக்கு அதனை தெரியப்படுத்த உள்ளனர்.
மேலும், பெற்றோர்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்திக்கும் ஒரு வாய்ப்பினை பெறுவர். எனவே அரசுப்பள்ளியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு இருக்கும் பிரச்னைகள் என்ன, வகுப்பறையில் உள்ள தேவைகள் என்ன என்பவை குறித்து நேரடியாக தெரிவிக்கும் ஒரு வாய்ப்பினை பெறுவர். கடந்த ஆண்டை பொறுத்தவரை அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றை மேலும் அதிகரிக்க இந்த நிகழ்ச்சி உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Thursday, December 07, 2023
Udayanidhi Stalin
December 07, 2023
அமைச்சர் உதயநிதியிடம் சரமாரியாக கேள்வி கேட்ட ஆசிரியை சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

சென்னை வேளச்சேரி பகுதியில் 3 நாட்களாக தேங்கியுள்ள மழைநீரால் மக்கள் வேதனையில் தவித்து வரும் நிலையில், ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் உதயநிதியிடம் பள்ளி ஆசிரியை சராமாரியாக கேள்வி எழுப்பியதும், உடன் இருந்த அமைச்சர்கள் நடந்து கொண்டதும் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மிக்ஜாம் புயலால் பெய்த அதி கனமழையால் வேளச்சேரி, அதனை சுற்றியுள்ள பகுதிகள் மழைநீரால் சூழ்ந்துள்ளது. வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கைவேலி, மடிப்பாக்கம் ராம்நகர், புழுதிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த3 நாட்களாக மழைநீர் 4 அடிக்கு மேல் தேங்கியுள்ளது. பல அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல் தளம் வரை மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். ஒருசிலர் தீவிரமாக முயற்சி செய்து வெளியே வந்து உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில், நேற்று வேளச்சேரி பகுதியில்பாதிப்புகளை பார்வையிட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் வந்தனர். அப்போது பள்ளி ஆசிரியை ஒருவர், மழைநீர் தேங்குவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரியும் உதயநிதியிடம் மனு கொடுக்க முயன்றார். அப்போது, அங்கிருந்தவர்கள் உதயநிதியிடம் நெருங்கவிடாமல் அந்த பெண்மணியை பின்பக்கமாக இழுத்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பள்ளி ஆசிரியர் இழுத்தவர்களின் கைகளை உதறிவிட்டு, ‘வாட் நான்சென்ஸ் இஸ் திஸ்'. எப்படி இழுத்து தள்ளுகிறார்கள் பாருங்கள். நான் ஒரு பள்ளி ஆசிரியை.இங்கே மழைநீரில் தவித்துக் கொண்டிருக்கிறேன். இப்படிதான் ஒரு பெண்ணை நடத்துவீர்களா என்று சராமரியாக உதயநிதியை பார்த்து கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அந்த பெண்ணிடம் கேட்டதற்கு, "தண்ணீர் நிற்கிறது. 20 ஆண்டுகளாக நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம்" என்றார். மோட்டார் வைத்து தண்ணீரை அகற்ற சொல்கிறேன் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஒரு செகண்ட் சார் இருங்கசார், ஒரு செகண்ட் சார், பிளீஸ் சார் என்று ஆசிரியை சொன்னபோது, அவ்வளவு நேரம் எல்லாம் இருக்க முடியாது என்றபடி அந்த பெண்ணை தள்ளிவிட்டபடி உதயநிதியை அழைத்து சென்றார் கே.என்.நேரு. மூத்த அமைச்சரின் இந்த செயல் அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. இந்த வீடியோசமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்ப்பவர்கள் அமைச்சர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதேபோல், ‘வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் டிஎம்கே’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.
மேலும் நாராயணபுரம் ஏரி நீர் வெளியேற்றத்தால் துரைப்பாக்கம் - பல்லாவரம்ரேடியல் சாலை, வேளச்சேரி நெடுஞ்சாலை, வேளச்சேரி - மடிப்பாக்கம் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
CLICK HERE சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

Tuesday, November 14, 2023
Udayanidhi Stalin
November 14, 2023
ஆசிரியர்களுக்கு அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!
ஆசிரியர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரின் வேண்டுகோள்!
ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பள்ளிகளில் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை விளையாட்டு வீரர்களாக மாற்றுங்கள், மற்ற பாடப்பிரிவு ஆசிரியர்கள் விளையாட்டுப் பாட நேரத்தை கடன் வாங்காதீர்கள் வேண்டுமானால் உங்கள் பாட நேரத்தையும் மாணவர்களுக்கு கொடுத்து விளையாடும் வாய்ப்பைக் கொடுங்கள்."
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின்.
Friday, August 18, 2023
Udayanidhi Stalin
August 18, 2023
நீட் தேர்வை எதிர்த்து நாளை திமுக போராட்டம் - மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் - உதயநிதி

"என்ன விமர்சனம், கேலி, கிண்டல் வந்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம்
*போராட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்
*தேர்தல் பிரச்சாரத்தில் நீட் தேர்வு ரத்து செய்வோம் என நான் உறுதி கொடுத்தேன்: அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்
*நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன்: என்னை போல் அனைவரும் உணர வேண்டும்" - அமைச்சர் உதயநிதி
நீட் தேர்வு ரத்து தொடர்பான விஷயத்தில் முழு பொறுப்பதையும் ஏற்பதாக கூறி, அதில் மக்களை ஏமாற்றமாட்டேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரத போராட்டம்
நீட் தேர்வை எதிர்த்து, நாளை தமிழக மாவட்ட தலைநகரங்களில் திமுக மாணவரணி, மருத்துவரணி, இளைஞரணி ஆகியவை சார்பில் கண்டன உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
ஆளுநரின் நிலைப்பாடு, மத்திய அரசின் செயல் போன்றவற்றை கண்டித்து நடைபெறும் இந்த போராட்டம் குறித்து தமிழகத்தின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
முழு பொறுப்பையும் ஏற்கிறேன்
அப்போது, நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பான பொறுப்பை உணர்வதாக குறிப்பிட்டு, நீட் தொடர்பாக கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றும் மக்களை ஏமாற்ற மாட்டேன் என கூறினார்.
மேலும், நாளை நடைபெறவுள்ள போராட்டத்தில் திமுகவின் முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் இந்த போராட்டத்தில் தங்களுடன் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Wednesday, August 02, 2023
Udayanidhi Stalin
August 02, 2023
சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் - அரசு பள்ளி மாணவர்கள் நேரடியாக இலவசமாக பார்க்க ஏற்பாடு
சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர்
"அரசு பள்ளி மாணவர்கள் நேரடியாக இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது"
"அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன"
"ஐபிஎல் போட்டிகளை போல தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ஃபேன் பார்க்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளது" -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை, ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை முதல் 12-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேச ஆக்கி போட்டிக்காக எழும்பூர் ஸ்டேடியம், நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இந்த போட்டிக்கான வெற்றிக் கோப்பை தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு, இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், போட்டியில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டிகளை அரசு பள்ளி மாணவர்கள் நேரடியாக இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஐ.பி.எல். போட்டிகளைப் போல் தமிழகம் முழுவதும் 40 இடங்களில் 'பேன் பார்க்ஸ்' ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Friday, July 21, 2023
Tuesday, June 20, 2023
Thursday, April 13, 2023
Wednesday, March 15, 2023
Udayanidhi Stalin
March 15, 2023
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-23-ஆம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ்-2 தேர்வை மொத்தம் 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பேர் எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 156 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 33 ஆயிரத்து 436 பேர் மாணவியர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர்.
அதேபோல புதுச்சேரியில் மொத்தம் 14 ஆயிரத்து 710 மாணவ-மாணவியர் பங்கேற்றனர். அவர்களில் 6 ஆயிரத்து 982 மாணவர்கள், 7 ஆயிரத்து 728 மாணவியர். மேலும், தனித் தேர்வர்கள் 23 ஆயிரத்து 747 பேர், மாற்றுத் திறனாளிகள் 5,206 பேர், சிறைவாசிகள் 90 பேர் தேர்வு எழுதினர். இவர்களுக்காக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அதில் தமிழ்நாட்டில் 3,185, புதுச்சேரியில் 40, தனித் தேர்வர்களுக்கு 134, சிறைகளில் 8 பொதுத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
மேலும், தேர்வுகளை கண்காணிக்க 3,100 பறக்கும் படை அமைக்கப்பட்டு, அதில் 1,135 பேர் நியமிக்கப்பட்டனர். இதில், பள்ளி தேர்வர்கள் 49,559 பேரும், தனி தேர்வர்கள் 1,115 பேரும் தேர்வு எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது; நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக கல்வி அமைச்சரிடம் பேசி மீண்டும் தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
VIDEOS
March 15, 2023
“நீட் தேர்வை ரத்து செய்வது இப்படித்தான் - ரகசியத்தை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி.
“நீட் தேர்வை ரத்து செய்வது இப்படித்தான் - ரகசியத்தை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி..
நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கியுள்ளார்.
2021 தேர்தல் பரப்புரையின் போது நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களுக்கு தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது வரை நீட் தேர்வு ரத்து செய்யப்படாமல் இருப்பதாகவும், அந்த ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும் என்றும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இந்த நிலையில் அரியலூர் மருத்துவக் கல்லூரியில் அனிதா பெயரிலான நினைவரங்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “எதிர்க்கட்சித் தலைவர் கேட்கும் நீட் தேர்வு ரகசியம் என்னவென்று தற்போது சொல்கிறேன். நமது மாணவர்களின் கல்வி உரிமை மறுக்கப்படும் போது வரும் எதிர்ப்புக்குரலே அந்த ரகசியம். அனிதாவின் பெயரை பார்க்கும்போது எல்லாம் நீட் தேர்வில் எதிர்ப்பு என்ற எண்ணம் நமது மனதில் இருக்கும். எந்தவித சமரசமும் இல்லாமல் நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்ட போராட்டம் தொடரும். பிரதமரை சந்திக்கும் போதும் இதைத்தான் கூறினேன். இதுதான் எங்களிடம் உள்ள ரகசியம்” என்று கூறினார்
CLICK HERE TO WATCH THE VIDEO (Choose Telegram App)

Tuesday, March 07, 2023
Udayanidhi Stalin
March 07, 2023
“நான் முதல்வன்” - போட்டித் தேர்வுகள் பிரிவு தொடக்கம் - செய்தி வெளியீடு எண் : 479 நாள் : 07.03.2023
“நான் முதல்வன்” - போட்டித் தேர்வுகள் பிரிவு, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.
திரு. உதயநிதி ஸ்டாலின்
அவர்கள் சென்னையில் தொடங்கி வைத்தார்.
செய்தி வெளியீடு எண் : 479 நாள் : 07.03.2023 செய்தி வெளியீடு
"நான் முதல்வன் திட்டம் போட்டித் தேர்வுகள் பிரிவு மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையில் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான "நான் முதல்வன் திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவு" தொடக்க நிகழ்ச்சி இன்று (07.03.2023) சென்னை, கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது. "நான் முதல்வன் திட்டத்தின் - போட்டித்தேர்வுகள் பிரிவின் கீழ் அரசுத் தேர்வுகளான எஸ்.எஸ்.சி (8850), ரயில்வே (௩௧100௧, வங்கி ௩௧006) மத்திய 050), தமிழ்நாடு அரசுப்பணி (11௩50) இராணுவம் (பமா) போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் சிறந்த முறையில் பயிற்றுவிக்கும் வகையில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இப்போட்டித்தேர்வு பிரிவில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படும். இதன்மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் அஇப்போட்டித் தேர்வு பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
அரசுப்பணி ஒன்றையே கனவாகக் கொண்டுள்ள ஆயிரம் ஆயிரம் இளைஞர்களின் கனவை மெய்ப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.மத்திய அரசுப் பணி போட்டித்தேர்வுகளில் தமிழர்களின் பங்கேற்பை கணிசமான அளவில் அதிகரித்து வெற்றி பெறச் செய்வதோடு மட்டுமல்லாமல் கூடிய விரைவில் ஐஐடி (1), என்.ஐ.டி), தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள் காட பகர பங, அகில இந்திய மருத்துவ நிறுவனம் (ம ஈக ஙஊாபாட ௦ நா£பக&ட 50௨05), ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பயிலும் வண்ணம் குமரி முதல் இமயம் வரை நம் அறிவை விரிவு செய்ய இத்திட்டம் விசாலப் பாதை வகுக்கும் என்ற நோக்கத்தையும் கொண்டு "நான்: முதல்வன்"போட்டித் தேர்வுகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை மாண்புமிகு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசும் போது கூறியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்த "நான் முதல்வன்: " திட்டத்தின் ஒரு பகுதியான போட்டித் தேர்வுகள் பிரிவை தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்போடும் , கனவோடும் வந்திருக்கின்ற உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு நவீன பாடப்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கி அவர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் மற்றும் ஆண்டு தோறும் 1௦- இலட்சம் இளைஞர்கள்வேலை வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற தொலைநோக்குடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவங்கப்பட்ட ஓராண்டில் 483- அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மூலம் 4- இலட்சத்து 60-ஆயிரம் மாணவ- மாணவியர்கள் மற்றும் 785- கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சார்ந்த 8- லட்சத்து 10-ஆயிரம் மாணவ- மாணவியர்களுக்கு தொழில் சார்ந்த திறன்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக் கல்வி இடை நிற்றலை அறவே ஒழித்திட 1-முதல் 5- வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தினை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
நான் ,மாவட்டங்களுக்கு செல்லும் போது அந்தந்த பகுதியிலுள்ள பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை ஆய்வு செய்து வருகிறேன். அங்கு உணவு தரமாக குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என்பது குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கேட்டறிந்து ,எனது காலை சிற்றுண்டியினை அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு வருகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் புதுமைப்பெண் திட்டம், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தில் இதுவரையில் தமிழ்நாட்டில் உள்ள மகளிர் 250- கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். கடந்த 5-ஆண்டுகளில் வங்கி, இரயில்வே , போன்ற துறைகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு 1.50 இலட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டைச்சார்ந்தவர்கள் மிகவும் குறைவு என்பது வருத்தமளிக்கிறது.ஒந்த நிலை மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும் அண்மையில் ஒன்றிய பிரதமர் அவர்களை சந்தித்த போது தமிழ்நாட்டில் ஒன்றிய அரசுப்பணிகளில் தமிழ்நாடு மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தியுள்ளேன்.
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களில் அனைத்து நிலைகளிலும் தமிழர்கள் அதிக அளவில் பணியாற்றுகின்ற நிலை வர வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் மட்டுமே அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வு மையங்கள் உள்ளன. கிராமப்புற மாணவர்களால் கூடுதல் கட்டணம் செலுத்தி இத்தகைய பயிற்சிகளை பெற முடியாது. இந்த நிலையை மாற்றி கட்டணமின்றி போட்டித் தேர்வுக்கான பயிற்சிகளை அளித்திட நம் முதல்வர் அவர்கள் இந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏற்கெனவே மாணவர்களுக்கு தெரிவித்தவாறு, எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு தாயாக , தந்தையாக துணை நிற்பார். உழைத்தால் வெற்றி பெறலாம். நான் என்றும் உங்களின் அண்ணனாக துணை நிற்பேன் எனக்கூறினார்/ இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கே. பொன்முடி அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. சி.வி.கணேசன் அவர்கள், சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அரசு முதன்மைச் செயலர் திரு. உதயச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கதழக மேலாண்மை இயக்குநர் திருமதி. இன்னசென்ட் திவ்யா க.ஆ.ப., அவர்கள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு.கொ. வீரராகவ ராவ் இ.ஆ.ப., போட்டித் தேர்வு பிரிவு தனித்திட்ட இயக்குநர் திரு. சுதாகரன் ஐ.ஆர்.பி., எஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
CLICK HERE TO DOWNLOAD 1
CLICK HERE TO DOWNLOAD 2

Wednesday, March 01, 2023
Udayanidhi Stalin
March 01, 2023
நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் - அமைச்சர் உதயநிதி தகவல்

நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் தொடரும் என பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தப் பிறகு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தில்லி வரும்போது தன்னை சந்திக்கும்படி பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதனால், இன்று அவரை சந்தித்தேன்.
நீட் விவகாரத்தில் தமிழக மக்களின் மனநிலையை பிரதமர் மோடியிடம் எடுத்துக்கூறினேன். நீட் தேர்வுக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடரும் என்பதை சுட்டிக்காட்டினேன். நீட் விலக்கு தொடர்பாக கேட்ட போது பிரதமர் சில விளக்கங்களை அளித்தார்.
கேலோ இந்தியா போட்டியை தமிழகத்தில் நடத்த வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டேன். மேலும், தமிழகத்தில் மாவட்டம்தோறும் விளையாட்டுத் திடல்கள் அமைக்க நிதி ஒதுக்க கோரிக்கை வைத்தேன் எனக் குறிப்பிட்டார்.

இன்று கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி: உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைப்பு

மாநில சிறுபான்மையினா் ஆணையம் நடத்தும் அனைத்துக் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் புதன்கிழமை (மாா்ச் 1) நடைபெறுகின்றன.
தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் தமிழகத்திலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச்சுப் போட்டிகள் புதன்கிழமை (மாா்ச் 1) நடைபெறுகின்றன.
இதை தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சென்னை புதுக்கல்லூரியில் காலை 10.30 மணிக்கு தொடங்கி வைக்கிறாா்.
நிகழ்வில், உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமை வகிக்கிறாா். சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் முன்னிலை வகிக்கிறாா்.
மேலும், நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சா.பீட்டா் அல்போன்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்

Thursday, January 19, 2023
Udayanidhi Stalin
January 19, 2023
மே மாதத்துக்குள் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் Employment for 1.50 lakh people by May: Minister Udayanidhi Stalin

வரும் மே மாதத்துக்குள் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகளை சென்னையில் புதன்கிழமை தொடக்கி வைத்து, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாணவா்கள் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளவும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முதலாவதாக, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள மாநிலக் கல்லூரியில் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லாத பயிற்சி மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் போ் பங்கேற்ற 69 மெகா வேலைவாய்ப்பு முகாம்களும், ஆயிரம் சிறு வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 பேருக்கு முகாம்களின் வழியாக வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. வரும் மே மாதத்துக்குள் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் விரைவில் சென்னையில் நடத்தப்படும். மத்திய போட்டித் தோ்வுகள்: தமிழ்நாட்டில் உள்ள மாணவா்கள், இளைஞா்கள் உள்ளிட்டோா் குரூப் 1, குரூப் 2 போன்ற தோ்வுகளை அதிகளவு எழுதுகின்றனா். ஆனால், மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஆணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளில் பங்கேற்பதில் மாணவா்கள் அக்கறை காட்டுவதில்லை. மத்திய அரசுப் பணிகளில் 2.1 சதவீதம் போ் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து தோ்வாகிறாா்கள். ரயில்வே, வங்கி போன்ற மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டில் உள்ள மாணவா்கள், இளைஞா்கள் சேருவதற்கு ஏதுவாக போட்டித் தோ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா் அவா். இதைத் தொடா்ந்து, போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சிக் கையேட்டை மாணவ, மாணவிகளுக்கு அவா் அளித்தாா். போட்டித் தோ்வுகளுக்கான புத்தகக் காட்சியையும் அவா் தொடக்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன், துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் முகமது நசிமுத்தீன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையாளா் கொ.வீரராகவ ராவ், மாநிலக் கல்லூரி முதல்வா் ஆா்.ராமன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.